Thursday, December 28, 2006

உறக்கத்திலும் விழிப்பிலும் உளறும் ததஜ உமர்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

உறக்கத்திலும் விழிப்பிலும் உளறுவதை தவிர வேறொன்றும் அறியாத தறுதலை ஜமாதின் உ.உ.கூ.உமர், மீண்டும் தனது திருவாய் மலர்ந்துள்ளார்.

கடந்த வார கட்டுரையில் இவர் தக்லீதிலிருந்து விடுபட துஆச் செய்திருந்தோம். என்ன தான் துஆச் செய்தாலும், நான் இன்னும் தீவிரமான தக்லீதில்தான் இருப்பேன். தவ்ஹீத் சிந்தனையெல்லாம் தேவையில்லை என தெளிவுபடுத்தும் முகமாக இன்று மெயில் அனுப்பியுள்ளார்.

முன்பு இலாஹியின் பெயரைக் கேட்டாலே நடுநடுங்கியது போல், இன்று முகவைத்தமிழன் என்று பேச ஆரம்பித்தாலே வெளிறிப் போய் விடுகின்றனர். காரணம் இலாஹி, பீஜேவுடன் நேருங்கி இருந்த காலத்தில் நடந்தவைகளை பதிவு ஆவணமாக பாதுகாத்து வருகிறார். எனவே உளறுவாய் உமர் போன்றவர்களிடம் பிஜே வுட்டு அடிப்பதைப் போல், எங்காவது ஒரு விஷயத்தை மாற்றியோ, கூட்டியோ குறைத்தோ சொன்னால் - இலாஹி பிடி பிடி என பிடித்து விடுவார்.

அதைப் போலவே இன்றய முகவைத் தமிழனும் தான் பணிபுரியும் இடத்தில் ததஜவினர் நடத்தும் கூத்துக்களையும், மிரட்டல்களையும், கெஞ்சல்களையும் பதிவு ஆவணமாக பாதுகாத்து வருகிறார். எனவே அவரது பெயரைச் சொல்லக் கேட்டாலே உளறுவாய் உமர் - ஹை வோல்ட்டேஜை தொட்டது போல் துடித்துப் போகிறார்.

டிசம்பர் 6 அன்று ராமநாதபுரத்தில் நடந்த விஷயங்கள் குறித்து நாம் எழுதிய போது, அன்று அங்கு ததஜவின் நிலை என்னவென்பதை முகவைத்தமிழன் ஆதாரத்துடன் வெளியித்தயார் என் மார்தட்டுவதாக குறிப்பிட்டிருந்தோம்.

இதற்கு பதில் எழுத முடியாத உளறுவாயன், அவரது பாஷையில் பதிலடியாக, 'அவர் மார்தட்டுவது இவருக்கு எப்படி தெரியும்' என கிறுக்குத்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரைப் போல் ஒரு கூட்டுக்குள் முடங்கி கிடப்பவரைப் போல் - கிணற்றுத் தவளையைப் போல் - நம்மையும் எண்ணி விட்டார்; போலும். சுய சிந்தனை சக்தியற்றவர்களாக, தறுதலை ஜமாஅத்தின் தலைவன் கிரிமினல் பீஜேவின் வார்த்தைகளை மட்டுமே வாந்தி எடுக்கக் கூடிய வியாதியஸ்தர்களாக இவர்கள் திரிவதால் இஸ்லாமிய சகோதரத்துவம் பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை.

தனது தாயின் மறைவுக்கு ஆறுதல் சொல்லச் சென்றவர்களையே அவமானப்படுத்தி அதிலே இன்பம் கண்ட குரூர புத்தியுடைய தனது தலைவன் வழியை பின்பற்றுவதால், ஒரு சகோதரனின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லும் இஸ்லாமிய நடைமுறை இவர்களுக்கு புரிவதில்லை. அச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டவற்றில் இதுவும் ஒன்று என இவர்களுக்கு விளங்கப் போவதுமில்லை. முகவை ததஜ டிசம்பர் 6 நிகழ்ச்சி பற்றி இன்னும் சந்தேகமாக இருந்தால் அதில் கலந்து கொண்ட சிங்கமுடி பாக்கரிடமோ, அதை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்த திருட்டு பத்திரிக்கை ஆசிரியரிடமோ கேட்டு உளறுவாயன் தெளிவு பெற்றுக் கொள்ளட்டும்.

சிந்தனை தெளிவு இல்லாத உளறுவாயன் சென்ற ஜனவரி கும்பமேளாவைப் பற்றியும் எழுதியுள்ளார். பத்து இலட்சம், பல இலட்சம் என பல சுருதிகளில் பாடித் திரிந்தவர்கள், தனது கிரிமினல் தலைவன் போயஸ் தோட்டத்து பொன்மகள் முன் பொட்டிப் பாம்பாக சுருண்டு, கூனி குறுகி இலட்சம் பேர் என ஈனஸ்வரத்தில் முனகிய பிறகும், வெளியில் மக்களை மடையர்களாக்க கோயபல்ஸ் பாணியில் மீண்டும் மீண்டும் உளறியவர் தற்சமயம் உஷாராக எண்ணிக்கையை விட்டு விட்டார்.

உளறலின் உச்ச கட்டமாக நீட்டி முழங்குவதும், எதார்த்தத்தை சுட்டிக்காட்டி நாமும், நம்மைப் போன்றவர்களும் அழகிய முறையில் பதில் கொடுத்த பின், தனது தலைமையிடம் குட்டுபட்டு மூடிக் கொண்டு அடக்கி வாசிப்பதும் உளறுவாயனின் வாடிக்கை. 'எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக் கணக்கான' என பில்ட் அப் செய்து வந்தவர், நாம் சுட்டிக்காட்டியபின் ஏதோ கொஞ்சம் எதார்த்தத்தை புரிந்ததால், பல்லாயிரக் கணக்கான என்ற மாயையிலிருந்து விடுபட்டு, இப்பொழுதெல்லாம் 'எனது மெயிலை பார்வையிடும் சகோதரர்களுக்கு' என துவக்கி வருவதை நாம் அறிவோம்.

அதேபோல், கும்பமேளா விஷயத்திலும் இலட்சம் பேர் கூட கூடவில்லை என்ற உண்மையை உணர்ந்து உஷாராக எண்ணிக்கையை தற்சமயம் விட்டிருப்பாரேயானால், எதார்த்தத்தை புரிந்து கொண்டதற்காக பாராட்டுவோம். எமது நன்றிகளையும் கூறிக் கொள்கிறோம். இதேபோல் எதார்த்தமான தவ்ஹீதிற்கு எதிரான தக்லீதிலிருந்தும் விடுபட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

ஆனாலும் அது சந்தேகம் தான். ஏனெனில் உளறுவாயனின் தக்லீதின் தரம் அப்படிப்பட்டது. அதற்கு ஒரு உதாரணம் தான் ராஜ் மஹால் வைஸ் இலாஹி விஷயம். இன்று, 'மேலப்பாளையத்தில் வேறொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது' என ஒத்துக் கொள்ளும் உளறுவாயன் அன்று, இலாஹிக்காக பீஜே வெட்டித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார் என பரபரப்பான மெயில்களை தனது அடிவருடிகள் அனுப்பியிருந்தது நினைவு கூரத் தக்கது.

ரமளான் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக வரும் பீஜேயிடத்தில் இங்குள்ள இலாஹி என்பவர் பிரச்சனை செய்வார் என் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே அங்கு அவர் நுழைந்துவிடாமல் காக்க வேண்டியது உங்களது கடமை என காவல் துறையினரிடம் எழுதிக் கொடுத்த கடிதத்தை இலாஹி ஸ்கேன் செய்து வெளியிட்டதன் பின்னும் மூதறிஞர் அபூஜெஹ்லின் கூற்றை நம்புவதற்கு நாம் ஒன்றும் உளறுவாயன் அளவிற்கு முட்டாள் இல்லையே.

நாம் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை தறுதலை ஜமாஅத்தினர் உதாசீனப்படுத்தி வருகின்றனர். நாம் குறிப்பிடுவது அவர்களது நன்மைக்காகத் தான் என்பதனை அறிந்து கொள்ள முடியாத அபூஜெஹ்ல்களாக இருப்பதனால் தான், உளறுவாய் உமரை தொடர்ந்து எழுத அனுமதிக்கின்றனர் போலும். அவரும் விடாமல் நம்மைக் காட்டிலும் அதிகமாக அவரது தறுதலை தலைமையின் தகிடுதத்தங்களை மக்களுக்கு நினைவூட்டி வருகின்றார்.

அந்த வகையில் ஆல்ஃப்ஸ் மலைத் தொடரின்.. .. .. முன்பு ஒற்றுமை இதழில் வெளியான கட்டுரை குறித்து எழுதியுள்ளார். ஒற்றுமையை சீர்குலைத்த கயவர் கூட்டத்திற்கு, ஒற்றுமையை முடக்கிய கிரிமினல்களுக்கு இதனை குறிப்பிட எந்த அருகதையும் இல்லை.

ஆனால் இதன் மூலம் தற்சமயம் களவாடிச் சென்றுள்ள உணர்வு பத்திரிக்கைக்கு பெயரளவில் ஆசிரியராக இருந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கிக் கொண்ட பீஜேயைப் பற்றி ஒவ்வொரு ரமளானிலும் முஸ்லிம் ட்ரஸ்ட்டில் பேசுவதற்கு பணம் வாங்கிக் கொண்ட மூதறிஞர்? பீஜேவைப் பற்றி
ஒவ்வொரு இடத்திலும் பேசுவதற்கு பணம் வாங்கிய பேச்சாளர் பீஜேவைப் பற்றி சுனாமி கணக்கில் கை வைத்து கிராபிக்ஸ் போட்ட தனது மகனுக்காக 65,000 ரூபாயை சுனாமி நிதியிலிருந்து சுருட்டிக்கொண்ட பீஜேவைப் பற்றி சுனாமியை காரணம் காட்டி, தனது பத்திரிக்கைக்கு ரூ 2 இலட்சம் சுரண்டிக் கொண்ட பீஜேவைப் பற்றி மக்கள் மத்தியில் நினைவூட்டி உள்ளார் என்றே பலர் கருதுகின்றனர்.

நாமே சொல்ல கூச்சப்படும் பீஜேவின் இத்தகைய தப்புத்தாளங்களை நினைவு படுத்திய உளறுவாயனுக்கு நன்றி.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 26.12.2006

No comments: