Tuesday, November 28, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 11

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய் சவுக்கியமா.

சவுக்கியந்தான். என்ன அஹமது ரொம்ப சுறுசுறுப்பா இருக்கிற மாதிரி தெரியுது.

ஆமாமா. ஒங்கள்ட்ட ஒரு சேதி கேக்குறதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அதுதான்.

ம். கேளுங்க. என்ன சந்தேகம் ஒங்களுக்கு.

அது வேற ஒண்ணுமில்ல. நீங்க ஏன் இப்போ முல்லாவோட பாணிய காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டீங்க.

ஓ அதுவா. இதுதானா ஒங்களோட பெரிய சந்தேகம். இது நம்ம தலைவரோட பாணி தானே. எங்கயாவது ஒரு பாணிக்கு மக்களோட வரவேற்பு கெடச்சுதுன்னா ஒடனே அதுக்கு மாறிக்க வேண்டியது தானே.

அது சரிதான். ஆனா எல்லோருக்கும் மறந்து போய்ட்ட இலாஹி மேட்டர்லாம் ஏன் எழுதுனீங்க ஒமர். அத வச்சே தமுமுக காரன் போஸ்ட்டிங் போடட்டும்னு விஷயத்த எடுத்துக் குடுக்குறீங்களோ.

அப்டிலாம் ஒண்ணுமில்ல. சும்மா வாசகர்களோட கவனத்த தெச திருப்புறதுக்காக மாத்தி மாத்தி எளுதப் போக, அதேயே புடிச்சுக்கிட்டு திரும்ப அடிக்கிறானுக. அதுதான் என்ன செய்றதுன்னு தெரியாம முளிக்கிறேன்.

ஏன் சலிச்சுக்கிறீங்க. நம்மளோட தொண்டர்கள் (குண்டர்கள்?) சோந்து போயிடக் கூடாதுன்னு, கவனமா தொடர்ச்சியா தமுமுக மேல அபாண்டமான பொய்கள சேர்த்து சேர்த்து எளுதிக்கிட்டுத்தான வர்றீங்க.

உண்மைதான் அஹமது. ஆனா நாம என்ன எளுதுனாலும் நம்புறதுக்கு ஆளுக இப்போ கொறஞ்சு போயிட்டாங்களே.

ஆமா pjvstmmk ன்னு தானே ஒரு ஸைட்டு இருக்கு, ஆனா நீங்க டிஎம்எம்கேவும் பிஜேவும்னு எளுதியிருக்கிங்க. அப்புடி எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே மாத்தி எளுதுனா, பிறகு எப்புடி மக்கள் அந்த ஸைட்டுல தான் முதல்ல அவதூறு வந்துச்சுன்னு நீங்க சொல்றத நம்புவாங்க.

கரெக்ட் தான் அஹமது. நம்ம தலைவரு தமுமுகவுலயிருந்து ஓடி வந்ததோட ஆலந்தூர்ல வச்சுத்தான் அவதூறு பிரச்சாரத்த ஆரம்புச்சு வெச்சாரு. அத்தோட களவாடிக்கிட்டு வந்த பத்திரிக்கையிலயும் கண்டமேனிக்கு எளுதுனாரு. அதுக்கப்புறமா தான் யாரோ இப்புடி ஒரு ஸைட்டு ஆரம்புச்சாங்க. இது எல்லோருக்கும் தெரியும் தான். ஒருவேளை யாராச்சும் மறந்திருக்கலாம்ல. தவிர, இப்போ நம்மள்ட்ட இருக்கிற ஆளுங்களுக்கு பழய சங்கதியெல்லாம் தெரியாது தான. அதுதான் அவுத்துவுட்டேன்.

ஓ! அப்போ, தமுமுகவுக்கு லெட்ச லெட்சமா பணம் வருதுன்னும், முபாஹலா பத்தியும் சொன்னதும் இதே ரகம் தானா.

ஆமா. அத்தோட நம்ம தலவரு கச்சி ஆரம்புச்சு மூணு வருஷம் முடியுறதுக்கு முன்னால எவ்வளவு சொத்து வாங்கிட்டோம். அத எவனும் கேள்வி கேக்காம இருக்கணும்னா, இப்புடி தமுமுகவ பத்தி இல்லாததையும், பொல்லாததையும் எளுதி வைக்கனும்ல.

அதுசரி. நல்ல பாலிஸிதான். ஆனா ஒங்க மெயில் படிக்கும் போது எனக்குத்தான் பக்கு பக்குங்குது.

ஏங்க அஹமது.

பின்ன என்னங்க! சும்ம சும்ம சுனாமியபத்தி எளுதுறீங்க. சுனாமில சுருட்டுன ஒரே இஸ்லாமிய இயக்கம்னு நம்மள முழு தமிழக முஸ்லிம்கள் தெரிந்து வச்சிருக்குற நெலமைல, நீங்க எளுதுறது நமக்கு எதிராகத் தானே போயி முடியும்.

அப்டியெல்லாம் பயப்படாதீங்க. நாம எளுதுறது நம்மளோட இருக்குற கொஞ்சம் பேரும் ஓடிடக் கூடாதுங்குறதுக்காகத் தான் அப்டியெல்லாம் எளுதுறேன்.

அதுசரி. கும்பகோணத்துல ஒரு இலட்சம் பேர்தான் கூடுனாங்கன்னு அந்த அம்மா முன்னால நம்ம தலவரே சொன்னதுக்குப் பெறகு எப்படி 10 இலட்சம்னு நாம சொல்ல முடியும்.

அஹமது.. .. .. 29 ஜனவரி 2006 நாள் முடிவதற்கு முன்னாலேயே நம்ம ஆளுங்க, மூலமா 12,15,18 இலட்சம்னு கத வுட்டாச்சு. ஆனா உண்மைல வந்தது 1 இலட்சத்துக்கு கொறவுதான்னு வெளங்கிப் போச்சு. அதுக்காக சும்மா வுட்டுட முடியுமா. தமுமுகவுலயிருந்து விலகுன அன்னையில இருந்து கடப்புடிச்சு வரக்கூடிய X10 ங்கிற கணக்குல ஒன்னை பத்தால பெருக்கி சொல்லிட்டோம்.

ஓ! தமுமுகவுல இருந்து வந்தப்போ நம்ம தலவரு 90 சதவிகிதம் மக்கள் என்னோட வந்துட்டாங்கன்னு சொன்னாரே. அப்ப அது உண்மையிலே 9 சதவிகிதம் தானா.

இதுல ஒங்களுக்கு இவ்வளவு நாளைக்கு பிறகு சந்தேகம் வந்ததா. சரிதான் போங்கள். அன்னையிலருந்து எந்த ஒண்ணையும் பத்தால பெருக்கித்தான் சொல்லிக்கிட்டு வர்றோம். அதுனால கொளம்பிக்காதீங்க.

ரொம்ப நன்றிங்க. அப்போ பிறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 28.11.2006

No comments: