திமுக வை ததஜ ஆதரிப்பது ஏன்?
கேள்வி: ஜெயலலிதா கமிஷன் போட்டார் என்று கூறி 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை தீவிரமாக ஆதரித்த தவ்ஹிதை தன் அமைப்பின் பெயரில் வைத்துக் கொண்ட ஒருவர், மதுரை மத்தியத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளாரே? - கே.எம்.எஸ். சஹாப்தீன், அடியக்கமங்கலம்
பதில்: இவரது பழைய நிலைப்பாடுகளை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரி யமில்லை. அவர் எப்போதும் ஒரே கொள்கையில், நிலைப்பாட்டில் நிலைத்து நின்றதில்லை.
தமுமுகவிலிருந்து தன்னை விலக்கி விட்டதாக முதலில் புளுகிவிட்டு, பிறகு தானே விலகிக் கொண்டதாக ஒப்புக் கொண்டார்.
இது கொடி தூக்கும் கூட்டமல்ல, கொள்கை காக்கும் கூடாரம் என்றார். பிறகு கொடியை உருவாக்கி, அதை தேர்தல் ஊர்வலங்களில் ஆட்டிக் கொண்டு போகச் செய்தார்.
பச்சைக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை என்று முதலில் பச்சைக் கொடிகளை ஏகடியம் பேசியவர், தனது கொடியில் பச்சையை சேர்த்துக் கொண்டு புதுவிளக்கம் கொடுத்தார்.
அரசியல் கூடாது என்று கூறி ஏகத்துவப் பணிகளைச் செய்வதற்காகவே அமைப் பை விட்டுப் போவதாகச் சொல்லிவிட்டு, முழுநேர அரசியல் சித்து விளையாட்டு களில் ஈடுபட்டார்.
தேர்தல் களப்பணி ஈமானையே அழித்துவிடும் என்று கூறிவிட்டு, தேர்தலின் போது முழுவீச்சில் தேர்தல் களப் பணியாற்றினார்.
நரேந்திர மோடியை விடக் கொடியவர் என்று கருணாநிதியை 2006 சட்டமன்றத் தேர்தலில் வர்ணித்துவிட்டு, இப்போது அவர் நிறுத்திய வேட்பாளரை ஆதரிக் கிறார்.
தற்போது முஸ்லிம் வேட்பாளர் என்ற அடிப்படையில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாகச் சொல்லும் இவர், சட்டமன்றத் தேர்தலின்போது புதுக்கோட்டை தொகுதி திமுக
வேட்பாளர் ஜாபரையும், சென்னை பூங்கா நகர் தொகுதி வேட்பாளர் ரகுமான்கானையும், தஞ்சை
தொகுதி வேட்பாளர் உபைதுல்லாஹ் உள்ளிட்டோரை ஏன் எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்று நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
சமுதாயத்தை விட, தன்னலமே பெரியது என்ற கொள்கையை உடைய அவர் தன்னிடம் எஞ்சியிருக்கும் ஒருசில ஏதுமறியா சகோதரர்களை தக்கவைத்துக் கொள்ளவே இந்த முடிவை எடுத்துள்ளார். சுயநலனே தனக்கு அனைத்தையும் விட பெரிது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நன்றி : TMMKONLINE.ORG
No comments:
Post a Comment