Sunday, November 26, 2006

ததஜவினருக்கு உளறுவாயனின் அறிவுரை?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

உ.உ.கூ.உமருக்கும் உண்மைக்கும் என்றுமே தொடர்பு இருந்ததில்லை என்பதும், உளறிக் கொட்டி கிளறி மூடும் திருப்பணியைத் தவிர வேறொன்றும் அறியாத அறிவிலி என்பதும் அனைவரும் அறிந்த ரகசியம்.

அதனை மீண்டும், மீண்டும் மெய்ப்பிப்பதற்காக பெரு முயற்சி எடுத்து தனது கிரிமினல் தலைவனின் ஆலோசனைப்படி ஃபோர்ஜரிக்குள் புகுந்தவர், விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் திணறி உரைநடையிலிருந்து உரையாடலுக்குத் தாவி அதிலும் விழி பிதுங்கி நிற்கிறார். பாவம்.

RegistrationReferenceஎன அவசரப்பட்டு எழுதியதோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படையிலேயே மற்றவர்களை, ததஜ சுன்னத்தை பின்பற்றி குதறி எடுத்திருந்தார்.

இதனை நாமும் மற்றவர்களும் தவறு என சுட்டிக்காட்டி இருந்தோம்.
தவறை தவறு என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாத தலைவனால் வழிநடத்தப்படும் காரணத்தால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என புலம்பியுள்ளார்.

இவரது
Reg Vs Refசந்தேகத்தைப் போக்க, முகவைத்தமிழன் தான் வெளியிட்டிருந்த ஷரீஅத் தீர்ப்பாய கடிதத்தில் இடம் பெற்றிருந்த Reg : 333/2003 என்பதனை வட்டமிட்டு காட்டியிருந்தார். மாறாக உளறல் உமரின் பினாமி நபிதரசன் (உளறல் உமரே ஒரு பினாமி. நபிதரசன் அவருக்கு பினாமியா?) வெளியிட்ட நகலில் Reg 333/200 என இடம் பெற்றிருந்ததால் அது வேறு இது வேறு என அவர் வாதிடவில்லை.

நாமும் கூட நமது முந்தய பதிவில் இதனை சுட்டிக்காட்டி,FAX செய்த சகோதரர்கள் ஒழுங்காக செய்திருந்தால் இதிலும் அதே எண்ணை கண்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டு இருந்தோம்.

ஆக இந்த எண்ணை வைத்துக் கொண்டு வழக்காடியது உளறல் உமர் மட்டுமே. நாம் சுட்டிக்காட்டியதெல்லாம் Reg என்பது வேறுRef என்பது வேறு என்பதனைத் தான். இந்த விபரம் கூட புரியாத அவசர குடுக்கைகளை இன்னமும் தறுதலை ஜமாத் தங்களது பினாமிகளாக வைத்துக் கொள்ளப் போகிறதா என்றும் கேட்டிருந்தோம்.

இதுவரை பதிலில்லை. பதில் வராது என்பது திண்ணம். கற்பனை கலந்து கதைவிட்ட தீன் முஹம்மது என்ற பினாமியை பினவலித்துக் கொண்டது போல் உளறுவாயனையும் நிறுத்த முடியாத இக்கட்டான் சூழல். அதனால் தான் முழுக ஆரம்பித்த பின் சாண் என்ன முழம் என்ன என அடுக்கடுக்காக அவதூறுகளையும் அபாண்டங்களையும் அள்ளி வீச ஆரம்பித்துள்ளார்.

தன்னை நோக்கி வைக்கப்படும் கேள்விகளுக்கு முறையான பதிலளிக்காமல் மற்றவர்கள் மேல் புழதி வாரித் தூற்றுவதும், அந்தப் புழுதி அடங்குவதற்குள் வேறு ஒன்றில் ஓடிப் போய் பதுங்கிக் கொள்வதும்
BJP மற்றும்PJ Party யினரின் வாடிக்கை.

அந்த சுன்னத்தை பின்பற்றி தமுமுக மீது தறி கெட்டு கூச்சலிடுகின்றார்.
இப்பொழுது முளை மழுங்கி விட்ட மூதறிஞர் (?) பிஜே, தமுமுகவிலிருந்த காலத்தில் வாளி தூக்கி நாங்கள் வசூலித்த பணத்தை, செல்வத்தை, சொத்துக்களை ஏமாற்றி திருடிச் சென்ற கயவர் கூட்டமான ததஜ, அன்றும் இன்றும் சாமானியர்களின் தியாகத்தால் சமுதாயப்பணி செய்து அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வரும் தமுமுகவைப் பார்த்து குரைக்கிறது. சூரியனைப் பார்த்து எதுவோ குரைத்தது போல.

போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் சரணடைந்த தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜே என குறிப்பிட்டிருந்தோம்.

உளறுவாயனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது.
ஒன்று கவனிக்க வேண்டும், தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவை அவரது நிகழ்கால எதார்த்த நிலையைச் சொன்னால், யாராவது சுட்டிக்காட்டினால் உளறுவாயனுக்கு பொறுக்காது. அதனடிப்படையில் பொங்கி (அசடு) வழிந்துள்ளார்.

சந்திப்பு நடந்தது கோட்டையில் தான், தோட்டத்தில் அல்ல - எனவே முதல்வர் என்று தான் குறிப்பிட வேண்டும். பொன்மகள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என கூறுகிறார்.

சந்திப்பு நடந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக பொறுப்பு வகித்ததால் அவரை கோட்டையில் மட்டுமல்ல, தோட்டத்திலோ அல்லது ட்ராபிக் சிக்னலிலோ சந்தித்தாலும் அவர் அன்று முதல்வர் தான். எனவே முதல்வருடனான சந்திப்பு என்று தான் கூற வேண்டும். ஆனால் பெட்டி வாங்கிக் கொண்டு அவரது டாய்லெட் பேப்பர் ஆணையத்தை தலை மேல் தூக்கி வைத்து காவடி ஆடியது குறித்துத் தான், நாம் போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் சரணடைந்தார் எனக் கூறினோம்.

பணம் கொடுத்த ஜெயலலிதா முதல்வர் என்ற முறையில் கொடுக்க வில்லை. பணம் வாங்கி பிஜே, ஜெயலலிதா முதல்வர் என எண்ணி வாங்கவில்லை. மாறாக, ஜெயலலிதாவை, தான் சமுதாயத்தை கூறு போட்டதற்காக படி அளக்கும் பத்தினி (?) என்று எண்ணியே வாங்கிக் கொண்டார். இதனை சமுதாய மக்களிடம் மறைப்பதற்காகவே நாங்கள் தோட்டத்தில் சந்திக்க வில்லை. கோட்டையில் தான் சந்தித்தோம். எனவே பண பட்டுவாடாவிற்கு சாத்தியமில்லை என சப்பை கட்டு கட்டுகிறார்.

தோட்டத்தில் வைத்து கொடுப்பதற்கு ஜெயலலிதாவோ, தனது கட்சி ஆஃபீஸ் அல்லது வீட்டில் வைத்து வாங்குவதற்கு கிரிமினல் பிஜேவோ உளறுவாய் உமர் அளவிற்கு முட்டாள்களில்லை.

வாங்கிக் கொண்ட விசுவாசத்திற்காகவே, அப்ஸல் குரு விசாரணை நடுநிலையாக நடைபெறவில்லை. எனவே அப்ஸல் குருவை தூக்கிலிடக் கூடாது என நாடே எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் வேளையில்,
BJP மற்றும்ADMK வைப் பின்பற்றி அப்ஸல் குருவிற்கு ஆதரவாக எழுதக் கூட மனம் வராமல் முரண்டு பிடித்து வருகிறார்.

இதுவெல்லாம் உளறுவாயனுக்கு தன்னாலும் புரியாது. சொன்னாலும் விளங்காது.

அடுத்ததாக முபாஹலா சம்பந்தமாகவும் முடிந்தவரை குழப்பியுள்ளார்.

கிரிமினல் தலைவன் பிஜே வளைகுடா விசிட்டின் போதே தனது கைத்தடி தொண்டியப்பாவை வைத்து நாடகமாடி இங்கிருந்து ஓடிப்போனார். என்றாலும் இலாஹி இந்தியா சென்ற போது வேறு வழியில்லாமல் தனது விசிலடிச்சான் தக்லீதுகளை சமாதாப்படுத்த மேலப்பாளையத்தில் முபாஹலா ஒப்பந்தம் தயாரா என முரசறைந்து பார்த்தார்.

ஒப்பந்தம் என்ன வெங்காய ஒப்பந்தம். முபாஹலாவிற்கே நான் ரெடி நீ ரெடியா என இலாஹி பதிலளித்ததும் வெலவெலத்துப் போய் மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் நோக்குடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தங்களது ரமளான் சிறப்பு பொதுக் கூட்டத்தில் இலாஹி வந்து இடையூறு செய்யலாம் என தாங்கள் அஞ்சுவதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, இலாஹி அந்த பக்கமே வராமல் தடுக்க வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு என பொறுப்பாக புகார் செய்தார்.

இவ்வளவையும் செய்து விட்டு, தனது விசிலடிச்சான் தக்லீதுகளிடம் பார்த்தீர்களா இலாஹி பயந்து விட்டார். தென்காசிக்கு ஓடிவிட்டார். எனவே, அறிந்து கொள்ளுங்கள் நான் சொல்வது மாத்திரம் உண்மை என் அறிவிப்பு செய்தார். ரசிகர் கூட்டம் ஏமாந்தது. இலாஹி காவல் துறையினரிடம் தறுதலை ஜமாஅத் எழுதிக் கொடுத்த புகார் முதற்கொண்டு அனைத்தையும் வெளியிட்ட பின் சமுதாயத்திற்கு உண்மை விளங்கியது.

ஆனால் இந்த உளறுவாயனுக்கு அவ்விஷயம் இன்னமும் விளங்கவில்லை போலிருக்கிறது. அதனால் தான் முபாஹலா மொந்தையில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டுள்ளார்.

நாம் அடிக்கடி குறிப்பிடுவது போல், இந்த உளறுவாயன் சமயத்தில் எதிராளியை குறிப்பிடுகிறாரா அல்லது தனது தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவை குறிப்பிடுகிறாரா என்று சந்தேகப்படும்படி எழுதுவதில் கில்லாடியாக்கும்.

அதேபோல் மீண்டும் மீண்டும் சுனாமி பற்றி எழுதி வருகிறார். அத்தோடு, சுனாமியில் அமுக்கிக் கொண்டதை இப்பொழுதே பங்கிட்டு வழங்க தொண்டர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அறிந்த வரை சுனாமி நிதியை (ததஜவினரைத் தவிர வேறு எவரும்) தமது சொந்த கட்சியின் வளர்ச்சிக்காகவும், விளம்பரத்திற்காகவும், நஷ்டமடைந்து வரும் களவாடிய பத்திரிக்கைக்காக ததஜ செலவிட்டதைப் போலவும் ததஜவினரைத் தவிர வேறு எந்த அமைப்பினரும் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.

எனவே, உளறுவாய் உமரின் வேண்டுகோளின் படி, தனது சுய இலாபத்திற்காக ததஜ அமுக்கிக் கொண்ட சுனாமி நிதியை உடனே தாமதமின்றி பங்கிட்டு வழங்க வேண்டுமென ததஜ அடிவருடிகள் அனைவரும் தமது தலைமைக்கு அறிவுறுத்துவார்களாக.

அத்தோடு, தமுமுகவிலிருந்து அமுக்கிக் கொண்ட சொத்துக்களையும் திரும்ப ஒப்படைத்து மன்னிப்பு கோரி மடல் எழுதுவார்களாக.

உளறுவாய் உமரின் கோரிக்கைக்கு தக்லீது ததஜவினர் என்ன பதில் தருகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

அத்தோடு, நீக்கப்பட்ட நிர்வாகி என முகவைத்தமிழன் எழுதியதை வைத்துக் கொண்டு அப்துர்ரஹ்மான் தான் அந்த நிர்வாகி என உளறுவாய் முடிவு செய்துள்ளார்.
இதுவரை ததஜவிலிருந்து விலக்கப்பட்டோ அல்லது விலகியோ உள்ளவர் அப்துர்ரஹ்மான் ஒருவர் மட்டுமே என உளறுவாய் எண்ணிக் கொண்டார் போலும்.

தறுதலை ஜமாஅத்தின் தவ்ஹீத் நாடகம் தக்லீதாகிப் போனதால் மக்கள் சாரிசாரியாக, கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் தான் உள்ளனர். அவர்களில் பல கிளைகளின் நிர்வாக பொறுப்பிலிருந்தவர்களும் அடங்குவர். தமிழகத்தில் மட்டுமல்லாது தம்மாம், கோபர், மக்கா, ஜித்தா, யான்பு என சவுதியின் பல பகுதிகளிலும் வெளியேறி உள்ளனர். ஏன் சமீபத்தில் குவைத்தில் கூட கூண்டோடு நிர்வாகிகள் மாற்றம் நடந்ததே.

அது தவிர, மக்கா, ரியாத் கடிதங்களை முகவைத்தமிழன் வெளியிட்டதற்கு யாரை குற்றம் சாட்டப் போகிறார்கள். மவ்லவி பஷீரையா, அல்லது உலவியையா அல்லது ஆடுதுறை ஃபைஸலையா?

நாமறிந்த வரை அப்துர்ரஹ்மான் என்ற ஒருவரது பெயர் சந்திக்கு இழுக்கப்பட்டு பின்னப்படுகிறதென்றால், விலகிவிட்ட மற்ற நிர்வாகிகளுக்கு மறைமுகமாக எச்சரிப்பதற்காகத் தான்.

இதுவரை தன்னை கேள்வி கேட்பவர்கள் மேல் பொருளாதார மற்றும் பாலியல் குற்றச் சாட்டுகளையே சொல்லி வந்த கிரிமினல் தலைவன் பிஜே, தற்சமயம் ஃபோர்ஜரி என புதுக்காரணம் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

இறைவனை மட்டுமே அஞ்சக்கூடியவர்கள், எந்த கிரிமினலின் சூழ்ச்சிக்கும் பயப்படாமல் துணிந்து உண்மையைக் கூற முன்வருவார்கள். அவ்வாறு துணியாதவர்கள் ததஜவிலேயே தக்லீது செய்து கொண்டு உலக இலாபங்களை பெற்றுக் கொள்வார்கள்.

ஒவ்வொருவரும் ஆலொசிக்க வேண்டிய நேரம் இது.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 26.11.2006


No comments: