Wednesday, January 31, 2007

அரசு மற்றும் தமுமுக வின் கவனத்திற்கு...(URGENT)

தமிழக அரசும் தமுமுக வும் கவனிக்குமா?தனது கைக்குழந்தையுடன் நிலோஃபர் நிஷா

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்களால் மறக்க இயலாதது கடந்த 16.09.2006 அன்று மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரசு பேருந்தில் சமூக விரோதி ஒருவனால் குத்தி கொல்லப்பட்ட பைசுல் ரஹ்மானின் படுகொலையையும் அன்று 8 மாத கற்பினியாக இருந்த அவரது மனைவி நிலோஃபர் நிஷாவின் கதறலையும். நமது வலைத்தளத்தில் தான் முதன் முறையாக இந்த செய்தி வெளியிடப்பட்டது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட சமூக விரோதியை கைது செய்யவும் இந்த படுகொலையால் பாதிக்கப்பட்ட பைசுல் ரஹ்மானின் இளம் விதவையும் கற்பினியுமாக இருந்த நிலோஃபர் நிஷாவிற்கு தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரன நிதியில் இருந்து உதவி வழங்கவும் கோரியிருந்தோம்.

சம்பவம் நடந்த அன்று அதே கோவையில் ஜே.பி மஹாலில் நடைபெற்ற தமுமுக வின் செயற்குழு கூட்டத்திற்கு வந்திருந்த தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் மற்றுமுள்ள தமுமுக தலைவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று பைசுல் ரஹ்மாதனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அடுத்த நாள் நடைபெற்ற பைசுல் ரஹ்மானின் உடல் நல்லடக்கத்தின்போது தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் அதன் தலைவர்களும் தொன்டர்களும் திரளாக கலந்து கொண்டனர் அதன் பின்னர் மையவாடியில் நடத்திய உரையில் தமுமுக வின் தலைவர் ஜனாப். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் அதன் மற்ற தலைவர்களும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரியும் பைசுல் ரஹ்மானின் குடும்பத்தாருக்கும் அவரது மனைவி நிலோஃபர் நிஷாவிற்கும் உதவிகள் வழங்க தமுமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் வாக்குறுதிகள் அளித்து உரை நிகழ்த்தினர்.

மையத்தின் முன் தமுமுக தலைவர்

அதன் பின்னர் அன்று மாலை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமுமுக தலைவர் ஜனாப் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக செயற்குழுவில் பைசுல் ரஹ்மானின் படுகொலையை கண்டித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், கோவையில் ஜேப்படி திருடர்களின் அட்டகாசம் அதிகரிப்பது கவலையளிக்கிறது என்றும் பேரூந்தில் பயணம் செய்த ஃபைசல் ரஹ்மான் என்பவரை பிக்பாக்கெட் கொள்ளையர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது என்றும் படுகொலைச் செய்யப்பட்ட பைசல் ரஹ்மான் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் கருணைத் தொகையும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை கோரியும் கோவை பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

அன்று கணவரது மையத்தை பார்த்து கதறும் கற்பினி நிலோபர் நிஷா

அதன் பின்னர் சமூக நலத்தொன்டர்கள் உதவியுடன் குற்றவாளிளை கைது செய்ய கோரியும், கணவரை இழந்து வருமையில் வாடும் தனக்கும் தனது கணவரின் தாயாருக்கும் நிவாரான நிதி உதவி வழங்க கோரியும் தமிழக முதல்வருக்கும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் இன்ன பிற அதிகாரிகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார் பைசுல் ரஹ்மானின் விதவை நிலோஃபர் நிஷா. அதன் நகலும் தமுமுக தலைமைக்கு அனுப்ப பட்டுள்ளது.

முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தை படிப்பதற்கு


முதல்வருக்கு அனுப்பிய கடிதம்


பின்னர் அவருக்கு பிரசவத்தில் அழகான குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது, பிரசவ செலவு உள்பட பலதையும் தாங்கி கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்ட அந்த குடும்பம் மிகவும் கஷட்டமான சூழ்நிலையிலேயே இன்று வரை இருந்து வருகின்றது. தனது தாய் வீடுமு் மிக்க வருமையில் இருப்பதால் தனது கணவரின் வீட்டிலேயே நோயால் பாதிக்கப்பட்டுள்ள பைசுல் ரஹ்மானின் தாயாருடனும் தனது கைப்பிள்ளையுடனும் மிக்க கஷ்ட்ட ஜீவனம் நடத்தி வருகின்றார் இந்த சகோதரி.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த சமூக விரோதி பின்னர் காவல்துறையிடம் சரன் அடைந்து குன்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் தங்கள் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித்தந்து கொண்டிருந்தே ஒரே நபரையும் சமூக விரோதிகளின் கொலை வெறிக்கு இழந்து இந்த இளம் வயதிலேயே விதவையாகி எதிர்காலம் கேள்வி குறியாய் எந்த வருமானமும் இன்றி நிர்கதியாய் நிற்கும் சகோதரி நிலோஃபர் நிஷவிற்கும் பைசுல் ரஹ்மானின் தாயாருக்கும் இது வரை எவ்வித அரசு உதவியோ சமுதாய உதவிகளோ கிடைக்காமல் இன்றளவும் கண்ணீருடன் நமது சமுதாயமோ அல்லது இந்த அரசோ உதவும் என்று எல்லா வாயில்களையும் தட்டிக் கொண்டுள்ளனர்.

நோய் வாய்ப்பட்ட தனது கணவரின் தாயாருடன்

மாவட்ட நிர்வாகத்தினை அனுகும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகின்றது, கோவை மாவட்ட ஆட்சித் தலைவரோ "ஏம்மா உங்கள் கட்சி தமுமுக தானே இதில் தலையிட்டுள்ளது அவர்கள் தற்போது ஆளும் கட்சி கூட்டணியிலும் உள்ளனர், அவர்களாலேயே ஒன்றும் செய்யவில்லை எனும்போது நாங்க என்னம்மா செய்யிரது?" என்று கூறியுள்ளார்.


மையவாடியில் வாக்குறுதிகள் அளித்த தமுமுக வின் தலைமையோ அல்லது அந்த இயக்கத்தினரோ அரசின் உதவிகளை பெற்றுத்தருவதற்கு ஏதும் முயற்சிகள் எடுப்பதாகவோ அல்லது சமுதாயத்திடம் இருந்து ஏதாவது உதவிகள் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பவர்களாகவோ தெறியவில்லை.

தமிழகத்தின் தரம்கெட்ட அரசியல்வாதிகளின் ரத்தத்தில் ஊரிப்போனது எளவு வீட்டில் வைத்து அள்ளி வீசும் வாக்குறுதிகளும் பினத்தின் மீது செய்யும் அரசியலும் நாடறிந்தது தமுமுக வும் அந்த லிஸ்ட்டில் சேராது என்ற நம்பிக்கை நமது சமுதாயத்திற்கும் அந்த குடும்பத்திற்கும் உள்ளது. வாக்குறுதி அளித்த தமுமுக தலைமையின் நேரடி கவணத்திற்கு இந்த விஷயத்தை நாம் கொண்டு வருகின்றோம். கோவை மாவட்ட ஆட்சியர் கூறியது போல் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமுமுக இந்த ஏழைக் குடும்பத்திற்கு ஏதாவது அரசு உதவிகளை பெற்றுத்தருமா? தான் சார்ந்துள்ள சமுதாயத்திடம் ஏதாவது உதவிகளை பெற்றுத்தருமா? காத்திருந்து பார்ப்போம்.தமிழக அரசின் கவணத்திற்கு :

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு இந்து ஒரு முஸ்லிமால் தனிப்பட்ட காரணத்திற்காக கொல்லப்பட்டாலும் கூட அந்த இந்துவின் குடும்பத்திற்கு உடனடியாக முதலமைச்சரின் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருபோதும் இது போல் இந்து சமூக விரோதியாலோ அல்லது இந்து தீவிரவாதிகளாலோ கொல்லப்படும் எந்த ஒரு முஸ்லிம்' குடும்பத்திற்கும் ஒரு போதும் இது போன்ற உதவிக்ள அறிவிக்கப்படுவதில்லை. ஏன் இந்த மாற்றான்தாய் மனப்பான்மை? எம் சமுதாயம் என்ன குற்றம் செய்தது?

தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து தனது ஆட்சியில் சமூக விரோதிகளால் மக்கள் கூடும் இடத்தில் வைத்து தனது அரசின் பேருந்தில் படு கொலை செய்யப்பட்ட பைசுல் ரஹ்மானின் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரன நிதியில் இருந்து உடனடி உதவிகள் அறிவிக்கப்பட்டு அந்த குடும்பத்தின் துயரம் துடைக்கப்பட வேண்டும். கருனை உள்ளம் கொண்ட தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம்.

இந்த செய்தியின் நகல்கள் கீழக்கண்டவர்களுக்கு அனுப்ப பட்டுள்ளது :

முதலமைச்சரின் தனிப்பிரிவு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைமை

தமுமுக வின் தலைவர்


இஸ்லாம்,முஸ்லிம்,காரைக்குடி,இராமநாதபுரம்,கோவை

1 comment:

AbuMoosa said...

ஒவ்வொரு முறையும் ஆட்சி பீடத்தில் அமருவதற்கு முன் முஸ்லிம்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை கொடுக்கும் கருணாநிதி இம்முறை இடஒதிக்கீடு கொடுப்பதாக வாக்களித்தார்.

அவர் இரண்டு வருடம் என்று அமைத்திருக்கிற அந்த கமிஷன் வரும்பொழுது சரியாக பாராளுமன்ற தேர்தல் வருகிறது.

அதேபோல், அநேகமாக சென்னை மாநகராட்சி தேர்தல் நெருக்குகிற இந்த சமயத்தில் கூட அது சம்பந்தமாக சில கைக்கூலிகளை வைத்து இடஒதிக்கீடு தான் கொடுக்க இருப்பதாக ஆரம்பிப்பார் பாருங்களேன்....