Tuesday, September 19, 2006

திமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்பு (TMMK NEW)

உள்ளாட்சி தேர்தலில் திமுக விற்கு ஆதரவு - தமுமுக அறிவிப்புதமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் பத்திரிகையாளர் சந்திப்பில்

கோவை செப்டம்பர் 17,2006 கோவை ஆத்துப்பாலம் ஜே.பி. மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் எம், ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் தமுமுக தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமுமுக அதன் அமைப்பு நிர்நய சட்டத்தின்அடிப்படையில் தேர்தலில் போட்டியிடாது என்றும் ஆனால் வரும் இடைத்தேர்தலிலும் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்கும் என்றும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெறிவித்தார். அத்துடன் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா வீட்டை முஸ்லிம்களை திரட்டி வரும் செப்டம்பர் 22 ம் தேதி மாலை முற்றுகையிடப்போவதாகவும் , முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வலியுருத்தி டெல்லியில் பேரணி நடத்த போவதாகவும் கோவையில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கி உடணடியாக குற்றவாளியை கைது செய்யவேண்டும் என்றும் கூறினார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மாநிலச் செயற்குழுக் கூட்ட தீர்மானங்கள்தமுமுக மாநிலச் செயற்குழு மேடையில் தலைவர்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தனது செயற்குழுவில் எடுத்த தீர்மானங்களின் நகல் (பத்திரிகையாளர்களுக்கு வழங்கியது)

1. மாநிலச் செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் மவ்லவி பி. அப்துர் ரஹீம் அவர்கள் மே 3, 2006 அன்று தேர்தல் பிரச்சார பணிக்கு இடையே சாலை விபத்தில் மரணமடைந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமுமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து வடசென்னை மாவட்ட தொண்டர் அணிச் செயலாளராக பணியாற்றி அதன் பின்னர் மாநில தொண்டர் அணிச் செயலாளராகவும் பின்னர் மாநிலச் செயலாளராகவும் ஏற்றம் பெற்ற அப்துர் ரஹீமின் இழப்பு கழகத்திற்கும், சமுதாயத்திற்கும் மிகப் பெரும் இழப்பாக இச்செயற் குழு கருதுகின்றது. தன்னலமற்ற முறையில் அனைவருடன் இன்முகத்துடன் பழகும் அப்துர் ரஹீம் ஆற்றிய அளப்பெரும் பணிகளில் அழைப்பு பணி, சுனாமி நிவாரணப் பணிகள், டெல்லி போராட்டம், குஜராத் கலவரம் மற்றும் பூகம்பம் முதலியவற்றை நெகிழ்ச்சியுடன் இச்செயற்குழு திரும்பி பார்க்கின்றது. அப்துர் ரஹீம் அவர்களது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. அப்துர் ரஹீம் அவர்களுடன் சாலை விபத்தில் இறந்த ஒட்டுனர் பைசுர் ரஹ்மான் மற்றும் அப்துர் ரஹீம் அவர்களது நண்பர் மவ்லவி சமியுல்லாஹ் ஆகியோரின்குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சமுதாயப்பணிகளுக்கிடையே இன்னுயிரையும் நீத்த இந்த மூன்று சகோதரர்களின் மறுவாழ்விற்கு மாநில செயற் குழு இறைவனிடம் இறைஞ்சுகின்றது.

2. வாக்காளர்களுக்கு நன்றி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இச்செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. திமுக அரசுக்கு பாராட்டு
சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை மிக வேகமாக நிறைவேற்றி வரும் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இச்செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வண்ணத் தொலைக்காட்சி பொட்டி,
ஏழைகளுக்கு நிலம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு காட்டி வரும்அதே வேகத்தில் சிறுபான்மையினருக்கு வாக்களிக்கப்பட்ட தனி இடஒதுக்கீடு உடனடியாக கிடைக்க கலைஞர் அரசு உடனே ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.

தமுமுக செயற்குழுவில் கூடியவர்கள்4. ஜெயலலிதா வீடு முற்றுகைப் போராட்டம்
அப்பழுக்கற்ற முறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பணியாற்றி வரும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முதன்மைச் செயலாளர் முனீர் ஹோடாவை தேச துரோகி என்றும், அப்துன் நாசர் மதானி தப்பிக்க வழிவகைச் செய்தார் என்று அவதுறாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது. ஜெயலலிதாவின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து வரும் செப்டம்பர் 22 மாலை அவரது வீட்டை முற்றுகையிடுவதென இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.


5. அப்பாவி முஸ்லிம் விசாரணை சிறைவாசிகள் உடனே விடுதலைச் செய்யப்படவேண்டும்
எட்டாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை உடனே விடுதலைச் செய்ய ஆவனச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு தமிழக அரசை இச்செயற்குழு கோருகின்றது. முஸ்லிம்கள் விசாரணைசிறைவாசிகள் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணை 2 மாதக் காலத்திற்குள் முடிக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6. உள்ளாட்சி தேர்தல் தமுமுக போட்டியிடாது
தமுமுக அமைப்பு நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாத அமைப்பாக தமுமுக செயல்படும். உள்ளாட்சி தேர்தலிலும் தமுமுக போட்டியிடாது.


7. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு தமுமுக ஆதரவு
வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென இச்செயற்குழு முடிவுச் செய்கிறது.

8. மதுரை மத்திய தொகுதி
மதுரை மத்திய தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தமுமுக ஆதரித்து பிரச்சாரம் செய்யும்

தமுமுக செயற்குழுவில் கூடியவர்கள்


9. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி டெல்லியில் பேரணி
அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க ஆவணச் செய்யப்படுமென ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்த ஆவணச் செய்யப்படாதை வருத்தத்துடன் இச்செயற்குழு பதிவுச்செய்கிறது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தலைநகர் டெல்லி வரும் மார்ச் 2007ல் பேரணி நடத்துவதெனவும் இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.

10. குண்டு வெடிப்பு வழக்குகளுக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை
சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகள் மிகப் பெரிய ஐயத்தை நாட்டு மக்களிடம் தோற்றுவித்துள்ளது. சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும்மத்தியில் நடைபெற்று வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய பயங்கரவாதம் நடைபெறுவதாக இச்செயற் குழு கருதுகின்றது.டெல்லி ஜும்ஆ பள்ளிவாசல், வாரணாசி, மும்பை மற்றும் மலேகான் பள்ளிவாசல் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறைக்கும், சங்பரிவார் அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் இவை குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும். இதற்காக நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு விசாரணை செய்ய வேண்டுமென இச்செயற்குழு கோருகின்றது.

11. இஸ்ரேலுடன் துதரக உறவை துண்டிக்க வேண்டும்
லெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் பயங்கரவாத நடவடிக்கைகளைநடத்திவருகின்றது. சர்வதேச பயங்கராதத்திற்கு துணையாக இருக்கும் அந்த இஸ்ரேலுடன் இந்திய அரசு து£தரக உறவை துண்டிக்க வேண்டுமென்றும், டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் து£தரை வெளியேற்ற வேண்டும் என்றும் இச்செயற்குழு மத்திய அரசு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

12. முத்துப்பேட்டை பொய் வழக்கை வாபஸ் வாங்குக
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சென்ற அதிமுக ஆட்சியில் செப்டம்பர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் ஊர்வல கலவரத்தில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அவ்வழக்குகளை தமிழக அரசின் வாபஸ் பெறவேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலத்தின் போதும் ஏற்படும் பதட்டத்தை தணிக்க மாற்றுப் ஊர்வல பாதையை அரசு உடனே வரையறுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

13. ஊடகங்கங்களுக்கு நிதானம் தேவை
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பல நேரம், விசாரணைகளுக்கு முன்பே யூகங்களை செய்திகளாக்கும் போக்கு அதிகரித்து வருவது கவலையளிக்கின்றது. இதனால் பலரும் பாதிக்கப்படும் நிலையில் முஸ்லிம் சமூகம் மிக அதிகமாகவே பாதிக்கப்படுகின்றது. எனவே பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் மிக பொறுப்புடன் தங்கள் பணிகளை தொடர வேண்டுமென இச்செயற்குழு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.

14. இலங்கை பிரச்னை
இலங்கையில் சிங்கள அரசின் பொறுப்பின்மையும், விடுதலைப்புலிகளின் துன்புறுத்தலும் அங்கு மூன்றாவது சமூகமாக வாழும் முஸ்லிம்கள் பெரும் இழப்புகளுக்கு இலக்காகியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களின் வாழ்வுரிமை காக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச சமூகத்தை¢இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

15 கோவையில் கொலைச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக
கோவையில் ஜேப்படி திருடர்களின் அட்டகாசம் அதிகரிப்பது கவலையளிக்கிறது. கடந்த செப்டம்பர் 16 அன்று பேரூந்தில் பயணம் செய்த ஃபைசல் ரஹ்மான் என்பவரை பிக்பாக்கெட் கொள்ளையர்கள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கின்றது. படுகொலைச் செய்யப்பட்ட பைசல் ரஹ்மான் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் கருணைத் தொகையும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. கோவை பிக்பாக்கெட் திருடர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


13. சென்னைக்கு துணை நகரம் தேவை
சென்னை மாநகர மக்களின் நலன்களுக்காவும், எதிர்கால வசதிகளுக்காகவும் சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கும் திட்டத்தை அரசியல் குறுக்கீடுகளை பொருட்படுத்தாமல் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

14. பெப்சி கோக்கிற்கு தடை வேண்டும்
மக்கள் உடல் நலனுக்கு பெரும் கேடுவிளைவிக்கும் பெப்சி, கோகோ கோலா பானங்களை உடனடியாக தடைச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கோருகின்றது.

15. தர்மபுரி ரயில் பாதை இருவழியாக்கப்பட வேண்டும்
ஒருவழிப் பாதையாக இருக்கும் ரயில் பாதையை தர்மபுரியில் இருவழிப் பாதையாக மாற்றினால் தர்மபுரியிலிருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து செல்ல ஏதுவாக இருக்கும். எனவே தர்மபுரி வழியாக சேலம் முதல் பெங்களுர் வரைச் செல்லும் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற இச்செயற்குழு கோருகின்றது.

16. தென்கரைக்கோட்டை

தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையில் 100 வருடங்களாக வசித்துவரும் முஸ்லிம் குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஆவண செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

17. சூலுர்ர் ஜமாஅத் நிலம் மீட்கப்பட வேண்டும்
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் சூலூர் சுன்னத் ஜமாஅத்திற்குச் சொந்தமான இடத்தை 3 1ஃ2 ஏக்கர் இடத்தை லஷ்மி மற்றும் மூன்று நபர்களால் அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஊடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற வஃக்பு போர்டின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தாத மாவட்ட அதிகாரிகளை வன்மையாக இச்செயற்குழு கண்டிக்கின்றது. பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி உடனடியாக மாவட்ட நிர்வாகம் மீட்டுத்தர வேண்டும் என்று இச்செயற்குழு கோருகின்றது.

18. கோவைக்கு பாஸ்போர்ட் அலுவலகம் தேவை
கோவை மாவட்டத்தில் பாஸ்போர்ட் அலுவலகம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கோருகின்றது.கோவை மாவட்டம் உட்பட தமிழகத்தில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு பாஸ்போர்ட் விசாரணை வந்தால் காவல்துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டு அலைக்கழிப்பதை செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, தவறு செய்யும் பாஸ்போர்ட் விசாரணை (உளவுத்துறை) அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

19. விமான நிலையத்தில் கெடுபிடி
பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் முஸ்லிம்கள் விமான நிலையங்களில் முஸ்லிம்கள் என்கிற ஒரே காரணத்திற்காக விசாரணை என்கிற பெயரில் கடும் சோதனைகளும், சந்தேகம் என்கிற பெயரில் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கைகளும் இழக்காக்கப்படுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

20. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிரசண்ட் நகர் பள்ளிவாசலில் 2001 டிசம்பர் மாதம் அப்துர் ரஷீத் கொலைச் செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர் உண்மை குற்றவாளிகளை உடனே கைதுச் செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இந்த வழக்கில் பொய்குற்றம் சுமத்தப்பட்ட அப்துர் ரஷீத் அவர்கள் மகன் முகைதீன் பிச்சையை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ரூ 2 லட்சம் அரசு உதவி தொகையை உடனே வழங்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கோருகின்றது.

22.தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழி பள்ளிக்கூடங்களில் மானியம் அளிக்கப்படாத வகுப்புகளுக்கு மானியம் வழங்க அரசு உடனே ஆவணச் செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

23. அரசு மற்றும் அரசு உதவிப் புரியும் கல்லுர்ரிகளில் நீண்டகாலமாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய அரசு முன்வந்துள்ளது வரவேற்கத் தக்கது. அதே நேரம் அறிவியல் துறை ஆசிரியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற எழுதப்படாத விதிமுறை பின்பற்றப்படுகிறது. தமிழ், அரபி, உருது, வரலாறு உள்ளிட்ட துறைகளுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

செய்திகள் மற்றும் புகைப்படம் : சகோ.கோவை தங்கப்பா

இஸ்லாம் முஸ்லிம் அரசியல் காரைக்குடி கோவை இராமநாதபுரம்

No comments: