Thursday, September 27, 2007

தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சினை சட்டம்

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவது அதிகரிப்பு * தலைமை நீதிபதி கவலை

பெங்களூரு: வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

ஆசிய பெண் வக்கீல்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு பெங்களூரில் நடந்தது. " பெண் உரிமைகள், மனித உரிமைகள்' என்பது குறித்து இந்த மாநாட்டில் பேசப்பட்டது. இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:வரதட்சணை கொடுமை மற்றும் வீட்டு வன்முறையில் இருந்து பெண்களை காப்பாற்றும் உயர்ந்த நோக்கில் தான் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டம் தவறாக பயன் படுத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம். வரதட்சணை கொடுமை செய்

பவர்களுக்கு அபராதம் விதிப்பது சரியான நடைமுறையாக எனக்கு தெரியவில்லை. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளவர்கள் தவறை செய்து விட்டு, அபராதம் மட்டும் கட்டி விட்டு தப்பி விட இது வழிவகை செய்து விடும்.வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பது நீதித்துறையின் அனைத்து பிரிவினருடைய பொறுப்பாகும். அதற்கான வழிகளையும் அவர்கள் கண்டறிய வேண்டும். இப்பிரச்னையை பெண் வக்கீல்கள் மாநாடு விரிவாக ஆய்வு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நீதித்துறையில் ஆண், பெண் பாகுபாடு ஏதும் இல்லை. ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசினார்.



************************************************************************

குறிப்பு : மேலே நீதிபதி கூறியுள்ளதற்கு ஒரு நல்ல உதாரனம் சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் நடந்த கீழே உள்ள சம்பவம். மேலை நாட்டு கலாச்சாரத்தால் சீரழிந்த மனைவியை சீர்திருத்த முயன்ற இஸ்லாமிய கணவன் மீது வரதட்சினை சட்டத்தின் கீழ் பொய் புகார்.

பொய்யாக பதியப்பட்டுள்ள இந்த வழக்கில் இராமநாதபுரம் காவல்துறை கண்கானிப்பாளர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

இதன் நகல் இராமநாதபுரம் காவல்துறை கண்கானிப்பாளருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ரவுடிகளை வைத்து சம்பந்தப்பட்ட பையனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது வரை காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வெளியூரில் இருந்து வந்து பெரியபட்டினத்தில் அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளார்கள் பெரியபட்டினம் மாவீரர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நாளை இதே கதிதான் அவர்களுக்கும் என்பது தெறியாதா? நிகழ்வில் தலையிடும் சமுதாய இயக்கங்கள் உரவினதர்கள் என்று பார்ப்பதை விட நியாயம் எந்தப்பக்கம் உள்ளது என்று ஆராய்ந்தபின் செயல்படுவது நலம்.

************************************************************************


ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை * துபாய் கணவர் தலைமறைவு




ராமநாதபுரம் : ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய துபாயில் பணியாற்றும் இன்ஜினியரை, ராமநாதபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்தவர் கரீம் கனி(67). இவரது பேத்தி சுமையா(21), பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்திய கலாசாரத்தில் வாழ விரும்பிய சுமையாவுக்கு, ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் ஹாருனை திருமணம் செய்து வைத்தனர். இவர், துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு கிலோ தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. தேனிலவுக்கு ஹாங்காங் நாட்டிற்கு பெண் வீட்டு செலவில் தம்பதியர் அனுப்பி வைக்கப்பட்டனர். கிரெடிட் கார்டை கையோடு எடுத்து வரவில்லை என்பதற்காக, மனைவியை ஹாங்காங்கில் மொகைதீன்கான் அடித்து துன்புறுத்தினார். மீண்டும் பெரியபட்டினம் வந்தவுடன் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம், நுõறு சவரன் நகை, நிலம், வீடு வேண்டும் என்று கேட்டு மொகைதீன் ஹாருன் குடும்பத்தினர் சுமைதாவை கொடுமைப்படுத்தினர்.விசாரணை நடத்திய ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா, வரதட்சணை கேட்ட மொகைதீன் ஹாருனின் தாயார் முகபத் பீவி(50), தாய்மாமன் மெக்தார் அலி(55) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான மொகைதீன் ஹாருன், அவரது பெரியப்பா அகநத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி நன்றி : தினமலர்

No comments: