தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளில் பொரும்பாலோனோர் தங்களின் அரசியல் எதிர்கால பயத்தில் செல்லுமிடங்களிலெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இஸ்லாத்தின் அடையாளத்தை இழந்து கோயில்களிலும் சர்ச்சுகளிலும் கூழைக்கும்பிடு போட்டு அரசியல் நடத்தி சமுதாயத்திற்கு இழிவை தேடித்தந்தனர். முகவையின் முன்னால் எம்.எல்.ஏ அன்வர் ராஜா விற்கும் தமுமுக வினருக்கும் பிரச்சினையானதும் கூட இது போன்ற நிகழ்வினால்தான்.
நக்கீரன் இதழ் 2006 ஜீலை 27-29
காமராஜர் பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொள்ள முகவை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயனம் மேற்கொண்ட முகவையின் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப். ஹசன் அலி அவர்கள் தனது சமுதாயத்தமிற்கு பெருமை சேர்க்கும் வகையில் எந்த உருவபடத்திற்கும் சிலைக்கும் மாலை சாத்தி வழிபட மாட்டேன் என்றும் ஆரத்தி எடுத்து தன்னை வரவேற்பதற்கும் கூட அனுமதியில்லை என்றும் காரனம் இவையெல்லாம் தான் சார்ந்துள்ள மார்க்கத்திற்கு எதிரானது எனவும் இதனால் தனது சமுதாயத்திற்கு இழிவு என்று மறுமைக்கு அஞ்சியவராக இவற்றையெல்லாம் தவிர்த்து தனது இஸ்லாமிய தனித்தன்மையை நிருபித்தள்ளார். இறைவன் இவருக்கு இன்னும் ஈமானில் உறுதியை அளிப்பானாக.
நமது சக முஸ்லிம் அரசியல் வாதிகள் இவரிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன. இவ்வுலக ஆதாயம் நிலையற்றது தனக்கு மறுமையின் வெற்றியே முக்கியம் என்று தான் செல்லுமிடங்களிலெல்லாம் இஸ்லாத்திற்கு முரனான காரியங்களை தவிர்த்து மற்றவர் மனம் புன்படாமல் அரசியல் நடத்த இயலும் என்று நிருபித்து வரும் முகவை சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள் பாராட்ட தக்கவர்.
இவரைத்தான் தோற்கடிக்க செய்யவேண்டும் என்று கங்கனம் கட்டி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் வேலை செய்தனர் காரணம் தங்கள் தலைவி ஜெயாவுடன் தாங்கள் செய்து கொண்ட ஹீதைபியா உடண்படிக்கையின் படி இவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஆனால் வல்ல இறைவனின் ஆற்றலினாலும் அனைத்து தரப்பு மக்களையும் அவரது வாக்குறுதிகள் கவர்ந்ததாலும் இவர் வெற்றி பெற்று இன்று எதற்கும் மார்க்கத்தை விட்டு கொடுக்காத முஸ்லிமாக சட்டமன்றத்தில் நமது சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை பறைசாற்றுகிறார். ததஜ வின் பேச்சை முகவை மக்கள் கேட்டிருந்தால் நாம் இதுபோன்ற ஒரு ஈமான் உள்ள முஸ்லிம் சட்டமன்றத்தில் நமது பிரதிநிதி ஆவதை இழந்திருப்போம். இப்படித்தான் பல நல்ல முஸ்லிம்கள் ததஜ வின் இந்த ஹீதைபியா உடன்படிக்கையால் தோற்கடிக்கப்பட்டார்கள்.உதாரனம் புதுக்கோட்டையில் இவர்களின் சதித்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்ட திமுக வின் ஜனாப்.சகுபர் அலி இதற்காக புதுக்கோடடை முஸ்லிம்கள் வருந்துகிறார்கள். ததஜ வின் முஸ்லிம் விரோத சதியால் தோற்ற இவரும் சட்டமன்றம் சென்றிருந்தாரேயானால் நமது பிரதிநிதித்துவம் இன்னும் கூடியிருக்கும். இஸ்லாத்திற்கெதிரான ததஜ வினரின் செயல்களை நம் மக்கள் எதிர் வரும் காலங்களில் உணர்ந்து நடக்க வேண்டும்.
நன்றி
முகவைத்தமிழன்
No comments:
Post a Comment