சென்னையில் புரசைவாக்கம் ஹோட்டல் சில்வர்ஸ்டாரில் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் புத்தகக் கண்காட்சி 24.11.2007 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு துவங்குகிறது.
இக்கண்காட்சியை தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ. தமிழரசி ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மகளிரணி அமைப்பாளர் பாக்கிரா தலைமை தாங்குகிறார். மத்திய சென்னை மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா ஜலால் முன்னிலை வகிக்கிறார்.
புத்தகக் கண்காட்சி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை நடைபெறும்.
புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய சென்னை மகளிர் அணியினர் ஏற்பாடுசெய்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு 26651031 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்
No comments:
Post a Comment