Saturday, September 16, 2006

மத்திய அமைச்சருடன் ஒரு சந்திப்பு! (Interview)

மாண்புமிகு மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் E.அஹமது அவர்களுடன் தமிழ்முஸ்லிம்களின் அரசியல் மேடை சார்பாக சந்திப்பு

மத்திய அமைச்சர் ஜனாப் E.அஹமது அவர்களை தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை சார்பாக சகோ. கோவை தங்கப்பா அவர்கள் சந்தித்தபோதுகடந்த செப்டம்பர் 10 ம் தேதி அன்று மாண்புமிகு மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் E.அஹமது அவர்களை தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை சார்பாக சகோ. கோவை தங்கப்பா சந்தித்தார்கள். அந்த சந்திப்பின்போது கீழ்க்கண்ட கோரிக்கைகள் அவரிடம் வைக்கப்பட்டதுடன் எழுத்துப்பூர்வமாகவும் மத்திய அமைச்சர் E.அஹமது அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஹஜ் பயணிகள் இன்னமும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதால் அவர்கள் தங்களது புனித பயணத்திற்கான ஏற்பாடுகளை துவங்க ஆயத்தமாகாமல் துன்பப்படுகின்றனர். மாண்புமிகு அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு அனைத்து மனுதாரர்களுக்கும் இந்த வருட (2006) ஹஜ் பயண வாய்ப்பு கிட்டிட உடனடியாக ஆவண செய்ய வேண்டி தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை சார்பாக கோரப்பட்டது. இது குறித்து பதில் அளித்த மத்திய அமைச்சர் தமிழக அரசோடும் சம்பந்தப்பட்ட துறையோடும் காத்திருப்போர் பட்டியளில் உள்ளேரின் ஹஜ் பயனம் உறுதிப்படுத்தப்பட வேண்டி பேசுவதாக உறுதியளித்தார்.

இந்த இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணற்ற முஸ்லீம்கள் உயிர் தியாகம் செய்துள்ளார். தங்களது சொத்து, சுகங்கள், சொந்தங்களை இழந்துள்ளனர். மேற்படி நிகழ்வுகள் வரலாற்றில் மறந்தும், மறைக்கப்பட்டும் உள்ளன. மாவீரன் திப்பு சுல்தான் ராக்கெட்டை முதல்முதலில் கண்டுபிடித்தவர் என்பதை நாம் அறியும் போது நெஞ்சு விம்முகிறது. ஆனால் இந்த சமுதாயத்தின் தியாகங்களை மறைத்து துரோகிகளுக்கெல்லாம் பாராளுமன்றத்திலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் நினைவுச்சின்னங்கள் அமைத்துள்ளார்கள். சுதந்திர போராட்ட காலத்தில் கேரளாவில் திரூரில் இருந்து கோவைக்கு கள்ள மனம் கொண்ட நயவஞ்சக ஆங்கிலேயர்களால் ஒரு ரயில் வேகனில் பஞ்சுப் பொதிகளைப் போல அடைத்து திணித்து கொதிக்கும் வெயிலில் மூச்சுக்கூட விடமுடியாமல் அணிஅணியாய் மாண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களாகிய கேரள மாப்பிள்ளைமார்களது வீரமும் மறக்கப்பட்டுள்ளது. அவர்களது இணையற்ற தியாகத்தை தாய் திருநாட்டிற்காக தங்களது இன்னுயிரை மாய்த்த வீரத்தை போற்றும் வகையில் கோவை போத்தனூர், ரயில் நிலையங்களில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்து அதில் வீரமரணம் எய்தியவரது பெயர்கள் பொறிக்கப்படவேண்டும் என்றும் மற்றும் இந்தியாவெங்கும் ரயில் நிலையங்களில் அவர்களின் தியாகம் நினைவு கூறப்படும் வகையில் கல்வெட்டுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது. இது தோடர்பாக ஒரு தீர்மானத்தை கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் நிறைவேற்றி அது தொடர்பான முதன்நிலை பணிகளை துவக்கியுள்ளது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இக்காரியம் நிறைவு பெற உதவி செய்ய தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை சார்பாக கோரப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் போது தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடையையும் இந்த கேள்வியின் தன்மையையும் பாராட்டிய அமைச்சர் இது போன்று ஒரு கருத்தை எடுத்து கூறியதற்காக நன்றியை தெறிவித்து கொண்டு இது குறித்து தான் பாராளுமன்றத்தில் பேசுவதாகவும் அத்துடன் மத்திய ரயில்போக்குவரத்து அமைச்சர் மான்புமிகு லாலு பிரசாத் யாதவ் அவர்களிடம் ஆலோசிப்பதாகவும் இது குறித்து கூடிய விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்றும் தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை விரும்பினால் இது குறித்து பேசுவதற்காக வேண்டி மாண்பு மிகு மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெறிவித்தார்.

அது மட்டுமல்லாது கோவை மாநகரமானது தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு தொழில் நகரமாகும். சர்வதேச வர்த்தகம், தொழில் போன்றவைகளால் பெரும் அந்நிய செலாவணி ஈட்டும் நகரமாகவும் திகழ்கிறது. மேற்படி நகரத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் எனும் கடவுச்சீட்டு வழங்கும் மையம் அமைந்தால் அது கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் மாவட்ட மக்களுக்கு மிகவும் உதவியாகவும் விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க ஏதுவாகவும் இருக்கும் இதனால் முஸ்லிம்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்றும் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை சார்பாக கோரப்பட்டது.

இது குறித்து பதில் அளித்த அமைச்சர் அவர்கள் தமிழகத்தில் கூடுதல் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கவேண்டியதன் அவசியத்தை தமிழக முதல்வரும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் கோவை, மதுரை ஆகிய இடங்களில் கூடுதல் பாஸ்போர்ட் அலுவலகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் வரும் 2007-ம் ஆண்டில் கண்டிப்பாக செயல்படத் துவங்கும். கோவை, மதுரை அலுவலகங்களை ஒரே நேரத்தில் துவக்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு, தற்போது நாடு முழுவதும் 31 இடங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இமாச்சல பிரதேசத்திலும், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஸ்போர்ட் அலுவலகமே இல்லை. அதை கருத்தில் கொண்டு சிம்லாவிலும் (இமாச்சலபிரதேசம்), ராய்ப்பூர் (சட்டீஸ்கர்) உடனடியாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், உத்தராஞ்சலில் டேராடூன் ஆகிய இடங்களில் புதிதாக பாஸ்போர்ட் அலுவலகங்கள் இந்த ஆண்டு திறக்கப்பட்டுள்ளது என்றும் தெறிவித்தார்கள்.

அத்துடன் தமிழகத்தில் தவ்ஹித் என்ற பெயரில் செயல்படும் ஒரு இயக்கத்தின் தலைவர் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக ஹவாலா மூலம் பணம் அனுப்பலாம் பெறலாம் என்று பத்வா என்ற மார்க்க தீர்ப்பு வழங்கி வெளிநாடுகளில் இருந்து பல பொய்க்காரனங்களை கூறி கோடிக்கணக்கில் வசூலாகும் பணங்களை இந்திய அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஹவாலா மூலம் பெற்று வருவதையும் அந்த பணம் பல வகையான தேச விரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதையும், அந்நியச்செலவானி ஏய்ப்பு செய்து இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு அந்நிய சக்திகளுடன் சேர்ந்து இந்த இயக்கம் இயங்கி வரும் விதம் குறித்தும் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை சார்பாக சுட்டிக்காட்டப்பட்டது இவையனைத்தையும் மிக கவணமாக கேட்ட அமைச்சர் இது குறித்து முறையான புகார் அளிக்கும் படியும், தான் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரிடம் பேசி இது குறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துறைப்பதாகவும் கூறினார்.

அத்துடன் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடையின் செயல்பாடுகள் குறித்து அருகில் இருந்தவர்களிடம் கேட்டு தெறிந்து கொண்ட அமைச்சர் புண்ணகையுடன் அதன் செயல்பாடுகளை பாராட்டியதுடன் எதிர்காலத்தில் அச்சமின்றி கருத்துக்களையும் செய்திகளையும் அனைத்து தரப்பினருக்கும் எடுத்து சென்று முஸ்லிம்களின் பலம் மிக்க ஒரு ஊடகமாக தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வளர்வதற்கு இறைவனை பிறார்த்திப்பதாக கூறி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து தந்த அனைத்து உள்ளங்களுக்கும் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை சார்பாக சிரமம் பாராது அமைச்சரை சந்தித்து நமது கோரிக்கைகளை
எடுத்து கூறி பேட்டி எடுத்து கொடுத்த சகோ. கோவை தங்கப்பா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெறிவித்து கொள்கின்றேன்.நன்றி

முகவைத்தமிழன்

No comments: