இஸ்லாமிய மாநாடு!
நாள் : 09-09-2007 ஞாயிற்றுக் கிழமை (இறைவன் நாடினால்)
நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
இடம் : மதீனா மஸ்ஜித், ஆசாத் வீதி, செந்தண்ணீர்புரம்,
திருச்சிராப்பள்ளி – 620004
நோக்கம் :
முஸ்லிம்களே மீண்டும் உலக மக்களை வழிநடத்திச் செல்ல, தூய இஸ்லாமிய எழுச்சிக்கான ஒரு முயற்சி.
தலைப்புகள் :
- உலகம் முழுவதும் ஒரே தலைப்பிறையா? ஊருக்கு ஊர் தனித்தனி தலைப்பிறையா?
- ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டுமா ஜகாத்? வருடா வருடம் அப்பொருளுக்கு ஜகாத் கடமையா?
- அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விளங்குமா? அல்லது மவ்லவிகளுக்கு மட்டுமே விளங்குமா?
- மவ்லவிகளுக்கு மார்க்கத்தில் அதிகாரம் உண்டா?
- நபி (ஸல்) அவர்கள் விட்டுச்சென்றது 'உம்மத்தன் வாஹிதா' என்று ஒரே சமுதாயமா? மவ்லவிகள் கூறுபோட்டுள்ள பலபிரிவுகள் சமுதாயமா?
- மார்க்கப் பணிக்கு கூலி அனுமதிக்கப்பட்டதா?
- மார்க்கப்பணி முஸ்லீம்கள் அனைவரும் செய்ய வேண்டுமா? மவ்லவிகள் மட்டும் செய்ய வேண்டுமா?
- ரமழான் நோன்பின் சிறப்பு, ரமழான் இரவுத் தொழுகை
மற்றும் சில தலைப்புகள்! கேள்விகள்! பதில்கள்!!
இறைவனின் தெளிவான கட்டளை: உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள். (அல் குர்ஆன் 36:21)
இறைவனது இந்தக் கட்டளையைச் சிரமேற்கொண்டு பிரச்சார பணிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூலியே வாங்காத சகோதர சகோதரிகளைக் கொண்டு மட்டுமே இந்த ஒரு நாள் மாநாடு நடத்தப்படுகின்றது. புரோகிதம் அணுவளவும் கலக்காத தூய இஸ்லாத்தை அதன் அசல் வடிவிலேயே அறிந்து அதன்படி செயல்பட ஆர்வம் கொண்ட சகோதர சகோதரிகள் அவசியம் தவறாது கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கும் நன்பர்களுக்கு அறியத்தந்து இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க செய்யவும்.
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
இவண்
ஜமாஅத்துல் முஸ்லிமீன்
பஸ் ரூட் : திருச்சி ஜங்ஷன் - துவாக்குடி 128 நிறுத்தம் செந்தண்ணீர்புரம்
சத்திரம் பஸ் நிலையம் - செந்தண்ணீர் புரம் - 52
நன்றி : அந்நஜாத் - இஸ்லாமி இலட்சிய மாத இதழ்
No comments:
Post a Comment