Saturday, December 16, 2006

உறக்கம் களையாத ததவின் உளறுவாய் உமர்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

உளறுவாய் உமர் தனது மூன்று வார உறக்கத்திலிருந்து மீண்டு வந்து தனது உளறல் திருப்பணியைத் துவக்கியுள்ளார். வாழ்த்துக்கள்.

ஆனால், சாதாரணமாகவே உளறக்கூடியவர், ஆழ்ந்த உறக்கத்தில் திடுக்கிட்டு விழித்தால் என்ன செய்வார். பாவம். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறி கொட்டியுள்ளார்.

நாம் பல முறை குறிப்பிடுவது போல், இவர் எழுதக்கூடிய குற்றச்சாட்டுகள் பலமுறை இவரது கூட்டத்தாருக்கே மீளக்கூடியதாக இருப்பதை நாம் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.

அந்த வரிசையில் தற்சமயம் சுபுஹு தொழுகையைப் பற்றி குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால், சுபுஹுமட்டுமல்ல, பல நேர தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழாமல் பீடி குடித்துக் கொண்டு உலவி வரும் தனது கிரிமினல் தலைவனைத் தான் சாடுகிறாரோ என உண்மை தவ்ஹீத்வாதிகள் தலையிலடித்துக் கொள்கின்றனர்.

அடுத்ததாக, தேர்தலில் தமுமுக பங்கேற்பது குறித்து விளாசியுள்ளார். தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் பேரியக்கமாக பவனி வரும் தமுமுக தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு எங்கு, எப்பொழுது என்ன தேவைப்படுகிறதோ அதை எப்பாடுபட்டாவது பெற்றுத் தரும் தன்னலமற்ற பேரியக்கமாகும்.

தமுமுகவின் பணிகளை (அ) சேவைகளை காப்பியடித்து வரும் பல போலிகள் ஒரே ஒரு எம்எல்ஏ தனது கட்சி ஆபீஸுக்கு வந்து சென்றதும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் தாங்களனைவருமே எம்.எல்.ஏக்களாகி விட்டது போல் புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள் போலும். அதனால் தான் கவுஸ்பாஷா ததஜ அலுவலகத்திற்கு சென்றதால், தமுமுகவிலுள்ள தவ்ஹீத்வாதிகள் வெளியேறுவதாக மனப்பால் குடிக்கிறார் உளறுவாயன் உமர்.

ஒவ்வொரு ஸ்ட்டேட்மெண்டிலும் தானும் குழம்பி பிறரையும் குழப்பும் கலையில் பிரசித்தி பெற்ற உளறுவாயின் உளறலைப் பாருங்கள்.

தமுமுகவிலிருந்து தவ்ஹீத்வாதிகள் விலகுகிறார்கள்.

உளறல் உமரின் கிரிமினல் தலைவர், தான் பிரிந்து சென்ற நேரத்திலிருந்து இன்று உளறல் உமரின் இந்த ஈமெயில் வரை, பல்வேறு வகைகளில் அவர்களும் தத்தமது வாய் கை வலிக்க சொல்லியும், எழுதியும் தான் பார்க்கிறார்கள். அந்தோ பரிதாபம், மறுமையை நம்பக்கூடிய, ஸஹாபாக்களை மதிக்கக்கூடிய உண்மை தவ்ஹீத்வாதிகள் எவரும் தமுமுகவிலிருந்து விலகுவதாகத் தெரியவில்லை. எனவே செய்வதறியாது உளறல் உமர் வகையறாக்கள் கை பிசைந்து நிற்கின்றனர். எனவே தான் அடுத்ததாக அனைவரும் நகைக்கும் விதத்தில் ஒரு காரணம் கூறுகிறார் பாருங்கள்.

அதாவது, தமுமுகவிலிருந்த தவ்ஹீத்வாதிகள், கவுஸ் பாஷாவின் ததஜ அலுவலக விஜயத்தினால் மனம் வெறுத்து விலகுகிறார்களாம்.
இதன் மூலம் உளறல் உமர் தனது தலைமை மற்றும் தொண்டர்களின் தவ்ஹீதின் தரம் எப்படிப்பட்டதென தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஆக இவர்களது பார்வையில் அரசியல்வாதிகள் விஜயத்தினால் தான் இவர்களது ஈமான் கூடவும் குறையவும் செய்யும் போலிருக்கிறது. வெட்கம். வெட்கம்.

முகவை மாவட்டம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தமுமுக நிர்வாகிகளை எத்தனையோ ஆசை வார்த்தை கூறி வளைத்து விட தறுதலை ததஜவின் கிரிமினல் தலைவன் எத்தனையோ முயற்சி செய்தும் ஒன்றும் பலிக்கவில்லை. அந்த விரக்தியில் தனது தலைவனின் சுன்னத்தை விட்டு விடாமல் தமுமுகவின் மேல் தன்னால் முடிந்தவரை அவதூறு சுமத்தியுள்ளார்.

நிர்வாக வசதிக்காக, தனது பலத்தை அதிகரிப்பதற்காக கிளைகளை அதிகமாக்குவதற்காக மாவட்டங்களை பிரிப்பது வளர்ச்சிப் பாதையின் குறியீடு. இந்த வகையில் தான் இந்திய அளவில் புதிய மாநிலங்களே உருவாக்கப்படுகின்றன. தமிழக அளவில் புதிய மாவட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. தமுமுகவும் அதே போல் தனது வளர்ச்சிப் பாதையின் குறியீடாக முகவை மாவட்டத்தைப் பிரித்தது. இன்று அதன் காரணமாக முகவையின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமுமுகவின் புதிய கிளைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முகவை மக்களும் முழு மனதோடு ஆதரவளிக்கின்றனர்.

இதனை காண சகிக்காத தறுதலை ததஜவினர் எதையும் உடைத்தே பழக்கப்பட்ட தங்களது இயல்பு படி முகவை சின்னாபின்னமாகி விட்டதாக மனப்பால் குடிக்கின்றனர்.

அதனால் தான் முகவையில் நடந்த டிசம்பர்-6 போராட்டத்தை சிறுமைப்படுத்தி எழுதியுள்ளார். என்ன செய்வது தனது தலைவன் சரணடைந்த போயஸ் தோட்டத்து பொன்மகளை எதிர்த்து தமுமுக வீறுகொண்ட வீடு முற்றுகை போராட்டம் நடத்த புறப்பட்டதை இந்திய ஊடகமே வியந்து பாராட்டிய வேளையிலும், களவாடிச் சென்ற உணர்வில் சிறுமைப்படுத்தியே செய்தி வெளியிட்டார்கள்.
அத்தகைய சிறுமதியாளர்களின் சீரிய வழிகாட்டுதலில் செயல்படுவதால் உளறல் உமரும் முகவை மாவட்ட தமுமுகவின் டிச-6 போராட்டங்களை சிறுமைப்படுத்தியுள்ளார்.

இதே முகவையில் இவர்களது (அ)சிங்க குரல் பொதுச் செயலாளரின் டிச-6 போராட்டத்திற்கு வந்தவர்கள் மொத்தமாக மூன்று இலக்கத்தை தொட முடியாத அளவிற்குத்தான் இருந்ததாக தகவல்கள் வருகின்றன. ஆதாரத்துடன் வெளியிடத் தயார் என முகவைத் தமிழன் மார்தட்டுகிறார். முகவைத் தமிழன் வெளியிட்டுவிட்டால் தறுதலை ஜமாஅத் ததஜவினரின் முகமூடிகள் கிழிந்துவிடும்.

இலாஹி குறித்து நாம் எழுதியிருந்ததற்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு 'ஒப்பந்தம் அவசியம் என்பது மனிதர்களுக்குப் புரியும், பிராணிகளுக்குப் புரியாது' என் உளறியுள்ளார். ஒருவேளை இவர்கள் புரியாத பிராணிகளுடன் பேசும் பழக்கம் உள்ளவர்கள் போலும்.

நாம் குறிப்பிட்டிருந்தது, இலாஹி குறித்து காவல் துறையினரிடம் கம்ப்ளெய்ண்ட் கொடுத்ததோடு, அவரை ராஜ் மஹால் பக்கம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு என கையை காலைப் பிடித்து கெஞ்சி எழுதிக் கொடுத்த கடிதத்தின் காப்பியை வெளியிட்டதைத்தான். இதற்கு பதில் எழுத வேண்டுமானால், அப்படி எழுதவில்லை என அவர்களது வழமைப்படி பொய் சத்தியமோ அல்லது அது ஒரு ஃபோர்ஜரி லட்டர் என்றோ உளறியிருக்கலாம். ஆனால் அதற்கும் மேலாக அவரை பேமானி என வசை பாடியிருப்பதிலிருந்தே ஓடிப்போனது பிஜே தான், இலாஹி அல்ல என விளங்க முடிகிறது.

சென்ற வருட ஹஜ்ஜில் தமுமுக தொண்டரணியின் சேவையை இந்திய தூதர் அவர்களே சிலாகித்து சொல்லியிருப்பதால் தறுதலை ஜமாஅத்தினருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அந்த வயிற்றெரிச்சலில் தான் தமுமுக ஏற்பாடு செய்யும் இவ்வருட ஹஜ்ஜையும் விமரிசித்துள்ளார் திருவாளர் உளறுவாய் உமர் அவர்கள். தனது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக, சுனாமி நிதியில் தனது தலைமை தறுதலை ததஜ தனது தொண்டர்களுக்கு சீருடை வாங்கித் தந்த சிந்தனையிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் போலும்.

கருணாநிதி அமைத்த கமிஷனுக்கும், ஜெயலலிதா அமைத்த கமிஷனுக்கும் வித்தியாசம் தெரியாத புத்திசாலிகளாக உளறல் உமர் வகையறாக்கள் இருப்பதால் தான் கமிஷன் பெற்றுக் கொண்ட அவர்களது கிரிமினல் தலைவர் தாராளமாக ஏமாற்றிக் கொண்டுள்ளார். வித்தியாசத்தையே புரிந்து கொள்ள இயலாதவர்களால் செல்வியின் ஆணை ஒரு செல்லாக்காசு - வேஸ்ட் பேப்பர் - டாய்லெட் பேப்பர் என்பதனை எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும்.

அதுதான் உளறல் உமர். அவரிடம் புரிதலை எதிர்பார்ப்பது நமது தவறு. என்றாலும், ஒரு காஃபிர் கூட இஸ்லாத்தை புரிந்து உண்மை முஸ்லிமாக மாற வேண்டும் என்ற பேராவல் கொண்டுள்ள உண்மை தவ்ஹீத் வாதிகளாகிய நாம் இந்த உளறல் உமரும் தெளிவு பெற்று உண்மை தவ்ஹீதை விளங்கி தக்லீதிலிருந்து விடுபட துஆச் செய்வோம்.

ராவுத்தர் (16.12.2006)

No comments: