Wednesday, December 06, 2006

தமிழகம் - டிசம்பர் 6 ஆர்ப்பாட்டங்கள்

தமிழகம் - டிசம்பர் 6 ஆர்ப்பாட்டங்கள்

தமுமுக நடத்திய டிச.6 ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை துச்சமென மதித்து, காவல்துறையும், ராணுவமும் முன்னிலை வகிக்க, ஒட்டு மொத்த உலகையே சாட்சியாக வைத்து இந்துத்துவ வெறியர்கள் இடித்து தள்ளினார்கள் அல்லாஹ்வின் ஆலயமான பாபரி மஸ்ஜிதை. 400 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாபரி மஸ்ஜிதை மதவெறி பிடித்த ஃபாசிச பயங்கரவாதிகள் இடித்து தள்ளிய கறுப்பு நாளான டிசம்பர் 6 அன்று தமிழகமெங்கும் அணைத்து ஜமாத்தினர்களையும் முஸ்லி்களையும் திரட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தியது.

தமிழகமெங்கும் நடத்தப்பட்ட இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் கூடி நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர். லிபர்ஹான் ஆணைய விசாரனை முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கோவை உமர் அவர்கள் உரையாற்றுகிறார்கள்

அது போல் பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஸி, உமா பாரதி கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும் ஆர்ய சக்திகளுக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் அடங்கி போகமாட்டார்கள் என்றும் இவார்ப்பாட்டங்களில் தெளிவாக உரைக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள்

கோவையில் மாநில செயலாளர் உமர் அவர்கள் தலைமையிலும் மாவட்ட தலைவர் பஷிர் அஹமது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அப்பாஸ், அஸ்ரப் ஆகியோர் மேற்பார்வையிலும் இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த பல்வேறுபட்ட ஜமாத்தினரும் அமைப்பினரும் கழந்து கொண்டனர். சிறுபான்மை அறக்கட்டளையின் சார்பாக அதன் நிர்வாகிகள் அபுத்தாஹிர், கலீல், தங்கப்பா ஆகியோர் கழந்து கொண்டனர். மேலும் 2000 த்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் ஆண்களும் பெண்களுமாக கூடி நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர். பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தது காண்போர் கவணத்தை கவர்வதாக அமைந்திருந்தது.

இராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான மேலதிக செய்திகள் புகைப்படங்களுடன் விரைவில் புதுப்பிக்கப்படும்.

செய்தி மற்றும் புகைப்படங்கள் : கோவை தங்கப்பா

No comments: