Wednesday, December 06, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 12

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன போன தடவ அவசரமா ஓடிப்போயிட்டீங்க.

கொஞ்சம் வேலையிருந்துச்சு. அதான் அவசரமாப் போனேன். ஏன் எதாவது சேதி கலந்துக்குறதுல விடுபட்டுப் போச்சா.

அது வேற ஒண்ணுமில்ல. நம்ம உணர்வு பத்திரிக்க சம்பந்தமா ஒரு டவுட்டு.

கேளுங்க அஹமது.

அதாவது ஒமர் பாய். உணர்வுல தமுமுக ஆளுங்கள பாராட்டிலாம் இப்ப சேதி வருதே என்ன சமாச்சாரம்.

என்ன சொல்றீங்க. அஹமது! எப்ப அப்புடி ஒரு சேதி வந்துச்சு. சான்ஸே இல்லயே. வழமையா நாம தமுமுக காரன் செய்ற எந்த நல்ல செயலையும் ஏத்துக்கவே மாட்டோமே. அதுல எதாவது நொட்டு, நொள்ள சொல்ல முடியுமான்னு தானே பார்ப்போம். நீங்க வேற எதயோ பாத்துட்டு தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க போல.

சே.சே. அப்புடிலாம் கெடயாது. நான் சொல்றது நெசம் தான். போன வார உணர்வுல ஒரு சின்ன பையன் தஜ்வீது முறைப்படி ஓதி குர்ஆன் மனனப் போட்டியில முதல் பரிசு வந்ததா ஒரு நியூஸ் போட்டிருந்தாங்களே அதத்தான் சொல்றேன்.

ஹ்ஹாஹா.. ..அதுக்கும் தமுமுகவுக்கும் என்னங்க சம்பந்தம். ஏன் இப்புடி கெடந்து கொளப்புறீங்க.

அதுசரி. அப்ப ஒங்களுக்கு விஷயமே தெரியாதா. அந்த சின்ன பையன் சவுதில உள்ள அல் அஹ்ஸாங்குற பகுதி தமுமுக கிளை நிர்வாகியோட பையனாம். மக்கள் உரிமைல போட்டிருந்தாங்களே பாக்கலியா.

அப்புடியா சேதி. நம்மாளுங்க இந்த விவரத்த மறைச்சுட்டாங்களா. இப்புடித்தான் முன்னால ஒரு தடவ தமுமுக கார வக்கீல் ஒருத்தரோட ஆர்க்யூமெண்ட்டால, முஸ்லிம்களுக்கு சாதகமா ஒரு தீர்ப்பு வந்தப்ப விஷயத்தை மட்டும் எளுதிட்டு, யாரால அப்புடி ஒரு சாதகமான தீர்ப்பு வந்துச்சோ, அதுக்கு காரணமானவரு தமுமுக காரருங்குறதுனால மறைச்சாங்க.

அப்புடியா. இதுக்கு முன்னாலேயும் இதே மாதிரி நடந்துருக்கா. பேசாம தமுமுக காரங்க சம்பந்தபட்ட விஷயங்கள எளுதாம இருந்தாலே நல்லதுன்னு நெனக்கிறேன். அவுங்களோட சின்ன, சின்ன தவறுகளய்லாம் ஊதி பெருசாக்க நெனச்சு எளுதுறாங்க. அப்புறமா அது வெடிச்சு சுயிங்கம் மாதிரி நம்ம மூஞ்சிலேயே ஒட்டிக்கிறுது. அத தொடக்கிறதுக்கே நமக்கு போதும் போதும்னு ஆகிடுது. இந்த நெலமைல தமுமுகவோட நல்ல வெசயத்த எளுதி அதுலயும் கொஞ்சம் மறைக்கப்பட்டிருக்குனு மக்கள் புரிஞ்சுக்கிடணுமா.

நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க அஹமது. குர்ஆனையே தனக்கு சாதகமா வளைச்சவுங்க, ஹதீஸையே தனக்கு சாதகமாக மறைச்சவங்க நம்ம தலைவரு, இத மறைச்சதப் பத்தி ஏன் ஃபீல் பண்றீங்க. தனக்கு சாதகமா குர்ஆனையும் ஹதீஸையும் மறைக்கும் போது இதச் செய்ய ஏன் கூச்சப்படப் போறாரு.

அதுவுஞ் சரிதான் ஒமர் பாய். இப்போ ஹஜ் சீஸன் ஆரம்பிச்சுடுச்சே. இதுல போன தடவ நம்ம தலைவரு ஒரு ஃபத்வா குடுத்தாரே அதனோட நெலம என்ன தெரியுமா.

முதல்ல ஃபத்வாவே என்னன்னு மறந்து போச்சு. இந்த லட்சணத்துல அதனோட இப்போதய நெலம என்னன்னு கேட்டா நா என்ன சொல்றது.

அதாவது கடந்த மொற ஹஜ்ல, ஜம்ரத்துக்கு பக்கத்துல ஏற்பட்ட நெரிசல்ல பல நூறு ஹாஜிகள் வஃபாத்தானாங்கல்ல, அப்போ அந்த மாதிரி விபத்துகள் ஏற்படாம தடுக்கணும்னா என்ன செய்யனும்னு நம்ம தலைவரு உணர்வுல எளுதுனாருல அதப்பத்தி தான் கேக்குறேன்.

ஓ அதுவா. அது சம்பந்தமா அப்பவே பலபேரு அந்த கருத்த எதுத்ததுனால, நம்மாளு மூச்சடைச்சு போயிட்டாரே, ஜம்ரத்ல கல்லெறியுறதுக்கு தேச வாரியாக நேரம் ஒதுக்கி ஆளுங்கள அனுப்பனும்னும், கல்லெறியத் தேவை சைகை செஞ்சா போதும்னும் இவரு சொன்ன ஒடனேயே ஆளாளுக்கு பிச்சு எடுத்துட்டாங்களே.

அத எப்படி ஒமர் பாய். ஒத்துக்க முடியும். ஜகாத் விஷயத்துல இவரு ஒரு பொருளுக்கு ஒரு தடவ குடுத்தால் போதும்னு சொன்னத கொஞ்ச போராவது ஏத்துக்கிட்டாங்க. அதுக்கு கூட அவுங்க அவுங்களோட சுய நலமும், தன்னோட பொருள் மிச்சமாவுதுன்னு சிலர் நெனச்சாரோ என்னவோ. ஆனா இது இபுறாஹீம் (அலை) நபி காலத்துலருந்து வர்ற வழக்கமாச்சே. அப்புடி இவரு இத மாத்தனும்னு நெனச்சாரோ தெரியல.

அதவிட கூத்து என்ன தெரியுமா. இவரு இப்புடி எளுதுன ஒடனேயே ஒரு ஸைட்டுல உணர்வு ஆசிரியரின் அறியாமைன்னு போட்டு நாமெல்லாம் முதறிஞர்னு சொல்றவரு சரியான அபூஜெஹல்னு எளுதி நார்நாரா கிளி கிளின்னு கிளிச்சுட்டாங்க. கூடவே இதுக்குலாம் என்ன காரணம்னா இவரு உம்ராவுக்கோ, ஹஜ்ஜுக்கோ வராதது தான் காரணம்னும் எளுதி இருந்தாங்க.

அதுதானா விஷயம் இந்த வருசம் நம்ம தலவரு தலமையில ஹஜ்ஜுக்கு ஆள கூப்பிட்டுக்கிட்டு போறதா கேள்விப்பட்டேனே.

நானுந்தான் கேள்விப்பட்டேன். ஆனா, ஜம்ரத்து விஷயத்துல இப்புடி தன்னோட இஷ்டத்துக்கு ஃபத்வா குடுத்ததுனால, நம்மாளுங்கலே கூட ஹஜ் கமிட்டி மூலமாவோ, வேற ஏஜென்ஸி மூலமாவோ ஏற்பாடு செஞ்சுட்டதாவும் கேள்விப்பட்டேன்.

அப்ப நம்ம தலைவரு இப்பமும் ஹஜ்ஜுக்கு போகலியா.

என்ன செய்றது. குர்ஆன் தர்ஜமாவுல பண்ணுன கொளறுபடியினால சவுதில இருந்து கூட விசாரிக்கிறதுக்கு கூப்டாங்க. அப்ப போகாம டபாய்ச்சுட்டாரு. இப்போ ஹஜ் விசாவுல போனா திரும்பவும் புடிச்சுக்கிட்டுப் போயி விசாரிப்பாங்களேன்னு பயம். இது தவிர இப்போ லேட்டஸ்ட்டா இந்த ஜம்ரத்து விஷயமும், கூடவே ஏகத்துவத்துல 'நாம் பின்பற்றுவது தூதரைத் தான், யூதரை அல்ல' என்று சவுதியை விமரிசித்து எளுதுன விஷயமும் சேர்ந்துக் கிட்டதுனால அங்க போனா திரும்ப இந்தியாவுக்கு வர முடியாதுன்னு பயமும் சேர்ந்திருக்காம். அதுனால போறது டவுட்டு தான். ஒருவேள போனா திரும்பறது அதவிட டவுட்டு தான்.

ம். அப்புடியா சேதி.

சரி சரி, வாய மூடுங்க ஈ நொளஞ்சிடப் போகுது. நான் வர்றேன். பிறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 06.12.2006

No comments: