Wednesday, April 25, 2007

இவர்கள் கல்விக்கு உதவுங்களேன்...

இறைவனின் திருப்பெயரால்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழக சிறைச்சாலைகளில் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டுள்ள முஸ்லிம்கள் தமிழக சிறைகளில் அடிமைதளைகளில் கட்டுண்டு கிடக்கிறார்கள். நீண்ட நெடிய சிறைவாழ்வினால் இவர்தம் குடும்பங்கள் முறையாக மூன்று வேளை உணவு உண்பதற்கே திண்டாட்டம் என்கின்ற போது இவர்களால் இவர்களின் குழந்தைகளை எங்ஙனம் படிக்க வைக்க இயலும்! குடும்பங்களை கட்டிக் காக்கவேண்டிய பொறுப்புமிக்க ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் முதிர்கன்னிகளாகிவிட்ட இவர்கள் வீட்டுக் கன்னிப்பெண்கள். மூன்றுவேளை உணவிற்கும், படிப்பிற்கும் திண்டாட்டம் என்கிறபோது இவர்களின் வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால் என்னாவது?

இஸ்லாமிய சமுதாயத்தின் உயர்வுக்கும், அதன் மேலாண்மைக்கும் அதன் கண்ணியத்திற்காகவும், வேண்டி தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி சிறையினுள் சிக்கியவர்களையும், அநீதியாக கைது செய்யபட்டவர்களும் என சிறையில் நூற்றுக்கணக்கில் நம் முஸ்லிம் சகோதரர்கள் அடைபட்டுக் கிடக்கின்றார்கள் இவர்களது குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி நின்றபோது சிறைபட்டோரின் துயரை துடைத்திடவும் அவர்தம் நலன்களில் அக்கரை கொண்டு இவர்களின் வழக்குகளையும் இவர்களின் குடும்பங்களையும் கவணித்து வரும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை இவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் கவணித்து வருகின்றது.

இத்தகைய நன்மையான அதே நேரத்தில் மிகவும் சிரமமான பணியை கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுபான்மை உதவி அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் செய்திட்ட உதவிகளைக் கொண்டு பல வழக்குகளிலிருந்து பலரை சிiறியல் இருந்து விடுவித்துள்ளது. அத்துடன் சிறையில் அடைபட்டுக் கிடக்குமு; முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகளின் கல்விக்கு தொடாந்து உதவி வருகின்றது. இப்பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்வதற்கு பொருளாதாரத்தின் அவசியம் மிக மிக இன்றியமையாததாக உள்ளன. இஸ்லாத்தின் பல பணிகளுக்கு உதவிகள் பல தந்துதவுவது போல இப்பணிக்கும் உதவிகள் தந்துதவிட வேண்டும் என சிறுபான்மை உதவி அறக்கட்டளையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

இத்தனை ஆண்டுகாலமாக நமது சமுதாய சொந்தங்கள் இந்தக் குழந்தைகளின் கல்விக்காக அளித்து வந்த உதவிகளை கொண்டு இந்த குழந்தைகள் சிறப்பாக் படித்து வருகின்றார்கள். அது போலவே இவ்வருடமும் பள்ளி, கல்லூரிகள் துவக்க கூடிய காலம் நெருங்கி விட்டதாலும் சரியான பொருளாதார வசதிகள் இல்லாத காரணத்தாலும் இம்முறை மீண்டும் உங்களிடமே இந்த முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகளின் கல்விக்காக உதவி வேண்டி இவர்கள் நிற்கிறார்கள்.

இம்முஸ்லிம் குழந்தைகளின் கல்விக்கு உதவ விரும்புபவர்கள் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தங்கள் உதவிகளை அனுப்பலாம்.

அவர்களின் வங்கி முகவரி :

CHARITABLE TRUST FOR MINORITIES (REGD. # 882/2001)
SAVING A/C # 57991
UNITED BANK OF INDIA -COIMBATORE,
TAMILNADU - INDIA

OR IF YOU WANT TO SEND YOUR DONATION BY ONLINE :

ICICI BANK A/C # 605301208490
MILL ROAD, COIMBATORE-1 BRANCH
FAVOR OF : CHARITABLE TRUST FOR MINORITIES

TEL. : +91-4222-307673 OR +91-94436-54473



2007-2008 க்கான குழந்தைகளுக்கான கல்வி உதவி அறிக்கையை பார்க்க இங்கு சொடுக்கவும்.

கல்வி உதவி கேட்டு சிறுபான்மை உதவி அறக்கட்டளையினர் அனுப்பிய கடிதம் படிப்பதற்கு:

PAGE-1

PAGE-2

குறிப்பு : தம்மாம் மற்றும் அல்கோபரில் இருந்து இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு எகொண்டால் அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்டவர்களை சென்றடைய உதவ முடியும். எனது தொலைபேசி : 0565116910.



நன்றியுடன்
முகவைத்தமிழன்

1 comment:

வேங்கை.சு.செ.இப்ராஹிம் said...

panam pataitha seemaankal alli kutukkattum... kunam ulla komaankal killiyavathu kotukkattum... inshaallah marumaiyin vetriyai makathaga allah avarkalukku alikkattum...

anban

vengaiibrahim