Saturday, November 24, 2007

நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் வாழ்க்கை வரலாறு


நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் வாழ்க்கை வரலாறு

டாக்டர் கலைஞர் அவர்களால் நாடறிந்த நாவலர் என்று போற்றப்பட்டவரும், தமிழ் இஸ்லாமிய முற்போக்கு வார இதழான மறுமலர்ச்சி வார இதழை ஏறத்தாழ 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக கடும் போராட்டங்களுக்கிடையே நடத்தி இஸ்லாமிய சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொதுச்செயலாளராய் பல்லாண்டுகாலம் பணிபுரிந்தவரும், காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், சுலைமான் சேட், பனாத்வாலா, இ.அஹமது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி, என்று எல்லா தலைவர்களிடமும் நட்பு கொண்டிருந்தவரும், பல்வேறு நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என படைத்தளித்த சிறந்த எழுத்தாளரும், மிகச் சிறந்த பேச்சாளருமாகிய

நாடறிந்த நாவலர் மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சமுதாயக் கவிஞர் எழுச்சிப்பாவலர் விழுப்புரம் ஷாஜி எம்.எ., பி.எட். அவர்கள் எழுத முனைந்துள்ளார்கள். இது தனிப்பட்ட ஒருவரின் வரலாறல்ல. தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தின் நலனுக்காக அயராது போராடியவரின் எழுச்சிமிகு வீரச் சரிதம். தமிழ் இஸ்லாமிய சமூகம் தன் நன்றியறிதலுக்குரிய ஒருவரை, அவரின் தியாகங்களை நினைவு கூர்ந்து வருங்கால சந்ததிக்காக ஏற்றிப் போற்றவேண்டிய அற்புத ஆவணம்.
நாவலர் அவர்களைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகளோ, அவர் பற்றிய குறிப்புகளோ, துணுக்குகளோ, புகைப்படங்களோ தங்களிடமிருப்பின் தயவு செய்து அவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முபாரக் ரஸ்வி
+968 6951546
sithima@gmail.com
ysmrazvi@yahoo.com
A.M. Haneef
No 42 Jail Street
Palakkarai
TRICY 620 008
Tel : 0431 2714338
செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்

No comments: