Sunday, September 10, 2006

ஜெயாவின் அலட்சியம் - கலைஞர் (HODA)


சென்னை : ""ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிறுபான்மை மக்கள் பிரச்னையில் எப்படி நடந்து கொண்டார் என்பதற்கு அவரால் அலட்சியப்படுத்தப் பட்ட, புறக்கணிக்கப்பட்ட அரசின் கோப்புகளே உதாரணங் களாக இருக்கின்றன,'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதன்மைச் செயலர் சையத் முனீர் ஹோதாவை குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாவை கண்டித்தும், ஜெயலலிதா எந்தளவிற்கு ஆழமான சிறுபான்மையோர் விரோதி என் பதை சான்றுகளுடன் கூறியும் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக்கழக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிக்கை வெளியிட்டுள்ளார். (CLICK HERE TO READ TMMK LEADER's STATEMENT)


அதில், "முனீர் ஹோதா மீதான விசாரணை முழுமையாக முடிவுற்று, அவர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும் நீதிக்கு தலைவணங்கி அவருக்கு விதிக்கப்பட்ட தற் காலிக பணி நீக்கத்தை ரத்து செய்யாமல் கோர்ட்டையும், ஜனாதிபதியின் ஆணையையும் ஒருசேர அவமதித்தவர் ஜெயலலிதா. முனீர் ஹோதாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாமல், ஜெயலலிதா இனவெறி கருத்துக்களை விஷம் போல கக்கியுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு தேர்தல் வந்துவிட்டால் சிறுபான்மை மக்களின் மீது அக்கறையும் ஆசையும் கூடை கூடையாக கொட்ட ஆரம்பிக்கும். திடீரென வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு போவார். மறுநாள் தர்காவிற்கு பயபக்தியுடன் செல்வார். பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த காயிதே மில்லத் நினைவும் அவருக்கு வரும். மலராடை எடுத்துக் கொண்டு நினைவிடத்திற்கு செல்வார். நினைவிடத்தில் அவர் கசிந்துருகுவதை காணக் கோடிக்கண் வேண்டும். இப்படியெல் லாம் நடிக்க கற்றவர். நாட்டு மக்களை அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களை ஏமாற் றுவதில் கெட்டிக்காரர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிறுபான்மை மக்கள் பிரச்னையில் எப்படி நடந்து கொண்டார் என்பதற்கு அவரால் அலட்சியப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப் பட்ட அரசின் கோப்புகளே உதாரணங்களாக இருக் கின் றன. "சிறுபான்மையினர் உரிமைகள் நாள்' கொண்டாடுவதற்காக மாவட்டத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் 30 மாவட்டங்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வரின் ஒப்புதலை கோரி 2005ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி கோப்பு அனுப்பப்பட்டது. கடைசி வரையில் கோப்பு கையெழுத்தாகவில்லை. தற்போது கோப்பு என்னிடம் வந்து இதற்கான நிதியை நிதிநிலை அறிக்கையிலே ஆண்டுதோறும் 60 ஆயிரம் ரூபாய் ஒதுக் கீடு செய்ய ஒப்புதல் அளித் துள்ளேன். ஜெயலலிதாவின் அமைச்சரவையிலே இஸ்லாமிய சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவமே இல்லாமல் இருந் தது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஏ.டி.ஜி.பி., ஜெகன் மீதான விசாரணையில் அவர் மீதான குற்றச் சாட்டு நிரூபணமாகாததால் குற்றச்சாட்டுகளை கைவிட கோப்பு ஜெயலலிதாவிடம் சென்றும் அதில் அவர் கையெழுத்திடவில்லை.

தற்போது அந்தக் கோப்பு என்னிடம் வந்து நான் கையெழுத்திட்டு அனுப்பினேன்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர்

No comments: