Sunday, December 03, 2006

கோவை- சாட்சி குற்றவாளியானது எப்படி?

இறைவன் திருப்பெயரால்

குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியாக சேர்க்க இருந்தவர் குற்றவாளியானது ஏன்? எதிர் தரப்பு வக்கீல் கேள்வி


கோவை நவம்பர் 14

கோவையில் மானியத் தோட்டத்தில் பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட குற்றச்சாட்டில் சாட்சியாக சேர்க்க இருந்தவர், குற்றவாளியாக ஆக்கப்பட்டுள்ளார்', என தனிக்கோர்ட்டில் எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டார்.

கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விவாதத்தில் நேற்று நீதிபதி உத்ராபதி முன்னிலையில் ஆஜரான எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டதாவது:

மானியத் தோட்டம் பகுதியில் 1998, பிப்.17-ல் நடந்த சோதனையில் கதவு எண் :17ஃ1, வீட்டில் பைப் குண்டுகள், ஜெலட்டின்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடர்பாக அல்-உம்மாவைச் சேர்ந்த யாகூப், அஷ்ரப்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யாகூப், அஷ்ரப்அலி ஆகியோர் வீட்டில் கைப்பற்றப்பட்;டது பைப் குண்டு தயாரிக்கும் பி.வி.சி. பைப்களா அல்லது பைப் வெடிகுண்டுகளா என்பதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுர். பிப்.17-ம் தேதி நடந்த சோதனையின் போது ஒரு பக்கம் மூடியுள்ள பி.வி.சி. பைப்கள் 28, இருபக்கமும் மூடப்பட்ட 17 பைப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குற்றச்சாட்டு நகலில் 78 பைப் குண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப். 17-ம் தேதி பிடிபட்ட அஷ்ரப் இவ்வழக்கில் சாட்சியாகத் தான் சேர்க்கப்பட இருந்தார். அதற்கான ஏற்பாடு நடந்த கொண்டிருக்கிறது. அவர் மறுத்து விட்டதால் ஜூன் 26-ல் அவரை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுவிட்டார்.

போலீசார் சோதனை நடத்திய வீட்டின் கதவு எண் 17ஃ2 என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் 17ஃ95 என குறிப்படப்பட்டுள்ளது. முகவரியிலும் முரண்பாடு உள்ளது.

குறிப்பிட்ட வீடடில் சோதனை நடத்தி வெடிபொருள்கள் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்து அதற்காக சில சாட்சிகளை தயார் செய்துள்ளனர். ஆனால் அந்த சாட்சிகள் கோர்ட்டில் விசாரிக்கப்படவில்லை. அதேபோல் அந்த வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் யார் என்ற விபரத்திலும் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் மானியத்தோட்;டத்தில் சோதனை நடத்தி வெடிப் பொருட்களை கைப்பற்றியது இன்ஸ்பெக்டர் முரளிதான் என்றும் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர் ரவீந்தரன் தான் என இன்னொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று சோதனை நடத்தியதாக சொல்லப்படும் Nநுரத்திலும் பெரும் குளறுபடியாக உள்ளது. குற்றச்சாட்டில் இரவு 8.00 மணி என்றும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் நள்ளிரவு ஒரு மணி என்றும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மானிய தோட்டத்தில் நடத்திய சோதனை, கைப்பற்றிய வெடிபொருட்களின் உண்மையான தகவல்கள் இல்லை என்பதும், போலீசாரின் விசாரணையில் நம்பகத்தன்மை சிறிதும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறு எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டார். நேற்றைய வாதத்தின்போது சீனியர் வக்கீல் திருமலைராஜன் உட்பட பலர் ஆஜராகினர். இன்றும் எதிர்தரப்பு வாதம் தொடர்கிறது.


திருமால் வீதியில் குண்டு வெடித்து ஆறுபேர் பலியான குற்றச்சாட்டில் உண்மையில்லை

கோவை , நவம்பர் 15

கோவை திருமால் வீதி பாபுலால் வில்டிங்கில் குண்டுவெடித்து ஆறுபேர் பலியானதாக போலீசார் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டில் சிறிதும் உண்மையில்லை என தனிக்கோர்ட்டில் எதிர்தரப்பு வக்கீல் வாதிட்டார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் எதிர்தரப்பு வாதம் தனிக்கோர்ட்டில் நடக்கிறது. நேற்று நடந்த வாதத்தில் எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் ஆஜராகி திருமால் வீதியில் உள்ள பாபுலால் பில்டிங்கில் ஆறுபேர் இறந்தது தொடர்பாக வாதிட்டார். நீதிபதி உத்ராபதி முன்னிலையில் அவர் வாதிட்டதாவது:

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முதன்மை வழக்காக (லீட் கேஸ்) பாபுலால் பில்டிங்கில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் இச்சம்பவத்தில் ஆறுபேர் இறந்தது, மூன்று பேர் கைது செய்யபட்டதைத்தான் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் நடந்த சம்பவத்தை போலீசாரும், விசாரணை குழுவினரும் மறைத்துள்ளனர்.

கோவையில. 1998, பிப்.14-ல் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் பல இடங்களிலும் சோதனை ரோந்து பணியை மேற்கொண்டனர். பிப். 15-ம் தேதியும் இந்த ரோந்து பணி தொடர்ந்தது.

திருமால் வீதியில் உள்ள பாபுலால் பில்டிங்கில் சிலர் வெடிகுண்டுகளுடன் மறைந்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்ற இன்ஸ்பெக்டர் முரளி, அதிகாலை 1.30 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ஏட்டுகள் பச்சையப்பன், ராஸேந்திரன் ஆகியோருடன் திருமால் வீதிக்கு சென்றார். அங்கு பாலால் பில்டிங்கின் பாத்ரூம் பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததை கண்டு, சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் அந்த பாத்ரூமிலிருந்து போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரும், ஏட்டு பச்சையப்பனும் படுகாயம் அடைந்தனது. இதன் பின்னர் அந்த பாத்ருமில் சோதனையிட்ட போது உள்ளே ஆறுபேர் இறந்து கிடந்தனர். செரீப் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர அந்த அறையில் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இநற்த ஆறு பேரும் குண்டு வெடித்ததால் தான் இறந்தனர் என்பது தான் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு.

இதன் பின்னர் நடந்த விசாரணையில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ஏட்டு பச்சையப்பன் ஆகியோர் நாங்கள் திருமால் வீதியில் நடந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்ததாகத்தான் சொல்லியிருக்கின்றனர். பாபுலால் வில்டிங்கில் மறைந்திருந்தவர்கள் வீசிய வெடிகுண்டால் காயம் அடைந்ததாக சொல்லவில்லை.

இக்குற்றசாட்டு குறித்து வழக்கின் முதன்மை விசாணை அதிகாரியிடம் விசாரித்த போது திருமால் வீதியில் உள்ள சாஜ் பில்டிங்கில் குண்டு வெடித்ததாக தெரிவத்துள்ளார். இவரின் சாட்சிப்படி பாபுலால் பில்டிங்கில் தான் சம்பவம் நடந்தது என்ற போலீசாரின் குற்றச்சாட்டையே மாற்றியுள்ளார்.

இது தொடர்பாக பாபுலால் பில்டிங்கில் குடியிருந்த ரேஷ்மாபானு, ஜெமீலாபீவிஈ சகிலா பேகம் ஆகிய மூன்று பெண்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அவர்கள் கொடுத்த சாட்சியத்தின் படி 1998, பிப்.15 அன்று அதிகாலை 1.30 மணிக்கு போலீசார் இங்கு வந்தனர். அவர்கள் 60க்கும் மேற்பட்ட ஆண்களை கைது செய்து அழைத்துச் சென்று விட்டனர். மேலும் எங்கள் வீடுகளில் இருந்து கண்ணாடி பொருட்கள், டி.வி. ஆகியவற்றை போலீசார் அடித்து நொறுக்கி விட்டனர். இது தவிர ஐந்து பவுன் நகை, பணம் ஆகியவற்றையும் திருடிச் சென்றுவிட்டனர் என போலீசார் மீது புகார் தெரிவத்தனர்.

பாபுலால் பில்டிங்கில் குண்டு வெடித்ததாகவோ, இதில் ஆறுபேர் பலியானதாகவோ, வெடிபொருட்களை கைப்பற்றியதாகவோ, அவர்கள் தெரிவிக்கவில்லை. குறிப்பாக பாபுலால் பில்டிங் சம்பவம் தொடர்பாக ஆண்கள் யாரிடமும் போலீசார் விசாரிக்கவில்லை. இது ஏன் என்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மேலும் வெடிப்பொருட்கள் கைப்பற்றியதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை.

போலீசார் முதன்மை வழக்காக குறிப்பட்டுள்ள பாபுலால் பில்டிங் சம்பவத்தின் பல பெரும் சந்தேகங்கள் உள்ளன. இங்குள்ள பாத்ரூம் மிகச்சிறியது. இதில் குண்டு வெடித்து ஆறுபேர் இறந்ததாக போலீசார் கூறியுள்ளனர். குண்டு வெடித்திருந்தால் சுவர்களில் தரையில் சேதம் ஏற்பட்டிருக்கும், சுவர்களில் ரத்தக்கரை படிந்திருக்கும், கதவு சேதம் அடைந்திருக்கும். இது எதுவுமே அந்த அறையில் இல்லை. மாறாக பாத்ரூமில் இருந்த பல்பு கூட உடையவில்லை. கதவு தனியாக சேதமின்று கழற்றி வைக்கப்பட்டு இருந்தது. எனவே, பாத்ரூமில் குண்டு வெடித்ததற்கான வாய்ப்பே இல்லை.

கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த ஆறு பேரும் குண்டு வெடிப்பால் இறந்துள்ளனர் என்று சொல்லவில்லை. மேலும் பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர்களிடம் குண்டு வெடித்ததால் தான் இறந்தனரா என்று கேள்வியே கேட்கப்படவில்லை.

இச்சம்பவங்கள் பாபுலால் பில்டிங் பாத்ரூமில் குண்டு வெடித்து தான் ஆறுபேர் இறந்தனரா என்ற சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இது தவிர இவ்வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகள் போலீசாரின் குற்றச்சாட்டுக்கு எதிராக அளித்திருந்தபோதும் அவர்களை அரசு தரப்பு பல்டி சாட்சியாக அறிவிக்கும்படி தெரிவிக்கப்படவில்லை.

எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒரு வழக்கில் சாட்சிகள் பல்டி அடித்தால் அதை எதிர்தரப்புக்கு ஆதரவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறது. இது இந்த வழக்குக்கும் பொருந்தும்' இவ்வாறு எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டார்.

இந்த வழக்கின் வாதம் இன்றும் தொடர்கிறது.

பாபுலால் பில்டிங்கில் குண்டு வெடிக்கவில்லை

கோவை, நவம்பர் 16

கோவை குண்டுவெடிப்பில் இறநப்தவர்களின் உடைகளை ஆய்வுக்கு அனுப்பாததும். காயம்பட்டு சிகிச்சை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரின் உடையில் எவ்வித வெடிகுண்டு துகளும் இல்லை என்ற ஆய்வு அறிக்கையும், பாபுலால் பில்டிங்கில் வெடிகுண்டு வெடிக்கவில்லை என்ற உண்மை அம்பலமாகியுள்ளது' என தனிக்கோர்ட்டில் எதிர்தரப்பு வக்கீல் வாதிட்டார்

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் எதிர்தரப்பு வாதம் தனிக்கோர்ட்டில் நடக்கிறது. துற்போது பாபுலால் பில்டிங்கில் குண்டுவெடித்து ஆறுபேர் பலியானது தொடர்பான குற்றச்சாட்டின் வாதம் நடக்கிறது. நேற்று வக்கீல் அபூபக்கர் ஆஜராகி வாதிட்டதாவது.

திருமால் வீதியில் உள்ள பாபுலால் பில்டிங் பாத்ரூமில் மறைந்திருந்தவர்கள் இன்ஸ்பெக்டர் முரளி, சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேர் ஆகியோர் மீது குண்டு வீசியதாகவும், இதில் சந்திரசேகர், ஏட்டு பச்சையப்பன் ஆகியோர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த பில்டிங்கில் சோதனையிட்டபோது ஆறுபேர் இறந்து கிடந்ததாக இன்ஸ்பெக்டர் முரளி தயாரித்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஆனால், கோர்ட்டில் நடந்த சாட்சி விசாரணை அறிக்கை ஆகியவற்றின் மூலம் பல முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் குண்ட காயம்பட்ட சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உடைகளில் ஏதேனும் வெடிமருந்து துகள் இருக்கிறதா என அறிந்து கொள்ள உடைகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் எவ்வித வெடிமருந்து துகள்களும் அவரது உடையில் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதே போல் குண்டு காயம்பட்டவர்களின் உடைகள் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படவில்லை. இறந்தவர்களின் உடைகளும் கைப்பற்றப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் குண்டு வெடித்து தான் ஆறுபேர் இறந்தார்கள என டாக்டர்கள் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து பிரேத பரிசோதனைக்கு சென்ற போலீஸ்காரர் சோனையிடம் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடையை ஏன் கைப்பற்றவில்லை என கேட்ட போது, அந்த உடைகள் முற்றிலும் சிதைந்து விட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், பிரேத விசாரணை நடத்திய ஆர்;.டி.ஓ. அளித்த சாட்சியத்தில் இறந்தவர்கள்pன் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் போது, உடைகளுடன தான் அனுப்பி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் பொலீஸ்காரர் அளித்த சாட்சியத்தை நம்ப முடியாது. அதே போல, பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர்களிடம் குண்டுவெடித்துதான் ஆறுபேர் இறந்தார்களா என்பது குறித்து அரசு தரப்பு கேள்வி கேட்கவில்லை.

பாபுலால் பில்டிங் குண்டு வெடிப்பில் இறந்த ஆறுபேரில் மூன்று பேரின் பெயரை அங்கு கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களை தவிர அங்கு இறந்து கிடந்த மேலும் மூன்று பேர் யார் என தெரியவில்லை. இது குறித்து போலீசாரின் அங்கு விசாரிக்கவில்லை. ஆனால் ஆர்.டி.ஓ. விசாரணையின் போது இறந்து கிடந்த நான்காமவர் பிலால் என தெரிந்துள்ளது. இத்தகவலை சொன்னது யார் என தெரியவில்லை. ஆனால், போலீசார் தயாரித்த குற்றச்சாட்டின் குண்டு வெடிப்பில் பலியான ஆறுபேரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இது யார் மூலம் தெரிந்தது என்ற தகவல் இதுவரை இல்லை.

பிரேத விசாரணை துப்பாக்கி சூட்டில் பலி குறித்து விசாரணை நடத்திய ஆர்;.டி.ஓ. விசாரணை அறிக்கை இதுவரை கோர்ட்டுக்கு வரவில்லை. முக்கியமாக பாபுலால் பில்டிங் குண்டுவெடிப்பிற்கு பின் அங்கு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக குற்றச்சாட்டில் இன்ஸ்பெக்டர் முரளி தெரிவித்துள்ளார். வெடிகுண்டுகளை கைப்பற்றியதற்கான அரசு தரப்பு சாட்சி ரவி தெரிவித்த தகவலும் குறுக்கு விசாரணையின் போது அவர் அளித்த பதிலும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. எனவே, இந்த சாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.

முக்கியமாக, குண்டு வெடிப்பில் காயம்பட்ட சர்தாஜ், சலாவுதீன, செரீப் ஆகியோரை சிகிச்சைக்காக பிப். 16 அன்று அதிகாலை 3.30 மணிஅளவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட இவர்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாபவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்ப முடியவில்லை. இந்த சாட்சி, ஆவணங்கள், குறுக்கு விசாரணை, குற்றச்சாட்டு ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது பாபுலால் பில்டிங்கில் குண்டு வெடித்தது என்ற போலீசாரின் குற்றச்சாட்டில் சிறதளவும் உண்மையில்லை.

இவ்வாறு எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டார்.

கைதாகி காவலில் இருந்தவர்கள் மறுநாள் கைதானது எப்படி?

கோவை, நவம்பர் 17,

ஏற்கனவே கைது செய்து காவலில் வைத்திருந்தவர்களை, அடுத்த நாள் நடந்த பாபுலால் பில்டிங் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு படுத்தி கைது செய்துள்ள செயல் போலீசாரின் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை உறுதி செய்துள்ளது' என்று கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆஜரான எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று நடந்த விவாதத்தில் எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் ஆஜராகி வாதிட்டதாவது:

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதன்மை வழக்காக திருமால் வீதியில் உள்ள பாபுலால் பில்டிங்கில் குண்டுவெடித்து ஆறுபேர் இறந்தது மற்றும் இங்குள்ள பாத்ரூமில் இருந்து செரீப், கீழக்கரை அப்பாஸ் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதையும் போலீசார் அறிவத்துள்ளனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பல்வேறு சாட்சிகள், ஆவணங்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உடனே ஆர்;.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடுவது நடைமுறை.

பாபுலால் பில்டிங் பாத்ரூமில் ஒளிந்திருந்ததாக சொல்லப்படும் சிலர் போலீசாh மீது குண்டுகளை வீசியுள்ளனர். இதன் காரணமாக துபு;பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு போலீசார் எச்சரித்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கையும் ஆர்;.டி.ஓ.விசாரித்துள்ளார்.

ஆர்.டி.ஓ.விடம் குறுக்கு விசாரணை நடத்தியபோது கோவை குண்டு வெடிப்பு குறித்தும், இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் விசாரிக்க தமிழக அரசு கோகுலகிருஷ்ணன் கமிஷனை நியமித்தது. இதனால் எனது விசாரணையை பாதியில் நிறுத்திவிட்டேன்.

எனது விசாரணையின் போது சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் முரளி, ஏட்டுகள் செல்லப்பா உள்ளிட்ட யாரும் ஆஜராகவில்லை. எனவே, விசாரணையும் முழுமை பெறவில்லை என தெரிவித்தார்.

ஆனால், ஆர்;.டி.ஓ.விசாரணை அறிக்கை முழுமையாக தயாரிக்கப்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எப்படி முடியும்? எனவே, இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கோர்ட்டும் இதை கருத்தில் கொள்ளக் கூடாது.

பாபுலால் பில்டிங் சம்பவத்தின் போது பாத்ரூமில் 6 பேர் இறந்தபின் அங்கு ஆள் நடமாட்டம் இல்லை என தெரிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ஏட்டுகள் பச்சயப்பன், சிவசக்தி செல்வம் ஆகிய மூன்று பேர் மட்டும் மேலே சென்றுள்ளனர்.

இவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. இதை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரே குறுக்கு விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆனால் குற்றச்சாட்டில் சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் முரளியும், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கமும் இருந்துள்ளனர் என கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

சம்பவம் நடந்தது அதிகாலை 4.00 மணிக்கு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் இப்பகுதிக்கு அதிகாலை 4.45 மணிக்கு வந்துள்ளனர்.

ஆனால், முன்னரே நடந்த சம்பவத்தை நேரடியாக பார்த்ததாக இவர் சொல்லியுள்ளது பொய்.
தவிர பாபுலால் குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும், கீழக்கரை அப்பாஸ் உட்பட நான்கு பேரை கைது செய்ததாகவும், வெடிபொருட்களை கைப்பற்றியதாகவும், இன்ஸ்பெக்டர் முரளி முதல் தகவல் அறிக்கை தயாரித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர் சம்பவம் நடந்த சமயத்தில் திருமால் வீதிக்கே வரவில்லை என்பது எதிர்தரப்பு குற்றச்சாட்டு.

காரணம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பிப்.14-ம் தேதி இரவு ஒன்பது மணி முதல் அடுத்த நாள் காலை 10.30 மணி வரை ராஜேந்திரா டெக்ஸ்டைல், ராமர் கோயில் வீதி ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் இற்ந்தவர்களின் பிரேதங்களை அரசு மருத்துமனையில் சேர்ப்பித்து, பிரேத விசாரணை நடத்திக்கொண்டிருந்துள்ளார்.

இதை சக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பிரேத விசாரணை ஆவணங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இது எப்படி சாத்தியம்.

பாபுலால் பில்டிங் குண்டுவெடிப்புக்கு பிறகு அங்கிருந்த பாத்ரூமில் மறைந்திருந்த கீழக்கரை அப்பாஸ், செரீப் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யபட்டதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், எதிர் தரப்பு சாட்சியாக கோர்ட்டில் ஆஜரான முபாரக் தனது சாட்சியத்தில் 'குண்டு வெடிப்பு நடந்த பிப். 14-ம் தேதி இரவு 10 மணியளவில் கோட்டைமேட்டிலிலுந்து என்னை கைது செய்து பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே பலர் கைதாகி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் இன்று இரவு 11.15 மணிக்கு எங்களை சிங்காநல்லூர் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கு எங்களை போட்டோ எடுத்தனர். வீடியோ படமும் பிடித்தனர்' என தெரிவித்தார்.

இந்த வீடியோ போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அந்த வீடியோ எதிர்தரப்பினருக்கு போட்டுக் காட்டப்பட்டது. அதில் சாட்சி, சொன்ன முபாரக், கீழக்கரை அப்பாஸ், செரீப், சலாவுதீன், சர்தாஜ் ஆகியோர் இருந்தனர்.

இப்படி முன்பே கைது செய்து போலீஜ் பாதுகாப்பில் வைத்திருந்தவர்களை அடுத்த நாள் நடந்த பாபுலால் பில்டிங் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை நம்ப முடியவில்லை. போலீசார் வேண்டுமென்றே இவ்வழக்கை ஜோடித்துள்ளனர்.

எனவே, இவ்வழக்கு முற்றிலும் பொய்யானது என்பதை போலீசாரே ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டார்.


பாபுலால் பில்டிங் குண்டுவெடிப்பு போலீசாரின் 'செட்டப்'

கோவை நவம்பர் 18

இரவு முழுவதும் மருத்துவமனையில் பிரேத விசாரணையில் ஈடுபட்டவர், பாபுலால் பில்டிங் குண்டுவெடிப்பு சம்பவம், சப்-இன்ஸ்பெக்டர் மீது வெடிகுண்டு வீச்சு, பாத்ரூமில் மறைந்திருந்த நான்கு பேர் கைது ஆகிய நிகழ்வுகளை நேரடியாக பார்த்ததாக புகார் கூறி முதல் தகவல் அறிக்கையை இன்ஸ்பெக்டர் முரளி தயாரித்தது நம்பக்கூடியது அல்ல', என தனிக்கோர்ட்டில் எதிர்தரப்பு வக்கீல் வாதிட்டார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கின் எதிர்தரப்பு வாதம் நடந்து வருகிறது. இதில், நேற்று எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டதாவது:

திருமால் வீதி பாபுலால் பில்டிங் குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாக பெரிய கடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளியே புகார் கொடுத்து, சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ஏட்டு பச்சையப்பன் ஆகியோர் மீது குண்டு வீசயது. இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, பாபுலால் பில்டிங் பாத்ரூமில் பதுங்கியிருந்த நான்கு பேரை கைது செய்ததுஈ வெடி குண்டுகளை கைப்பற்றியது குறித்து முதல் தகவல் அறிக்கை தயாரித்து கையெழுத்தும் போட்டுள்ளார்.

ஆனால் எதிர்தரப்பு இதை கடுமையாக ஆட்சேபித்து, இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடத்திலேயே இல்லை. அவர் பிப்.14ம் தேதி இரவு 9.00 மணி முதல் அடுத்த நாள் காலை 10.00 மணி வரை கோவை அரசு மருத்துவமனையில் பிரேத விசாரணை மேற்கொண்டிருந்தார் என்பதை பிரேத விசாரணை ஆவணங்கள் மூலம் நிரூபித்துள்ளது.

இதற்கும் மேலாக கோர்ட்டில் சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்ததில் டி.எஸ்.பி.கள். வரதராஜன், ஜெயச்சந்தர போஸ் மற்றும் வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரி ராஜசேகர் ஆகியோர் இன்ஸ்பெக்டர் முரளி, பாபுலால் பில்டிங் குண்டுவெடிப்பின் போது இரவு மருத்துவமனையில் தான் இருந்தார் என தெரிவித்துள்ளனர். இந்த சாட்சிகள், ஆவணங்கள் மூலம் இன்ஸ்பெக்டர் முரளி தயாரித்த முதல் தகவல் அறிக்கை பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கீழக்கரை அப்பாஸை பிப்.20ம் தேதி பிஸ்மி நகருக்கு அநை;த்து சென்றதாக கூறியுள்ளனர். ஆனால் டி.எஸ்.பி.ஜெயச்சந்திரபோஸ் அளித்த சாட்சியத்தில், நியூ காலனிக்கு அழைத்து சென்றதாகவும், ஆனால் வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரி அளித்த சாட்சியத்தில் கீழக்கரை அப்பாஸ் தங்கியிருந்த வள்ளல் நகர் வீட்டில் இருந்து தான் வெடிப்பொருட்கள் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் முரண்பாடான பதில்களால் கீழக்கரை அப்பாஸ் தங்கியிருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டே பொய்யாகியுள்ளது.

இதே போன்றுகைது செய்யப்பட்ட சலாவுதீன் வீட்டில் இருந்த அரிவாள் கைப்பற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின்படி இவரை மானிய தோட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால், போலீசார் இவரை குனியமுத்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதே போன்று கைதான சர்தாஜ் வீட்டில் இருந்து கோடாரி, அரிவாள் ஆகியன கைப்பற்றபட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆயுதங்களை கைப்பற்றிய இடத்தை போலீசார் மாற்றியுள்ளனர்.

இதற்கு ஆதாரமாக ஐ.ஜி. பரம்வீர்சிங்கிடம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வீடியோ எடுத்து காட்டியுள்ளனர். ஆதில, கோடாரி, அரிவாள் ஆகியன இருந்துள்ளது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிப்.22ம் தேதி தான் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களது வீடுகளுக்கும் போலீசார் சென்றதாக குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதை வைத்து பார்க்கும் போது ஏற்கனவே தங்கள் வசமிருந்த ஆயுதங்களை வீடியோவில் எடுத்து, குறிப்பிட்ட குற்றவாளிகள் வீட்டில் கைப்பற்றியது என உயர் அதிகாரிகளை நம்பவைத்துள்ளனர். எனவே, பாபுலால் பில்டிங் குண்டுவெடிப்பு வழக்கும், இதில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், கைது நிகழ்ச்சி ஆகிய அனைத்தும் போலீசாரின் 'செட்டப்' என்பது நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறு எதிர்தரப்பு வக்கீல் அபூபக்கர் வாதிட்டார்.

இன்ஷா அல்லாஹ்... தொடரும்.

செய்தி தொகுப்பு : கோவை தங்கப்பா

No comments: