Monday, September 04, 2006

தமிழ்நாட்டின் தரங்கெட்ட ஜமாஅத்தினர் (ததஜ)

தமிழ்நாட்டின் தரங்கெட்ட ஜமாஅத்தினர் (ததஜ)

தௌஹீதை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டோம் என கூறிக்கொண்டு அராஜகம் செய்து கொண்டும், பள்ளிவாசல்கள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரித்துக் கொண்டும், கேவலமான அரசியலில் விலைபோய் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கும் ததஜ-வினரின் இன்னொரு முகத்தை தெரிந்து கொள்ள வேண்டியே இந்த பதிவை போட வேண்டியிருக்கிறது.

எனது இதற்கு முந்தைய பதிப்புகளில் கூட நான் இவர்களையோ அல்லது வேறு எந்த இயக்கங்களையோ மோசமாக விமர்சித்து எழுதியதில்லை, வாய்ப்புகள் இருந்த போதிலும். இயக்கம் சாரா நடுநிலையாளனாகவே இருக்கவே எண்ணியுமிருக்கிறேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால், உடனடியாக இவன் தமுமுக அல்லது விடியல் போன்று சில ரெடிமேட் பதில்கள் வரலாம். அதற்காக வேண்டியே இங்கே இதைச் சொல்கிறேன்.

சமீபமாக ஒரு சில மாதங்கள் ஊர் சென்று வர விடுமுறை கிடைத்தது. அப்படி சென்ற போது நடந்த ஒரு சம்பவம். மதுரை அருகே உள்ள நண்பர் இல்லத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாளைய நட்பு, ஆண்டுகள் பல கழிந்த சந்திப்பு.

ரொம்பவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நீங்கள் சவுதியில் எங்கே இருக்கிறீர்கள் என கேட்டார்கள். பகுதியைச் சொன்னேன். அப்படியா எங்கள் _________ (ஒரு சில காரணங்களுக்காக உறவு முறையை தெரிவிக்கவில்லை. ஏன் என்று இறுதியில் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்) கணவர் புதுமாப்பிள்ளையும் உங்கள் பகுதிதான். மேமாதம் தான் திருமணம் நடந்தது என்றார்கள். நான் சொன்னேன், அப்படியா ஒரு வேளை பார்த்திருப்பேன் என நாசூக்காக கழண்டு கொண்டேன்.

அவர்கள் உடனடியாக கல்யாண சிடியைப் போட்டு பாருங்கள், நீங்கள் அங்கேயும் போய் அவர்களை பார்த்து பேசி பழகுங்கள் என்றெல்லாம் கூறினார்கள். நான் சொன்னேன், எனக்கு கல்யாண சிடி எல்லாம் பார்க்கும் பழக்கம் கிடையாது என்று. ரொம்பவும் வற்புறுத்தல் மற்றும் அன்புத்தொல்லை. இறுதியில் மாப்பிள்ளையை மட்டும் பாருங்கள், கல்யாணம் எல்லாம் முழுசாக பார்க்க வேண்டாம் என்றார்கள். சரி என்று சம்மதித்தேன். சிடியும் ஓடியது.

மாப்பிள்ளை சும்மா மாப்பிள்ளை கணக்காக உட்கார்ந்திருக்கிறார். பார்த்தவுடன் ரொம்பவும் ஷாக். காரணம், மாப்பிள்ளையை எனக்கு ஏற்கனவே தெரியும். அல்கோபர் பகுதியின் கிளைபகுதியின் ததஜவின் தலைமை பொறுப்பில் இருக்கின்றவர். ரொம்பவும் ஷாக்கானதற்கு காரணம், மணமகள் வீடு 100 சதவீதம் அக்மார்க் சுன்னத்-வல்-ஜமாஅத், அதாவது இவர்கள் பார்வையில் குராபிகள். என்னங்க, கல்யாணம் தௌஹீது முறையில் நடந்ததோ என ஒரு திருப்திக்காக கேட்டேன். ச்சேச்சே... அப்படியெல்லாம் செய்யக்கூடியவர்கள் அல்ல அவர்கள் என்றார்கள். சரி, பரவாயில்லை, சிடியை முதலில் இருந்தே போடுங்கள் என்றேன். ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். நான் சொன்னேன், சும்மாதான் போடுங்கள் பார்க்கலாம் என்று.

அந்த கல்யாண சிடியை பார்த்தால் தெரியும், ததஜவின் பொறுப்புதாரிகளின் நிலை என்ன என்று. ஆரம்பம் முதல் இறுதி வரை சினிமா பாட்டு. ஹிஜாப் இல்லாத பெண்கள் குறிப்பாக இளம் பெண்களை குறிவைத்தே எடுக்கப்பட்ட கேமரா... மாப்பிள்ளையோ கிளீன் ஷேவ். அட இதுவல்லவா தவ்ஹீது என்று எனக்குள் நானே நொந்துகொண்டேன். சரி பார்ப்போம் என்னவெல்லாம் நடக்கிறது என்று.

வயல் வரப்பு ஆடு மாடு டூயட் என எல்லாம் கழிந்து கடைசியில் நிக்காஹ் காட்சி. புத்தம் புது பாடல்... அது முடிந்தவுடன் நிக்காஹ் ஓத ஆரம்பிக்கிறார்கள். எந்த நிக்காஹை ஓதக்கூடாது என்று சண்டை போட்டார்களோ அது வெல்லாம் அப்படியே ஓடுகிறது. அல்பாத்திஹா என ஒருவர் கூற எல்லாரும் ஓத ஆரம்பிக்கறார்கள். பிறகு கூட்டுதுஆ. எல்லாரும் ஆமீன் ஆமீன் என மண்டையை மண்டையை ஆட்டுகிறார்கள். அட என்ன கொடுமைடா சாமீ... தௌஹீதாம் தௌஹீது... அல்லாஹூம்ம அல்லிப் பைனகுமா துஆவும் ஓதப்படுகிறது. மாப்பிள்ளையின் முகத்தை பார்க்கிறேன். அட மாப்பிள்ளை களையுடன் சுகமாகவே இருக்கறிhர். இதெல்லாம் அவருக்கு பெருசு ஒன்றும் இல்லைபோல.

தாலி கட்டவேண்டாமா? மணமகள் அழைத்து வரப்படுகிறார். ஹிஜாப் கிடையாது. மணமகள் அலங்காரத்துடன் நகைக்கடையாய் வருகிறார். ஏதோ ஒருவர் தாலி மாலையை எடுத்து எல்லாருக்கும் காட்டுகிறார். ஒரே சந்தோஷம், ஆரவாரம். எனக்கு மனதோ சுக்கு நூறாகிறது.
எத்தனை எத்தனை திருமணங்களை கேலி செய்திருக்கிறார்கள். பிரச்சனைகள் செய்திருக்கிறார்கள். அடிதடி நடத்தியிருக்கிறார்கள். இந்த மாதிரி எல்லாம் திருமணம்
செய்யக்கூடாது என்று சொல்லி. எத்தனை குடும்பங்களை பிரித்திருக்கிறார்கள். எத்தனை பேர் ஜமாஅத்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ததஜவின் தலைமை
பொறுப்பாளர்களுக்கு தனி தவ்ஹீதோ???? என்னடா மனுசங்க இவிங்க.

அதற்கு பிறகு நான் கண்ட காட்சிகள் அத்தனையும் அனாச்சாரங்களும் ஆரம்பரங்களுமே தான். இஸ்லாமிய திருமணங்கள் என்று நாம் எதை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோமோ அதில் 1 சதவீதம் கூட அங்கே காண முடியாது. அத்தனை விஷயங்களும் நம்மால் ஜீரணிக்க முடியாதவை.
சந்தோஷமாக ஆரம்பித்த அன்றைய தினம் எனக்கு மனதிற்கு மிகப்பெரிய வலியை தர ஆரம்பித்தது. இருப்பு கொள்ளாமல் தவிர்த்தேன். மணமகளின் உறவினர் எனது நீண்ட கால நண்பர் ரியாத் பகுதியில் குடும்பத்தோடு இருக்கக்கூடியவர். அவரும் விடுமுறையில் இருப்பதை அறிந்தேன்.

உடனடியாக அவரது இல்லம் நோக்கி சென்று அவருடன் அளவளாவினேன்.
அதிக நேரம் அவரிடம் மறைக்க முடியாமல் நேரடியாகவே கேட்டேன். உங்களுடைய _________ மாப்பிள்ளை கோபர் பகுதியின் ததஜ தலைமை பொறுப்புதாரி என்பது தெரியுமா என்றேன். ஆமாம் என்றார். ஆனால் திருமணத்தில் கொஞ்சம் கூட தௌஹீது வாசனையே இல்லையே... நீங்கள் பார்க்க வில்லையா என்று கேட்டேன்.

அவர் சொன்னார், இந்த திருமணத்தின் போது நானும் ஊரில் இல்லை. ரியாத்தில் தான் இருந்தேன். ஆனால் எல்லா விஷயங்களும் அறிந்தேன். மாப்பிள்ளையிடம் இதுபற்றி கேட்ட போது, அதெல்லாம் அங்கு (சவுதியில்) இருக்கும் போது பேசிக்கொள்ளலாம். ஆனால் பிராக்டிக்கலாக இதெல்லாம் சாத்தியமாகாது என்று சொல்லிவிட்டார் என்று நண்பர் மூலம் அறிந்தேன் என்று கூறினார். நண்பருக்கும் கூட ரொம்பவும் வருத்தம். நானோ நொந்து நூலாகிப்போனேன். முனாஃப் மற்றும் அடிவருடிகள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது மீண்டும் அவர்

விடுமுறைகழிந்து வந்து பழையபடி ததஜ-வாக நடமாடிக்கொண்டிருப்பதுதான் ஹைலைட்.

இதை ததஜ-வினர் யாராவது மறுத்தால் மணமகனின் பெயர் போட்டோ, வேலைபார்க்கும் நிறுவனம் மற்றும் தொலைபேசி எண் உட்பட அனைத்தையும் உடனே தரத்தயார்.

ச்சே... என்ன மனிதர்கள். தௌஹீது பிராக்டிகலாக ஒத்துவராது என்று கூறக்கூடிய ஒருவர் ததஜ-வின் தலைமை பொறுப்புதாரி. ததஜவினரே கேவலமாக இல்லையா உங்களுக்கு. இதற்கிடையில் நாங்கள் தான் உண்மையான தவுகீது வாதிகள் என கூக்குரல் வேறு. கள்ளம் கபடம் இதுதான் உங்கள் கொள்கை என்பதற்கு இதைத்தவிர வேறென்ன வேண்டும். வசூல் ராஜாக்களாக இருப்பதற்கு மட்டும் எங்கே மக்கள் கேள்வி கேட்டு விடுவார்களோ என்பதற்காக தவுகீது என நாடகமாடுகிறீர்கள் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல வேண்டும்.

கீழுள்ள பொறுப்புதாரிகளை என்ன சொல்ல வேண்டும். ததஜ தமுமுக பிரிந்தவுடன் நடந்த கூட்டத்தில் பாக்கர் தே....மகனே என அனைவருக்கும் முன்பாக மூன்று முறை
மைக்கில் உரத்து கூறியது எனக்கு ஞாபகம் வந்தது. எங்கள் ஊர் சேரிகளில் உள்ளவர்களில் கூட இருக்கும் முஸ்லிம்கள் இந்த வார்த்தையை கோபத்தில் கூட சொல்லமாட்டார்கள். ஆனால்,
ததஜ-வின் மாநில தலைமை, பல வருடங்களாக தவுகீதை கடைபிடித்து வருவதாக சொல்லிக்கொண்டிருக்ககூடியவர்களின் நிலை இது.

ஆனால், இவ்வளவு நடந்தும் விசிலடிச்சான் குஞ்சுகளின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. சமீபத்தில் லெபனான் மக்களுக்கு ஆதரவாக பாக்கர் பேசியதை (???) கேட்க நேர்ந்தது. விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டது என்பதை யாராவது அவருக்குச் சொன்னால் நல்லது. அவர் குறைந்த சப்தத்தில் பேசினாலும் அதிக சப்தத்தில் கேட்க வைக்க சாதனங்கள் இருக்கிறது என்பதை தயவு செய்து யாராவது சொல்லிவிடுங்கள். அவர் போடக்கூடிய சப்தத்தில் என்ன பேசுகிறார் என்பதே கேட்கவில்லை. ஒருவேளை என்ன பேசுகிறோம் என்று யாரும் தெரிந்து விடக்கூடாது என்று நினைத்து இப்படி ஊளையிடுகிறாரோ என்பதும் தெரியவில்லை. ஆனால், விசிலடிச்சான் குஞ்சுகளோ ஓஹோ..... ரஜினி ரசிகர்கள் தோற்றார்கள் போங்கள். இவர்களை நினைத்து பலநேரம் பரிதாபப்படத்தான் வேண்டியிருக்கிறது.

பாக்கர் அடித்தொண்டையிலிருந்து டேடடடடடடடடடயய்ய்ய்ய்ய்ய்ய்ய்....... எனக் கத்துகிறார். விசிலடிச்சான் குஞ்சுகளோ, அல்லாஹூ அக்பர் என கோஷமிடுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. டேய்ய்ய்ய்-க்கும் அல்லாஹ்விற்கும் என்ன சம்பந்தம். ஏன் இவர்கள் சம்பந்தமே இல்லாமல் இப்படி கோஷமிடுகிறார்கள். ஒருவேளை உற்சாக பானம் காரணமாக இருக்குமோ? அல்லாஹ் அறிவான். இதற்கிடையில் இவரோ... நாங்கெளெல்லாம் கிசுபுள்ளாக்களாக்கும் என கோஷமிடுகிறார். மதரஸா மாணவிகள்... பாவம் ரோட்டு ஓரமாக நின்றுகொண்டு பிறருக்கு பார்வைப்பொருளாகிறார்கள். ஆகமொத்தம் இவர்கள் சமுதாயத்தை எங்கே கொண்டு செல்கிறார்கள். அல்லாஹ்விற்கே வெளிச்சம்.

இப்போது சொல்லுங்கள்.... இவர்கள் தமிழ்நாட்டின் தவ்ஹீது ஜமாஅத்தினரா அல்லது தமிழ்நாட்டின் தரங்கெட்ட ஜமாஅத்தினரா?

இறுதியாக ஒன்று, சமுதாயத்தில் இவர்கள் காண்பிக்கும் அடாவடித்தனங்களுக்கும், பிற சமுதாய மக்களிடையே நம்மை கேலிப் பொருளாகவும் காண்பிப்பதற்கு பல காரணங்களை பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு கிடைத்த ஒருதகவலை யாராவது ஆராய்ச்சி செய்யுங்களேன். நிச்சயமாக இது பொய்யல்ல. யாராவது ஆராய்ச்சி செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கலாம். இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இஸ்லாமிய வளர்ச்சியும் முஸ்லிம்களின் பலமும் பெருகுவதை காண சகிக்காத அமெரிக்க இஸ்ரேல் உளவு நிறுவனங்களின் கைப்பாவையாக இவர்கள் மாறிவிட்டார்களா? அதற்கான பல சாத்தியக்கூறுகள் நம் முன் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இருந்தாலும் யாராவது ஆராய்ச்சி செய்யுங்களேன்...

இப்படிக்கு
அபு பாத்திமா

இஸ்லாம் காரைக்குடி மூதூர் இஸ்லாமியர்கள் முஸ்லிம்கள்

1 comment:

Anonymous said...

oru silar seyyum thavarukkaha oru JAMATHAIK KURAI KOORA MUDIYATHU. bUT UNGAL VATHATHIL NIYAYAM ILLAMAL ILLAI. THANGALE MUN UTHARANAMAHA IRUKKA VENDIYAVARHAL THAVARANA PINNUTHARANAMA IRUPPATHAI IPPADI SUTTINAL THAN BUTHTHI VARUM.
AHMED - RIYADH