Monday, January 22, 2007

DUBAI-IJTIHAD ஹஜ் செர்வீஸ் ஊழல்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

நீங்கள் சமுதாய நல விரும்பிகளா? இதைப் படியுங்கள்.

அன்புள்ள சமுதாய நல விரும்பிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வாழ்க்கையில் இழந்துவிட்ட நன்மைகளை ஈடு செய்ய, கோடிக்கணக்கான நன்மைகளை குறுகிய காலத்தில கொள்ளையடித்திட முஸ்லிம்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பே புனித ஹஜ் பயணம். ஓரு தொழுகைக்கு ஒரு லட்சம் தொழுகையைவிட அதிகமான நன்மைகள் கஃபதுல்லாவில் தொழுதால் கிடைக்கும். இது மாதிரி நன்மைகளை உலகில் வேறு எங்கு தொழுதாலும் அடைய முடியாது. இது கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

அந்த ஒரு லட்சம் நன்மைகள்.

புனிதமான கஃபதுல்லாவுக்கு போகாமல் மக்காவில் எங்கு தொழுதாலும் எந்தப் பள்ளியில் தொழுதாலும் எந்த இடத்தில் தொழுதாலும் ரூமில் தொழுதாலும் அந்த ஒரு லட்சம் நன்மைகள் கிடைக்கும் என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வீர்களா? அது மட்டுமா? அப்படி அல்லாஹ் தராவிட்டால் அந்த ஒரு லட்சம் நன்மைகளை நான் வாங்கித் தருவேன் என்று ஒருவர் சொன்னால் ஜீரணிப்பீர்களா? இப்படி சொன்னது யார் தெரியுமா? துபையிலிருந்து சென்ற அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸ் பொருப்பாளர்களில் ஒருவரான ஹுமாயூன் கபீர் அவர்கள்;தான்.

15 ஆண்டுகள் அனுபவம், 20 ஆண்டுகள் அனுபவம் என்று விளம்பரம் செய்த அனுபவசாலிகளெல்லாம்? சமுதாய நலன் கருதி? கூட்டணி அமைத்து ஓரணியாக செல்வதாக விளம்பரம் செய்தார்கள். 21-01-2004 புதன் காலை பயணம் இல்லை மதியம் அஸர், மஃரிபு, இஷh இப்படி இழுத்தடித்து புறப்படும் நேரங்களை மாற்றி மாற்றிக் கூறி 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டார்கள். ந{ர் 1, 2, 3. என்று மூன்று (மதனி டிரான்ஸ் போர்ட்) பஸ்கள் புறப்பட்டன. இதில் ஹுமாயூன் கபீர் அவர்களை அமீராகக் கொண்ட 3 வது எண் பஸ்ஸிலிருந்து நேர்முக வர்ணனையை சுருக்கமாகத் தருகிறோம்.

ஸ்பீக்கரில் ஒலித்த (கண்ணியமான?) முதல் குரல்.

ஷஷஏம்பா எல்லாம் இங்க கவனி, அவன் அவன் பாஸ்போர்ட் அவனவன் கையில் இருக்கா? விஸா அடித்து இருக்கான்னு பாரு. பஸ் புறப்பட்டதும் ஹஜ் பயணிகபை; பார்த்து ஸ்பீக்கரில் ஒலித்த (கண்ணியமான?) முதல் குரல் இது. ஒரு ஹஜ் பயணி ஏதோ ஒரு விளக்கம் கேட்கிறார். யாருப்பா நீ, உன் வேலையைப் பாருப்பா நீ, நான் அமீரா? நீ அமீரா? இப்படி கனிவான? முறையில் பதில் கூறிய அமீர் பயான் செய்து கொண்டே வருகிறார். பஸ் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நீ எத்தனை வேலை தொழுகையை விட்டிருப்பே?

மஃரிபு நெருங்குகிறது அஸர் தொழாதவர்கள் இருக்கிறோம் பஸ்ஸை நிறுத்துங்கள் என்று சிலர் அமீரைப் பார்த்து கூறினார்கள். ஷஷநீ எத்தனை வேலை தொழுகையை விட்டிருப்பே? எனக்கு தெரியாதா? என்னவோ 5 நேரமும் ஜமாஅத்தோடு தொழுத மாதிரி என்ன அஸர் அஸருங்கிறே பேசாட்டு உட்காரு ஹஜ் பயணிகளின் அமீர் அளித்த பதில் இது. அபுதாபியிலிருந்து வரும் பயணிகளுக்காக மப்ரக்கில் குறுகிய ஆபத்தான ரோட்டில் பஸ் நிற்கிறது. ஏம்பா யாரும் இறங்கக் கூடாது என்ற உத்தரவுடன் அமீர் இறங்கி விடுகிறார். அஸர் தொழாதவர்கள் இறங்கி அஸர் தொழுது முடிக்கவும் மஃரிபு பாங்கு ஒலித்தது. மஃரிபுடன் இஷh ஜம்வு செய்ததும் புறப்பட்ட பஸ் இரவு 10 மணிக்கு டிரைவர்கள் சாப்பிடும் ரெஸ்ட்ராரண்டில் நின்றது.

11 மணிக்கு யு.ஏ.இ. பாடரில் நின்றதும் அமீர் இறங்கி போய் விடுகிறார். பெண்களெல்லாம் கால் வலிக்க உட்கார்ந்திருக்கிறார்கள். 11.45க்கு பஸ் புறப்படுகிறது. நமது நாட்டில் டவுண் பஸ்ஸில் கூட இவ்வளவு நேரம் நிற்கும் என கண்டக்டர் அறிவிப்பார்;. நீங்கள் ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறீர்களே! என்று ஹஜ் பயணிகள் கேட்டார்கள். ஓட்டலில் நின்றால் சாப்பிடுவதற்கு, பெட்ரோல் பங்கில் நின்றால் பெட்ரோல் போட இதையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என்றார் அமீர்.

காணாமல் போன பாஸ்போர்ட்டுகள்.

சவூதி நேரம் 11 மணிக்கு சவூதி பாடரில் முதல் பஸ்ஸாக 3 ஆம் ந{ர் பஸ் நின்றது. யாரும் இறங்காதீர்கள் என்ற உத்தரவுடன் அமீர் போய் விட்டார். பிறகு வந்த ஒமான் பஸ்களெல்லாம் இமிகிரேஷன் கிளீயர் ஆகி போய் விட்டன. விடிய விடிய வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என அனைவரும் கடுங்குளிரில் நடுங்கித் தவித்தனர். அமீர் மட்டும் பள்ளிவாசலில் போய் படுத்து தூங்கி விட்டார். காலை 6 மணி ஆகியும் 3 ஆம் ந{ர் பஸ் செல்லவில்லை. இமிகிரேஷனில் பாஸ்போர்ட்டுகளே இல்லை என்ற பதில். பல கவுண்டர்களில் தேடிப் பார்த்த பின்னர் இரவு 1 மணிக்கே கிளியர் ஆகி உள்ளது. பல முறை அழைத்தும் பொறுப்பாளர் செல்லாததால் பாஸ்போர்ட்டுகள் ஓரங்கட்டப்பட்டதை பயணிகள் முயற்சியால் அறிந்தோம்.

நீ அமீரா? நான் அமீரா?

ஹஜ் பயணிகள் தங்குவதற்கு குளிரிலிருந்து பாதுகாப்பான பல கூடாரங்களை கழிப்பிட வசதியுடன் சவூதி அரசு அமைத்து உள்ளது. வழிகாட்டிகள் அமீர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் அனுபவித்தார்களே தவிர பயணிகளுக்கு வழிகாட்டவில்லை. திறந்த வெளி மணல் மேடுகளைத்தான் கழிப்பிடங்களாக பலர் பயன் படுத்தினர். காலை நாஷ;ட் டாவுக்காக டிரைவர்கள் சாப்பிடும் ரெஸ்ட்ராரண்டில் நின்றது. அப்பொழுது மணி 10-30 இருக்கும். 3ஆம் ந{ர் பஸ் அமீர் ஷஎல்லோரும் லுஹர் அஸர் ஜம்வு கஸர் தொழுங்கள் என்கிறார். வக்து வரவில்லையே என்று கேட்டவர்களிடம் ஷநீ அமீரா? நான் அமீரா? பேசாம உன் வேலையைப் பாருப்பா என்கிறார். அமீர் சொல்படி சிலர் தொழுதனர். மிகுந்த கூச்சல் குழப்பத்திற்குப் பிறகு சரி வண்டிக்கு போங்கப்பா என்கிறார்.

பஸ் போய்க் கொண்N;ட இருக்கிறது. யாராவது பசிக்கிறது என்றால் யா அல்லாஹ் இவரது பசியை போக்குவாயாக! என்பார். பாத் ரூம் போகணும் என்றால் யா அல்லாஹ் இவரது பாத் ரூம் தேவையை பூர்த்தி செய்வாயாக என்பார். இது மாதிரி பதில்களால் வெறுத்துப் போன ஹஜ் பயணிகள் ஒவ்வொருவரும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அமீருடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்கள். மதிய உணவு இன்றி ரியாத்-அல்மாஸியா சென்றடைய மஃரிபு ஆனது. அங்கு முத்துப் பேட்டை நஜ்முத்தீனின் தமிழ்நாடு உணவகத்தில் சாப்பிட்டார்கள். சுபுஹுக்கு முன் மீகாத் சென்றடைந்தது பஸ்.

மக்காவை வரக் காணோம்!

சுபுஹு தொழுது இஹ்ராம் ஆனார்கள். அதற்குப் பிறகு புறப்பட்ட பஸ் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டே இருக்கிறது மக்காவை வரக் காணோம்! பஸ் டிரைவர்கள் இஹ்ராம் ஆடை அணியாததால் நமது 3 பஸ்களை போலீஸ் விடவில்லை என்றார்கள். இஹ்ராம் ஆடை அணியாத டிரைவர்களுடன் மற்ற பஸ்கள் செல்வதைக் கண்ணால் கண்டும், நம் அமீர்கள் வாய் திறந்தால் உண்மைதானே பேசுவார்கள்? என்ற நம்பிக்கையில்? இருந்தார்கள்.

குறிக்கோலில் வெற்றி கண்டு விட்ட அமீர்கள்.

பிறகு வேறு 3 மதனி பஸ்கள் வந்தன. அதில் ஏறுமாறு அமீர்கள்; கட்டளை இட்டனர். தலை விதி என வெறுப்புடன் இஹ்ராமான எல்லாரும் வாய் மூடி இறங்கி ஏறினர். சாமான்களை இறக்கி ஏற்றினர். அந்த டிரைவர்களும் இஹ்ராம் ஆகவில்லை பேண்ட்-ஷர்ட் போட்டிருந்தனர். ஆனால் மக்கா எல்கைக்குள் பஸ் சென்றது. மக்கா எல்கைக்குள் வெளிப் பகுதி பஸ்கள் நுழைய ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். அதை செலுத்தாமல் நுழைய பல வழிகளில் முயன்றுள்ளனர். முடியாமல் போனதும் மக்கா எல்கைக்குள் ஓடும் மதனி டிரான்ஸ் போர்ட்டின் பஸ்களை கொண்டு வரச் செய்துள்ளனர். ஆக மக்கா எல்கைக்குரிய நுழைவு கட்டணம் செலுத்தாமல் செல்ல வேண்டும் என்ற குறிக்கோலில் வெற்றி கண்டு விட்டனர் நம் அமீர்கள்.

எஜமான் பட காதல் பாட்டு

லுஹருக்கு மக்கா சென்றடைந்தும் ஹரமுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமல் சாமான்களை இறக்கி ரூம்களில் ஏற்றக் கூறினர். 4 கி.மீ. தொலைவில் உள்ள ரூமில் இருந்து நடந்து நடந்து ஹரம் சென்றும் நடந்து கொண்டிருந்த அஸர் ஜமாஅத்தில் சேரவிடவில்லை. 5 மணிக்கு வெளிப் பள்ளியில் அஸர் தொழ வைத்தார். பூமியிலிருந்து வானத்தை பிரித்ததும் பூமி ஆடியது. உடன் அல்லாஹ் மலைகளை ஊன்றினான் ஆட்டம் நின்றது. அப்பொழுது ஊன்றிய முதலாவது மலைதான் இதோ இருக்கும் அபூ குபைஸ் மலை என சப்தமாக டி.வி. பாணியில் அதிய? தகவல்களை பயான்களாக கூறிக் கொண்டிருந்தார்.

நடராஜர் யார் தெரியுமா? அவர்தான் ஆதம் (அலை) என்பன போன்றவைகளை பயானாகக் கூறியதையும், ஷஎஜமான் படத்தில் வரும் ஷஒரு நாளும் உனை மறவாத .. என்ற காதல் பாட்டை கஃபாவை நோக்கி நின்று பாடியதாகக் கூறி பெருமைபட்டதையும் ஏற்கனவே செவிமடுத்தவர்கள் இவரது உரைகளை புறக்கணித்தனர். இப்படியாக மஃரிபு, இஷh முடிந்தும் உம்ராவை நிறைவேற்ற விடாமல் காலம் தாழ்த்தினார்.

கஃபாவில் முட்டியால் இடித்து தள்ள வேண்டும்?

வலம் வரும்போது எல்லாரும் கைகளை கோர்த்துக் கொள்ள வேண்டும். யாராவது நுழைந்தால் முட்டியால் இடித்து தள்ள வேண்டும். என்பன போன்ற (அழகிய?) மார்க்க உபதேசங்களைக் கூறினார். சுபுஹுவில் இஹ்ராம் ஆனவர்கள் உம்ரா செய்து முடிக்க இரவு 12 மணி ஆனது. ரூம் வசதிகள் பற்றி சவூதி அரசு அதிகாரிகள் பார்வையிட ரூமுக்கு வந்துள்ளார்கள். அப்பொழுது பயணிகள் இருந்தால் 30 பேர் தங்குகிற இடத்தில் 50 பேர் அடைக்கப்பட்டுள்ளது தெரிந்து விடும். எனவே இவ்வளவு காலம் தாழ்த்தி உள்ளார்.

21 நாள் பயணத்தில் சாப்பாட்டுக்கு என்று 350 திர்ஹங்கள் வீதம் வாங்கி உள்ளனர். வழியில் சாப்பாடு இல்லை என்றனர். மக்கா சென்றும் சாப்பாடு இல்லை. சாப்பாடு கேட்டால், ஷஇருந்தால் சாப்பிடு இல்லாவிட்டால் பேசாமல் இரு என்றார். ஏன் சாப்பாட்டுக்கு காசு வாங்கவில்லையா என்றதற்கு அப்படித்தான் என்ன செய்ய முடியுமோ செய் நோட்டீஸ் போடுவியா? போடு. பத்தாயிரம் நோட்டீஸுக்கு நான் காசு தாரேன். எஹ்யா, தாவூதிடம் சொல்லி விட்டேன் அவர்கள் உங்கள் சாப்பாட்டுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை என்றார். பசியால் சண்டை போடுபவர்கள் எண்ணிக்கை கூடியதும், ஷஎத்தனை நாள் சாப்பாடு கிடைக்கவில்லையோ அதற்குரிய பணம் திரும்ப தருவோம். உங்கள் செலவை எழுதி வையுங்கள். சராசரி 200 திர்ஹங்கள் தருவோம் என்று 3ஆம் ந{ர் பஸ் அமீர் ஹுமான் கபீர் கூறினார்.

ஹுமாயூன் இல்லாத நேரத்தில் 2 ஆம் ந{ர் பஸ் அமீர் எஹ்யா ஹஜ்ரத் வந்தார். அவரிடம் ஹஜ் பயணிகளுக்குரிய அடையாள அட்டைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களை போலீஸ் பிடித்தால் என்ன செய்ய என்று முறையிட்டனர். எங்கே ஹுமாயூனை? பாஸ்போர்ட்களை முஅல்லிமிடம் கொடுத்தால்தான் மினா, அரபாத்தில் கூடாரம் கிடைக்கும் அதற்குரிய டோக்கன்களும் கிடைக்கும். அவர் செய்யாவிட்டால் என்னிடம் தந்தால் நானாவது செய்வேன் என்றார். எல்லாரும் ஹுமாயூன் பற்றிய குறைகளைக் கூறினர். 27 ஆம் தேதியிலருந்து ஏனோ தானோ சாப்பாடு போட்டார்கள். அதுவும் தொடராக அல்ல திடீரென காலை நாஷ;ட்டா இல்லை என்பர். திடீரென மதிய உணவு இல்லை என்பர்.

எத்தனை ஜமாஅத்தை ஊரில் விட்டிருப்பே?

28 ஆம் தேதி சுபுஹுக்குப்பின் ஜியாரத் என்றார்கள். 11 மணிக்குத்தான் பஸ் வந்தது. இப்பொழுது போனால் எப்படி லுஹர் ஜமாஅத் கிடைக்கும் என்று கேட்டனர். எத்தனை ஜமாஅத்தை ஊரில் விட்டிருப்பே, என்னைக்காவது சுபுஹுவை ஜமாஅத்தோடு தொழுது இருப்பியா? என்றார் ஹுமாயூன். தொழுகை சம்பந்தமாக பேசும்போதெல்லாம் இது மாதிரிதான் மக்காவிலும் மதினாவிலும் பதில் கூறி ஹஜ் பயணிகளின் மனதை நோகடித்தார். மக்காவில் எங்கு தொழுதாலும் எந்த பள்ளியில் தொழுதாலும் எந்த இடத்தில் தொழுதாலும் ரூமில் தொழுதாலும் ஒரு லட்சம் நன்மைகள் கிடைக்கும். அப்படி அல்லாஹ் தராவிட்டால் அந்த ஒரு லட்சம் நன்மைகளை நான் வாங்கித் தருவேன் என்று ஜியாரத்தின்போது தவ்ர் குகை மலை அடிவாரத்தில் நின்று கூறினார்.

