Saturday, August 19, 2006

ஹஜ்ஜிற்கு இடஒதுக்கீடு - முதல்வர் ஆவன செய்வாரா?

சென்னை: கடந்த 15-08-2006 அன்று எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் ஜனாப் டி.பி.எம். மைதீன் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வருடம் தமிழக அரசின் ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ் பயனம் மேற்கொள்ள விண்ணப்பித்திருந்தோர் குழுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர் .

  • மொத்தம் விண்ணப்பித்திருந்தோர் : 5004 பேர்
  • குழுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டோர் : 3381 பேர்
  • காத்திருப்போர் பட்டியளில் வைக்கப்பட்டிருப்போர் : 301 பேர்
  • தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டோர் : 1322


இந்நிகழ்ச்சியில் ஆர்க்காடு இளவரசர் ஜனாப்.நவாப் முஹம்மது அலி மற்றும் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை செயளர் ஜனாப் அலாவுதீன் ஐ.ஏ.எஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்களது விண்ணப்பங்கள் ஏற்க்கப்பட வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.


எல்லா வருடமும் மத்திய அரசு தவறான விகிதாச்சார அடிப்படையில் தென்மாநிலங்களுக்கு குறைந்த அளவிலேயே இடங்களை வழங்கி வருகின்றது ஆனால் உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 28000 க்கும் மேற்ப்பட்ட இடங்களை வழங்கி உள்ளது. வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என்ற பழமொழியை மாற்றும் விதத்தில் தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்து உடனடியாக தமிழகத்தில் ஹஜ்ஜீக்கு விண்ணப்பித்த அனைவரது விண்ணப்பங்களையும் ஏற்க ஆவன செய்யவேண்டும். இதற்காக தமிழக இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் முதல்வரை வலியுருத்த வேண்டும்.


விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட 1322 நபர்களுக்கும் மற்றும் காத்திருப்போர் பட்டியளில் உள்ள 301 நபர்களுக்கும் உடணடியாக ஹஜ் பயனம் மேற்கொள்ள அனுமதி வழங்க முதல்வர் ஏற்பாடுகள் செய்வார் என தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றார்கள்.அதுமட்டுமல்லாது எதிர்வரும் காலங்களில் மத்திய அரசிலிருந்து தமிழகத்திற்கான ஹஜ் இடஒதுக்கீட்டை அதிகரித்து பெற தமிழக அரசு முயல வேண்டும்.


நன்றி


முகவைத்தமிழன்

இஸ்லாம் முஸ்லிம் தமிழ் மன்றம்

No comments: