Saturday, September 08, 2007

யார் பொய்யர்கள்? (பாகம்-04) IIPONLINE சாட்டையடி கட்டுரை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதர சகோதரிகளே,

கடந்த சில காலமாக நமது உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களை பொய்யரென்றும் போலியென்றும் அவதூறு கூறி இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகின்றது ஒரு பொய்யர் கூட்டம்.

அவர்களின் கூற்றுக்களை பொய்யாக்கும் விதமும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு தக்க பதிலடியாகவும் இஸ்லாமிய இணையப்பேரவையினர் தகுந்த விளக்கங்களுடன் பதில் கொடுத்து வருகின்றனர். அவற்றை நாம் அனைவரும் படித்து பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

நன்றி




****************************************************


யார் பொய்யர்? (பாகம் - 1)

பொய்யர்கள் யார்? புளுகுவது யார்?

இவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது. ....மேலும் படிக்க....

யார் பொய்யர்? (பாகம் - 2)

இவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்?

இன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும் பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர் என்றால், கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது 25 வயதில் வணிகராகவும் 40 வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா? தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா? உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா? சற்று சிந்தியுங்கள். ...மேலும் படிக்க......

யார் பொய்யர்? (பாகம் - 3)

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் உண்மையாளர்தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையாளர் என்பதற்கும், அவர்கள் இறைவனிடத்திலிருந்து இறைச்செய்தி என அறிவித்தவைகள் அனைத்தும் உண்மைதான் என்பதற்கும், அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர்தான் என்பதற்கும் அவர்கள் எது இறைச்செய்தி என்று சொன்னார்களோ அந்தக் குர்ஆனே 1400 ஆண்டு காலமாக மாபெரும் சான்றாக இருக்கின்றது. ஒருவர் இவ்வுலகில் எத்தகைய அறிவுஜீவியாக இருந்தாலும் அல்லது அவர் விஞ்ஞானியாகவே இருந்தாலும் அவர் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் நூறு சதவிகிதம் காலத்தால் மாறாமல், மாற்றப்படாமல், முரண்படாமல் தவறு என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லாமல் இருந்ததாக வரலாறு இல்லை. எப்பேர்ப்பட்ட பேரறிஞராக அவர் இருந்தாலும் அன்று அவர் சொல்லும் கருத்தை சில வருடங்களுக்குப் பின்னர் வருபவர்கள் அவரைவிட சிறப்பான முறையில் ஆய்வு செய்து தெரிவிப்பதைப் பார்க்கிறோம். அல்லது முன் சென்ற அவ்வறிஞரின் கூற்றை தவறு என்று நிரூபிப்பதைப் பார்க்கிறோம். ....மேலும் படிக்க.....

யார் பொய்யர்கள்? (பாகம்-4)

அபத்தங்களும் அவதூறுகளும் ஆதாரமாகுமா?

மனித இனம் போற்றும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை தரக்குரைவான வார்த்தைகளாலும், ஒருமை நடையிலும் இவர்கள் தூற்றி பதிவு செய்துள்ளனர். மனிதத் தன்மையற்ற இவர்களிடம் கீழ்த்தரமான இந்நரகல்களைத் தவிர வேறு எவற்றை நாம் எதிர்பார்க்க முடியும்? எனவே அவர்கள் பலமான ஆதாரங்களாக நினைத்து பதிந்த அவதூறுகளையும் பொய்களையும் பதிலளிக்க வேண்டி நாமும் அப்படியே இங்கு பதிக்கிறோம். இப்பதிலைப் படிப்பவர்கள் 'முஹம்மது' என்று இருப்பவைகளையும், ஒருமையில் உள்ள வாசகங்களையும் 'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்' என்று திருத்திப் படித்துக் கொள்ளவும். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பியுள்ள இவர்கள் தரும் வேடிக்கையான ஆதாரங்களைப் பாருங்கள். ......மேலும் படிக்க......


இஸ்லாமிய இணையப் பேரவை

IIPONLINE.ORG

2 comments:

சத்திய மாக்கம் said...

அஸ்ஸலாம் அலைக்கும்,

நல்ல கட்டுரைகள்.

abumaram said...

சரியான சாட்டை அடி கட்டுரை. பாராட்டுக்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.