Monday, September 18, 2006

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .

கடந்த மாதம் நான் விடு முறையில் சென்றபோது எதிர்கொண்ட நிகழ்வுகளுள் ஒரு நிகழ்வை இக்குழுமத்தின் உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நிகழ்வு -1

அதிகாலை நேரத்தில் நானும் என் அண்ணணும் (அரசு அதிகாரி ) மாவட்ட ஆட்சியர் மற்றும் நீ திமன்றங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங் களையும் உள்ளடகிய அந்த இடத்திற்குள் வழக்குரைஞர் ஒருவரை சந்திப்பதற்க்காக சென்றபோது , வழியில் என் அண்ணணுக்கு வேண்டிய சிலரை (While they are in Morning walk) சந்தித்தோம். அவர்களை எனக்கு அறிமுகமும் செய்துவைக்கட்டது. அவர்களில் முறையே : A Joint Director in a Govt. Dept; A Leading Doctor, 2 Professors from 2 different leading Engineering Colleges; A Press Reporter and A Deputy-Superintendent of Police (ALL OF THEM MUSLIMS except DSP).

சிறுது தூரம் சென்றவுடன் உரையாடல் களில் குறுக்கிட்ட JD, சென்ற இரவு தொலைக்காட்சி யில் தான் ஒரு நிகழ்ச்சியை பார்த்ததாகவும், அது ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி என்றும் , பேசிக்கொண்டிருந்தவர் யாரையோ சாடி மிகவும் அநாகரீகமாகப் பேசியதாகவும் , மாற்று மதத்தினரைத்தான் சாடுகிறார் என்று கொஞ்சம் கருத்தூன்றிக் கே ட்டதாகவும், ஆனால் அவர் சகோதர முஸ்லீம்களைத்தான் சாடுகிறார் என்று உணர்ந்தவுடன் தான் மிகவும் வேதனையடைந்ததாகவும் , உலகத்திலுள்ள அனைத்து இணங்களும் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றினைந்து இஸ்லாத்திற்கும், இஸ்லாமிய நாடுகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக சதி வேலைகளில் முனைந்திருக்கும் இத்தருணத்தில் கொஞ்சம்கூட மார்க்க சிந்தனையற்று பேசும் இந்த ஆசாமியை …………….. என்ற எண்ணம்கூட தனக்கு வந்து விட்டதாகவும் என்று உணர்ச்சி யின் உச்சிக்கே சென்றுவிட்ட JDயை எல்லோரும் பார்க்க , அந்த ஆசாமி யார் (?) என்ற கேள்வி எழ, அதில் ஒருவர், வேறு யாராக இக்கமுடியும் PJயை விட்டால் ? நான் கூட அந்த அசிங்கத்தை பார்த்து தொலைத்தேன் . இதற்கிடை யில் நாங்கள் செல்லவேண்டிய இடம் வந்து விட்டதால் அவகளிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றவழிதோறும் என்னுல் எழுந்த ஒரு கேள்வி "JDயை இந்த அளவுக்கு பாதித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி எது "? என்ற சிந்தனையோடு வழக்குரைஞர் அலுவலகத்னுல் நுழைந்தோம்..

நிகழ்வு -2

காலம் வேகமாக ஓடியது, விடுமுறை கழிந்து இயந்திர வாழ்க்கை ஆரம்பம் . சென்றவாரம் DAN தமிழ் ஒளியில் அரக்கோணத்தி ல் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒலிபரபப்பட்டது. அது ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி.

PJ தனக்கே உரியபாணியில் குர்ஆன் , ஹதீஸ் அடிப்படையில் தான் தன்னுடைய பேச்சு இருக்கும் என்ற பீடிகையோடு ஆரம்பித்து, நேரம் செல்லச் செல்ல, பேச்சு சூடுபிடிக்க ஆரம்பித்து ; குர்ஆன் , ஹதீஸ் அடிப்படையில் தான் தன்னுடைய பேச்சு இருக்கும் என்ற வாக்குறுதியி லிருந்து நழுவி; தப்லீக் ஜமாஅத்தார்களையும் , அவர்கள் தம் பணிகளையும் கொச்சைபடுத்தி , வரம்பு மீறி, மாற்றாரும் பிரயோகிக்க தயங்கும் வார்தைகளாலும் , எதிரிகளும் எள்ளி நகையாடும் அளவுக்கு ஒரு பெரிய ருத்ரதாண்டவத்தை யே ஆடி அரங் கேற்றம் செய்து ; உச்சக்கட்டமாக அநாகரீகத்தின் கடைசிப்படிக் கே சென்று "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் போதை வயப்பட்டு நடமாடுவது போன்று தப்லீக் ஜமாஅத்தார்களும் போதை வயப்பட்டு நடமாடுகி றார்கள்" பேச்சு இன்னும் தரம் தாழ்ந்து செ ல்வதைக்காண சகிக்காம ல் கணத்த மனதுடன் தொலைக்காட்சியி ன் தொடர்பை துண்டித்துவிட்டு அதே சிந்தனையி லிருந்த எனக்கு JD அவர்களின் ஆக்ரோ ஷத்திற்கும், கடுங்கோபத்திற்காண காரணம் இப்போதுதான் புறிந்தது .

இப்போதெல் லாம் PJ யி ன் பேச்சு மிக மிக வரம்பு மீறியதாகவும், குர்ஆனும், ஹதீசும் விதித்த எல்லைக்கோட்டை மீறியதாகவு மே இருக்கிறது.

எது எப்படியோ, புகழின் உச்சி யில் இருக்கும் ஒருவனை இறைவன் சிறுமைபடுத்தி , தாழ்ந்த நிலைக்கு கொண்டுவர நாடி விட்டால்; உடல் உறுப்புக் களின் செயல்பாடுகளை மட்டுப்படுத்தி, அங்க அவயகங்கள் இஷ்ட் டப்படி செயல்பட ஆரம் பித்து விடும். சொல்லுக் கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்காது. இந்த நிலைதான் PJ விஷயத்தி ல் நடக்கிறது போலும்.


வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

1 comment:

muslimeen said...

bismillahirrahumanirraheem

PJ CONTINUE TO INSULT OTHERS IN MANY STAGE PROGRAMMES.BUT HIS FOLLOWERS NOT UNDERSTAND ABOUT HIM.IT IS CLEARLY TAQLEED.THEY BLAME MADHHAB FOLLOWERS BUT THEY FOLLOW THE TAQLEED.