கோவையில் சட்டம் ஒழுங்கு சீரழிவா?
தமுமுக தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நிர்வாகிகளுடன் ஜனாசாவை பார்வையிட்டபோது
கோவை செப்டம்பர் 17, 2006 : கோவையில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ஹனிபா என்பவரது மகன் 23 வயதான பைசுல் ரஹ்மான் என்ற முஸ்லிம் இளைஞர் திருமணமாகி 9 மாதங்களே ஆகியுள்ளன இவருக்கு நிலாபர் நிஷா (வயது20) என்ற 8 மாத கர்ப்பினி மனைவியும் உள்ளார்.
ஏலக்ட்ரிக் வேலைக்கு சென்று அதில் வரும் வருமானம் மூலம் குடும்பம் நடத்தி வரும் இவர் நேற்றும் (16.09.2006) வழக்கம்போல் தனது நன்பர் அல் அமீன் காலனியை சேர்ந்த அன்வர் என்பவருடன் டவுன் பஸ்ஸில் திரும்பி வருகையில் இரவு 9.45 மணியளவில் கோவை டவுன் ஹால் காதி பவன் அருகில் பஸ்ஸில் ஏறிய சமூக விரோதி ஒருவன் பைசுல் ரஹ்மானின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ150 ஐ பறிக்க முயன்றுள்ளான் அப்போது இவர் சத்தம் போட்டு தடுத்துள்ளார். இவர் சத்தம் போட்டவுடன் டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார் உடனே ஆத்திரமடைந்த அந்த சமூக விரோதி தன்னிடம் இருந்த கத்தியால் பைசுல் ரஹ்மானை மார்பிலும் வயிற்றிலுமாக இரு முறை குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டான்.
கத்திக்குத்தில் படுகாயமுற்ற பைசுல் ரஹ்மானை அவரது நன்பர் அன்வர் அவர்கள் பிற பயணிகள் உதவியுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பைசுல் ரஹ்மானின் உயிர் பிறிந்தது (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). இந்த சம்பவம் நடந் பகுதியானது 24 மணிநேரமும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுpயாகும். இப்படிப்பட்ட ஒரு பகுதியில் மக்கள் மத்தியில் டவுன் பஸ்ஸில் ஒருவர் சமூகவிரோதியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளது கோவையில் சட்ட ஒழுங்கு சீரழிந்து உள்ளதையே காட்டுகின்றது. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கூறி ஆட்சி மாற்றம் கோரிவரும் முன்னால் முதல்வர் ஜெயாவின் பேச்சுக்களுக்கு வலு சேர்ப்பது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது.
இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் கோவைக்கு நிர்வாக செயற்குழு கூட்டத்திற்காக வந்திருந்த தமுமுக வின் தலைவர் ஜனாப். ஜவாஹிருல்லாஹ் அவர்களும் ஜனாப் ஓ.எஸ். ரஹ்மத்துல்லாஹ், ஜனாப் கோவை E. உமர், ஜனாப் தமீமுன் அன்சாரி போன்ற மாநில நிர்வாகிகளும் உடணடியாக விரைந்து வந்து ஜனாஸாவை பார்வையிட்டு பைசுல் ரஹ்மானின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரியும் காவல்துறையினை வலியுருத்தினர்.
அத்துடன் ஜனாசாவை மருத்துவமனைக்கு எடுத்து சென்றதிலிருந்து மற்ற அனைத்து பணிகளிலும் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் சகோ. கலீலுர் ரஹ்மான், சகோ.கோவை தங்கப்பா, சகோ. அபுத்தாஹிர் ஆகியோர் உடனிருந்து பல வகைகளில் உதவி புறிந்தனர் அத்துடன் ஜனாபா ஷம்சுன்நிஷா அன்சாரி அவர்கள் பைசுல் ரஹ்மானின் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
தமுமுக நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மை அறக்கட்டளையினரின் வற்புறுத்தலுக்கிங்க உடனடியாக காவல்துறையின் ஐஜி மறியாதைக்குறிய ராஜேந்திரன் அவர்களின் நேரடி உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக வேண்டி கமிசனர் கரன் சின்ஹா மற்றும் உதவி கமிசனர் சன்முகம் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஜனாசாவை எடுத்து சென்றபோது கூடிய கூட்டம்
பிரேத பரிசோதனைக்கு பின் இன்று பைசல் ரஹ்மானின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது இதில் நூற்றுக்கணக்காக அந்தபகுதி மக்களும் தமுமுக வினரும் கலந்து கொண்டனர்.
கதறி அழும் கற்பினி மனைவியும் உறவினர்களும்
அடக்கத்திற்காக உடல் எடுத்து செல்லப்பட்டபோது பைசுல் ரஹ்மானின் ஏழை தாயும் அவரது 8 மாத கர்ப்பினி மனைவியும் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித்தந்து கொண்டிருந்தே ஒரே நபரையும் சமூக விரோதிகளின் கொலை வெறிக்கு இழந்து எதிர்காலம் கேள்வி குறியாய் எந்த வருமானமும் இன்றி நிர்கதியாய் நிற்கின்றது இந்த குடும்பம்.
தமிழக முதல்வர் அவர்கள் இந்த 8 மாத கற்பினியான பைசுல் ரஹ்மானின் விதவையின் மீதும் அவரது ஏழை தாயார் மீதும் கருனை கொண்டு தனது ஆட்சியல் சமூக விரோதிகளால்
கொல்லப்பட்ட ஒரு ஏழையின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரன நிதியிலிருந்து உடனடியாக உதவி வழங்க கோருகின்றோம். அதற்கு நிகழ்வின் சாட்சிகளான தமுமுக வின் தலைவர்கள் தனது சமுதாயத்தை சேர்ந்த இந்த ஏழைக்குடும்பத்திற்கு அந்த உதவிகள் கிடைத்திட தகுந்த நடவடிக்கைகள் எடுத்து உதவுவர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
செய்தி மற்றும் புகைப்பட உதவி : சகோ. கோவை தங்கப்பா
நன்றி
முகவைத்தமிழன்
இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி கோவை
1 comment:
mikavum kodumai. kovai makkal yaarum udhavavillaiya kuthiyapoodu?
Post a Comment