Saturday, July 28, 2007

AL-ZAMIL இஸ்லாமிய கருத்தரங்கம்

கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2007) அன்று தம்மாம் ராக்காவில் அமைந்துள்ள அஸ்-ஜாமில் நிறுவனத்தாரின் கேம்பில் அவர்கள் நடத்தும் 5-ம் ஆண்டு இஸ்லாமிய கருத்தரங்கம் தமிழ் மொழியில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.




நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் துனைத் தலைவர் மெளலவி உவைஸ் பாக்கவி அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்-ஜாமில் கேம்ப் நிர்வாகி மெளலவி முஹ்யத்தீன் ரஷாதி அவர்கள் கிராஆத்துடன் துவங்கி மிகச்சிறப்பாக வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழச்சிக்காக ஜீபைல் மாநகரில் இருந்து வருகை தந்திருந்த இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் மெளலவி மஹம்மத் ஜமாலுத்தீன் மதனி அவர்கள் ஷிர்க்கும் பித்ஆத்தும் என்ற தலைப்பிலும் அல்கோபர் அக்ரபியா சென்டரில் இருந்து வருகை தந்திரந்த தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்கள் மறுமையின் கவவலை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.


தம்மாம் சென்டரில் இருந்து வந்திரந்த இலங்கையை சேர்ந்த மார்க்க் அறிஞர் மெளலவி முஹம்மத் மன்சூர் முஸ்த்தஃபா அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து விளக்க உரையாற்றினர்கள். இறுதியாக தம்மாம் தமிழ் தஃவா கமிட்டியை சோந்த சகோ. ஷஃபியுல்லாஹ் கான் அவர்கள் நன்றியுயுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



நிகழச்சியின் இடையில் பேசிய தலைப்புக்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன் நிகழச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களம் சிறுவர்களும் ஆர்வமுடன் கெடக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அல்-ஜாமில் நிர்வாகத்தினரும் அல்-ஜாமில் நிறுவனத்தில் பணியாற்றும் தமிழ் முஸ்லிம் சகோதரர்களும் நிகழச்சிக்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தனர். நிகழச்சியின் இடையில் இருமுறை சிறப்பான சிற்றுன்டியும் அத்துடன் தேனீரும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகானத்தின் பல பகுதிகளில் இருந்து தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கடுமு் வெப்பத்தையும் பொருட்படுத்தாது பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

No comments: