Thursday, August 17, 2006

எங்கே செல்கின்றது என் சமுதாயம்?

எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது சமுதாயம்?
சமுதாயமே எங்கே சென்றுக் கொண்டிருக்கிறாய்?

அவர்களே அவர்களை அறிந்துக் கொள்ளட்டும்

சமுதாயத்தில் மலிந்துக் கிடக்கும் பிரச்சினைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. அவைகள் சில சமயங்களில் சமுதாய மக்களிடம் எடுத்து சொல்வது அல்லது அவைகள் பற்றிய உணர்வுகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இன்றைய சூழலில் இல்லை என்பதுதான் உண்மை. இஸ்லாமிய மார்க்கம் ஒரு உலக ஒற்றுமை சின்னமாக பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட ஒன்றுதான் என்பதில் நாம் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. பொதுவாக இன்று இஸ்லாம் உலக அளவில் சந்திக்கூடிய பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவைகள் தோன்றுவதாகானக் காரணங்கள் என்னவென்று நாம் நடுநிலையாக சிந்தித்துப் பார்க்கின்ற பொழுது,நம்மிடயே சிதறிக்கிடக்கின்ற கருத்து வேறுபாடுகள் முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றது. ஏனென்றால் நம்முடைய மார்க்கம் சாந்தியையும், சமாதானத்தையும் மாற்றுமத சகோதரத்துவ சமுதாய மக்களிடையே ஒரு நன்னோக்கோடு அணுகக்கூடிய நிலையில் இருந்தது.ஆனால் சமீபக்காலமாக கருத்து வேற்றுமைகளின் காரணமாக பல ச்சரவுகளை இஸ்லாமிய இளைஞர்கள் சந்திக்கவேண்டிய சூழ்நிலையை சில சந்தர்ப்பவாதிகள் (நயவஞ்சகர்கள்) இளைஞர்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி, இதுதான் மார்க்கம் என்பது போன்ற எண்ணங்களை அவர்களிடையே பதிய செய்து, அவர்களின் செயல்பாடுகளை திசைத் திருப்பியிருக்கிறார்கள்.மார்க்கத்தில் நாம் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய,இஸ்லாத்தை பிற மத்தவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய நிலைமாறி, இன்று சமுதாய மக்களிடையே அவர்களின் விசத்தனமானக் கருத்துக்களை மீடியா மற்றும் பத்திரிக்கைகளும் அவ்வபோது சித்தரித்துக்காட்டிக் கொண்டிருக்கிறது என்பது மனித சமுதாயம் வருத்தப் பட வேண்டிய ஒன்று,ஏனென்றால் உலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன,அதேசமயம் எந்த ஒரு சமுதாயமும் தனிப்பட்ட முறையில் தாக்கப்படுவதற்கு அனுமதிப்பதில்லை. இதற்கெல்லாம் முக்கியக் காரணங்கள் என்னவென்று பார்போமேயானால் உண்மைகள் மறைக்கப்பட்டு சில விசமிகளால் தூண்டப்பட்டு அவர்களின் தூண்டுதல்களுக்கு தலைவணங்குவது அல்லாமல் வேறு என்னவாகயிருக்க முடியும்.?

சமுதாயம் சந்திக்ககூடிய பிரச்சினைகள் என்று நாம் சிந்திக்கும்பொழுது அவைகளை நாம் இவ்வாறாக இனம் கண்டுக்கொள்ள வேண்டியுள்ளது.

1. உலகளாவிய பிரச்சினைகள்
2. உலகளாவிய பிரச்சினைகளில் சமுதாயம் சார்ந்த நாடுகளை குறிவைத்துத்தாக்குவது.
3. நாட்டிற்குள்ளான பிரச்சினைகள்
4. கருத்து வேற்றுமைகளினால் குடும்பங்களில் பிரச்சினை என அன்றாடம் சமுதாய மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

'ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் ' எனும் இறைமொழியை அடைமொழியாக கொண்டவர்கள் மேடைகளிலும், துண்டுபிரசுரங்களிலும் மட்டுமே அறிவித்துவிட்டு, சமுதாயத்தை பிளவுபடுத்த கருத்து வேற்றுமைகளை மக்களிடையே பரப்பி வேற்றுடையையே தனது முற்கால சாதனைகளாகக் கொண்;டுயிருக்கின்ற அவர்களின் நிலையையும் இளைஞர்கள் அறிந்தக் கொள்வதும், அவர்களை விளங்கி செயல்படுவதும் மிக முக்கியம்.சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கருத்துக்கள் மார்க்க அறிஞர்களிடம் நிறைய இருக்க,திசையை திரும்ப செய்திருக்கிறார்கள் அந்த குழப்பவாதிகள் ஆம் எப்படியென்றால் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகவும்,இருக்கின்ற ஒன்றை இல்லாததாகவும் மார்க்கத்திற்கு முரணான நச்சுக்கருத்துக்களை நயவஞ்சகக்கூட்டம் மக்களிடம் பரப்பும் போது மார்க்க அறிஞர்களின் நிலைபாடு மாறி, சமுதாய மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களும், விளக்கங்களும் தடைபட்டு நயவஞ்சகக்கூட்டத்திற்கு தக்க விளக்கத்தை தர வேண்டிய நிலைக்கு அவ்வபோது களமிறங்குகிறார்கள். இதனால் மார்க்க அறிஞர்களின் பணி பாதிக்கிறது என்பதை நடுமை நலைக்கொண்ட நெஞ்சங்கள் மறுக்க முடியுமா?

பொதுவாக உலகில் செயல்படக்கூடிய அனைத்து செயல்பாடுகளுக்கும் அல்லது அனைத்து முயற்சிக்கும் பின்னால் ஒரு நோக்கம் இருப்பது உலக நடைமுறைதான் என்றாலும், ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டிய சமுதாய மக்களை இயக்கங்களாகவும்,கூட்டங்களாகவும் தனக்கு பின்னால் ஒரு மக்கள் படையை திரட்ட செய்ய வேண்டும் என்பது போன்ற நோக்கத்தில் செயல்படக்கூடிய இயக்கங்களுக்கும், கொள்கை பிரச்சாரக்காரர்களுக்கும் பின்னால் ஒரு நேக்கம் இல்லாமல் இருந்துவிடுமா? என்ன! இப்படிப் பட்ட கொள்கையைக் கொண்ட இவர்களுக்கு இவ்வாறு தான் பின்னணிகள் இருக்குமோ என்பது போன்ற சந்தேகங்களும் நமக்கு எழுகிறது. ஒரு ஊரில் ஒரு ஆசாமியிருந்தாராம் அவரிடம் ஒருவர் இவ்வாராக முறையிட்டாராம், என்னை இந்த ஊரில் எவருமே மதிப்பது கிடையாது என் சொற்களை அவமரியாதையும் செய்து வருகிறார்கள்.

எனவே இந்த மக்களும் என்னை மதித்து நடக்க ஒர் உபதேசம் செய்யுமாறு அந்த பெரியாரிடம் முறையிட்டாராம், அதற்கு அப்பெரியார் மக்கள் என்ன சென்னாலும் அதற்கு மாற்று கருத்தை சொல்லிக் கொண்டுவா மக்கள் இருக்கும் என்பார்கள் எப்படியிருக்கும் என்று நீ கேள். மக்கள் இல்லை என்பார்கள் நீ இருக்கிறது என்று சொல். மக்கள் எப்படி சொல்கிறார்களோ அதற்கு ஏற்ப மாற்றுக் கருத்தை மக்களிடம் தெரிவித்து வா. நீ அறிஞனாக போற்றப்படுவாய் என்று அப்பெரியார் உபதேசித்தாராம்.இவ்வாறாக அந்தக் கூட்டம் நினைத்து தன்னை தமிழகத்தில் சிறந்த ஆன்மிகவாதியாகவும், பேரியக்கவாதியாகவும் தமிழக முஸ்லீம்கள் நம்பி விடுவார்கள் என்று அவர்கள் எண்ணி விட்டார்களோ என்னவோ! அல்லாஹ் அறிந்தவன். எது எப்படி போனாலும் சமுதாயத்தை சமுதாயம் சார்ந்த சகோதரராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பிளவுப் படுத்திக் கொண்டிருக்கின்ற இவர்களை சமுதாயம் சான்றோர்களும், மார்க்கத்தின் தூண்களான அருமை இளைஞர்களும் கண்டுக் கௌ;ளாமல் இருந்துவிட முடியாது அல்லவா?

நாம் யாரையும் குறைகூறுவதற்கோ, தாக்குவாற்கோ, தூக்குவாற்கோ நமது நோக்கமும் அல்ல,அந்த தகுதியும் இல்லை. அதே நேரத்தில் சமுதாயத்தின் அவலங்களை சுட்டிக்காட்டி இறையையும், மறையையும் சுமந்த நெஞசங்களே சிந்திக்க சீர்மார்க்கம் எண்பதுணர்ந்து விசமிகளின் விளையாட்டால் சாந்தி மார்க்கத்தை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் நம்மை எங்கே அழைத்து செல்வார்கள் என்பது ஒவ்வொரு உள்ளமும் அறியாததொன்றும் இல்லை.

அதே சமயத்திலே இஸ்லாமிய மார்க்கமும்,இறைமறையும் நம்மை சிந்திக்கும்படி பணிக்கின்றதாக மார்க்க அறிஞர்கள் நமக்கு அவ்வபோது எடு;த்துரைக்கிறார்கள். உறங்கி கிடக்கும் உள்ளங்களே விழித்துக்கொள்ளுங்கள் சிந்திக்க முற்படுங்கள் என்று சமுதாய மக்களை அரைக்கூவல் செய்யக்கூடிய நிலையில் தான் நாம் இருந்துக் கொண்டடிருக்கிறோம். நல்ல கருத்துக்களை சொல்வது போன்று அதனிலும் நச்சுக் கருத்துக்களை திணிக்கின்ற போது, மார்ககத்தை ழழுமையாக பின்பற்ற வேண்டும், மறுமையில் வெற்றியை அடைந்து விட வேண்டும் என்று துடித்த, துடித்துக் கொண்டிருக்கின்ற இளைய சமுதாயமே நீ இப்படியும் பகுத்துணர்ந்து சிந்திக்க முற்பட வேண்டும். மார்க்கத்தை இவர்கள்தான் சீர்திருத்த வந்தவர்கள் போலும், மற்ற மார்க்க அறிஞர்கள் அடிமுட்டாள்கள் என்றும் பலயிடங்களிலும் பலவராக சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்ற இவர்களின் நிலையையும் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டாமா?

இன்றைய தமிழக இஸ்லாமிய இளைஞர்களின் உள்ளங்கள் குறிப்பட்ட அறிஞர்களிடம் தான் அறிவுரைகளும்,விளக்கங்களும் பெற வேண்டும் மற்ற அறிஞர்களின் கருத்து மார்க்கத்திற்கு முரணான ஒன்று என்று இளைஞர்களின் உள்ளங்களில் பதியப்பட்டதின் நோக்கத்தை சமுதாயமே நீ அறிந்துக் கொண்டாயா? என்ன நோக்கமாகயிருக்க முடியும், அவ்வாறு அனைத்து அறிஞர்களின் கருத்துக்களையும், விளக்கங்களையும் இளைய சமுதாயம் அணுகத் தொடங்கினால் உண்மையை அறிந்துக் கொள்வார்கள் தனது இயக்கத்தின் கீழ் இருக்கமாட்டார்கள் என்பது போன்ற எண்ணங்கள் அல்லாமல் வேறு என்ன?

சமுதாயத்தில் அனாச்சாரங்களும், அட்டுழிங்களும் மார்க்;கம் பேசும் மக்களிடம் மலிந்து கிடக்கிறது என்பதையும் நாம் ஒரு போதும் மறுக்கவில்லை. சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்டவர்கள் செய்கின்ற தவறுக்காக ஒருவன் சிறைபிடிக்கப் படுகிறான் என்றால் அவன் குற்றவாளி என்பதால்தான். அதற்காக ஒட்டுமொத்த சமுhதயத்தையுமே குறைக்கூறுவது எந்த வித்தில் நியாயம். இவர்களின் பின்னால் கூட்டமும் கொடியும் எதை சாதித்ததற்கு? என்பது நினைத்து சிர நேரங்களில் நாம் வேதனைப்படுகின்ற ஒன்றாகதான் இருக்கிறது.

அரசியல் கரை வேட்டிகள் - நம்மை காலை வாரும் கோஷடிகள் என்றால்
இவர்கள் கரையில்லா வேட்டிகள் - காசை சுருட்டும் கேடிகள்

என்று அவர்கள் தரப்பிலிருந்து பிரிந்த தொண்டர்களே விமர்சிக்கிறார்கள் என்றால் அங்கே என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என்ன நடந்திருக்கும்! என்பதெல்லாம் வள்ள இறைவனுக்கு வெளிச்சமாக போகட்டும். இளைஞனே தொன்று தொட்டு இவர்கள் தன்னையும், தன் இயக்கத்தையும் தாங்களாகவே புகழ்ந்து புகழாரம் சூட்டியவர்கள் என்பதெல்லாம் வெட்ட வெளிச்சத்தில் கிடக்கின்ற சாக்கடைகள்தான். மார்க்கம் சொல்லுகின்ற தகுதி எப்படிப்பட்ட அறிஞர்களுக்கு உண்டு என்பதையும், நாம் பின்பற்றிக்கொண்டிருக்கின்ற நிலையையும் நீனே உணர்ந்து பார். மார்க்கத்தின் மக்களை ஒருக் குடையின் கீழ் ஒன்று படுத்துகின்ற அறிஞர்களுக்கு மார்க்கம் சொல்லுகின்ற தகுதியிருக்கிறதா? அல்லது மார்க்கம் என்ற போர்வையில் இருந்துக் கொண்டு சந்தற்ப்பத்திற்கு ஏற்ப தன்னையும் தன் விளக்கத்தையும் மாற்றிக்கொள்ளக்கூடிய விசமிகளுக்கு இருக்கிறதா?

இன்று யாரும் யாரையயும் தாக்க வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது. மேடை போட்டு , பாரம்பரியமிக்க மக்களையும், நிர்வாகத்தையும் விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன அவர்களுக்கு வந்தது என்பது போன்ற கேள்விகள் நமக்குள் நெடுங்காலமாக இருந்து வருகின்ற ஒன்றுதான். இவர்கள் அவர்களை மேடைப் போட்டு வசைப்பதடுவதும், அவர்கள் இவர்களை மேடைப்போட்டு வசைப்பாடுவதற்கும் என்ன அவசியம் வந்தது. மாறாக இப்படியிருக்குமானால் நாம் வரறேக தயாரகியிருக்போம் மார்க்கத்கின் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் கூட்டங்கள் முறையாக இருந்து இருக்குமானால் (அடுத்தவர்களை விமர்சிக்காமல்) சத்தியத்தை எடுத்தரைக்க முழக்கமிட்டிருக்குமானால் நன்றாக இருந்திருக்கும்.

அரசியலில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்கின்ற செயல்போலவா நம் மார்க்கத்தை வழிநடத்துவது.தமிழகத்தில் சாதனைகள் என்று களமிறங்கி பல வேதனைகளை சமுதாயத்தின் மேல் சுமத்தியிருக்கிறார்களே அவர்களை சமுதாயத்தில் எந்த நிலையில் வைப்பது? தனித்தனி பிளவுகளும் பிரிவுகளும் ஏற்படக் காரணம் யார்? இவைகளுக்கு நாம் பதில் அளிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் நம்மைக் கொண்டு தமிழகத்தில் தனது முகவரியை பதித்தவர்கள். எனவே பிளவுகள் என்ற நோக்கில் யாராகயிந்தாலும், எந்த இயக்கத்திற்கு தலைவராகயிருந்தாலும் அவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லாமல் யார்? ''ஒரே மரம் தோப்பாகாது' என்ற எண்ணத்திலோ என்னவோ பல கிளைகளை கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள் அந்த நலவான்கள் என்றால் இவர்கள் யாருடைய தூண்டுதல்களின் பேரில் செயல்படுகிறார்கள் என்பதையும் மார்க்க அறிஞர்கள் மூலம் நாம் விளக்கம் பெற வேண்டியது அவசியமாகிறது.

மார்க்கத்தை சொல்லுகின்றோம் என்ற பெயரிலே சமுதாய இளைஞர்களை ஒன்றுக்கூட்டி அவர்களின் உணர்ச்சிகள் பொங்க பேச்சுக்கள் பேசி சமுதாய சகேதரர்களே சமுதாய மக்களை தண்டிக்க முற்படுகிறார்கள் என்றால் இவர்கள் சமுதாய ஒற்றுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தவர்கள் அல்லாமல் யார்? ஓற்றுமை என்ற பெயரிலே வேற்றுமைக் கண்டவர்கள் தானே இவர்கள்.


இவண்
நாகூரான்.சப்ஜீத்தீன்

No comments: