Monday, December 04, 2006

பாபரி மஸ்ஜித் ஒரு துரோக வரலாறு!!

பாபரி மஸ்ஜித் ஒரு துரோக வரலாறு!!

பாபரி பள்ளிவாசல் இடிப்பதற்கு முன்பும் இடிப்பிற்குப் பின்பும் என 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் பிரச்னையில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிபாட்டு உரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களையே நம்பியிருந்த முஸ்லிம்களை காவிப் படையினரும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்களும் தங்களது மனசாட்சியைப் புதைத்து விட்ட காரணத்தினாலும் தங்களது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த காரணத்தினாலும் நாம் அந்தப் பள்ளியை இழந்தோம்.

இப்பொழுது ஓரிறைவனைத் துதிக்கக் கூடிய இடமாக விளங்கிய அந்தப் பள்ளியை பல தெய்வ வணக்க வழிபாட்டுக்கு இட்டுக் கொண்டு செல்லும் பாஸிஸ இந்துத்துவாக்கள் இன்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மதிக்கவும் மாட்டார்கள். நீதிமன்றங்களும் அவர்களுக்கே சாதகமாகத் தீர்ப்புக்களை வழங்கி வருகின்றன.

மேலும் மார்ச் 12 லும் அதற்கு இடைப்பட்ட இந்த காலத்தில் வெறுமனே கோயில் கட்டுவதோடு மட்டும் அவர்கள் நின்று விட மாட்டார்கள். அதற்கு முன்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தக் கூடிய செயல்களிலும் அவர்கள் இறங்கக் கூடும்.

இந்த நிலையில் முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் அவர்களுக்குரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசுகளின் பொறுப்பாகும். ஆனால் இன்றைய அரசுகள் தங்களது ஓட்டு வங்கிகளை அடிப்படையாக வைத்துத் தான் தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு யார் தான் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த வல்ல இறைவனிடமே எங்களது பாதுகாப்பிற்கு கையேந்தி நிற்கின்றோம்.

மேலும் ஏற்கனவே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வரக் கூடிய இந்திய முஸ்லிம்கள் மேலும் அந்நியப்பட்டுப் போகக் கூடிய நிலையை வலிய அவர்களின் மீது திணிக்கக் கூடிய சம்பவமாகத் தான் இது அமையும்.

முஸ்லிம்களும் இந்த இந்திய நாட்டுக் குடிமக்கள் தான் என்பதிலும் இந்திய தேச விடுதலைக்கு தன்னுடைய சதவீதத்திற்கும் அதிகமாகவே தியாகங்களை இந்தச் சமூகம் செய்திருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்ளும் அனைவரும் இந்தப் பாஸிஸப் போக்கை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். இந்த அராஜகத்திற்குத் துணை போகக் கூடிய அனைவரையும் நீதிமன்றத்தில் - குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

இந்திய எல்லையில் இந்திய ராணுவம் சந்திப்பவர்கள் மட்டும் இந்திய எதிரிகள் அல்ல! இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைப்பவர்களும் இந்தியாவின் எதிரிகளே!!! இந்த எதிரிகளை இந்திய தேச மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டியதும் அவர்களது தீவிரவாதப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டியதும் நடுநிலையாளர்கள் மற்றும் இதயமுள்ளவர்களின் கடமையும் கூட!!

பாபரி மஸ்ஜித் : அடிப்படைத் தகவல்கள்

1 comment:

muslimeen said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

"...மனிதர்களில் சிலரைக்கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்காவிட்டால் ஆசிரமங்களும்,கிறிஸ்தவக்கோயில்களும்,யூதர்களின் ஆலயங்களும்,அல்லாஹ்வின் திருநாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டுப்போயிருக்கும்..."(அல் குர் ஆன்22:40)
என்ற இறைவசனம் சிந்திக்கப்படவேண்டிய ஒன்று.இஸ்லாம் அல்லாத வேறு வழிமுறைகள் நிச்சயமாக பலன் தராது என்பதை பாபர் மசூதி விவகாரத்தில் முஸ்லீம் சமூகம் எப்பொழுது உணரப்போகிறதோ.