Sunday, August 13, 2006

நபித்தோழர்களை நையான்டி செய்வது வழிகேடு

சரித்திரம் படைத்த சஹாபாக்கள்
முகவை ரபீக்
அல்லாவின் அதிசியப் படைப்புக்களே
அண்ணல் நபியின் அருமை தோழர்களே'

'இறைவனால் பொருந்திக் கொண்டவர்களே
இறைத்தூதருக்கு இனிமையானவர்களே'

'நன்மையில் முந்திக் கொண்டவர்களே
நடமாடின சொர்க்க வாசிகளே'

'இறை சொல்லுக்கு ஏற்று நடந்தவர்களே
நபி சொல்லுக்கு நாவடக்கம் செய்தவர்களே'

'எட்டுத்திசையிலும் இஸ்லாத்தை பரப்பினவர்களே
கூட்டு வாழ்வில் கோடிசுகம் கண்டவர்களே'

'அல்லாவின் அல்குர்ஆனை தொகுத்தவர்களே
வாழ்க்கைக்கு வரம்புகளை வகுத்தவர்களே'

'சொர்க்கத்திற்காக சுபச்செய்தி கூறப்பட்டவர்களே
மார்க்கத்திற்காக மரணத்தை சுவைத்தவர்களே'

'விண்ணுலகம் போற்றும் வீர வேங்கைகளே
மண்ணுலகம் போற்றும் மகத்தானவர்களே'

'இறைத்தூதரின் வாழ்க்கையை எழுத்துருவில் தந்தவர்களே
இம்மையை வென்றெடுத்த இறை நேசர்களே'

'சான்றோர்கள் போற்றும் ஸலபுகளே
தேவர்கள் போற்று தேன் அமுதங்களே'

'இறைத்திருப்தியை இலக்காகக் கொண்டவர்களே
நபித்திருப்தியை நாடி இருந்தவர்களே'

'படுப்பதற்கு பாய் கூட இல்லாமலாய்
குடிப்பதற்கு கூழ் கூட இல்லாமலாய்'

'இருப்பதற்கு இடம் இல்லாதவர்களாய்
வசிப்பதற்கு வாழ்வாதரம் இல்லாதவர்களாய்'

'மணமுடிக்க மகர் இல்லாதவர்களாய்
கல்பை மூட கபன்துணி இல்லாதவர்களாய்'

'இப்படி வாழ்ந்தார்கள் ஸஹாபாக்கள் துன்பத்தில்
மேற்படி இஸ்லாம் வளர்ந்தது அசுர வேகத்தில்'

'மடமையை போக்கி மானுடம் வளர்த்தோரே
இருளை ஒழித்து ஏகத்துவம் ஏற்றினோரே'

'தீண்டாமையை போக்கி தீனை வளர்த்தோரே
மதுபானம் ஒழித்து மார்க்கம் தந்தோரே'

'சாதியை ஒழித்து சகோதரத்துவம் வளர்த்தோரே
விபச்சாரம் ஒழித்த விடியல் வெள்ளிகளே'

'இனவெறியை ஒழித்து இஸ்லாம் வளர்த்தோரே
கல்லாமையை உடைத்து கல்வியை தந்தோரே'

'இரத்தம் சிந்தி சத்தியம் தந்தோரே
யுத்தம் செய்து வெற்றி பெற்றோரே'

'அன்று அல்லாவின் கூற்றில் சத்தியவான்கள்
இன்று சில சகோதரர்களின் கூற்றில் சண்டையிடுபவர்கள்'

'நமது பேச்சில் கொள்கையை கற்று தந்தவர்கள்
சிலரது பேச்சில் கொள்கையை கொலை செய்தவர்கள்'

'ஸகாபாக்களை கண்ணியப்படுத்துவது நேர்கோடு
நபித்தோழர்களை நையான்டி செய்வது வழிகேடு'

'நபியின் நண்பர்களை நக்கல் அடிப்பது மடமை
ஹதீஸை கொடுத்தவர்களை கண்ணியப்படுத்துவது கடமை'

'காலங்கள் வரைந்த காலச்சுவடுகள்
சரித்திரம் படைத்த ஸஹாபாக்கள்'

'உங்கள் உள்ளத்தின் உண்மைகளை உலகம் ரசித்தது அன்றும்
எங்கள் மனதை பிழிந்து மனதார வாழ்த்துவோம் என்றும்'

No comments: