Thursday, September 27, 2007

கோவை குண்டு வெடிப்பு வழக்கு நாளை முதல் தண்டனை அறிவிப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கு நாளை முதல் தண்டனை அறிவிப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு நாளை(28ம் தேதி) முதல் தண்டனை அறிவிக்கப்படுகிறது.கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஷா, அன்சாரி, தாஜூதீன், ஊம்பாபு, ஜாகிர்உசேன் உட்பட 70 பேர் கூட்டுச்சதி பிரிவிலும், மற்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது, வெடிமருந்து கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளிலும் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டுள்ளனர்.தண்டனை குறித்த வக்கீல் வாதம் முடிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அறிவிப்பு நாளை (28ம் தேதி) துவங்குகிறது. இதை நீதிபதி உத்ராபதி நேற்று தெரிவித்தார். குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பலியானார்கள். 250 பேர் படுகாயம் அடைந்தனர். ஒன்பதரை ஆண்டுக்குபின் வழக்கு விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்படுகிறது.

No comments: