Monday, September 11, 2006

களியக்காவிளையிலிருந்து காத்தான்குடி வரை

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

மவ்லித் ஓதுவதற்கு இலங்கையில் தடை!
இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஃபத்வா!!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலே காணும் தலைப்பு நம்முடையது அல்ல. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத்தின் நெட்டில் போடப்பட்டுள்ள செய்தியின் தலைப்பு. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத்தின் செய்திகளை தாங்கி வரும் பத்திரிக்கைகள் உட்ட அதன் எந்த ஊடகங்களையும் நாம் பார்ப்பது இல்லை. சகோதரர்கள் யாராவது அந்த ஊடகங்களிலிருந்து எதைப்பற்றியாவது கேள்வி கேட்டால் மட்டுமே அதனை நாம் பார்ப்போம். இலங்கையைச் சார்ந்த ஒரு சகோதரர் நேற்று போன் செய்து மேற்கண்ட தலைப்பு சம்பந்தமாக பேசினார். அதன் பின்தான் அதனைப் பார்த்தேன். அந்த தலைப்பில் அவர்கள் போட்டுள்ள செய்தியை பாருங்கள்.

இது போன்ற தீர்ப்புகளே போதும். சத்தியமே வெல்லும்!

சமீபத்தில் களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் மவ்லிதின் குப்பை கூலங்கள், அசிங்கங்கள் அம்பலபடுத்தப்பட்டதின் விளைவாக இலங்கை ஜம்மிய்யதுல் உலமா ஷஷமவ்லித் ஓதுவது இஸ்லாத்திற்கு முரணானது, மேலும் அதை ஏற்பாடு செய்வதும் அதில் கலந்து கொள்வதும் பாவமாண காரியம் என்று அறிக்கை வெளியிட்டதுடன் இந்த அறிக்கையை இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒட்டும் படி தெரிவித்துள்ளது! களியக்காவிளை விவாத்தின் வெற்றி எதற்கு கிடைத்தது என்பதை சொல்லி புரியவைக்க வேண்டிய தேவை இல்லை. அதை பார்த்து விட்டு வெளிவரும் சுன்னதுல் ஜமாஅத் உலமாக்களில் இது போன்ற தீர்ப்புகளே போதும். சத்தியமே வெல்லும்!

களியக்காவிளை விவாதத்தில் பி.ஜெ.மண்ணை கவ்வினார்.

இதுதான் அந்தச் செய்தி. இந்தச் செய்தி எவ்வளவு பெரிய புரட்டுச் செய்தி. விளம்பரம் நோக்குடன் கூடிய மோ(ச)டிச் செய்தி என்பதை அதற்கு கீழ் அவர்கள் ஆதாரமாக வெளியிட்டுள்ள லட்டர் பேடு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. குர்ஆன் ஹதீஸ்தான் மார்க்கம் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. சரிந்து வரும் பி.ஜெ.யின் இமேஜை தூக்கி நிறுத்த நடத்தப்பட்டதூன் களியக்காவிளை விவாதம். இஸ்லாமிய பிரச்சார நோக்கம் கிடையாது. அதில் களியக்காவிளை விவாதத்தில் பி.ஜெ.மண்ணை கவ்வினார் என்பதுதான் உண்மை. அதை மறைக்க இது மாதிரியான பித்தலாட்ட செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

இதில் உள்ள முதல் பொய். இலங்கை ஜம்மிய்யதுல் உலமா என்பது. அது இலங்கை ஜம்மிய்யதுல் உலமா அல்ல. இலங்கை என்ற நாட்டில் உள்ள காத்தான்குடி என்ற ஊரில் உள்ள ஜம்மிய்யதுல் உலமா. இது அதன் லட்டர் பேடில் மிகத் தெளிவாக உள்ளது. அதை காத்தான்குடி ஜம்மிய்யதுல் உலமா என வெளியிடாமல் இலங்கை ஜம்மிய்யதுல் உலமா என திரித்து வெளியிட்டு தங்களுக்கு இமேஜ் ஏற்படுத்த முயன்றுள்ளார்கள்.

இரண்டாவது பொய். சமீபத்தில் களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் மவ்லிதின் குப்பை கூலங்கள், அசிங்கங்கள் அம்பலபடுத்தப்பட்டதின் விளைவாக என்று செய்தி போட்டுள்ளார்கள். ஷஷபொதுமக்களும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களும் விளக்கம் கோரியதற்கிணங்க., கடந்த 23-07-2006 திகதி காத்தான்குடி ஜம்மிய்யதுல் உலமாவில் நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக மிகவும் ஆழமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் ஆராயப்பட்டு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு கீழ் வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றுதான் எழுதியுள்ளார்கள். இதில் களியக்காவிளை பற்றியோ பி.ஜெ.யும் அவருடனுள்ள நடிகர்களும் இணைந்து நடித்த களியக்காவிளை நாடகம் பற்றியோ எந்த வார்த்தையும் இல்லை.

உங்கள ஊர் பனை மரத்தில் நெறி கட்டுமா?

அவர்கள் பத்வாவில் களியக்காவிளையில் நடந்த விவாதத்தின் விளைவாக என்று எழுதவில்லை. ஷஷபொதுமக்களும் பல்வேறு பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களும் விளக்கம் கோரியதற்கிணங்க, ஆழமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அவர்கள் ஆய்வு செய்ததாகத்தான் அவர்கள் எழுதியுள்ளார்கள். நேற்று போன் போட்ட இலங்கையைச் சார்ந்த சகோதரர் நம்மிடம் கேட்ட கேள்வி, எங்கள ஊர் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் உங்கள ஊர் பனை மரத்தில் நெறி கட்டுமா? என்பதுதான்.
அந்த தாக்கம்தான் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி.

இலங்கையைப் பொறுத்த வரை ஏகத்துவ எழுச்சி என்பது வான்சுடர் என்ற பத்திரிக்கை வாயிலாக நிஸார் குவ்வத்தி என்ற அறிஞர் மூலம் ஏற்பட்டது. அவர் இறந்ததும் தவ்ஹீத் இறந்தது என இலங்கையிலுள்ள எல்லா சுன்னத் ஜமாஅத் பள்ளி குத்பாக்களிலும் பேசினார்கள். அந்த அளவுக்கு இலங்கையில் தவ்ஹீத் தாக்கத்தை ஏற்படுத்தியது நிஸார் குவ்வத்திதான். அவர் ஏற்படு:த்திய அந்த தாக்கம்தான் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட வாயிலான அந்நஜாத் வெளிவர காரணமாக இருந்தது. தவ்ஹீத் பிரச்சாரம் செய்ய பி.ஜெ. சம்பளம் பேசி வேலைக்குச் சேர்ந்த துபை ஜமாஅத் நிஸார் குவ்வத்தி எழுதி வந்த வான்சுடர் மாத இதழைத்தான் தவ்ஹீத் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தி வந்தது. நிஸார் குவ்வத்தி இறந்த பின் பத்திரிக்கை உரிமையாளர் அப்துர்றஹ்மான் அவர்களை அணுகி வான்சுடரை தமிழகத்திலிருந்து வெளியிடவும் முயற்சி செய்தது. பிறகு அந்நஜாத் வெளியிடும் முடிவுக்கு வந்தது.

குடும்பத்தோடு இருக்கும் அந்த நாட்களில்.

அந்த முயற்சியின் போதுதான் சங்கரன் பந்தல் சுன்னத் ஜமாஅத் மதரஸாவில் வேலை செய்த பி.ஜெ, லுஹா ஆகிய மார்க்க வியாபாரிகள் அந்நஜாத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். ஆசிரியர் பி.ஜெ.க்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாய், துணை ஆசிரியர் லுஹாவுக்கு 750ரூபாய். மாதத்தில் இருபது நாட்கள்தான் வேலை செய்வார்கள். மற்ற நாட்கள் அவர்களது குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட வேண்டும். ஆசிரியர் பி.ஜெ. துணை ஆசிரியர் லுஹா ஆகியவர்கள் அவர்கள் குடும்பத்தோடு இருக்கும் அந்த நாட்களில் அந்நஜாத் சம்பந்தமாக எந்த பொறுப்பையும் கொடுக்கக் கூடாது.

அன்று சைக்கிள் இன்று குவாலிஸ் கார்.

அந்நஜாத் பரிசீலனைக்காக, அவசர ஆலோசனைக்காக திருச்சி வந்து போவதற்குரிய டி.ஏ. தங்கும் வசதி உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான செலவுகளை அந்நஜாத்தே ஏற்க வேண்டும். ஆசிரியர் பி.ஜெ. திருச்சிக்கு வந்தால் அவர் நல்ல வசதியுடன் தங்க அட்டாஜ் பாத் ரூமுடன் கூடியதாக லாட்ஜ் இருக்க வேண்டும். அதை அந்நஜாத் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியருக்கு அந்நஜாத் சைக்கிள் வாங்கி கொடுக்க வேண்டும். (அன்று சைக்கிள் இன்று குவாலிஸ் கார்) இப்படி ஒப்பந்தத்துடன்தான் தவ்ஹீத் பிரச்சார வேலைக்கு வந்தார்கள்.

செய்தி லீக்கானதும்; அங்கிருந்து ஓடினார்.

பி.ஜெ, லுஹா ஆகிய இந்த மார்க்க வியாபாரிகள் வேலைக்குச் சேர்ந்த இந்த தவ்ஹீது பிரச்சார வேலையில் அப்பொழுது எதிர் பார்த்த வருமானம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே குறுகிய காலத்திலேயே 1000ரூபாய் சம்பளத்துடனும் குடும்பத்துடன் தங்குவதற்கு பிளாட்டுடனும் வண்டலூர் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் வேலை வந்தது. உடனே தவ்ஹீதுப் புலி லுஹா அங்கு போய்ச் சேர்ந்தார். திருவாளர் பி.ஜெ.யோ ஓராண்டுக்குப் பின் மீண்டும் மளிகைக் கடையோ அல்லது வேறு ஏதாவது வியாபாரமோ செய்யப் போகிறேன் என்று ஓடினார். வெளியில் வேறு ஒரு காரணத்தைக் கூறினார். துபை ஐ.ஏ.ஸி. யினர் பி.ஜெ. விரும்பும் ரகசிய கூலி கொடுத்ததும் புரட்சி மின்னலில் எழுத்துப் பணியை தொடர்ந்தார். தமிழ்நாடு ஐ.ஏ.ஸி.யின் மாநில பொருளாளராக பதவி வகித்தார். ஓராண்டுக்குப் பின் துபை ஐ.ஏ.ஸி. யிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்குகிறார் என்ற செய்தி லீக்கானதும்; அங்கிருந்து ஓடினார்.

கமாலுத்தீன் மதனி மீது கோபம் கொண்டு அவரை ஒதுக்க ஆரம்பித்தார்.

அல் ஜன்னத்தில் ரகசிய சம்பளம் வாங்கி வந்தார். குவைத்திலுள்ள வெளி நாட்டு அமைப்பு தவ்ஹீத் பிரச்சார தாஇகளுக்கு என அனுப்பிய பணத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வாங்கி வந்தார். வெளியில் நான் வெளி நாட்டு நிறுவனத்தின் உதவிகளை வாங்க மாட்டேன் என்று கூறி வந்தார். தன் பெயரால் வாங்கினால் ஆதாரமாக ஆகி விடும் என்பதால் வேறு ஒரு மவுலவி பெயரால் குவைத் நிறுவன பணத்தை வாங்கி வந்தார். குவைத் பணத்தை வேறு ஒரு மவுலவி பெயரால் வாங்கி பி.ஜெ.க்கு கொடுத்து வந்தது கமாலுத்தீன் மதனிதான். இந்த ரகசியம் வெளியானது. உடனே வாங்க மாட்டேன் என மறுத்து கமாலுத்தீன் மதனி மீது கோபம் கொண்டு அவரை ஒதுக்க ஆரம்பித்தார்.

மொழி பெயர்த்த யாருமே பதிப்புரிமை கொண்டாடிக் கொண்டிருக்கவில்லை.

ரஹ்மத் டிரஸ்ட்டுக்கு புகாரியை மொழி பெயர்த்து கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். மொழி பெயர்ப்புக்குரிய கூலி மட்டும்தான் ரஹ்மத் டிரஸ்டில் கிடைக்கும். அதை தொடராக வெளியிடும் உரிமை ரஹ்மத் டிரஸ்டிடம்தான் இருக்கும் என்பதை உணர்ந்ததும் வழக்கமான செட்டப் நாடகம் போட்டார். பணக்காரர்களான ரஹ்மத் டிரஸ்டினரிடம் பி.ஜெ. பணிந்து விட்டார் என்ற விமர்சனத்தை அவரே சொல்ல வைத்தார். இந்த விமர்சனத்தால் தொடர்ந்து மொழி பெயர்ப்பு செய்ய முடியாதவர் போல் காட்டி நழுவினார். இன்று ரஹ்மத் டிரஸ்ட் மூலம் புகாரி உட்பட பல மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. அதை மொழி பெயர்த்தவர்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மொழி பெயர்த்த யாருமே பதிப்புரிமை கொண்டாடிக் கொண்டிருக்கவில்லை.

உயிரோடு கொன்றார் கிரிமினல் தலைவர் பி.ஜே.

திர்மிதியை மொழி பெயர்த்து தருவதாக ஜாக்கிடம் 1995இல் 25ஆயிரம் ரூபாய் வாங்கினார். மொழி பெயர்த்து கொடுக்கவில்லை. சில நாட்கள் சென்ற பின் திர்மிதி மொழி பெயர்ப்பை வெளியிட்டு தருவதாகக் கூறி 25ஆயிரம் கடன் வாங்கினேன் என்று திசை திருப்பினார். 2000த்தில் திர்மிதியை களஞ்சியம் சார்பில் வெளியிட ஒப்புக் கொண்டிருந்தார். களஞ்சியம் சார்பில் வெளியிட்டால் உரிமை களஞ்சியத்துக்கு போய் விடும் என்பதால் ஹாமித் பக்ரி தலையில் கை வைத்தார். திர்மிதியை கல்வி சங்கம் சார்பில் வெளியிடுங்கள் என்றார். திர்மிதி கல்வி சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. திர்மிதியை வெளியிட்ட கல்விச் சங்கம் இருந்தால் உரிமை பிரச்சனை வரும் என்பதால் அதை உயிரோடு கொன்றார் கிரிமினல் தலைவர் பி.ஜே. அது மட்டுமன்றி முதல் வெளியீட்டுக்கு மட்டும்தான் கல்விச் சங்கத்துக்கு உரிமை எனவும் எழுதி வாங்கிக் கொண்டார்.

உலகமறியா மடத்தனம்.

இப்படிப்பட்ட மார்க்க வியாபாரிதான் பி.ஜெ. இந்த பி.ஜே.யை அவ்வப்பொழுது அடையாளம் காட்டி இருக்க வேண்டும். அடையாளம் காட்டாததால் தமிழக தென்னை மரத்தில் தேள் கொட்டியதால் இலங்கை பனை மரத்தில் நெறி கட்டி விட்டது என்ற கட்டுக் கதைகளையும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். அவரது கட்டுக் கதையில் ஒன்றுதான் இலங்கையில் இதுவரை எந்த அமைப்பும் ரத்த தான முகாம் நடத்தவில்லை என்பது. இதை உலகம் தெரியாத அவரது விசிலடிச்சான் குஞ்சுகள்தான் நம்ப வேண்டும். உலகம் புரியாதவர்களை ஏமாற்ற வெளியிட்ட அந்த பொய்ச் செய்தியில் கூட அவர்களது உலகமறியா மடத்தனம் வெளிப்பட்டுள்ளது. இலங்கையை குறிப்படும் போது இந்தியாவிலுள்ள ஒரு மாகாணத்தை (மாநிலத்தை) குறிப்பிடுவது போல் இலங்கையை மாகாணம் என குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழக முஸ்லிம்களை தவறாக எண்ண வேண்டாம்.

இலங்கை என்பது ஒரு நாடு என்று தெரியாத அறிவாளிகள்தான் தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத்தில் உள்ளார்கள். இப்படிப்பட்ட அறிவாளிகள் இருந்தால்தான் பி.ஜெ.யின் மார்க்க வியாபாரத்துக்கு அவர்களை பயன்படுத்த முடியும். அவர்களை குஷpப்படுத்தினால்தான் பி.ஜெ.யின் ஹோல்சேல் கடையில் சி.டி. புத்தக வியாபாரம் நடக்கும். எனவே தேங்கி கிடக்கும் களியக்காவிளை சி.டி.க்களின் ஹோல்சேல் விற்பனைக்காக வெளியிடப்பட்டதுதான் மவ்லித் ஓதுவதற்கு இலங்கையில் தடை! இலங்கை ஜம் இய்யதுல் உலமா ஃபத்வா!! என்ற செய்தி. தமிழக தவ்ஹீத் எழுச்சிக்கு இலங்கைதான் முன்னோடி என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கும் வரலாறு உள்ளவர்களுக்கும் தெரியும். எனவே தவ்ஹீத் வியாபாரி கிரிமினல் பி.ஜெ.யின் புரட்டுச் செய்தியைப் பார்த்து தமிழக முஸ்லிம்களை தவறாக எண்ண வேண்டாம் என இலங்கை சகோதரரை கேட்டுக் கொள்கிறேன். வஸ்ஸலாம்.


அன்புடன்:
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி,
துபை.

No comments: