Thursday, August 10, 2006

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: கருணாநிதி ஏமாற்றிவிட்டாரா?

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: கருணாநிதி ஏமாற்றிவிட்டாரா?
அப்துல் மஜீத், சென்னை-
கேள்வி:
1-3-2005ல் ஜெயலலிதா அரசு அமைத்த சிறுபான்மை ஆணையத்தை திமுக அரசு திருத்தி அமைத்துள்ளது என்றும், ஜெயலலிதா அரசு நியமித்த கமிஷன் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு விட்டனர் என்றும் முதலமைச்சர் கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்றும் தமுமுகவிடமிருந்து களவாடிய வார இதழில் செய்தி வெளிவந்துள்ளது. இது உண்மையா?

பதில்: எல்லாம் தெரிந்தது போல நடிக்கும் அந்த வார இதழின் ஆசிரியருக்கு பொது அறிவு குறைவு என்பதற்கு அவர் எழுதியுள்ள இந்த செய்தியே ஒரு சான்றாகும். சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக ஜெயலலிதா ஆட்சியின் போது 'தங்கத்தாரகை' புகழ் பேராயர் பிரகாஷ் என்பவர் இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அவர் பதவி விலகிவிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சிறுபான்மை ஆணையம் இதுவரை அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சி திருத்தி அமைத்துள்ளது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைத்தான்!
இந்த சிறிய விஷயம் கூட தெரியாதவர்கள்தான் மனம் போன போக்கில் இந்த ஆணையத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்பது முதன்முதலாக ஜெயலலிதாவினால்
1-3-2005ல் அமைக்கப்பட்டதல்ல. இந்த ஆணையம்
15-3-1993ல் முதலில் அமைக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக அது அமைக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகும்கூட நீதிபதி ஆறுமுகம் தலைமையில்
13-11-2002ல் அது அமைக்கப்பட்டது.
அதன் பதவிக் காலம்
1-12-2005 அன்றுடன் முடிவடைந்து விட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் இந்த ஆணையத்தை நீதிபதி குமார் ராஜரத்தினம் தலைமையில் அமைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக மட்டுமே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது என்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற அதன் சிறுபான்மைப் பிரிவு அமைப்புகள் பொய்ப் பிரச்சாரம் செய்தன. திமுக ஆட்சி வந்ததும் இந்த ஆணையத்தின் தலைவர் நீதிபதி குமார ராஜரத்தினம் தானாகவே பதவி விலகி விட்டார். எனவே மீண்டும் அந்த ஆணையம் வேறு உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது சாதாரணமாக நடைபெற்ற நிகழ்வாகும். இதற்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலாக ஆளுநர் உரையிலும், பிறகு நிதியமைச்சர் தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையிலும், பிற்படுத்தப்பட்டோர் துறை மானியக் கோரிக்கையின்போது 'சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வரப்படும்' என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை அறியாதவர்கள்தான், இடஒதுக்கீடு விஷயத்தில் கலைஞர் ஏமாற்றி வருகிறார் என்று தமது தொழிலான பொய் பரப்புதலை செய்து வருகின்றனர்.
தனது அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் தராத ஜெயலலிதாவை புகழ் மாலை சூட்டி ஆதரித்து வந்தவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று கேள்வி எழுப்ப எந்த அறுகதையும் இல்லை.

No comments: