Wednesday, September 06, 2006

இறையான்மை காத்த முதல்வருக்கு நன்றிகள்!!

மதவெறியர்களுக்கு சம்மட்டியடி கொடுப்பது போல் "வந்தே மாதரம்" பாடுவது கட்டாயமில்லை என்று கூறி இந்திய இறையான்மையை காத்த மூதறிஞர் கலைஞருக்கு நன்றிகள்!!'வந்தே மாதரம்' என்ற பாடல் இயற்றப்பட்டு நூறான்டு முடிவதால் அனைவரும் அந்த பாடலை பாடவேண்டும் என்றும் அதை பாடுவதன் மூலம் தான் தேசபக்தியை நிறுபிக்க முடியும் அதை பாடவில்லை என்றால் அவன் தேச விரோதி என்றும் அந்த பாடலை தாங்கள் ஆளும் மாநிலங்களில் கட்டாயம் பாடவேண்டும் என்றும் ஹிந்து தீவிரவாத சக்திகளும் மனித சமுதாய எதிரிகளான பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் போன்ற தேசத்தை காட்டிக்கொடுத்து ஆங்கிலேயருக்கு பாதம் கழுவி சேவகம் புறிந்த பார்ப்பன தேச துரோக அமைப்புக்களும் தங்கள் மாநிலங்களில் உத்தரவு பிறப்பித்து தனி மனிதனின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் மீன்டும் இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓட வைக்க வேண்டும் என்ற வெறியிலும் கூச்சலிட்டு வருகின்றார்கள்.

இதை புறிந்து கொண்டதாலோ என்னவோ தான் மத்திய அரசு இதை பாடுவது கட்டாயமில்லை என்று உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனப்படி ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் தான் விரும்பிய மதத்தை சுதந்திரமாக பின்பற்றக்கூடிய மதசுதந்திரம் உண்டு இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக இந்திய பிரஜைகளை கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது அவ்வாறு செய்தால் அது தான் தேச துரோகம். இந்த தேசத்துரோகத்தை தான் இந்து மதவறியர்களும் தீவிரவாதிகளும் தேசதுரோகிகளுமான பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் கும்பல் தாங்கள் ஆளும் மாநிலங்களில் செயல் படுத்தி வருகின்றது.

இதற்கு ஆதரவளிப்பதுபோல் சில ஃபாசிச சிந்தனை பத்திரிகைகளும் எழுதி வருகின்றன. அவர்கள் பாட சொல்லி வற்புறுத்தும் அந்த பாடல் வரிகளின் தமிழாக்கத்தை பாருங்கள்.


தாயே வணங்குகிறோம்!!
இனிய நீர் இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தௌ;ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்!!


இந்தியாவின் இறையான்மையை கேள்வி குறியாக்கும் இந்த பாடலை பாடுவதன் மூலம்தான் நமது தேசப்பற்றை நிருபிக்க வேண்டுமா? சிற்தியுங்கள் மக்களே!! இந்தியா இந்து, முஸ்லிம், கிருத்துவர், சீக்கியர், ஜைனர், புத்தர், தமிழர், திரவிடர் என்று பல முகங்களை கொண்டது இதை அங்கிகரிக்கும் வகையில்தான் இந்திய அரசியல் சாசனம் உள்ளது.

முஸ்லிம்களோ இறைவனை தவிற வேறு யாரையும் வணங்க கூடாது என்ற கொள்கையை உடையவர்கள் அதே போல் பார்ப்பனரல்லாத ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு விதமான வணக்க முறைகள் அவர்களை துர்கையையும் பல இந்து தெய்வங்களையும் வணங்க சொல்லும் இந்த பாடலை பாடினால்தான் நீ இந்தியன் என்று கூறுவது தேச விரோதம்!! தேச துரோகிகளான பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களுக்கு இது எங்கே விளங்க போகின்றது.

ஆனால் பார்பனர்களுக்கும் இந்து மத வெறியர்களுக்கும் ஆப்படித்த தலைவர்கள் பெறியார் மற்றும் பேரறிஞர் அண்ணா வழி வந்த திராவிடத் தலைமகன் மூதறிஞர் கலைஞர்
அவர்கள் இவர்களின் சதித்திட்டங்களை உணர்ந்து தனக்கு வாக்களித்த அனைத்து சமூக மக்களின் உணர்வுகளையும் மதிக்கும் வகையில் இந்த பாடலை பாடுவது கட்டாயமில்லை என்று உத்தரவிட்டுள்ளார்கள். இது மதவெறி பிடித்தலையும் பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் போன்ற தீவிரவாத கூட்டங்களுக்கு தமிழக முதல்வர் கொடுத்த சாடடையடி.


இந்திய இறையான்மையை நிலைநாட்டிய தமிழக முதல்வரே!! மதவெறியர்களை சம்மட்டியால் அடித்தது போன்ற தங்களின் இந்த உத்தரவிற்காக அனைத்து சமுதாய மக்களும் தங்களுக்கு நன்றி செலுத்துகின்றார்கள். உங்களின் இந்த பணி நீண்ட காலம் தொடர நாங்கள் வாழ்த்துகிறோம் ஐயா!!

அதே சமயத்தில் இந்த வெறிபிடித்த பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களின் தேச விரோத சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.

இப்படி பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார மத வெறியர்கள் ஆட்சேபம் தெரிவிப்பதற்கெல்லாம் அரசும், சமுதாயமும் வளைந்து கொடுத்தால் அது அவர்களை மகிழ்விக்கும், வழிக்குக் கொண்டு வரும் என்று நினைப்பது இமாலயத் தவறு. பாரதம் போன்ற மனுஷ்மிருதி என்ற கொடுங்கோல் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், மதவெறியர்களை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இந்த மதவெறியர்களின் உண்மையான நோக்கம் மனுதர்ம் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

'ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தன் – இல்லை என்றால் கிடையாது' என்று இந்த மத வெறியர்களுக்கு ஆதரவாக வெற்று வாதம் செய்யும் பத்திரிகைகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட வுற்புறுதுவதற்காக கூறும் காரணம் பகுத்தறிவின்பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கையின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் இன வெறி சார்ந்தது

தேசபக்த வேடமிடும் மதவெறியர்களும் தேசத்துரோகிகளும் இதை உணர வேண்டும். பாரதப் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் மதிக்கும் மக்கள்தான் முஸ்லிம்கள் அதே நேரத்தில் இஸ்லாத்தின் நெறிமுறைகளை உயிரினும் மேலாக மதிப்பவர்கள். இதற்கு எதிராக, வேண்டுமென்றே பாரதப் பண்பாட்டிற்கு எதிரானதாக இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் அனைத்தையும் சித்தரிக்கும் இந்த மதவெறியர்களின் சூழ்ச்சிகளையும், நாச வேலைகளையும் அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டில் சட்ட ஒழுங்கையும் நாட்டின் இறையான்மையையும் நிலை நிறுத்த வேண்டும்.

அரசியல் சட்டப்படி, சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது, இந்தியாவின் இறையான்மையை குழைப்பது அதற்காக வேண்டி இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டதற்கு எதிறாக இந்திய பிரஜைகளின் கருத்து மற்றும் மத சுதந்திரத்தில் தலையிட்டு நாடெங்கும் வண்முறையை தூன்டும் வகையில் வந்தே மாதர கீதம் பாட வற்புறுத்துவது இந்திய அரசியல் சாசனத்தை அவமதித்தல் என்ற வகையில் தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றம் புரிந்த மதவெறி பிடித்த பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார தலைவர்களை பிடித்துச் சிறையிலடைத்துத் தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் தேச விரோதிகளை சமுதாயம் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். அதற்காக இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய சுதந்திரத்திற்காக உயிரையும் உடமைகளையும் கொடுத்தவர்கள் இந்த இஸ்லாமிய சமூகத்தவர்கள். இந்திய சுதந்திரத்தின் வித்து இஸ்லாமியனால் விதக்கப்பட்டதாகும் இதற்கு சறித்திரம் சான்று பகர்கின்றது. இந்திய தேசியக்கொடிக்கு தம் உதிரத்தால் வர்ணம் கொடுத்தவர்கள் எம் இஸ்லாமியர்கள். கைபர், போலான் கணவாய் வழியாக வந்த வந்தேறிகளே!! மீண்டும் ஒரு முறை எமது தேச பக்தியை சோதிக்க என்ன வேண்டாம் ஏனெனில் அது மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு வழி வகுத்துவிடும் முந்தைய சுதந்திரத்திற்காக எம் முன்னோர்; சிந்திய ரத்தம் இன்னும் காயவில்லை அதற்குள் எம்மை அந்நியர் என்று கூறி இன்னுமோர் சுதந்திரப்போருக்கு வழிவகுக்காதீர்!! திப்பு சுல்தான்களும், பகதுர்ஷாக்களும், மாப்பிள்ளைமார்களும் இன்னும் எம்மிடம் ஏராளம் உள்ளனர்!! எம் வீரம் இன்னும் மாறவில்லை!! எம் இனத்தின் சுதந்திர போராட்ட தியாகங்களை நீங்கள் எத்தனைதான் மஐறத்தாலும், மறுத்தாலும் எமது தேசப்பற்று என்றும் குறைவதில்லை!!


நன்றி

முகவைத்தமிழன்

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

No comments: