கடந்த ஜனவரி 11 அன்று சென்னையில் சமூக நல்லிணக்கத்தையும் உலக அமைதியையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட PEACE கண்காட்சி பெரும் எழுச்சியோடும் எதிர்பாராத வெற்றிகளோடும், நடந்து முடிந்திருக்கிறது.
இவ்வளவு ஜனரஞ்சகமாக எல்லா தரப்பையும் வெற்றி கொண்டதன் மூலம் PEACE கண்காட்சி இதுவரை இல்லாத வெற்றியை பெற்றிருக்கிறது.
பொங்கல் பண்டிகைகளின் போது பெரும் கூட்டம் அலைமோதியதை பார்த்தவர்கள் தொடர்ந்து எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதியதை கண்டு பூரித்துப் போனார்கள் எனலாம். அதுவும் கடைசி நாளான ஜனவரி 20 அன்று கூடிய கூட்டம் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
அன்று மாலை 5 மணியிலிருந்தே கூட்டம் மதரஸாலிஏலிஆஸாம் நோக்கி அலைமோதியது. அங்கு வந்த அரசு பேருந்துகள் அனைத்தும் அந்த நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்று முக்கால் வாசி பயணிகளைஇறக்கித் தான் நகர்ந்தன. இது சாதாரண மக்களின் வருகையை அடையாளம் காட்டியது அது போல் காயிதே மில்லத் மணிமண்டபம் அமைந்திருக்கும் வழியாக கார்களில் வரிசையாக திரண்ட கூட்டம் வசதியான மக்களின் வருகையை பதிவு செய்தது. கார்களை நிறுத்த இடமில்லாததால் நீண்ட தூரத்தில் கார்களை நிறுத்திவிட்டு பலர் மாநாட்டு திடலுக்கு நடந்தே வந்தனர்.
மஹ்ரிப் தொழுகை பிரம்மாண்ட கூட்டத்தோடு தொடங்கியபோது அந்தத் தொழுகையில் பங்கேற்க கூட்டம் அணிவகுத்தன, அதே போல் பெண்கள் தொழுகைப் பகுதியும் நிறைந்து வழிந்தது.
சுமார் ஏழு மணி அளவில் அண்ணாசாலை, காயிதே மில்லத் மணிமண்டப சாலை, எத்திராஜ் சாலை எங்கும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மாநாடு நடைபெற்ற 10 ஏக்கர் திடலும் கூட்டத்தால் நிரம்பி வழிய யாரும் எங்கும் நகர்வதற்கே சிரமமாகி விட்டது. சர்வதேச அழைப்பாளர் ஜாகிர் நாயக் பேசத் தொடங்கிய போது இடைவெளியின்றி கூட்டம் உட்கார்ந்து கொண்டு கவனிக்க, நாலாபுறமும் நின்றபடியே அதைவிட அதிகமான கூட்டம் ஆர்வத்தோடு கொட்டும் பணியில் சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டிருந்தது.
தொடர்ந்து வெளியே இருந்த கூட்டம் உள்ளே வருவதற்காக வரிசைக் கட்டி நிற்க, தள்ளு முள்ளு ஏற்பட்டது. உள்ளே வர முடியாமல் தவித்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலிஸார் தடியடி நடத்த முயல பதறிப் போன தமுமுக தொண்டரணியின் மாநில செயலாளர் ரபீக் தொண்டரணியினருடன் சென்று நிலைமையை சீராக்கினார்.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நுழைவாயில்களும் சிறிது நேரம் பூட்டப்பட்டது. இதனால் ஏராளமானோர் திரும்பிப் போனது எல்லோருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.மாநாட்டில் சரிபாதி மக்கள் பெண்களாகவே காட்சியளித்தனர். பலர் கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு நின்றபடியே நிகழ்ச்சிகளை கவனித்தனர்.
பொறாமைகாரணமாக சிலர் ஜும்ஆவிலும்,தொலைக்காட்சியிலும் இந்த மாநாட்டிற்கு போக வேண்டாம் என கதறினர். அபாண்ட பொய்களை அவிழ்த்துவிட்டனர். இவ்விஷயத்தில் கொள்கைகளை மறந்து பொறாமை என்ற ஓரணியில் சிலர் சேர்ந்து நின்றனர். ஆனால் அவர்களின் ஆதரவாளர்களும் மாநாட்டிற்கு வருகை தந்ததும், தங்களது பிரச்சார துண்டு பிரசுரங்களை விநியோகித்ததும் PEACE கண்காட்சியில் நடந்தது.'போக வேண்டாம்' என சிலர் கூச்சலிட்ட பிறகுதான், பெரும் கூட்டம் 19, 20 தேதிகளில் அலை,அலையாய் திரண்டு வந்தது என சமுதாய ஆர்பலர்கள் கருத்து.அழைப்புப் பணி என்ற பெயரில் ''அரசியல் பலத்துக்கு'' ஆள் சேர்க்கும் கூத்துகள் நடக்கும் இக்காலகட்டத்தில் இயக்கப் பின்னணி இல்லாமல் ஏகத்துவத்தை ஆதரிக்கும்அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுவான தளத்தில் இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் PEACE குழுவின் முயற்சிகள் தொடர வேண்டும்.
PEACE க்கு வந்த பிரபலங்கள்
நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், சேரன் என பலரும் தனி அழைப்பிதழ்கள் இல்லாமல் தனி ஆர்வத்தோடு வருகை தந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், அறிவு ஜீவிகளும் இப்படி சுய ஆர்வத்தோடு வருகை தந்ததும், கண்காட்சி குறித்து வினா எழுப்பியதும், இலவச புத்தகங்களை பெற்றுக் கொண்டதோடு, காசுக் கொடுத்தும் புத்தகங்களை வாங்கி சென்றிருக்கிறார்கள்
நன்றி: த.மு.மு.க வின் இணையத்தளம்
3 comments:
கோவை தங்கப்பா எடுத்த புகைப்படங்கள் யாவும் அருமை
சகோதரருக்கு,
மேலு உள்ள புகைப்படங்கள் திரு.கோவை தங்கப்பா அவர்களால் எடுக்கப்பட்டதல்ல.புகைப்படங்களும் செய்தியும் த.மு.மு.க வின இணையத்தளத்தில் இருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான தொடுப்பும் நன்றியுடன் கொடுக்கப்பட்டுள்ளது காணவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமுமுகவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் கோவை தங்கப்பா தான் படங்கள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி
Post a Comment