அல்கோபர் : கடந்த அக்டோபர் மாதம் 15 ம் தேதி ரமழான் 13 அன்று சவுதி அரேபியா கிழக்கு மாகனம் அல்கோபர் நகரில் செயல்படும் "இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையம்" சார்பாக நடத்தப்பட்டு வரும் நோன்பு திறப்பு சிறப்பு குடிலில் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையத்தின் தமிழ் பிரிவு சார்பாக ஒரு நாள் இஸ்லாமிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இரவு 9 மணிக்கு ஆரம்பமாகிய இந்த கருத்தரங்கம் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்களின் உரைகளுடன் அதிகாலை வரை அதாவது நோன்பு வைக்கும் நேரமான சஹர் நேரம் வரை நடந்தது. இதில் தலைசிறந்த தமிழ் மார்க்க அறிஞர்கள் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி சிறப்பித்தனர்
உரையாற்றும் மார்க்க அறிஞர்கள்
சவுதி அரேபிய கிழக்கு மாகான தமிழ் தாவா கமிட்டியின் தலைவர் பொறியாளர் ஜனாப் சபியுல்லாஹ் அவர்கள் தலைமையில் முதல் அமர்வும் தென்காசியை சேர்ந்தவரும் சவுதி அரேபியா கிழக்கு மாகானத்தில் அழைப்பு பணியில் ஈடுபடுபவரும் ஆன மெளலவி உஸ்மான் பிர்தெளசி அவர்கள் தலைமையில் இரன்டாம் அமர்வும் நடந்தது.
அஸ்ஷேய்ஹ் முபாரக் மதனி மற்றும் மௌலவி உஸ்மான் பிர்தௌஸி
தமிழகத்தை சோந்த சகோ. ஹாஜா பஷீர் அவர்கள் வறவேற்புறை நிகத்தினார்கள்.
தமிழகம் காயல் பட்டினத்தை சோர்ந்த மெளலவி முகம்மது நூஹ் அவர்கள் "ஈமானில் உறுதி வேண்டும்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.
இலங்கையை சேர்ந்த மெளலவி முகம்மது மன்சூர் மதனி அவர்கள் " பத்ரும் உஹதும் தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.
மார்க்க அறிஞர் முஜபுர்ரஹ்மான் உமரி
ஜித்தாவில் இருந்து வருகை தந்திருந்த தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த மார்க்க அறிஞர் முஜிபுர் ரஹ்மான் உமரி அவர்கள் " இமாம்களின் தியாகங்கள்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். இவரது உரை மக்களால் வெகுவாக கவணிக்கப்பட்டது. தமிழகத்தில் பி.ஜெயினுல்லாபுதீன் என்பவர் திருக்குர்ஆனில் யூத கிருத்துவர்களின் செயலில் குறைவேதும் இல்லாத வகையில் தனது சுய கருத்துக்களை தர்ஜீமா என்ற பெயரில் புகுத்தி சஹிஹான ஹதீஸ்களை மறுத்து குர்ஆனில் சந்தேகங்களை ஏற்படுத்தி மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேறச் செய்யும் சதிச்செயலையும் கண்ணியமிகு சஹாபாக்களையும் சஹாபா பென்களையும் நபிமார்களின் மனைவிமார்களையும் எவ்வாரெல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் திறம்பட திட்டமிட்டு அவர்களை தறம்தாழ்த்தி மறியாதை இல்லாமல் பேசி வருகின்றார் என்பதையும் சஹாபி பென்களின் கற்புக்களை எப்படி சந்தேகத்திற்கு உள்ளாக்கி யூத கிருத்து ஹிந்து கும்பல்களின் திட்டத்திற்கு துனை போகின்றார் என்பதையும் மக்களிடையே பி.ஜெயினுல்லாபுதீன் என்பவர் தனது சுயகருத்துக்களை குர்ஆனில் எப்படி திட்டமிட்டு, திறம்பட தினித்து வேதத்தை மாற்றியமைத்துள்ளார் என்பதையும் அதன் அபாயம் குறித்தும் அதைப்படித்தால் எப்படி மக்கள் இஸ்லாத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என்பது குறித்தும் ஆதாரப்பூர்வமாக தனது பல உரைகள் மூலமும் பிரச்சாரங்கள் மூலமும் எடுத்தியம்பி வருவதால் இவரது உரை அரபுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களாலும் மிக உண்ணிப்பாக கவணிக்கப்பட்டது.
தமிழகத்தை சோந்த மெளலவி அலாவுதீன் பாக்கவி அவர்கள் "ரமழானின் கடைசி பத்து நாட்கள்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.
தமிழ்நாடு சாப்டூரை சோர்ந்த மார்க்க அறிஞர் பிஸ்மில்லாஹ் கான் பைஸி அவர்கள் " அருள்மறை குர்ஆனும் அறியாத நம் சமூகமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இறுதியாக இலங்கையை சோந்த தலைசிறந்த மார்க்க அறிஞர் அஸ்ஷேய்ஹ் முபாரக் மெளலவி அவர்கள் " சொர்க்கத்திற்கு செல்வோம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
உரைகேட்க வந்திருந்த கூட்டத்தின் ஒரு பகுதி
அத்துடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையத்தின் அழைப்பு பிரிவு பொருப்பாளர் சவுதி அரேபியாவை சேர்ந்த அஹமத் அல் ருஷைத் அவர்கள் ஆங்கிலத்தில் மிக்க அருமையான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள் இதில் மிக கவணமாக முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் என்ன பேசினார் என்பதை கேட்டறிந்து அதற்கு ஏதுவாக அதை தனது உரையில் சேர்த்து பேசியது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையத்தின் துனை மேலாளர் சவுதி அரேபியாவை சேர்ந்த முகம்மது ஃபைஸ் அல்ஷெஹ்ரி அவர்கள் இடையில் நடந்த கேள்வி பதில் நிகழச்சியில் வெறிறி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு அழைப்பு பணி மற்றும் அதன் செயல்பாடுகளை வழியுருத்தியும் இந்த குடிலில் சிறப்பான முறையில் களப்பணியாற்றுமு் தன்னார்வ தொன்டர்களை பாராட்டியும் உரையாற்றினார். இவ்வுரையை இலங்கையை சேர்ந்த முகம்மது மக்கீன் நலீமி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக இலங்கையை சோந்த சகோ. முபாரக் நானா அவர்கள் நன்றியுரையுடன் நிகழச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் ஒளி ஒலி ஏற்பாடுகளையும் மற்றும் வீடியோ பதிவையும் ஜீபைலில் இருந்து வந்திருந்த தென்காசி சகோ. அபுபக்கர் சித்தீக் அவர்களும் நெல்லை ஏர்வாடியை சோந்த சகோ. முகம்மது மீராசாஹிப் அவர்களும் மிகத் திறம்பட செய்திருந்தார்கள். அத்துடன் இங்கு கூடிய நூற்றுக்கணக்கான மக்களை ஒழுங்கு படுத்துதல் இடையில் சிற்றுன்டிகள் வழங்குதல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை செய்து தருதல் உணவு பறிமாறுதல் உள்பட இறுதி வரை இருந்து அனைத்து பணிகளையும் அயராது எந்தவித நலனும் பாராது செவ்வென செய்த இலங்கையை சேர்ந்த சகோ. முபாரக், மதுரையை சேர்ந்த சகோ. சுபுஹான், சங்கராபுரம் சகோ. முகம்மது யூனுஸ், சகோ. நவாப்ஜான், சகோ. பாபு என்ற சஃபி அஹமது, நெல்லிக்குப்பம் சகோ. பைஃசர், மற்றும் சகோ. சலீம், சகோ. கலீல், நெல்லை ஏர்வாடி சகோ. முகம்மது மீராசாஹிப், சென்னையை சேர்ந்த சகோ. சஃபி அஹமது, இலங்கை சகோ. ஜெயினுதீன், சகோ. ஜப்பார், சகோ. சலாஹீத்தீன், டி.ஆர் பட்டினம் சகோ. ஹாஜா நஜ்முத்தீன், கும்பகோனம் ஷம்சுதீன் செம்மங்குடி சகோ. இஸ்மாயில், இலங்கை நிந்தாவூர் சகோ. நவ்பர் மற்றும் இலங்கையை சேர்ந்த சகோ. ஸஹீன், சகோ. இஸ்ஹாக் மற்றும் தமிழ்நாடு முகவையை சேர்ந்த சகோ. முகம்மது ரைசுதீன் மற்றும் பல தன்னார்வ தொன்டர்களின் பணி பாராட்டுக்குறியதாக அமைந்திருந்தது.
பின்னர் கோபரிலிருந்தும் தம்மாமிலிருந்தும், ஜீபைல், அல்ஹஸ்ஸா, அப்கைக் என சவுதி கிழக்கு மாகானத்தின் பல பகுதிகளில் இருந்தும் கூடிய இங்கு கூடிய நூற்றுக் கணக்கான மக்களுக்கும் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு மையத்தின் சார்பாக சிறப்பான சஹர் உணவு வசதி குளிர் பானங்கள், பழங்கள் மற்றும் சுவையான உணவுகளுடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சஹர் உணவு அருந்தியபி்ன் இந்த கருத்தரங்கத்தில் கூடிய அனைவரும் ஒன்றாக ஃபஜ்ர் தொழுதபின் அதிகாலையில் கழைந்து சென்றனர்
இந்நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் ஆற்றிய பயன்மிகு உரைகள் அடங்கிய வி.சி.டி க்களும் டி.வி.டி க்களும் பெற விரும்புவோர் சகோ. முகம்மது மீரா சாஹிபை +966 (0) 507175629 என்ற தொலைபேசி என்னில் தொடர்பு கொள்ளவும்.
செய்தி தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் : முகவைத்தமிழன்
No comments:
Post a Comment