Monday, November 06, 2006

நடுநிலையாளர்கள் எழுப்பும் கேள்விகள்

நடுநிலையாளர்கள் எழுப்பும் கேள்விகள்


இஸ்லாத்தின் மிகமுக்கிய அடிப்படை விஷயங்களில் கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள சகோதரர் பி.ஜே அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் உள்ள அறிஞர்களும் தங்களது மறுப்புக்ளைப் பதிவு செய்துள்ள நிலையில் இன்னும் அவரது கருத்துக்களைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு தூக்கம் நடித்துக் கொண்டிருக்கும் சகோதரர்களே! அல்லாஹ்வை அஞ்சி நடுநிலையாகச் சிந்தித்து பின்வரும் கேள்விகளுக்குவிடையளியுங்கள்

சஹாபாக்களைப் பின்பற்றுவது தவறு. இதனைத்தான் நாங்கள் 20 வருடமாகச் சொல்லிவருகின்றோம் என்று வாதிடும் மூதறிஞர் பி.ஜே அவர்களும் அவரது இளம் மாணவர்களும் திருக்குர்ஆனையும் நபிவழியையும் ஸஹாபாக்களின் ஜமாஅத்தையும் பின்பற்றுவதுதான் அஹ்லு சுன்னத் வல் ஜமாஅத், அதுவே வெற்றிபெற்ற கூட்டம் என்ற பி.ஜே யின் கடந்த கால உரையைப் பற்றி என்ன கருத்து கூறுகின்றீர்கள்?

ஸஹாபாக்களை நாங்கள் இகழவில்லை என்ற பி.ஜே மற்றும் ததஜ வினரின் கூற்று உண்மையானால் 2005 செப்டம்பர் ஏகத்துவம் இதழில் சுவனம் கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட நபித்தோழர்கள் சிலரது தவறுகளை விமர்சித்தபின் அதற்குச் சான்றாக அவர்கள் இடப்பக்கமாகக் நரகத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அவர்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்கள் என்றும் சம்மந்தம் இல்லாத ஹதீஸை அவர்களுக்குப் பொருத்தியது ஏன்? அது அவர்களுக்குப் பொருந்தாது எனில் அவர்கள் பற்றி
நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டின் உண்மை நிலை என்ன? அவர்கள் மார்க்கத்தை மாற்றவில்லை என்பதுதானே? அதோடு மட்டுமன்றி நாம் கூட செய்யாத தவறை நபித்தோழர்கள் செய்தார்கள் என்று திருவனந்தபுரத்தில் சகோதரர் பி.ஜே ஆற்றிய உரை குறித்து என்ன கருதுகின்றீர்கள்?

பி.ஜே.யின் மார்க்க ரீதியான கருத்துக்களை விமர்சிப்பவர்களுக்கு இயக்க சாயம் பூசும் நீங்கள் அவர் குறித்து தமது மறுப்புக்களைப் பதிவு செய்திருக்கும் தமிழ்நாட்டைச் சாராத மூத்த அறிஞர்களைக் குறித்து என்ன கருதுகின்றீர்கள்? குறிப்பாக சவூதி அரேபியாவின் தலைமை முஃப்தி ஆலு ஷெய்க் அவர்கள் ஜாக் என்று கூறப்போகின்றீர்களா? அல்லது தமுமுக ஆதரவாளர் என்று கூறப்போகின்றீர்களா? ஸக்காத் பொருளைத் தூய்மைப்படுத்துகின்றது என்ற வாதத்தை நிலை நாட்ட ஒரு ஹதீஸின் ஒரு
எழுத்தை இருட்டடிப்பு செய்து பொருளையும் மாற்றிக் கூறியது அம்பலப்படுத்தப்பட்டதும் அது வார்த்தைப் பிசகு என்று சப்பைக் கட்டினீர்கள். வார்த்தைகள் பிசகலாம், எழுதும் போது எழுத்தும் பிசகலாம். நீண்ட யோசனைக்குப் பிறகு பேச்சில் எழுத்துப் பிசகுமா? என்பது சிந்தனையாளர்களின் கேள்வி. துதஹ்ஹிறுக என்பது துதஹ்ஹிறு என்று கூறியபோது பொருளும் மாற்றித்தானே கூறப்பட்டது? இரண்டுமே பிசகிவிட்டதா? சரி. அவ்வாறு பிசகிவிட்டது என்று ஏற்றுக் கொண்டாலும் ஸக்காத் ஒருமுறை மட்டும் போதும் என்ற வாதத்தை நிலைநாட்ட நீங்கள் எடுத்து வைத்த பொருளைத் தூய்மைப் படுத்துகின்றது என்ற வாதமும் தகர்ந்து விட்டதே?

அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் முதல் வானத்தில் இறங்குகின்றான் என்பதை அறிவியல் காரணங்களைக் கூறி நிராகரிக்கின்றார் பி.ஜே எந்நேரமும் ஏதாவதொரு இடத்தில் தஹஜ்ஜது நேரம் இருக்கும். எனவே அல்லாஹ் இறங்குகின்றான் என்பதை இறங்குகின்றான் என்று புரிந்து கொள்ளக் கூடாது என்று கூறியதன் மூலம் 1000 வருடக் கணக்கு கூறிய அல்லாஹ்வை 24 மணிநேர வட்டத்துக்குள் சுருக்கி மனிதர்கள்
ஒரிடத்தை விட்டு வேறொரு இடம் சென்றால் இருந்த இடம் காலியாவதைப்போல் அல்லாஹ் இறங்கிவிட்டால் அர்ஷ் காலியாகிவிடும் என்று அல்லாஹ்வை மனிதனின் தரத்துக்கு இறக்கி அவனை இயலாதவனாக்குகின்றார். நமது கேள்வி. அவ்வாறாயின் இதனை நபித்தோழர்கள் எவ்வாறு புரிந்துகொண்டனர்? அவர்களுக்கு அறிவியல் தெரியாது. இந்த காலத்தில் நாம் இவ்வாறுதான் புரிந்து கொள்ளவேண்டும் என்பது உங்கள் பதிலாக இருக்குமாயின், எமது அடுத்த கேள்வி. நபி (ஸல்) அவர்கள் இதனை எவ்வாறு புரிந்து கொண்டார்கள்? அவர்களுக்கும் அறிவியல் தெரியாது என்றால் அவர்கள் புரிந்து கொண்டதும் தவறு என்று கூறப்போகின்றீர்களா? (நாம் இத்தகைய கூற்றைவிட்டும் அல்லாஹ்விடம் சரணடைகின்றோம்)

இக்கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். அல்லது உங்கள் மூதறிஞரிடம் கேட்டுச் செப்புங்கள்


கேள்விகள் இன்ஷா அல்லாஹ் தொடரும்

தொகுப்பு: தேங்கை முனீப்
பஹ்ரைன் email. muneebtpm@gmail.com

No comments: