Saturday, August 19, 2006

ஊட்டி காவல் துறையின் அராஜகம் (EXCLUSIVE)

முஸ்லிம் பெண்களை இழிவு படுத்திய காவல்துறையின் கயவன் ஊட்டி எஸ்.ஐ அன்ன ராஜை கண்டித்து போராட்டம்






ஊட்டி ஆகஸ்ட் 20, 2006 : ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த ஜரினா என்ற முஸ்லிம் சகோதரி தனக்கும காரமடையை சேர்ந்த ரியாஸ் கானுக்கும் திருமணம் நடைபெற்றது என்றும் திருமணம் ஆகி ஒரு மாதத்திற்குள் தனது நகைகளை எல்லாம் எடுத்து கொண்டு தனது கணவர் ரியாஸ்கான் தலைதறைவாகி விட்டார் என்றும் புகார் கொடுப்பதற்காக ஊட்டி ஜி.-1 காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளார் அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவல்துறை உதவ ஆய்வாளர் (எஸ்.ஐ) அன்ன ராஜ் என்பவர்ஜரினாவிடம் கடுமையாக பேசியதுடன் பெண் காவலர்கள் இல்லாமல் சகோதரி ஜரினாவின் புர்காவை கழைந்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.



இது மட்டுமல்லாது ஊட்டி பிங்கர் போஸ்ட் என்ற பகுதியின் பள்ளி இமாம் ஜனாப். பக்ருதீன் என்பவருக்கு அப்பகுதியை சேர்ந்த வி.எச்.பி இந்து தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் இது குறித்து அந்த வி.எச்.பி தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளிக்கப்பட்டபோது இந்த காவல்துறையின் கருப்பு ஆடு சங்பரிவார ஆதரவாளன் எஸ்.ஐ அன்ன ராஜ் கொலை மிரட்டல் விடுத்த வி.எச்பி தீவிரவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் தனியாக இருந்த பள்ளி இமாம் பக்ருதீன் அவர்களின் மனைவியிடம் பென் காவலர்கள் இல்லாமல் விசாரனை என்று கூறி பள்ளி இமாமின் மனைவியடம் 'நீங்கள் திருமனத்திற்கு முன்பு யாரையாவது காதலித்தீர்களா? அல்லது வி.எச்.பி யினர் யாராவது உங்களை விரும்பினார்களா? என்று கேட்டு இமாமின் மனைவியையும் அப்பகுதி வி.எச்பி யினரையும் தொடர்பு படுத்தி கொச்சைப்படுத்தியுள்ளார்.



அது மட்டுமல்லாது அப்பகுதியில் அழைப்பு பணி மற்றும சமுதாய பணி செய்துவரும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் மிரட்டி வருகின்றார்.

இவ்வாறாக முஸ்லிம் பெண்களை கண்ணியக்குறைவாக் நடத்தியும் முஸ்லிம் ஆன்கள் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டியும் வரும் ஊட்டி ஜி-1 காவல் நிலைய துனை ஆனையாளர் அன்ராஜை உடனடியாக பதவி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் அணைவரும் ஒன்று திரன்டு தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயளாலர் ஜனாப் உமர் அவர்கள் தலைமையில் ஊட்டி மாவட்ட தபால் அலுவலகம் முன்பாக தடையை மீறி மறியலும் ஆர்ப்பட்டமும் நடத்தினர்.


கடந்த 18-08-2006 வெள்ளியன்றுசரியாக 3-30 மணியளவில் நடந்த இந்த தடையை மீறிய ஆர்பாட்டத்தில் தமுமுகவின் கோவை மாவட்ட நிர்வாகிகள் தலைவர். அப்துலு; பஷிர் செயளாலர் ஏ.கே. சுல்தான் துனை தலைவர் எம்.அப்பாஸ் மற்றுமு; மாநில பேச்சாளர்கள் மன்டல நிர்வாகிகள் ஊட்டி நிர்வாகிகள் உள்ளபட பலர் கலந்து கொண்டனர்.


இப்போராட்டத்தில் ஊட்டி முஸ்லிம்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகினர்இ கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களையும் தமுமுக நிர்வாகிகளையும் காவல்துறையினர் ஊட்டி போலிஸ் கிளப் மைதானத்தில் அடைத்து வைத்தனர். கைதானபோது பத்திரிகையாளர்களிடம் பேசிய தமுமுக வின் மாநில செயளாலர் ஜனாப். உமர் அவர்கள் அமைதியாக வாழும் சமூகத்தவரிடையே வெறுப்புனஷணர்வை ஏற்படுத்தி முஸ்லிம் பெண்களை கண்ணியக்குறைவாக நடத்தி முஸ்லிம்கள் மீது பொய்வழக்குகளை பேர்டு வெறுப்புணர்வை ஏற்படுத்தி வரும் ஊட்டி ஜி-1 காவல்துறை துனை ஆய்வாளர் அன்னராஜ் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் இல்லையேல் இது குறித்த போராட்டம் இன்னும் வீரியமடையும் என்றார்.

செய்திகள் மற்றும் புகைப்படங்கள் : நன்றி நமது கோவை மற்றும் ஊட்டி வாசகர்கள்

தமுமுக வின் செய்தி குறிப்பு டவுன்லோட் செய்ய :

பக்கம் 1

பக்கம் 2

பக்கம் 3

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி ஊட்டி திருக்குரல் ஜிஹாத் லெபனான்

No comments: