Sunday, July 29, 2007

கடையநல்லூர் ஜாக் பள்ளி த.த.ஜ.விடமிருந்து மீட்கப்பட்டது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

கடையநல்லூர் ஜாக் பள்ளி த.த.ஜ.விடமிருந்து மீட்கப்பட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜாக்குக்கு சொந்தமானதுதான் என 3.7.07 அன்று தென்காசி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி விட்டது. சட்டத்தின் துணையுடன் முறையாக மீட்கும் நிகழ்ச்சி 29.7.07 அன்று நடைபெற்றது. ஜாக் மாநில தலைவர் எஸ். கமாலுத்தீன் மதனி இஷா பாங்கு சொன்னார்கள். இஷா தொழுகை முடிந்ததும் மவுலவி கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதன் மூலம் த.த.ஜ.விடமிருந்து கடையநல்லூர் ஜாக் பள்ளி மீட்கப்பட்டு ஜாக் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

பள்ளிவாசல் மீட்பு சிறப்பு நிகழ்ச்சியாக மாலை 4 மணி முதல் இஜ்திமா நடத்த திட்டமிட்டிருந்தார்கள். த.த.ஜ.வினர் காலை 10 மணிக்கே கடையநல்லூர் ஆண்கள் கல்லூரி மாணவர்களையும் மேலப்பாளையம் அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரி மாணவிகளை பள்ளி உள்ளே கொண்டு வந்து வைத்து கலவரம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

பொறுமையுடனும் நிதானத்துடனும் காவல் துறை அதிகாரிகளின் சீரிய ஒத்துழைப்புடனும் மீட்புப் பணி நடந்தது. ஜாக் ஒரு வாரம் த.த.ஜ. ஒரு வாரம் என ஜும்ஆ நடந்து வந்தது. ஈராண்டுக்கு முன் முழுமையாக அபகரித்தது த.த.ஜ. கோர்ட்டு தீர்ப்பு உண்மையான உரிமையாளர்களான ஜாக்கின் பக்கம் ஆகி விட்டது. எனவே மீண்டும் ஜாக் ஒரு வாரம் த.த.ஜ. ஒரு வாரம் என பேரம் பேசினர்.

இறுதியில் இரண்டு தளத்தை பூட்டி விட்டு போய் விட்டனர். திறந்திருந்த தளத்தில் ஜாக் நிகழ்ச்சி நடத்தியது. உயிரே போனாலும் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக்கை விட்டுக் கொடுக்க மாட்டோம். எத்தனை நாளுக்கு போலீஸ் நிற்கும். அல்லாஹ்வின் மீது ஆணையாக மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என த.த.ஜ.வினர் சத்தியம் செய்துள்ளனர்.
செய்திகள் : சகோ. பஸ்லுல் இலாஹி

No comments: