Sunday, September 17, 2006

ஜெயலலிதா வீடு முற்றுகை - முஸ்லிம்கள் அறிவிப்பு (Hot)

ஜெயலலிதா வீட்டை முற்றுகையிடும் போராட்டம்
தமுமுக தேர்தலில் நிற்காது – அறிவிப்பு
கோவையில் கொலையுன்ட பைசுல் ரஹ்மான் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு தமுமுக கோரிக்கை





கோவை, செப்டம்பர் 17, 2006 : இன்று மாலை கோவை ஆத்துப்பாலம் ஜே.பி. மஹாலில் தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர்எம், ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலப்பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப்பொதுச் செயலாளர் கேப்டன் அமீருத்தீன், மாநிலச் செயலளார்கள் ஜே.எஸ். ரிபாயி,எம். தமீமுன் அன்சாரி, கோவை ஈ. உமர், பி. அப்துஸ் ஸமது, மாநில துணைச்
செயலாளர்கள் எஸ். எஸ். ஹாரூன் ரஷீத், கே. முஹம்மது கவுஸ், ஜே. ஹாஜா கனி, ஏ.சாதிக் அலி, வை. சிராஜுத்தீன், முஹம்மது ஆரிப் உட்பட மாநில செயற் குழு உறுப்பினர்கள் 125 பேர் பங்குக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் அப்பழுக்கற்ற முறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பணியாற்றி வரும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முதன்மைச் செயலாளர் முனீர் ஹோடாவை தேச துரோகி என்றும், அப்துன்நாசர் மதானி தப்பிக்க வழிவகைச் செய்தார் என்று அவதுறாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இச்செயற்குழு வன்மையாக கண்டித்தும் ஜெயலலிதாவின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து வரும் செப்டம்பர் 22 மாலை அவரது வீட்டை முஸ்லிம்களை திரட்டி முற்றுகையிடுவதெனவும்,

கடந்த எட்டான்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை கோரியும்

உள்ளாட்சி தேர்தல் தமுமுக போட்டியிடாது தமுமுக அமைப்பு நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத அமைப்பாக தமுமுக செயல்படும். உள்ளாட்சி தேர்தலிலும் தமுமுக போட்டியிடாது என்றும்,

வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதெனவும்,

கோவையில் ஜேப்படி திருடர்களின் அட்டகாசம் அதிகரிப்பது கவலையளிக்கிறது.கடந்த செப்டம்பர் 16 அன்று பேரூந்தில் பயணம் செய்த ஃபைசல் ரஹ்மான் என்பவரை பிக்பாக்கெட் கொள்ளையர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றதுபடுகொலைச் செய்யப்பட்ட பைசல் ரஹ்மான் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் கருணைத் தொகையும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை கோரியும் கோவை பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தீர்மானங்கள் உள்ளீட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக இவ்வமைப்பின் தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெறிவித்தார்.

செய்திகள் : கோவை தங்கப்பா

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

No comments: