Thursday, March 20, 2008

கீழக்கரை தமுமுக அலுவலகத்தில் பென்னை கட்டி வைத்து சித்திரவதையா?

02. இளம் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை : வேறு நபருடன் பேசியதால் கொடூரம்



ராமநாதபுரம் : வேறு நபருடன் பேசி கொண்டிருந்த இளம் பெண் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கட்டி வைத்து அடித்து உதைத்து மானபங்கம் செய்த த.மு.மு.க., பிரமுகர்கள் உட்பட 36 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த கமால் ஜலாலுதீன் மகள் தஸ்லிமா(25). விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் கீழக்கரையில் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெரியபட்டினத்தை சேர்ந்த நயினாமுகம்மதுவுடன் பேசிகொண்டிருந்தார்.சந்தேகமடைந்த த.மு.மு.க., நகர தலைவர் சிராஜூதீன் தலைமையில் நகர் செயலர் மனாசீர் உட்பட த.மு.மு.க.,வினர் தஸ்லிமா, நயினாமுகம்மது ஆகியோரை த.மு.மு.க., அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் அடித்துள்ளனர். இருவரையும் பள்ளிவாசல் அருகே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்தனர். தஸ்லிமாவை மானபங்கம் செய்து துன்புறுத்தி உள்ளனர். கீழக்கரை போலீசார்இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தஸ்லிமா புகாரின் படி, த.மு.மு.க., நகர் தலைவர் சிராஜூதீன், செயலர் மனாசீர் உட்பட 36 பேர் மீது பெண் வன்கொடுமை உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் த.மு.மு.க.,துணை தலைவர் வாபாசா துணை செயலர் ஜலால் ஆகியோர் தலைமையில், ஏராளமானோர் கீழக்கரை போலீஸ் நிலையம் முன் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

5 comments:

ulakathamizhchemmozhi said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
செய்தியை வெளியிட்டுவதற்கு முன்னர் கீழக்கரை தமுமுக சகோதரர்களை விசாரித்து விட்டு பதிபித்திருக்கலாமே.
www.ramnat.wordpress.com

தபால்காரர் said...

வஅலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)

நடந்த சம்பவம் என்ன என்பதை நீங்களே விசாரித்து எழுதலாமே!

உங்களது மறுப்புக்களை தக்க ஆதமாரங்களுடன் பதியலாம்.

தமிழகத்தழின் அத்தனை நாளிதழ்களிலும் வந்த செய்திதான் இது. அதைத்தான் இங்கு பதிந்துள்ளோம்.

makkalurimai said...

தினமலர் பாதையில் டி.என்.பாலிட்டிக்ஸ் செயல்படுவது நியாயமா?



தினமலர் நாளிதழுக்கு நமது மக்கள் தமிழகத்தில் வைத்துள்ள பெயர்த் தினமலம். முஸ்லிம்கள் தொடர்பான பொய் செய்திகளைப் பிரசுரிப்பது அதன் அன்றாட வாடிக்கை, அத்தகைய ஒரு செய்தி தான் கீழக்கரை பெண் தொடர்பான செய்தி. அந்தப் பெண் பெரியப்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் உடனே தமுமுக நகரத் தலைவர் உட்பட நிர்வாகிகள் அந்த இருவரையும் கட்டி வைத்து அடித்ததாகவும், அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும், தமுமுக நிர்வாகிகளைக் காவல்துறை கைதுச் செய்யததாகவும் தினமலர்ப் பொய் செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக டி.எம். பாலிட்டிக்ஸ் தினமலத்தை வாந்தி எடுத்துள்ளது. தீயவன் ஒருவன் கொண்டு வரும் செய்தியைத் தீர விசாரிக்க வேண்டும் என்ற திருக்குர்ஆன் போதனை மறந்து விட்டு டிஎம்.பாலிட்டிக்ஸ் இணையத்தளத்தை நடத்திவரும் உங்களுக்கு இறைவன் நேர்வழி காட்டுவானாக. விபாச்சாரம் செய்த பெண்ணையும் ஆணையும் கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் தமுமுக விடம் ஒப்படைத்தார்கள். தமுமுக அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது. கீழக்கரை காவல்நிலையத்திற்கு அன்று பொறுப்பில் இருந்த சிக்கல் ஆய்வாளர் இம்மானுவேல் ராசகுமார் என்பவர் வேண்டுமென்றேத் தமுமுகவினர் மீதுள்ள தனது சொந்தப்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமுமுகவினர் மீது வழக்குப்போட்டுத் தினமலருக்குச் செய்தியை அளித்துள்ளார். சம்பவம் நடைபெறும் போது கீழக்கரை தமுமுக தலைவர் சிராஜுத்தீன் சென்னையில் இருந்தார். அவர் மீதும் வழக்கு. தற்போது பொறுப்பில் இல்லாத முன்னாள் மாவட்டச் செயலாளர் நிஸ்பர் மீதும், தற்போது வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு தமுமுக சகோதரர்கள் மீதும்; பொய் வழக்கப் போட்டுள்ளார். ராமநாதபுர காவல்துறை கண்காணிப்பாளரிடம் தமுமுக புகார் தெரிவித்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கீழக்கரை எஸ். ஐ.யின் நச்சரிப்பால் பொய் புகார் அளித்தேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பொய் செய்தியைப் பிரசுரித்த தினமலருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உண்மை இப்படியிருக்க டி.எம். பாலிடிக்ஸ் இணையத்தளத்தை நடத்துபவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவராக இருந்த போதினும் தினமலத்தைத் தனது இணையத்தளத்தில் வாந்தி எடுத்திருப்பது வருந்தத்தக்கது. எதிர்காலத்திலாவது செய்திகளை ஆய்ந்து பிரசுரிக்க இறைவன் நேர்வழி காட்டுவானாக.



வªம் அக்ரம்

மக்கள் தொடர்பாளர்

தமுமுக தலைமையகம்

20 03 08

Anonymous said...

//தினமலர் நாளிதழுக்கு நமது மக்கள் தமிழகத்தில் வைத்துள்ள பெயர்த் தினமலம். முஸ்லிம்கள் தொடர்பான பொய் செய்திகளைப் பிரசுரிப்பது அதன் அன்றாட வாடிக்கை,//

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் வªம் அக்ரம்,

திமலம் மட்டுமல்லாது அன்றைய தினம் வெளிவந்த தமிழகத்தின் பெரும்பாலான நாளிதழ்களில் இந்த செய்தி வெளிவந்திருந்தது.

21.03.2008 தினந்தந்தி நாளிதழிலும் கூட இந்த செய்தி பிரசுரமாகியிருந்தது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=401279&disdate=3/21/2008&advt=2

வஸ்ஸலாம்

Anonymous said...

please next time conform te news after publish to your site becuse of that day some news papers published this news but its not true