மார்க்கத்தை விடுங்க, உங்க விருப்பத்தைச் சொல்லுங்க.

மினாவுக்கு பிறை 7 இஷh தொழுதவுடன் போகிறீர்களா? ஜும்ஆவுக்குப் பிறகு போகிறீர்களா? நடந்து போகிறீர்களா? என்று தனித்தனியாகக் கேட்டார். மார்க்கம் என்ன சொல்கிறது அதன்படி நடப்போம் என்றால், மார்க்கத்தை விடுங்க உங்க விருப்பத்தைச் சொல்லுங்க என்றார். மார்க்கப்படிதானே நடக்கனும் என்று குறுக்கிட்டு பேசிய மற்றவர்களை உன்னிடம் யார் கேட்டா? உன்னிடம் கேட்டால் நீ பதில் சொல் என பேச விடாமல் வாயை அடைத்தார். மரியாதையாகப் பேசு, நீ - நீ என என்ன மரியாதை இல்லாமல் பேசுகிறாய். உன் தகப்பன் வயதில் உள்ளவர்களும் இருக்கிறோம் இப்படியாக பல முறை நடந்த சண்டை ஜியாரத்தின் போது உச்சகட்டத்தை அடைந்து பஸ் ஆடியது.

இது ஒரு கூட்டு நாடகம்.

29 ஆம் தேதி யஹ்யா ஹஜ்ரத் வந்து வித்தியாசமான விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்தார். எங்கே ஹாஜிகளுக்குரிய அடையாள அட்டை? எங்கே மினா கூடார அட்டை என்றதற்கு, இதுதான் அரபி தந்தான் என்றார். ஒரே சண்டையும் கூச்சல் குழப்பமுமானது. ஹாஜிகளுக்குரிய அடையாள அட்டை எங்கே என யஹ்யா ஹஜ்ரத்திடம் போய் கேளுங்கள் என்று 3 ஆம் ந{ர் பஸ் பயணிகளை ஹுமாயூன் தூண்டி விட்டுக் கொண்டிருந்தார். இதை கவனித்து பார்த்தவர்கள் இது ஒரு கூட்டு நாடகம் என விளங்கிக் கொண்டார்கள்.

ஹஜ்ஜாளிகளுக்கு சக்தி மாத்திரை?

ஒவ்வொரு வக்துக்கும் 4 கி.மீ. தூரம் நடந்து நடந்து அசதியாகி பல நோய்களுக்கு உள்ளாகி விட்டார்கள். பிறை 7 அன்று ஷநாளை மினா செல்ல இருப்பதால் சக்தி மாத்திரை சாப்பிடுங்கள். ஆண்களுக்கு 3 பெண்களுக்கு 2 குழந்தைகளுக்க 1 என ஹுமாயூன் கொடுத்தார். நம்பிக்கையுடன் சாப்பிட்டவர்கள் நிரந்தரமாக கக்கூஸில் இருந்தார்கள். அவர் கொடுத்தது பேதி மாத்திரை. யாரும் நல்ல சாப்பாடு கேட்கக் கூடாது. அவர்கள் தரும் லெமூன் சாதமே கதி என இருக்கணும் என்பதற்காக செய்த சதி இது.

லேபிலை கிளித்து மாத்திரையை மட்டும் கையில் கொடுத்து வாயில் போடுங்கள் என்றே கொடுத்தார். பிறகு சாப்பிடுகிறேன் என்று வைத்தவர்கள் தப்பினார்கள். ஒரு மூதாட்டி சீரியஸ் ஆகி அஸரிலிருந்து இஷh வரை நினைவற்றுப் போனார். பாதிக்கப்பட்டவர்கள் என்னங்க சக்தி மாத்திரைன்னு பேதி மாத்திரை தந்து விட்டீர்கள். ஒரே வயிற்றுப் போக்கால் நிற்க முடியவில்லை என்று கேட்டதற்கு, ஷவயிறு சுத்தமாகி விட்டதில்ல போங்க என்று சாதரணமாக பதில் சொன்னார்.

மினாவில் தங்க தேவை இல்லை?

தாவூத் அலி ஹஜ்ரத், யஹ்யா ஹஜ்ரத் பொறுப்பில் உள்ள பெரும்பாலானவர்களை பிறை 7 இஷhவுக்குப்பின் மினா அழைத்துச் சென்று விட்டனர். அதில் 6 பேர் மட்டும் மாhக்க அடிப்படையில் சுபுஹுக்குப்பின் புறப்பட்டுள்ளனர். பிறை 8ல் மட:;டும் மினாவில் தங்கினால் போதும். 10,11,12களில் மக்காவில் உள்ள ரூம்களில் தங்கி விட்டு மினாவில் கல் எறிந்தால் போதும் என்ற புதிய சட்டத்தை 3 அமீர்களும் கூறினார்கள். பிறை 8 அன்று காலை 10 மணி ஆனது. வாங்க மினா போவோம் நேரம் ஆகுது என ஒருவர் சொன்னார். அவரைப் பார்த்து ஹுமாயூன், ஷஉன் வேலையைப் பார்த்துப் போ என விரட்டினார். பிறகு எல்லாருக்கும் ஹஜ் நிய்யத்? சொல்லிக் கொடுத்தார். பிறகு இதோ இதோ என 2 கி.மீ. நடத்திச் சென்றார். 20 சீட் உடைய மினி பஸ்ஸை பிடித்து 50 பேரை ஏறச் சொன்னார். பெண்களையும் வேன் டாப்பில் ஏறச் சொன்னார். சிறிய சண்டைக்குப் பிறகு வேறு வேன் பிடித்தார்.

ஹுமாயூனை வரச் சொல்கிறேன்.

மினாவில் போய் கூடாரம் தெரியவில்லை என 1-30மணி நேரம் அங்கும் இங்குமாக நடக்க வைத்தார். பிறகு ஒரு இடத்தில் நிற்க வைத்து 2 மணிக்கு 20 மஞ்சல் கயிறு அட்டையை தந்து 20 பேரை 17 ஆம் ந{ர் கூடாரத்திற்கு போகச் சொன்னார். பிறகு 10 பிறகு10 பிறகு 10 என எல்லாரும் கூடாரத்திற்குள் நுழைந்தோம். பெண்களை தாவூத் அலி ஹஜ்ரத் அழைத்துச் சென்று ஒரு கூடாரத்தில் நுழையச் சொன்னார். நுழைந்த வேகத்தில் பெண்கள் திரும்ப வந்து கால் வைக்க இடமில்லை என்றனர். அட்ஜஸ் பண்ணி இருங்கள் என்றார். பெண்களுக்கும் தாவூத் அலி ஹஜ்ரத்துக்கும் சிறிது விவாதம் நடந்தது. ஹுமாயூனை வரச் சொல்கிறேன் என்று தாவூத் போய் விட்டார். ஹுமாயூன் வந்து அவருக்கே உரிய அடாவடித்தனமானப் பேச்சால் பெண்களை நிர்ப்பந்தமாக உள்ளே போகச் செய்தார்.

அமீராக ஹுமாயூன் வர வேண்டாம்.

முந்தைய நாளில் எஞ்சிய புரோட்டாவை முதலில் கொடுத்தார்கள். பிறகு முந்தைய நாளில் தயாரித்த எலுமிச்சை சாப்பாடு கிடைத்தது. நமது கூடாரம் என்று எண்ணி உரிமையுடன் நுழைந்த ஆண்கள் பகுதியில் நெருக்கடி அதிகமானது. ஜும்ஆ முபாரக் என்ற அரபி வந்து யா ஹைவான் -- - - என (பெயர் சொல்லி) கூப்பிபட்டார்? வொய்ன் ஹாதா ஹைவான் என சப்தம் போட்டார் அமீர்கள் தலைமறைவாகி விட்டனர். 50 பேர்களுக்கு மட்டும் கூடாரம் எடுத்து விட்டு 150 பேர்களை நுழைத்துள்ளனர். இரவில் வந்தவர்கள் கழுத்தில் போட்டிருந்த மஞ்சல் கயிறு அட்டைகளை கழட்டி வாங்கி வந்து 3 ஆம் ந{ர் பஸ் ஆட்கள் கழுத்தில் மாட்டி விட்டு கூடார நுழைவாயில் பொறுப்பாளர்களை ஏமாற்றியுள்ளனர் என்று பிறகுதான் விளங்கியது. இந்த கூடாரத்தில் தங்க முடியாது என்றானதும் வேறு கூடாரம் உள்ளது என்றனர். ஆக 3 பேரும் சேர்ந்துதான் வியாபார நோக்குடன் செயல்படுகின்றனர். இதை புரியாதவர்கள் எங்களுக்கு அமீராக ஹுமாயூன் வர வேண்டாம் என்றனர்.

யஹ்யா ஹஜ்ரத்தை அமீராக ஏற்று வேறு கூடாரம் நோக்கி சென்றோம். சென்றோம், சென்றோம் சென்று கொண்டே இருந்தோம். மினா முடிந்தது என்ற போர்டைத் தாண்டி முஜ்தலிபா என்று போர்டு உள்ள பகுதியின் கூடாரத்தில் விட்டார். முஜ்தலிபா என்று போர்டு உள்ளதே என்று கேட்டதற்கு இதை மினாவாக அரசாங்கம் ஆக்கி உள்ளது என்று யஹ்யா ஹஜ்ரத் கூறினார். பெரும்பாலானவர்கள் நடந்து நடந்து நோயாளிகளாக ஆகி விட்டார்கள். வழக்கமான போராட்டத்திற்குப் பிறகு இரவு உணவாக காய்ந்த குபுஸ் கிடைத்தது.

இஹ்ராம் ஆடை பற்றிய புதிய விளக்கம்.

கந்தூரா அணிந்து கொண்டு மினாவில் தங்கிய ஹுமாயூன். ஷஇதுதான் இஹ்ராம் ஆடை என்று கூறி, இஹ்ராம் ஆடை என்றால் தூய்மையான ஆடை என்பதுதான் பொருள். ரசூலுல்லா காலத்தில் தையல் மிஷpன் கிடையாது எனவே தைக்கப்படாத 2 ஆடை அணிந்தார்கள் என்று யாரும் கேள்விப்படாத புதுமையான விளக்கங்களை மினாவில் கூறிக் கொண்டிருந்தார்.

பிறை 9 ல் அரபா செல்ல காலை 4 மணிக்கே பஸ் பிடிக்க சென்றதாக கூறினார்கள். இதோ இதோ என காலை 9மணி ஆகியும் பஸ் வரவில்லை. எல்லா கூடாரத்திலுள்ளவர்களும் காலியாகி சென்று விட்டனர். 9.30க்கு வந்த யஹ்யா ஹஜ்ரத் ஷசுபுஹு தொழுதவுடன் சென்ற இன்ன இன்ன குரூப் பஸ்களெல்லாம் இன்னும் அரபா சென்று சேரவில்லை. டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டுள்ளது. நாம் லேட்டாகப் போய் எளிதில் சேர்ந்து விடுவோம் என்று கூறிய ஆறுதல் வார்த்தைகளை நம்பினோம். முதலில் பஸ் கூடார வாசலுக்கு வரும் என்றார். பிறகு மெயின் ரோடு நோக்கி நடக்கக் கூறினார் நடந்தோம்.

10.30 மணிக்கு வந்த பஸ் அரபா சென்றடைய 2-30 மணி ஆனது. கூடாரம் சென்று அடையவில்லை. நடு ரோட்டில் இறக்கி விட்டார்கள். காலை நாஷ;ட்டா இன்றி மதிய உணவும் இன்றி பசியுடன் லுஹர், அஸர் தொழுதார்கள். கூடாரம் சென்றடை அரை மணி நேரம் நடக்கணும் என்றார்கள். சரி என நடந்தோம் அங்கும் இங்குமாக நடை நடை என நடக்க வைத்தார்கள். 4 மணிக்கு கூடாரம் சென்று அடைந்தோம். அதே ஜும்ஆ முபாரக் கூடாரம்தான்.

தாவூத் அலி ஹஜ்ரத் அவர்கள் கொடுத்த உணவு.

தாவூத் அலி ஹஜ்ரத் அவர்கள் மதிய உணவு பொட்டலங்களை வினியோகித்தார். கொஞ்ச நேரம்தான் உள்ளது வணக்கத்தில் ஈடுபடணும் என சிலர் வாங்க மறுத்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிலர் ஹஜ்ரத் தருகிறார் என வாங்கி ஓரமாக வைத்தனர். பசியால் மயக்க நிலைக்குச் சென்றவர்கள் ஆவலுடன் பெற்று பொட்டலத்தை பிரித்தனர் கெட்டுப்போன உணவு துர்நாற்றம் அடித்தது. ஷஎன்ன ஹஜ்ரத் கெட்டுப் போய் இருக்கு? ஷஅப்படியா வேறு பொட்டலம் பிடியுங்கள் என்றார். அதிலும் அதே வாடை. ஆம் பிறை 7 ல் தயாரித்த எலுமிச்சை சோற்றைத்தான் பிறை 9ல் அரபாவில் 3ஆம் ந{ர் பஸ் ஆட்களுக்கு கொடுத்தார்கள். அவர்கள் என்ன ஓசியிலா வந்தார்கள். 3,500 - 3800-4500 திர்ஹங்கள் வரை கொடுத்துத்தான் வந்தார்கள். அவர்களுக்குத்தான் இந்த கதி. நேரடியாக ஜும்ஆ முபாரக்கிடம் பணம் கொடுத்தவர்கள் 2500 திர்ஹங்கள் மட்டுமே கொடுத்துள்ளனர்.

இது உங்கள் கூடாரமே இல்லை எப்படி சாப்பாடு கிடைக்கும்?

கூடாரம் வர 4 மணி ஆகிவிட்டதே! என்று வருந்தியவர்களிடம் 4மணிக்குப் பிறகுதான் துஆ கபூல் ஆகும் நேரம் என்று கூறி கந்தூராவை கழட்டி விட்டு தைக்கப்படாத 2 ஆடைகளுடன் வந்தார் ஹுமாயூன். அரபாவில் முஅல்லிம் சாப்பாடு என்று நேற்று எஹ்யா ஹஜ்ரத் கூறினார். எங்கே எங்கள் சாப்பாடு? என்று கேட்டதற்கு, இது உங்கள் கூடாரமே இல்லை எப்படி சாப்பாடு கிடைக்கும் என்றார் ஹுமாயூன். 12 மணிக்கு முன்பாக வந்தால் கூடாரத்திற்கு பணம் கட்டப்படாதவர்கள் நுழைய முடியாது. எனவே 4 மணிக்குப் பிறகு ஜியாரத் அடிப்படையில் இங்கு கொண்டு வரப்பட்டு ஏமாற்றப்பட்டார்கள். ஆக 3 ஆம் ந{ர் ஆட்களுக்கு அரபாவிலும் கூடாரம் கிடையாது.

மினாவா? முஜ்தலிபாவா?

மஃரிபு ஆனதும் மற்ற கூடாரங்களில் உள்ள எல்லாரும் முஜ்தலிபா சென்றார்கள். 9 மணி ஆகியும் அரபாவை விட்டு கிளம்பவில்லை. ஒருவருக்கு 10 ரியால் 8 ரியால் 5 ரியால் இப்படியாகக் குறைந்து 2 ரியாலுக்கு வந்ததும் புறப்பட்டார்கள். இலவச பஸ்ஸில் 3 ஆம் ந{ர் ஆட்கள் ஏற்றப்பட்டார்கள் அமீராக ஹுமாயூன் வந்தார். இரவு 3மணிக்கு நடு வழியில் இறக்கி விட்டார்கள். அங்கு மஃரிபு, இஷh தொழுது விட்டு நடந்து நடந்து மினா என்று நாங்கள் தங்க வைக்கப்பட்ட கூடாரத்திற்கே கொண்டு வந்து விட்டார் அமீர் ஹுமாயூன். என்னங்க முஜ்தலிபாவில் சுபுஹு தொழுது விட்டுத்தானே மினா வரணும்? முன்னதாக கூட்டி வந்து விட்டீர்களே! என்று கேட்கப்பட்டது. இதை யார் மினா என்றார்கள்? இதுதான் முஜ்தலிபா என்றார் அமீர் ஹுமாயூன்.

ஒழுங்கான வழிகாட்டுதல் இல்லாமல் மினா, கஃபா அங்கிருந்து 4 கி.மீ தூரமுள்ள ரூம் பிறகு கஃபா, மினா இப்படியாக நாங்கள் நடந்து சீரழிந்து கொண்டிருந்தோம். இந்த பாதிப்பின் உச்ச கட்டம் பிறை 12 காலையில் கூடாரம் கொந்தளிப்பால் குலுங்கி காட்சிப் பொருளாகியது. யஹ்யா ஹஜ்ரத்திடம் ஒவ்வொருவரும் போட்ட சப்தத்தில் சுற்றி உள்ளவர்களெல்லாம் வந்து வேடிக்கை பார்த்தார்கள். விபரங்களை கேட்டுவிட்டு அவர்கள் வெட்கித்தார்கள். யஹ்யா ஹஜ்ரத்திடம் ஆயிரம் திர்ஹங்கள் வீதம் நஷ;ட ஈடு தரணும் என்றார்கள். ஒழுங்காக சாப்பாடு தராத வகைக்கு 200 திர்ஹம் வீதம் திரும்ப தருகிறோம் என்றார்.

மினாவில் கூடாரம் போட்டு தங்குவது ஏன்?

10,11,12களில் மினாவில் கூடாரம் போட்டு தங்க சொன்னது -- -- அரபிகள் இல்லறம் கொள்ளத்தான் எனவே மற்றவர்கள் மக்காவில் தங்கலாம் என்று விளக்க உரை வழங்கினார் ஹுமாயூன். குர்பானி கொடுக்க வேண்டியதில்லை. தவாபுல்விதா போன்றவை செய்ய வேண்டியதில்லை என்பன போன்ற நூதன விளக்கங்களை ஹுமாயூன் தரப்பில் கூறிக் கொண்டிருந்தார். பிறை 12 அன்றே தவாபுல்விதாவும் செய்துவிட்டு மதீனா செல்ல தயாரகச் சொன்னார்கள்.

இதோ பஸ் அதோ பஸ் என கஃபா சென்று தொழ முடியாத வண்ணம் ஒரு நாளை வீணடித்தார்கள். பிறை 14 வியாழன் காலை 12 மணிக்கு அமீர் ஹுமாயூன் கொண்டு வந்த பஸ் மஸ்ஜித் ஆயிஷh போய் நின்றது. லுஹர்,அஸர் ஜம்வு தொழுகை முடிந்து மணி 2 ஆகியும் பஸ் புறப்படவில்லை. பசித்தவர்கள் சாப்பாடு கேட்டதற்கு புத்தகத்தை படியுங்கள் என்றார். பள்ளிவாசலில் சண்டை களை கட்டியது. பாஸ்போர்ட்கள் தாவூத், யஹ்யா வண்டியில் உள்ளது. அந்த வண்டிகள் வந்துதான் போக முடியும் என்றார். கூட்டுக் கொள்ளையர்கள்., சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களைவிட கேடுகெட்டவர்கள். இப்படியாக ஹிந்தி, இங்லீஷ; என பல மொழிகளில் ஹுமாயூனையும் மற்ற அமீர்களையும் திட்டினார்கள். மஸ்ஜித் ஆயிஷhவே ஸ்தம்பித்தது.

ஹுமாயூன் போய் யஹ்யாவும் போய் தாவூத் அலி ஹஜ்ரத் அமீராக வந்தார். பஸ் புறப்பட்டது பயண துஆவை சொல்லிக் கொடுத்தார். பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து சிரியுங்கள். பக்கத்தில் ஆள் இல்லாவிட்டால் வானத்தைப் பார்த்து சிரியுங்கள் என்றார். 150 கி.மீ. தூரத்தில் உள்ள ஓட்டலில் சாப்பாட்டுக்காக பஸ் நிற்கும் என்றார். இரவு 11 மணிக்கு மதீனாவில்தான் சாப்பாடு கிடைத்தது.

நீங்கள் ஆலிம் மற்றவனாக இருந்தால்?

சாப்பாடுகளெல்லாம் ஏனோதானோ என்றிருந்தது. வெந்ததையும் வேகாததையும் விதி என சாப்பிட்டார்கள். ஒரு நாள் காலை வந்த புரோட்டா பார்த்ததும் வாமிட் வரச் செய்தது. வெறுத்துப் போனவர்கள் தாவூத் அலி ஹஜ்ரத்திடம் சண்டை போட்டார்கள். -- கிறுக்கன் மடையன் முட்டாள் அவனைப் பார்த்து பேசுவதும் சரி சுவரைப் பார்த்து பேசுவதும் சரி எனவே அவன் வேண்டாம் என ஆலிம்ஸாக்களான உங்களை அமீராக ஏற்றோம். நீங்கள் இப்படி நடக்கலாமா? என்று ஆளுக்கொருவிதமாக கடுமையான வார்த்தைகளால் சப்பதம் போட்டார்கள். (தாவூத் அலி ஹஜ்ரத்தாகிய) நீங்கள் அரபாத்தில் கெட்டுப் போன சோற்றைத் தந்தீர்கள். நீங்கள் ஆலிம் என்பதால் மரியாதைக்காக விட்டேன். மற்றவனாக இருந்தால்? -- இந்த செருப்பால் அடித்திருப்பேன் என்று காலில் கிடந்த தடித்தச் செருப்பைக் காட்டினார். புதிய நாஷ;ட்டாவாக மக்ரோரினி கிடைத்தது. 13 ஆம் தேதி மதியம் வந்த சாப்பாட்டைப் பிடித்த சவூதி அதிகாரிகள், இதையா ஹாஜிகள் சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டனர். சாப்பாட்டின் தரம் அப்படி இருந்தது. சாப்பாடு கொண்டு வந்த பங்காளியை பிடித்துச் சென்றனர்.

பிரயாணிகளுக்கு ஜும்ஆ கடமை இல்லை என்று கூறி மதீனாவில் ஜும்ஆ தொழாமல் ரூமில் படுத்துக் கொண்ட ஹுமாயூன், பள்ளிக்குப் போகத் தேவை இல்லை என பிறரையும் கெடுத்தார். ஷமதீனாவில் ரசூலுல்லாவுக்கு (ஸல்) அடுத்து அபூபக்கர் (ரலி) அடுத்து உமர்(ரலி) அடங்கப்பட்டுள்ளார்கள். அடுத்து ஒரு இடம் கியாம நாளில் வரும் ஈஸா (அலை) அவர்கட்கு அதற்கு அடுத்து உள்ள இடம் யாருக்கு தெரியுமா? அதுதான் இந்த ஹுமாயூனுக்கு என்றார். ஷஏங்க இப்படி சொல்லலாமா? என்று கேட்டதற்கு ஷநான் அங்கு அடங்க ஆசைப்படுகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். மார்க்க கடமைகளை மார்க்க ரீதியாகச் சொல்லாமல் ஏம்பா அந்த பள்ளியில் போய் 2 ரகஅத் தொழு. இந்த பள்ளியில் 2 ரகஅத் தொழு என கட்டளையாகக் கூறி வந்தார்.

துபை திரும்பும் நாள் பற்றி பலவிதமான தகவலை பரவவிட்டு 13 ஆம் தேதி வெள்ளி இஷhவுக்குப் பின் என்று உறுதி செய்தனர். தங்க வைத்த ரூம் 12 ஆம்தேதி வரை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கடைசி நாள் வரை மறைத்தனர். இன்று காலி செய்ய வேண்டும் என்று ஹுமாயூன் ஒரு ரூமில் போய் கூறுகிறார். எங்கே? தாவூத் யஹ்யா என்று கேட்டதற்கு வேறு பில்டிங்கில் இருக்கிறார்கள் நான்தான் உங்களுக்கு தகவலாக கூறுகிறேன் என்று கூறி உள்ளார். ஒழுங்கான சாப்பாடு இல்லை சர்வீஸ் இல்லை பணத்தை திருப்பி கொடுங்கள்; என ஹுமாயூனை விரட்டிச் செல்ல லிப்டில் ஹுமாயூனை எதிர் நோக்கி தாவூத் யஹ்யா நின்றுள்ளனர்.

இன்னொரு ரூமில் போய் இதே மாதிரி ஹுமாயூன் தகவலாக சொல்வதாக கூறி உள்ளார். அவர்களும் எங்கே? தாவூத் யஹ்யா என கேட்க, இல்லை என கூறி உள்ளார். அங்கு உள்ளவர்கள் ஹுமாயூனுடன் சண்டை போட சப்தம் அதிமாகவே வெளியே நின்ற தாவூத் கதவை திறந்து ஹுமாயூனை கூட்டிச் சென்றுள்ளார். மூன்று பேரும் கூட்டுதான் என்பதை எவ்லாரும் விளங்கிக் கொண்டனர். முந்தைய ஆண்டுகளில் ஒரு நாள் 2 நாள்கள் ரோட்டில் தங்க வைக்கப்பட்டதை அறிந்தோம். எல்லாரும் கூடி மஷ{ரா செய்து வேறு ரூம் எடுத்து தந்தால்தான் இருக்கும் ரூம்பை விட்டு காலி செய்வோம் என்றோம். ஒரு நாளுக்காக வேறு ரூமுக்கு சென்றோம்.

இப்படியாக அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டவர்களுக்கு துபை திரும்பும்போதும் நிம்மதி இல்லை. சிறிய பஸ்ஸைக் கொண்டு வந்து நடக்க முடியாத வண்ணம் நடை பாதை முழுவதும் சீட்டு உயரத்திற்கு தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டன. ஆண்கள் கேன்கள் மீது ஏறி நடந்து விடலாம் பெண்கள்? பெண்களும் ஏறி நடந்தார்கள். இதைப் பற்றி கூட சிந்திக்காத ஹஜ் சர்வீஸ்தான் அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸ். துபையிலிருந்து வந்த பஸ்ஸிலேயே மினா, அரபா, முஜ்தலிபா, மக்கா,மதீனா என மற்ற சர்வீஸ்களில் வந்தவர்கள் எல்லாம் சென்றார்கள். அந்த தொலை தூர பஸ்களில் டாய்லட் வசதிகளும் இருந்தன. ஒரே பஸ்ஸில் எல்லா இடங்களும் சென்றால் திரும்பும்போது இடையில் பஸ் நின்று விடும் என்று வியாக்கியானம் கூறினர். இவர்களின் 2 ஆம் ந{ர் பஸ் வரும்போது வழியில் படுத்துக் கொண்டது.

வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாத பயணம்.

ஆண்டு முழுவதும் சும்மா இருக்கும் அவர்கள் 20 நாள் சர்வீஸில் ஒரு ஆண்டு வருவாயை தேடுகிறார்கள். அதற்காக ஹஜ்ஜாளிகளை ஒவ்வொரு ஆண்டும் கசக்கிப் பிழிகிறார்கள். காலை 10 மணி வரை காக்க வைத்து இன்று நாஷ;டா இல்லை என்றார்கள். மதியம் 3 மணிக்கு இன்று மதிய உணவு இல்லை என்றார்கள். இந்த பட்டினிக் கொடுமையால் அல்சர் வியாதிக்கு ஆளாகி விட்டவர்களும் உண்டு. பயணம் புறப்பட்டதிலிருந்து திரும்ப வரும்வரை தொழும் நேரத்தை தவிர எல்லா நேரங்களிலும் சண்டைதான் நடந்தது. வணக்க வழிபாடுகளில் யாராலும் கவனம் செலுத்த முடிந்ததில்லை. வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாத பயணமாகத்தான் இந்தப் பயணம் இருந்தது.

சட்ட ரீதியாக நடவடிக்கை.

இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லாரும் கையெழுத்திட்டு அபுதாபி சகோதரர்களிடம் ஒப்படைத்தோம். ஷசட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதீர்கள். வருகிற ஆண்டுகளில் இது மாதிரி நடக்க மாட்டோம் என அல் இத்திஹாத் ஹஜ் சர்வீஸினர் கூறி உள்ளனர். சாப்பாடு ஒழுங்காக தராதால் அதற்கு 200 ரியால் திரும்ப தருவோம் என்று யஹ்யா ஹுமாயூன் ஒப்புக் கொண்டனர். பிறகு 140 திர்ஹம் வீதம் துபை வந்து தருவதாக தாவூத் அலி ஹஜ்ரத் கூறினார். யாருக்கும் ஒரு பைசா கொடுக்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் அடுத்த ஆண்டு ஒழுங்காக நடப்போம் என்று அளிக்கும் வாக்குறுதி எப்படி இருக்கும். இந்த ஆண்டு சென்றவர்கள் அடுத்த ஆண்டு செல்ல மாட்டார்கள். எல்லாரும் புதியவர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கதி ஏற்பட வேண்டுமா? சமுதாய நல விரும்பிகளே! சிந்தியுங்கள். இவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிடும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தாருங்கள். நடந்த கொடுமைகளின் சுருக்கம்தான் இது என்பதையும் கனத்தில் கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.

இது உண்மைதானா? என்று அறிய இந்த குழுவில் ஹஜ் சென்றவர்களின் போன் எண்களை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 050- 5478377 – 5168774 ' 6540422.

fazlulilahi@gmail.com

No comments: