Saturday, January 26, 2008

தென்காசி குண்டு வெடிப்பு - C.B.C.I.D விசாரனை தேவை - த.மு.மு.க

பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

சென்னை, ஜனவரி 26, தென்காசியில் நடைபெற்ற வெடிகுன்டு சம்பவத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடும் கண்டனங்களை தெறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவாக்ள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கலவரச்சம்பவங்களுக்குப் பிறகு மெல்ல அமைதி திரும்பி வரும் தென்காசியில் சங்பரிவார அலுவலகம் ஒன்றின் மீது விஷமிகளால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. அமைதியைக் குலைத்து பதட்டத்தை உருவாக்கும் உள் நோக்கத்தோடு இச்செயல் செய்யப் பட்டுள்ளது.

சேதம் ஏதும் ஏற்படாதது ஆறுதல் அளித்தாலும் இச்செயலை செய்த விஷமிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இந்துச்சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் பொது நலன் கருதி அமைதியையும் நிதானத்தையும் மேற்கொண்டு உண்மைக் குற்றவாளிகள் பிடிபட ஒத்துழைக்க வேண்டும்.

தென்காசி நகர காவல்துறையின் கடந்த கால நடவடிக்கைகள் கசப்பான அனுபவங்களை தந்திருப்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலிஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி : நெல்லை உஸ்மான் கான்

No comments: