கோவை : கடந்த 15-08-2006 அன்று தமிழகமெங்கும் மனித நீதிப் பாசறையின் சார்பாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. MNP யின் பாலர் பிரிவான ஜம் இய்யத்துல் அத்ஃபால் சார்பாகவும் மனித நீதிப் பாசறையின் சார்பாகவும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய தேசிய கொடியேற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன. இது குறித்து MNP யினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
கோவையில் கடந்த 15-08-2006 அன்று காலை 8-30 மனியளவில் மனித நீதிப் பாசறையின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து MNP யின் மாவட்ட தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து சமூக கொடுமைக்கு எதிராக மீன்டும் ஒரு சுதந்திர பயனத்தை தொடர வேண்டும் என்று உரையாற்றினார். பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறினர். இதில் மனித நீதிப்பாசறையின் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
ஆன்று மாலை 7-15 மணிக்கு கோவை K.S.G ஆடிட்டோரியத்தில் வைத்து சுதந்திர தின நிகழ்ச்சி எம்.என்.பி யின் பாலர் பிரிவான ஜம் இய்யத்துல் அத்ஃபால் சார்பாக நடைபெற்றது. MNP யின மாவட்ட தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார் கே.கே. ஷேக் தெஹ்லான் பாக்கவி அவர்கள் இந்திய சுதந்திரமும் வேலூர் புரட்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தர்மராஜ் (தகவல் மற்றும் ஆவண காப்பாளர்-சர்வ சிக்ஷ அபியான் SSA) நட்ராஜ் (கல்வி ஆலோசகர் சர்வ சிக்ஷ அபியான் SSA)ஆகியோர் கலந்து கொண்டனர். ஆதைத்தொடர்ந்து ஜம் இய்யத்துல் அத்ஃபால் சிறார்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின பாடல்களை பாடி சிறுவர்கள் மகிழ்ந்தனர்.கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் சகோ. முகம்மது ஜாபர் அவர்கள் நன்றியுறையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.
MNP யின் செய்தி குறிப்பு நகல் டவுன்லோட் செய்ய
பக்கம் - 2
இஸ்லாம் முஸ்லிம்கள்
No comments:
Post a Comment