Monday, January 21, 2008

சவுதியில் வரலாறு காணாத குளிர்!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சவுதி அரேபியாவில் தற்சமயம் வரலாறு காணாத குளிர் வாட்டி வருவதால் சவுதியின் பல பாகங்களில் பலர் மரணமடைந்துள்ளதை செய்திகளில் கண்டிருக்கலாம். மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள் என்ற பெயரில் இந்த கட்டுரையை சக பதிவர் திரு. சேவியர் அவர்கள் தனது கவிதைச்சாலை பதிவில் வெளியிட்டிருந்தார்கள். இந்த கட்டுரை சவுதியில் கடும் குளிரில் வாடும் நம்மவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக இங்கு பதிக்கப்படுகின்றது.

இந்த கட்டுரையுடன் பிரசுரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அணைத்தும் சவுதியின் தற்போதைய நியை காட்டுவதாகும்.சவுதியின் பல பாகங்க் பாலைவனங்கள் குளிரினால் மற்றுமு் பெய்யும் பணியினாலும் மேற்க்கத்திய நாடுகளைப்போல் மாறியுள்ளதை படங்களில் காணலாம். நிணைவு தெறிந்த சவுதி அரேபிய வரலாற்றிலேயே இது போன்ற பணிப்பொழிவும், குளிரும் ஏற்பட்டதில்லை என இங்கு வெளிவரும் பல பத்திரிகைகள் தெறிவிக்கின்றன.

குறிப்பு : புகைப்படங்கள் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றவை.


சவுதி அரேபியாவில் கொட்டும் ஸநோ என்ற பணி


எதிர்பாரா காலநிலை மாற்றங்கள் மனிதனின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன. அண்டார்டிக்காவில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை வெப்பம் பாதிப்புக்கு உள்ளாக்குவது போல, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் திடீரென ஏற்படும் குளிர் பெரும் சேதங்களையும் இன்னல்களையும் உருவாக்கி விடுகிறது.
.
வாழும் சூழல் மனிதனுடைய உடல் இயக்கங்களை நிர்ணயிக்கிறது, அவற்றுக்கு எதிரான இயக்கம் எழும்போது உடல் செய்வதறியாமல் திகைக்கிறது. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் குளிருக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கும் செய்தி இதை துயரத்துடன் உறுதி செய்கிறது.

கடும் குளிராலும், பணியாலும் உரைந்து காணப்புடம் பேரீச்ச மரங்கள்

ஹைப்போதெர்மியா, ப்ஃரோஸ்ட்பைட், டி-ஹைடிரேஷன், கார்பன் மோனாக்சைடு பாதிப்பு என குளிர்காலம் சில குறிப்பிட்ட கொடிய நோய்கள் வரும் வாய்ப்பை உருவாக்கி விடுகிறது.
.
எந்த காலநிலையெனினும் முன்கூட்டியே அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இன்னல்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக குளிர்காலங்களில் உடலிலுள்ள வெப்பத்தைப் பாதுகாக்கவும், தேவையான வெப்பத்தை உடலில் உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட வேண்டும்.
.
கீழ்க்கண்ட எளிய தற்காப்பு முறைகளை கவனத்தில் கொள்வது குளிரிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

சவுதி ரோடுதாங்க...மாஸ்கோவோ...பிராக்கோ..இல்லிங்க

* குளிர்காலத்தில் சரியான உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சுத்தமான, உடலை முழுவதுமாக மறைக்கக்கூடிய, நன்றாக உலர்ந்த உடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். காதுகளையும், கை, கால்களையும் மூடி வைத்தல் அவசியம்.
.
* தலையை முடிந்தவரை மூடி வைப்பது முக்கால் வாசி உடல் வெப்பம் உடலிலேயே தங்கி விட வழி செய்கிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல உடைகள் அணிவதும், உடைகள் சற்று தளர்வாகவே இருப்பதும் உடைகளின் உள்ளே வெப்பக்காற்று தங்கி உடலைப் பாதுகாக்க பயன்படும்.
.
* நல்ல கதகதப்பான ஷூக்களை அணிய வேண்டும். தூய்மையான சாக்ஸ் ஐ பயன்படுத்துவதும், பாதம் கை போன்ற இடங்களில் ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.

சவுதிதாங்க..நம்புங்க...வீதிகளில் குவியலாக ஐஸ்


* கண்களுக்கு பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொள்வது பயன் தரும். குறிப்பாக குளிர் காற்று வீசும் நேரங்களில் கண்ணாடி மிகவும் பயனளிக்கும்.
.
* உணவு விஷயத்தில் சிலவற்றை நினைவில் கொள்ளவேண்டும். முதலாவதாக முடிந்த அளவு சிறு சிறு அளவாக நிறைய தடவை உணவு உண்ண வேண்டும். அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்வதும், சூடான உணவுகளை உட்கொள்வதும் அதிக பயனளிக்கும். குளிர்காலங்களில் 25 – முதல் 50 விழுக்காடு வரை அதிக கலோரி உடலுக்குத் தேவை என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.

தெருவெல்லாம் ஐஸ்...


* உடலில் நீர் சத்து குறைவுபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குளிர் காலங்களில் பெரும்பாலும் நாம் செய்யும் தவறு சரியான அளவு தண்ணீர் அருந்தாததே. அதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சற்று வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடித்து வருவது மிகவும் பயனளிக்கும்.
.
* அதிக நேரம் குளிரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியமற்ற நேரங்களில் குளிரில்லாத அறைகளில் தங்கலாம்.
.
* வெப்ப உபகரணங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்புகளற்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
.
* ஈரத்தன்மை, காற்றை விட 25 விழுக்காடு வேகமாக உடல் வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும். எனவே ஈரமற்ற ஆடைகள், ஈரமற்ற காலுறைகள், ஈரமற்ற இடங்களில் அதிகம் புழங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
.
* குளிர்காலங்களில் ஆல்கஹால் அருந்துவதால் உடல் வெப்பம் பாதுகாக்கப்படும் என்னும் கூற்றை மருத்துவம் மறுக்கிறது. மாறாக ஆல்கஹால் பயன்படுத்துவதால் வெப்ப இழப்பு அதிகம் ஏற்படுவதாக எச்சரிக்கிறது. காஃப்பி, ஆல்கஹால், புகை மூன்றுமே குளிர் காலங்களில் கெடுதலே தரும் என மருத்துவம் தெளிவுபடுத்தியிருப்பதால் இவற்றை அண்டவிடாதிருப்பதே உசிதம்.
.
* நம்முடைய வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதிக குளிரில் தோல் சிவந்து போதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற உபாதைகள் தரும் ‘சில்பிளெயின்ஸ்’ பாதிப்புக்கு எளிதில் உள்ளாவது அவர்களே.

சவுதி பாலைவனம் தாங்க...நம்புங்க...தென்துருவம் இல்லிங்க


* யாரேனும் குளிரில் விறைப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா பாதிப்பாய் இருக்கலாம் என உணரவேண்டும். ஹைப்போ தெர்மியா என்பது உடல் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே செல்லும் போது ஏற்படும் ஆபத்து. அவர்களை முழுதாய் மூடி, அவர்களுடைய கழுத்து, விலா, இடுப்பு ஆகிய பகுதிகளில் வெப்பம் தரவேண்டும்.
.
* அதிக குளிரால் விறைத்துப் போன பாதங்களையோ, கைகளையோ தேய்ப்பது நம் வழக்கம். ஆனால் அது கூடாது என்கிறது மருத்துவம். அவை திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும், அதை தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களையும் கைகளையும் வைத்திருப்பதே நல்லது எனவும் அறிவுறுத்துகின்றது.
.
* சிறிது நேர வீட்டு உடற்பயிற்சி உடலுக்கு இதமளிக்கும். குளிர் காலங்களில் உடலுக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கும். எனவே கரடு முரடான பொருட்களை உபயோகிக்கும் போது இரட்டிப்பு கவனம் அவசியம்.
.
* தூங்கும் போது மிகவும் பாதுகாப்புடன் கதகதப்பாகத் தூங்குவதும், வழக்கத்துக்கு மாறாக கெட்டியான முழு உணவை இரவில் உண்பதும் மிகவும் அவசியம். தலையை முழுவதும் மூடிக் கொண்டு தூங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
.
* முக்கியமாக குளிரைக் கண்டு பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக பயமும், அதிக துணிச்சலும் தவிர்த்து சரியான பாதுகாப்புடன் குளிரை அணுக வேண்டும்.
.
சரியான ஆடை, தேவையான தண்ணீர், சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, தேவையற்ற நேரங்களில் குளிரில் உலவுதலைத் தவிர்த்தல் போன்றவற்றை மனதில் கொண்டிருந்தாலே மிரட்டும் குளிரை துணிச்சலுடன் எதிர்கொள்ளலாம்.

நன்றி : திரு.சேவியர் - கவிதைச்சாலை

No comments: