தொழுகை பள்ளியை தீவைத்து எரித்த ததஜ?
ததஜ வின் சுய நலமற்ற பரிசுத்தமான உன்னத ஏகத்துவ சேவை
மதுரையில் வில்லாபுரம் ஹவுசிங்போர்ட் காலனியில் ஈதுல் ஃபித்ர் ஈகைத்திருநாளை முன்னிட்டு பெருநாள் தொழுகை வைப்பதற்காக வேண்டி தமுமுக , ததஜ என்ற இரண்டு அமைப்புக்களும் அனுமதி கேட்டு காவல' துறையில் வின்னப்பித்திருந்தனர். ஜெயலலிதாவின் ஆதரவோடு சென்ற வருடம் பெருநாள் தொழுகையை ததஜவினர் கொடியையும் தோரனத்தையும் கட்டி அரசியல் மேடை போன்று ஆக்கி அதில் ததஜ வின் அசரப்தீன் பிர்தௌசி என்ற அயோக்கியரை கொண்டு ஏகத்துவம் என்ற பெயரில் அரசியல் பேச வைத்ததாலும் எரிச்சலுற்றிருந்த அபபகுதி மக்கள் இம்முறை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அங்கு தொழுகை நடத்தி வரும் தமுமுக வினருக்கு ஆதரவளித்ததாலும் முன்னுரிமை அடிப்படையிலும் தமுமுக வின் மனுவை பரிசீலித்த காவல்துறையினர் தமுமுக வினர் அங்கு தொழுகை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். இதை எதிர்த்து ததஜ வினர் பிரச்சினை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இது சம்பந்தமாக திருப்புவனம் டி.எஸ்.பி கனேசன் அவர்கள் விசாரனைக்கு இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசியுள்ளார் இதில் இறுதியாக நடுநிலையாளராக ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜா ஹசன் அப்பாஸ் அவர்களை ஏற்றுக்கொள்வது எனவும் அவர் மூலம் அமைதி கான்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆக டி.எஸ்.பி கனேசன் அவர்கள் இரு தரப்பாரையும் கை;கிய ஜமாத் தலைவர் ஆகியோரையும் வைத்து அமைதி கூட்டம் போடுவதற்கு மறுநாள் வரச் சொல்லியுள்ளார்.
மறுநாள் திங்கள் கிழமை (23-10-2006) திருப்புவனம் டி.எஸ்பி ஆபிசில் ஐக்கிய ஜமாத் தலைவர் மற்றும் தமுமுக நிர்வாகிகளும் வந்துவிட மதியம் வரை ததஜ வினர் வரவில்லை பொறுமையிழந்த டி.எஸ்.பி கனேசன் அவர்கள் ததஜ வினருக்கு போன் செய்து கடுமையாக சாடியதால் அவசரமாக வந்தவர்கள் இருதரப்பினரிடமும் நடுநிலையாக ஐக்கிய ஜமாத் தலைவரை வைத்து பேச்சு வார்த்தை நடத்திய டி.எஸ்.பி கனேசன் அவர்கள் ஐக்கிய ஜமாத் தலைவர் அவர்களின் முடிவான இரு தரப்பாரும் அங்கு தொழவைக்காமல் அந்தபகுதி வில்லாபுரம் ஹவுசிங் போர்ட் பள்ளி இமாம் அங்கு தொழ வைப்பார் இருதரப்பாரும் அங்கு தொழுது கொள்ளவும் என்ற முடிவுக்கு வந்து அதற்கு தமுமுக வினர் ஆதரவளித்தனர். ஆனால் அந்த முடிவுக்கு ததஜவினர் சம்மதிக்காமல் பிரச்சினை செய்ததால் கோபமான டி.எஸ்.பி கனேசன் அவர்கள் இருவருமே அங்கு தொழ வைக்க கூடாது என்று உத்தரவிட்டு விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் கோபமாக கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் வெளியேறிய ததஜவின் நிர்வாகிகளான பறக்கும் படை காதர் (எ) கமாலுத்தீன், இந்தியன் கலீல், ரஃபீக் மற்றும் முத்து ரஹ்மான் என்போர் அதே காரில் இன்னும் இருவரையும் அழைத்து கொண்டு வில்லாபுரம் சென்று அங்கு எந்த இமாமை பின்தொடாந்து தொழ மாட்டோம் என்று கூறினார்களோ அந்த இமாம் தொழ வைக்கும் பள்ளியில் சென்று தொழுவது போல் நோட்டம் பார்த்து பின்னர் திடீரென அங்கு பெருநாள் தொழ வைப்பதற்காக தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்த தொழுகைப்பள்ளிக்கு தீவைத்து விட்டு அந்த கருப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில் வந்த மேற்கூறிய ததஜ நிர்வாகிகள் தப்பி சென்றுள்ளனர்.
அப்போது அந்த பகுதியின் தமுமுக வின் வர்த்தக அணி நிர்வாகி நூருல் ஹக் என்பவர் பெருநாள் தொழுகை பள்ளிக்கு ததஜ வினர் தீவைத்து விட்டதை அறிந்து உடனடியாக அப்பகுதி மக்களை அழைத்து தீயை அனைத்துள்ளனர் இருந்த போதிலும் ஒரு பகுதி எரிந்து விட்டது.
தங்களுக்கு அனுமதி வழங்காததால் அங்கு யாரையும் தொழ வைக்க கூடாது என்ற வெறியில் ததஜ வின் தக்லீத் கூட்டத்தினர் தீவைத்து விட்டதாக அப்பகுதி மக்கள் கருத்து தெறிவிக்கின்றனர். ததஜவின் நிர்வாகிகள் பள்ளிக்கு தீவைத்ததை நேரில் பார்த்த சாட்சிகள் காவல் துறையில் சாட்சியமளித்துள்ளனர். இருந்த போதிலும் ஈதை முன்னிட்டு எந்த பிரச்சினையும் பெறிதாகி விடக்கூடாது என்ற ஐயத்தில் அப்பகுதி மக்களும் தமுமுக வினரும் பொறுமை காத்து வருவதாகவும். காவல் துறையினர் விரைவில் அந்த பெருநாள் தொழுவதற்காக தற்காலிகமாக நிறுவப்பட்டிருந்த பள்ளிக்கு தீவைத்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாலும் அப்பகுதி மக்கள் தமுமுக வினர் தெற்கு வெளி வீதியில் உள்ள மினார் பள்ளியிலும் நேற்று பெருநாள் தொழுகை நடத்தி உள்ளனர்..
அவதூறுக்கு அஞ்சாது இறைவழியில் ததஜ வினர் செய்யும் தவ்ஹீத் பிரச்சாரம் இதுதானோ? ஆர்.எஸ்.எஸ் காரன் கூட அசந்து போகும் அளவிற்கு தங்கள் திறமைகளை பள்ளிக்கு தீவைப்பதிலிருந்து பள்ளிகளை மூடுவது வரை செய்து வரும் ததஜ வின் இந்த சமூக தொண்டுக்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்கவிருக்கிறார்கள்? முக்கியமாக வலைகுடா பொருளாதாரத்தில் (அரபுச்சல்லியில்) இயங்கும் இந்த ததஜவின் பள்ளிக்கு தீவைத்தல் போன்ற சமூக மேம்பாட்டு ஏகத்துவ பணிகளுக்கு வலைகுடா வாழ் சொந்தங்கள் என்ன பரிசு வழங்க போகின்றார்கள்?
செய்தி : நன்றி தினமலர்
தகவல் உதவி : நன்றி மதுரை மாவட்ட தமுமுக செயளாலர் யு.அலாவுத்தீன் அவர்கள் (கைபேசி 0091934412281)
மேற்கொண்டு செய்திகள் இங்கு விரைவில் அப்டேட் செய்யப்படும்.
1 comment:
ஆர்.எஸ்.எஸ் காரன் கூட அசந்து போகும் அளவிற்கு தங்கள் திறமைகளை பள்ளிக்கு தீவைப்பதிலிருந்து பள்ளிகளை மூடுவது வரை செய்து வரும் ததஜ வின் இந்த சமூக தொண்டுக்கு மக்கள் என்ன தீர்ப்பு வழங்கவிருக்கிறார்கள்?
Wow... wow... wow...??? Wat abt your unverifiable onesided news... as if the news is from Dinamalar...
[i was shocked after reading the news from Dinamalar - how come you can give false reference??? - wow... i was amazed about ur boldness Mr. Mughavai Thamizha]
ஆர்.எஸ்.எஸ் காரன் கூட அசந்து போகும் அளவிற்கு தங்கள் திறமைகளை நீங்கள் காட்டியுள்ளீரே???
I know you wont post this... but my intention is you let u know... people do think... i mean real 'thinking' not like u think.
P.S: Try to unite the ummah, dont try to inject the hatred among ourselves. I kept quiet for so long, and i cant resist by reading this brother.
Post a Comment