சமரசம் நகரின் ஒரு பகுதி
சென்னை : சுனாமி என்ற கடல் சீற்றத்தின் போது வீடு வாசல்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) இலன்டனில் உள்ள இஸ்லாமிய உதவி (ISLAMIC AID) என்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் நாகூரில் உள்ள தெத்தி கிராமத்தில் சுமார் 100 புதிய வீடுகளை இப்பாதிக்கப் பட்ட ஏழை மக்களுக்காக கட்டியுள்ளனர். மற்றுமு் கட்டப்பட்ட அந்த 100 வீடுகள் அடங்கிய அந்தப் பகுதிக்கு "சமரசம் நகர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் நோக்குடன் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) இலன்டனில் உள்ள இஸ்லாமிய உதவி (ISLAMIC AID) என்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த "சமரசம் நகர்" திறப்பு விழாவும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வீடுகளை வழங்கும் விழாவும் வரும் வியாழக்கிழமை (09/11/2006) அன்று நடைபெற உள்ளது. அந்த விழாவிற்கு வருகை தறுமாறு அனைவரையும் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) அழைத்து அழைப்பிதழ் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT)
சென்னை, தமிழ்நாடு
நாகூரி்ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெத்தி கிராமத்தில் (சமரசம் நகர்) 100 புதிய வீடுகளை முஸ்லிம் எய்டு இலன்டன் (MUSLIM AID - UK) நிதி உதவியுடன் கட்டியுள்ளோம். அதன் திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் : 09.11.2006 நேரம்: காலை 10.30 மணி
இடம் : G.S.பிள்ளை பொறியியல் கல்லூரி, தெத்தி கிராமம், நாகூர், நாகை மாவட்டம்
தலைமையுரை :
ஜனாப். ஹெச். அப்துல் ரகீப்
தலைவர் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) சென்னை
துவக்கவுரை :
டாக்டர். அப்துல் ஹக் அன்சாரி
தலைவர் ஹியுமன் வெல்ஃபேர் டிரஸ்ட்ட, புது தில்லி
தலைவர் இஸ்லாமிய அகாதமி, புது தில்லி
சிறப்பு விருந்தினர் :
ஜனாப். இபுறாஹிம்சா முஹம்மத்
ஆலோசகர் முஸ்லிம் எய்டு டிரஸ்ட் UK
முன்னிலை & சிறப்புரை :
திரு ஏ.கே.எஸ் விஜயன் பாராளுமன்ற உறுப்பினர், நாகை
திரு. வி. மாரிமுத்து சட்டமன்ற உறுப்பினர், நாகை
திரு தென்காசி சு. ஜவஹர் IAS மாவட்ட ஆட்சித் தலைவர், நாகை
ஜனாப் அம்ஜத் சலீம் இயக்குனர் முஸ்லிம் எய்டு, இலங்கை
செல்வி. ஆனி ஜார்ஜ் முதன்மை நிர்வாக அலுவலர் NCBC
ஜனாப் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மத் துனைத் தலைவர்,இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT)
வாழ்த்துரை :
ஜனாப் : எம்.ஜி.கே நிஜாமுதீன் Ex. MLA
தலைவர் நாகூர் முஸ்லிம் ஜமாத்
ஜனாப் முகம்மது யூனூஸ்
தலைவர் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பரங்கிப்பேட்டை
பஞ்சாயத்து தலைவர் பரங்கிப்பேட்டை
திரு ஜி.எஸ் பிள்ளை
நிறுவனர் G.S.பிள்ளை பொறியியல் கல்லூரி
ஜனாப் எம். அப்துர் ரஹிம் படேல்
மஜ்லிஸ் இஸ்லாஹ் வ தஸ்லிம் பட்கல்
ஜனாப் எம் முகம்மது கலிபா சாஹிபு காதிரி
நாகூர் தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி
திரு சுந்தர மூர்த்தி
பஞ்சாயத்து தலைவர், தெத்தி கிராமம்
நன்றியுரை :
ஜனாப் ஷப்பீர் அஹ்மத்
பொதுச் செயலாளர் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT), சென்னை
No comments:
Post a Comment