Thursday, December 07, 2006

பாபரி மஸ்ஜித் இடிப்பு தின சிந்தனை

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.


1992 டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தின சிந்தனை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்து இடிக்கப்பட்ட மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள் 1992 ஆம் ஆண்டு தமிழத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு மேலப்பாளையத்தில் மட்டும்தான் துப்பாக்கி சூடு நடந்தது.

பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்.

1992 டிசம்பர் 7இல் நடந்த அந்த துப்பாக்கி சூட்டுக்கு இறையாகி இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்;. 25 இஸ்லாமிய இளைஞர்கள் படு காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த 40 இஸ்லாமிய இளைஞர்கள் மீது அநியாயமாக பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கப் பணமாக உதவிட இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் அனுப்பிக் கொடுத்தோம்.

கண்டிஷன் பெயில் பெற்று ராஜபாளையத்தில்

மேலும் வழக்கு வகைகளுக்கு, சிறையில் உள்ளவர்களை அடிக்கடி சென்று பார்த்து ஆறுதல் கூறி வருவதற்கு, கண்டிஷன் பெயில் பெற்று ராஜபாளையத்தில் இருந்தவர்களுக்கு உணவு மற்றும் வசதிகள் செய்தி கொடுத்திட என அவ்வப்போது பணம் அனுப்பிக் கொடுத்தோம். மொத்தம் 3 இலட்சம் ரூபாய் வரை அனுப்பிக் கொடுத்து உதவினோம்.

தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாத பி.ஜெ.

இந்த உதவிகளை முன்னின்று செய்திட முதலில் மவுலவி பி.ஜெ.யை அணுகினோம். பணத்தை உங்களுக்கு அனுப்பித் தருகிறோம். ஜாக் சார்பில் நீங்கள் வினியோகியுங்கள். இதன் மூலம் தவ்ஹீதுவாதிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்புகள் நீங்கும் என்றோம். தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாத பி.ஜெ. மறுத்து விட்டார்.

கேமராக்களுக்கு முன்னால் நின்று நடித்துக் கொண்டிருப்பதே.

தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர் பி.ஜெ. என்பதை என்றும் உறுதியாகக் கூறுவோம். இதுபோன்ற உதவிகளை முன்னின்று செய்ய மறுத்த பி.ஜெ. இன்று தகுதியற்ற உதவிகளை செய்வதுபோல் காட்டி டி.வி. கேமராக்களுக்கு முன்னால் நின்று நடித்துக் கொண்டிருப்பதே இதற்கு போதிய ஆதாரங்களாகும். இதை 6-4-2002இல் பி.ஜெ.க்கு எழுதிய 25 பக்க கடிதங்கள் என்று பிரபலமான கடிதத்திலும் சுட்டிக் காட்டியுள்ளோம்.

சில நல்ல உள்ளங்கள்? அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்து விட்டன.

1992 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை முன்னின்று செய்திட பி.ஜெ. மறுத்ததால் மேலப்பாளையம் சர்வ கட்சியினர் மூலம் உதவினோம். வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி குற்றவாளிகளுக்கு உதவி விட்டார் என சில நல்ல உள்ளங்கள்? அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்து விட்டன. போலீஸ் விசாரணை ஐ.பி. என பிரச்சனை ஆனது. இதனால் எமது தாயகப் பயணம் காலதமதமானது. 1991 ஜுலையில் துபை வந்த நாம் இதை சரி செய்து தயாகம் செல்ல 1994 ஆகஸ்டு ஆனது. தாயகம் சென்ற நாம் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் சிலரை நேரில் கண்டு ஆறுதல் கூறினோம்.

எந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

அப்பொழுது ஒருவர் வந்து ஷஷஎன் பெயர் அமானுல்லாஹ். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனக்கு யாரும் உதவவில்லை. அரசாங்கத்தின் உதவியும் கிடைக்கவில்லை. நீங்கள் அனுப்பிய உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. நான் போய் கேட்டதற்கு இலாஹி அனுப்பிய லிஸ்ட்டிலும் உன் பெயர் இல்லை என கூறி விட்டார்கள் என்றார். மேலப்பாளையத்தைச் சார்ந்த அவர் 1992 டிசம்பர் மாதம் பம்பாயில் இருந்துள்ளார். அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட அவர் உயிரைக் காத்துக் கொள்ள மேலப்பாளையம் வந்து விட்டார். அதனால் மராட்டிய அரசு உதவி, தமிழக அரசு உதவி உட்பட எந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

ஜாக் மேலப்பாளையம் கிளை சார்பில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்.

எனவே ஜாக் மேலப்பாளையம் கிளை சார்பில் அவருக்கு உதவிகள் செய்தோம். அவரது நெற்றியில் பாய்ந்த குண்டு அப்படியே தலையில் மூளைக்கு அருகில் தங்கி விட்டது. அதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மூளைக்கு அருகில் அந்த குண்டு இருப்பதால் அதை ஆபரேஷன் செய்து எடுப்பது மிக மிக கடினம். ஆபரேஷன் செய்ய அவரிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே ஜாக் மேலப்பாளையம் கிளை சார்பில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்.

குண்டை எடுத்து விட்டதாக அந்த இளைஞரிடம் கூறப்பட்டது.

ஆபரேஷன் செய்து குண்டை எடுக்கும்போது மூளையின் ஏதாவது ஒரு நரம்பு பாதித்து விட்டால் காலோ, கையோ, கண்ணோ செயல் இழந்து விடும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். குடும்பத்தாரிடம் கலந்து விட்டு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம். ஆபரேஷன் செய்யப்பட்டது. குண்டை எடுக்க முடியவில்லை. அவரது மனம் பாதித்து விடக் கூடாது என்பதற்காக டாக்டரின் ஆலோசனைப்படி குண்டை எடுத்து விட்டதாக அந்த இளைஞரிடம் கூறப்பட்டது.

யாரிடமாவது உதவி பெற்று ஊசி போட்டு வருகிறார்.

இருந்தாலும் காலப் போக்கில் குண்டு எடுக்கப்படவில்லை என்பதை அவர் உணர்ந்து விட்டார். அடிக்கடி பிக்ஸ் வந்து விடுகிறது. விலை உயர்ந்த 400 ரூபாய் ஊசி போட்டால் ஓரிரு வாரங்களுக்கு பிக்ஸ் வருவதில்லை. இந்த ஊசி போடக் கூட வழி இல்லாமல் அவ்வப்போது யாரிடமாவது உதவி பெற்று ஊசி போட்டு வருகிறார். 1992 டிசம்பர் 6 இந்தியாவில் இது மாதிரி எத்தனை இளைஞர்களை உருவாக்கி விட்டதோ?

குழந்தைகளையும் தாயையும் தள்ளு வண்டியில் போட்டு

இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1947இல் மேலப்பாளையம் ஜின்னா மைதானம் அருகில் உள்ள ஆஸ்பத்திரி ரோட்டில் துப்பாக்கி சூடு நடத்தது. அதன் பிறகு 1992 டிசம்பரில் அதே ஜின்னா மைதானம் அருகில் உள்ள ஆஸ்பத்திரி ரோட்டில் துப்பாக்கி சூடு நடத்தது. ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த குழந்தைகளையும் தாயையும் தள்ளு வண்டியில் போட்டு இழுத்துச் சென்ற பரிதாப காட்சிகள் பத்திரிக்கைகளில் வந்தன.

500க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த அவலங்களைக் கண்ட நாம் யு.ஏ.இ. வாழ் மேலப்பாளையம் முஸ்லிம்கள் சார்பாக ஒரு கடிதம் எழுதினோம். இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவு முஸ்லிம்களையும் அரசியல் அளவில் ஒரே அமைப்பின் கீழ் ஒன்று படுத்த வேண்டுதல் என்ற தலைப்பிட்டு அந்தக் கடிதத்தை எழுதி இருந்தோம். 10-12-1992 அன்று எழுதிய அந்தக் கடிதக் காப்பிகளை பி.ஜெ, சமது சாகிப், லத்தீப் சாகிப், சுலைமான்சேட், பனாத்வாலா, மு.லீக் சமது அணி, முஸ்லிம் லீக் லத்தீப் அணி என நமது சமுதாயத்தின் எல்லா அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்குமாக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம். (குறிப்பு: அப்பொழுது த.மு.மு.க. இருக்கவில்லை)

உண்மையான சமுதாய பற்றாளர் யார்?

சமுதாய ஒற்றுமை நோக்கில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்திற்கு யாரிடமிருந்தும் பதில் வரவே இல்லை. ஒரே ஒருவரிடமிருந்துதான் பதில் வந்தது. அந்த ஒரே ஒருவர் யாராக இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உத்தமர், பெருந்தகை, இவர்தான் உண்மையான மில்லத் என்று நீங்கள் எண்ணக் கூடியவர்களில் யாராவது இருப்பார்களா? நினைத்துப் பாருங்கள். ;. உண்மையான சமுதாய பற்றாளர் யார் என்ற விடை காணவும் நாம் எழுதிய கடிதத்தைக் காணவும்

அன்புடன்: காஅ.முஹம்மது பஸ்லுல் இலாஹி.

No comments: