இதழியல் துறையின் நேர்மை - மக்கள் உரிமை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் வாசகர்களே,
கடந்த 16-07-2006 ஞயிற்றுக் கிழமை "நபிகள் நாயகம் பெருமானார் (ஸல்) அவர்களின் கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியர் மர்ம மரணம்" என்ற தலைப்பில் மக்கள் உரிமை பத்திரிகையில் வெளியான ஒரு தவறான செய்தியை சுட்டிக்காட்டி "உணர்வின் பாதையில் மக்கள் உரிமை" என்ற தலைப்பில் நமது வலைப்பதிவிலும் "இலக்கற்ற எழுத்துக்கள்" என்ற தலைப்பில் நமது சகோதர இணையத்தளமான இஸ்லாம்கல்வி.காம்தளத்திலும் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம்.
நாம் சுட்டிக்காட்டியபடி அந்த செய்தி தவறானதென்று ஒத்துக்கொள்வதோடு அதற்கு வருந்துவதாக இதழியல் துறையில் தனது நேர்மையை பறைசாற்றும் வகையில் தவறுகளை ஏற்று வருத்தம் தெறிவித்து இந்த வார மக்கள் உரிமை செய்தி வெளியிட்டுள்ளதோடு அதை சுட்டிக்காட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றியும் தெறிவித்து உள்ளது. சுட்டிக்காட்டப்பட்ட தனது தவறுகளை ஏற்றுக்கொண்டதோடு அதற்கு வருத்தம் தெறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதை சுடடிக்காட்டியவாக்ளுக்கும் நன்றி தெறிவித்து இளம் பத்திரிகையாக இருந்தாலும் இதழியல் துறையில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இன்று தன்னை அடையாளப்படுத்தியுள்ளது மக்கள் உரிமை.
இன்று உணர்வு, தினமலர் போன்ற எத்தனையோ பத்திரிகைகள் பொய்களையே தங்களது மூலதனமாக கொண்டு தொழில் நடத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக இருந்த பத்திரிகையை சிலர் சங்பரிவாரின் ஊதுகுழலாக மாற்றி சமுதாயத்திற்கெதிரான சருத்துக்களையும் சங்பரிவாரின் கருத்துக்களையும் இஸ்லாமிய சாயம் பூசி நம் மக்களிடையே தினித்து வருகின்றார்கள்.
அம்மாவின் ஆளுயர படங்களோடும், அம்மா சட்டசபைக்கு சென்றால் அது சந்திரனுக்கு சென்ற சாதனையை போலும் அம்மாவிற்கு காய்ச்சல் என்றால் அது கருணாநிதி செய்த சதி என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் கலவரத்தை தூண்டுவதுபோல் நோட்டிஸ் வெளியிடுவது சமூக ஒற்றுமையை குழைக்க முயல்பவர்களை அரசு கைது செய்தால் நாங்கள் சிர்க் செய்யக்கூடாது என்று நோட்டிஸ் கொடுத்தோம் அதற்காக கயவன் கருணாநிதி எங்களை கைது செய்து முஸ்லிம்களுக்கு சிறையில் இடஒதுக்கீடு கொடுத்துள்ளார் என்று கதறுவது. எந்த ஷிர்க்(இணைவைப்பு) கூடாதென்றார்களோ அதே ஷிர்க்கை (இணைவைப்பு) கருணாநிதி செய்யவில்லை என்றும் அதற்காக முஸ்லிம் சமுதாயம் கடுமையான கண்டனம் தெறிவிக்கிறதென்றும் அதே இதழில் எழுதி மக்களை முட்டாளாக்குவது. தர்ஹாவிற்கு போக கூடாது என்று நோட்டிஸ் கொடுப்பார்களாம் ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காயிதேமில்லத்தின் தர்ஹாவிற்கு சென்று அவரது கல்லறையில் மாலை சாத்தி மலரஞ்சலி செய்யவில்லை என்றால் கருணாநிதி கயவனாம். பாருங்களையா இவர்களின் தவ்ஹித் இலட்சணத்தை. இதுபோன்ற முன்னுக்கு பின் முரணான பொய்களை எழுதி தங்களின் சுயநலத்துக்காகவே இந்த இதழை நடத்தி வருகின்றார்கள்.
அதுபோல் இவர்களின் விஞ்ஞானிகள் குழு (ஃபைசல், தீன்முஹம்மது, இப்னு முஹம்மது மற்றும் மூவரணி)ரியாத்திலிருந்து கொண்டு ஐம்பது பேர் கூடியதை ஆயிரக்கணக்கானோர் கூடியதாகவும் நடக்காததை நடந்ததாகவும் பொய்களை (யான்பு என்ற நகரம் தமாமில் (கிழக்கு)இருப்பதாகவும் அள்ளிவிடும் பொய்களை அரபுச்சல்லி (பணம்) நின்றுவிடக்கூடாதென்பதற்காக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பார்கள். கேட்டால் நான் அரபுச்சல்லிக்கு அடிமையில்லை என்றும் அரபு அறிஞர்கள் எடுத்த வாந்தி (ரசூலுல்லாஹ் அவர்களும் ஒரு வகையில் அரபு அறிஞர்தான்)என்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் வீர வசனம் பேசுவார்கள்.
பில்கேட்ஸ் முஸ்லிமாகிவிட்டார் என்றும், ஈரான் அனு ஆயுதத்தை சோதனை செய்த முதல் முஸ்லிம் நாடு என்றும் (ஈரானை முஸ்லிம் நாடு என்று தனது கொள்கைக்கெதிராக இவர்கள் மட்டும் கூறலாம் விடியல் குலாம் கூறினால் ஈரானிடம் காசுவாங்கி விட்டான் காஃபிர் என்று சிடியில் பேசுவது) பொய்களை அள்ளி வீசுவார்கள். அதை சுட்டிக்காட்டி தட்டிக்கேட்டாலோ அல்லது எழுதினாலோ மனித நாகரீகம் சிறிதும் இன்றி அரபுகளிடம் சல்லிக்காக கூலிவேலை பார்க்கும் தஙகளது ஜந்துக்களை (முனீஃப், பைசல், பரக்கத்) விட்டு கெட்ட வார்த்தைகளால் குதற சொல்வது, கொலைமிரட்டல் விடுப்பது இது இயக்கம் சாராதவர்களுக்கு அதிலும் இவர்களை விமர்சிப்பவர்கள் இயக்கத்தவர்களாக இருந்துவிட்டால் வீட்டில் வெடிகுண்டு வீசுவது, வெட்டிக்கொல்ல முயல்வது வாகனங்களை கொழுத்துவது என்று தொடரும் ஜனநாயக படுகொலைகள் (உதாரணம்: தமுமுக மவுலவி ரிஃபாயி வீட்டின் மீது தாக்குதல்). அதற்கு சங்பரிவார தினமலரும் இந்து முன்னனி ராமகோபலனுமே பரவாயில்லை. இவர்களை பற்றி எழுதினால் மூச்சு முட்டுதப்பா... அப்பப்பா.......
இவற்றையெல்லாம் திரும்ப திரும்ப இங்கு எழுதுவது படித்த நமது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான். சமுதாயப்பேரை கூறி மார்க்க சேவை செய்வதாக கூறும் ஒரு கூட்டம் எப்படி சீரழிந்து நமது சமுதாயத்தின் சில இளைஞர்களையும் போலி ஃபத்வா கொடுத்து சீரழித்து வருகின்றார்கள் என்று இதை படிப்பவர்கள் மற்றவர்களிடம் எடுத்துகூறுங்கள், இதை நகல் எடுத்து வினியோகியுங்கள், அரபு அறிஞர்களின் மார்க்க சம்பந்தமான கருத்துக்களை வாந்தி என்பார்கள்
இவர்களின் தலைவர் 'யாகவா முனிவர்''
போல்கா...கா....டவுசர்....ஜட்டி...குட்டைபாவாடை,,ஹி.....ஹி..என்று எதைக்கூறினாலும் மார்க்கமாகவும் அல்லாஹ் கூறியதுபோலும் எடுத்து கொள்வார்கள். இக்கூட்டம் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ரமழான் வருகின்றது இக்கூட்டம் தங்களிடம் ஃபித்ரா மற்றும் ஜக்காத் கேட்டு வர தங்களை தயார் படுத்தி வருகின்றது டான் டிவியில் ஒப்பாரி வைப்பார்கள் சில டிரய்லர்களையும் ஓடவிடுவார்கள் உசாராக இருக்குமாறு நமது வளைகுடா வாழ் சகோதரர்களை எச்சரியுங்கள் அரபுச்சல்லி பொறுக்க தங்கள் கேம்ப் பக்கம் வந்தால் மேற்கண்ட கேள்விகளை கேளுங்கள். ஏன் பொய்களை சுட்டிக்காட்டினால் திருத்தாமல் ரவுடியிசம் செய்கின்றீர்கள் என்று கேளுங்கள், அரபுச்சல்லி, வாந்தி என்று கூறி விட்டு ஏன் இப்போது எங்களிடம் சல்லியடிக்க வந்தீர்கள் என்று கேளுங்கள். நமது சக முஸ்லிம் சகோதரர்களையும் சகோதரிகளையும் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி நமது சமுதாயத்தின் கண்ணியத்தை கெடுத்து அதை எங்களிடம் தஃவா என்று கூறி வசூலாகும் பணத்தை கொண்டு உலகம் முழுவதும் மாற்று மத சகோதரனும் காரித்துப்பும் அளவிற்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றீர்களே அது மார்க்கத்திற்கு புறம்பானதல்லவா என்று கேளுங்கள்.
சுட்டிக்காட்டப்பட்ட தனது தவறை உடனடியாக ஒப்புக்கொன்டு வருத்தம் தெறிவித்ததோடல்லாமல் அதை சுட்டிக்காட்டியவர்களுக்கும் நன்றி தெறிவித்த மக்கள் உரிமையின் முன் ஒடுக்கபட்டோரின் உரிமைக்குரலாய் வந்து பின் சங்பரிவாரின் ஊதுகுழலாய் மாறிப்போன உணர்வு பத்திரிகை வெட்கித்தலைகுணிய வேண்டும். இனி மக்கள் திரண்டெழ வேண்டும். இனி இவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டாது தட்டிக்கேட்க வேண்டும். ஏனெனில் உணர்வு நமது காசில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை இன்று இது பி.ஜே-யுடைய தனிப்பட்ட சொத்து என்றும் ததஜ விற்கும் இதற்கும் சம்பந்தம் இலலையென்றும் ஒரு செய்தி கசியவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நமது சகோதரர்களின் ரத்தத்தில் உருவாக்கபட்ட முஸ்லிம் மீடியா டிரஸ்ட் எப்படி பி.ஜே-க்கு சொந்தமானதாகும்?
மக்களே திரண்டெழுங்கள் அக்கிரமத்திற்கெதிராக போராடத் தயாராகுங்கள்.. நம் விரலை கொண்டு நமது கண்களை குத்தும் வேலையை ததஜ வினர் செய்து வருகின்றார்கள். முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டை மீட்டெடுப்போம் சங்கபரிவாரின் ஊதுகுழலாய் மாறிப்போன உணர்வை மீண்டும் ஒடுக்கப்பட்டுhரின் உரிமைக்குரலாய் மாற்றுவோம். ததஜ-வினரே தங்கள் தலைமையிடம் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டும் உணர்வும் யாருக்கு சொந்தம் என்று கேளுங்கள். பி.ஜே யின் மரணத்திற்கு பின்னால் அது யாருக்கு சொந்தமாகும் என்று கேளுங்கள். ததஜ-விற்கா அல்லது பிஜே யின் மகன் முஹம்மதிற்கா? என்று. மழுப்பலான பதில்களை நம்பாதீர்கள், விஷயத்தை தெளிவுப் படுத்த சொல்லுங்கள்.
உணர்வும் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டும் உம்மா வழி, வாப்பா வழி வந்த பிஜேயின் பரம்பரை சொத்தா? அல்லது பொதுமக்களின் (சமுதாயத்தின்) சொத்தா? என்று கேளுங்கள். எப்படி தனிப்பட்ட சொத்ததாகியது என்று விளக்கம் தரச்சொல்லுங்கள். நாளை நீங்கள் கேம்ப், கேம்ப்பாக போய் வசூல் செய்து கொடுக்கும் அரபுச்சல்லிக்கும் இதே நிலைதான் என்பதை உணருங்கள். அப்படி பேசும்போது அண்ணனே பேசுகின்றார் என்று மொபைலை அடித்து கொடுப்பார்கள். அண்ணனும் பேசுவார் ஆஃப் ஆகி விடாதீர்கள். இது அண்ணன் பிஜே தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்குவதற்கு கையாலும் வழக்கமான டெக்னிக்.
நாம் பள்ளியில் படிக்கும்போது நன்றாக படிக்கவில்லையானால் நன்றாக படிக்ககூடிய பையனின் எதையே வாங்கி குடித்தால் புத்தி வரும் என்று நமது ஆசிரியர்களும் பெற்றோரும் கூறக்கேட்டிருக்கின்றோம். இப்போது பேரா.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் வெளிவரும் மக்கள் உரிமை தனது தவறை உணர்ந்து வருத்தம் தெறிவித்து முண்னோடியாக ஆகிவிட்டது. இப்போது யார்.....யாருடையதை.... என்பதை மக்கள் தீர்மானித்து கொள்ளட்டும்.
மக்கள் உரிமை இனி கவனத்துடன் தனது பணிகளை தொடர்ந்து, மற்ற பத்திரிகைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக திகழும் என்ற நம்பிக்கையில் விடைபெறுகின்றேன்.
நன்றி
முகவைத்தமிழன்
No comments:
Post a Comment