Monday, June 19, 2006

மெய்ஞானி பிஜே யும் ததஜ விஞ்ஞானிகளும்!!

மெய்ஞானி பிஜே யும் ததஜ விஞ்ஞானிகளும்!!

சமுதாயத்திற்காக உயிர் நீத்த ஷஹித்.பழனி பாபா அவர்களும் அவர்களோடு இணைந்த உணர்வு மிக்க சகோதரர்களும் நமது சமுதாயத்தின் படித்த அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து பல வருட காலம் நமது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் சமூக-அரசியல் நிலை குறித்து ஆராய்ந்து அறுபதோ அல்லது அறுபத்தி இரண்டு தொகுதிகளையோ அடையாளம் கண்டார்கள்..

இந்த தொகுதிகளிள் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க கூடிய மாபெரும் சக்தியாக முஸ்லிம்கள் இருப்பதை நமது சமூகத்திற்கு அடையாளம் காட்டினார்கள். இத்தொகுதிகளில் நாம் நமது முஸ்லிம் வேட்பாளர்களையே களத்தில் இறக்கி வெற்றிபெறச் செய்யலாம் என்பதையும் தெளிவாக நமது சமுதாய மக்களிடத்தில் எடுத்து வைத்தார்கள் அத்தோடு நின்றுவிடாமல் இதை செயல் வடிவப்படுத்த வேண்டுமானால் அதற்கு ஒவ்வொரு முஸ்லிமின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் ஒன்று சேர்க்கவேண்டும் அதற்கு சிறந்த வழி தமிழகத்திலுள்ள அனைத்து ஜமாத்தினரையும் ஒன்றிணைக்கவேண்டும் அவர்கள் உள்ளங்களிள் கட்சிவெறியை அகற்றி நமது சமூகம்சார்ந்த இன உணர்வை ஏற்படுத்திட வேண்டும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளனும் சமூக இன உணர்வின் அடிப்படையில் தான் சார்ந்த ஜமாத் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் இதன் மூலம் தமிழகத்தின் ஆட்சியையும் அரசியல் மாற்றத்தையும் தீர்மானிக்ககூடிய மாபெரும் சக்தியாக முஸ்லிம்கள் இருப்பதை நிருபிக்க வேன்டும் என்று முனைந்த வேளையில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் டாக்டர்.பழனி பாபா சுட்டிக்காட்டிய அந்த 62 தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்ககூடியவர்களாகவும் தமிழகத்தின் ஆட்சியை நிர்ணயிக்ககூடிய மாபெரும் சக்தியாக உள்ளார்கள என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இரு வேறுபட்ட திராவிட கட்சிகளை இத்தேர்தலில் ஆதரித்தார்கள். அதற்கு காரணங்களாக இடஒதுக்கீடு மற்றும் சிறைவாசிகள் விடுதலை என்று கூறினார்கள், இவ்வாதரவும் கூட சமூக நலன் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல மாறாக எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று இன்றைய நமது சமுதாயத்தின் மாபெரும் இயக்கங்களாக தங்களை அழைத்துக்கொள்ளும் இரு இயக்க தலைவர்களின் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாகும் என்பது இவர்களின் தேர்தல் பிரச்சார கூத்தில் தெளிவாக உணர முடிந்தது. .

தேர்தல் முடிந்துவிட்டது காட்சிகள் மாறிவிட்டன புதியவர்கள் ஆட்சியில் அமர்ந்து விட்டார்கள் நமது சமுதாய பிரதிநிதிகளாக தங்களை அடையாளபடுத்திய இருவேறு சாராரில் ஒருசாரர் ஆதரவளித்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட்டது மற்றவர் ஆதரவளித்த கட்சி தோல்வியை தழுவி எதிர்க்கட்சியாக ஆகிவிட்டது. இதுதான் உண்மை. தோற்றவர்களும் ஜெயித்தவர்களுமான பிரதான கட்சிகளின் தலைவர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டும், வெற்றியை கொண்டாடியும் அறிக்கைகள் விட்டார்கள்.

இங்குதான் கேலிக்கூத்து ஆரம்பமாகின்றது, அறிக்கைவிட்ட பிரதானக் கட்சிகளைப்பார்த்து நம்மவர்களும் அறிக்கை விட்டார்கள். இவர்களின் அறிக்கை தோல்வியை ஒப்புக்கொண்டதாகவோ அல்லது வெற்றியை கொண்டாடுவதாகவோ இருந்தால் இந்த கட்டுரை எழுதுவதன் அவசியமேற்பட்டிருக்காது. மாறாக இவர்கள் அறிக்கை என்ற பெயரில் நமது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தை பலகீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதால்தான் இங்கு நாம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது..

இஸ்லாத்தை பரப்புவதற்கும், தூய இஸ்லாத்தை பின்பற்றுவதற்கும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் என்று காரணங்கள் கூறி இவாகளால் துவங்கப்பட்ட த.மு.மு.க என்ற அமைப்பு இவாகளுக்குள் (உயர் மட்ட தலைவாகளுக்குள்) ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தால் இஸ்லாத்தை பரப்புவதற்கும், தூய இஸ்லாத்தை பின்பற்றுவதற்கும், இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொள்வதற்கும் தடையாக உள்ளது என காரணம் கூறி அதிலிருந்து பிரிந்து இஸ்லாத்தை தூய வடிவில் பின்பற்றுவதற்காகவும், மக்களை தூய இஸ்லாத்தின்பால் வழி நடத்தி செல்வதற்காகவும் என்று கூறி துவக்கப்பட்ட தமிழ்நாடு தவஹித் ஜமாத் எந்த காரணத்தாலோ பரிணாம வளர்ச்சியடைந்து 'சமூக அரசியல் பேரியக்கமாக' தன்னை உருமாற்றிக்கொண்டு எந்த அதன் தலைவர்கள் ஜனநாயகம் - இணைவைத்தல் என்று மார்க்க தீர்ப்பு வழங்கினார்களோ அதே தலைவர்கள் இந்த தேர்தலில் தமிழகத்தின் சந்து பொந்தெல்லாம் ஓடி...ஓடி ஜனநாயகத்தின் உயிர் நாடியான தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் ஆதரவளித்த அணி தோற்று ஆட்சியை இழந்தாலும் முஸ்லிம்களின் ஆதரவால் சில இடங்களிள் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை.

இவர்கள் ஆதரவளித்த அணியின் தலைவி தனது தோல்வி பற்றி வெளியிட்ட அறிக்கைபோல் இவர்களும் ஒன்று வெளியிட்டு, தேர்தல் முடிந்து விட்டது நாம் ஆதரவளித்த அணி வெல்லவில்லை என்றாலும் நமது ஆதரவால் அது எதிர்க்கட்சியாக அமைந்துள்ளது இனி நாம் நமது உரிமைகளுக்காக நேரம் வரும்போது போராடுவோம் இனி நாமும் நமது தொண்டர்களும் அரசியலில் இருந்து ஒதுங்கி மார்க்க பணிகளை பார்ப்போம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும் மாறாக தேர்தல் முடிந்த அடுத்த நாளே இவர்கள் அறிக்கை என்ற பெயரில் ஒரு காமெடி ஷோ ஒன்றை தமிழகத்தின் சின்னத்திரைகளில் அரங்கேற்றினார்கள் பின்னர் அது டான் தொலைக்காட்சி வழியாக உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டது.

இவர்கள் அறிக்கை என்ற பெயரில் தமிழகத்தில் நமது முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முயல்கின்றார்கள். அதாவது இவர்களின் கூற்றுப்படி தமிழகத்தில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது முஸ்லிம்களல்ல மாறாக மாற்று மதத்தவரே தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றார்கள் என்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்த முயல்கின்றார்கள்.

இவர்களின் அறிக்கையில் இருந்து ஒன்றுமட்டும் தெளிவாகின்றது அதாவது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்பது பி.ஜே என்ற தனிப்பட்ட நபரின் சிந்தாந்தமே தவிர அது இவர்கள் கூறுவதுபோல் தவ்ஹித் பிரச்சாரத்திற்காக துவங்கப்பட்ட ஒரு இயக்கமில்லை என்பது. இவ்வியக்கத்தின் நோக்கம் தமிழ் முஸ்லிம்களின் நலனோ அல்லது மார்க்க பிரச்சாரமோ அல்ல மாறாக தனிப்பட்ட சில நபர்களை காப்பதற்காக துவங்கப்பட்ட (அமைக்கப்பட்ட) ஒரு அரண் என்பதும் இதில் பலிகடாவாக நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதாகவே இவர்களின் தொடரும் இந்த மூவரணி தொலைக்காட்சி கேலிக்கூத்துக்கள் புலப்படுத்துகின்றன.

எங்க ஊர் பாஷையில் சொல்வதென்றால் "பொம்பளைய கூடி உக்காந்து கதை சொல்வது போல்" உள்ளது இவர்களின் இந்த அறிக்கை. இது போன்ற மூவரணி அமர்ந்து விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்வதாக நினைத்துக்கொண்டு செய்யும் கோமாளித்தனமான காரியங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் மூலம் நமது முஸ்லிம்களை மூளையற்றவர்களாகவும், பொது அறிவற்றவர்களாகவும் உலக அளவில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி கேவலப்படுத்துகின்றார்கள். இதில் இடைக்கு இடை சகோ. பாக்கரும் சகோ.அலாவுதினும் புகுந்து கையை ஒரு மாதிரி ஆக்சன் ரீப்ளே செய்து அண்ணே இப்படி ... அப்படி என்று நெட்டி முறிப்பது பார்ப்பதற்கே கேவலமாக இருக்கின்றது. இதில் சகோ. பாக்கர் வாயை வேறு கோணலாக ஆக்கி 'அவ்வோ அப்படித்தேன நெனப்பாக ...இப்படித்தேன் செய்வாக' என்ற ஒரு மாதிரி வாய்சில் சொல்வது நிறைய அவமானத்தை நமது தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு தேடித்தருகின்றது எனலாம்.

இவர்கள் தங்கள் ரசிகர் மன்றத்தினர் மட்டும்தான் உலகில் நமது இந்த காமடி ஷோவை பார்ப்பார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும், ஐயா உலகில் பல பகுதி மக்களும் இதைப்பார்க்கின்றார்கள். அதில் நீங்கள் பேசும் யாரை கேட்கிறாய் வரி வட்டி கிரி கிட்டி போன்ற வீரபாண்டிய கட்டபொம்மன் வீர வசனங்களை மக்கள் கவனிப்பதில்லை மாறாக நீங்கள் பேசும்போது உங்கள் உடல் பேசும் மொழியைத்தான் மக்கள் வாசிக்கின்றார்கள்.

இவர்களின் தொண்டர்களுக்கு வேண்டுமென்றால் இது நியாயமானதாக ஆக்ரோசமான ஒரு பேச்சாக இருக்கலாம். அப்படியென்றால் இவர்கள் இதை ஒரு உள்சுற்றறிக்கையாக சி.டிக்களாக மாற்றி தம் தொண்டாகளிடத்தில் வினியோகித்திருந்தார்கள் என்றால் சரி என்று கூறலாம். ஏனெனில் இதில் பெரும்பகுதி ஏற்கனவே மூளை கழுவிவிடப்பட்டதாக கூறப்படும் த.த.ஜ தொண்டர்களை சூடேற்றி ரத்தங்களை கொதிக்கவைத்து இந்த மூன்று பேருக்கும் (பி.ஜே, பாக்கர், அலாவுதீன்) ஏதாவது நேர்ந்தால் தீக்குளிப்பதற்கும் தயார் படுத்தக்கூடியதாகவே இந்த சி.டி அமைந்துள்ளது.

நான் இங்கு ததஜ தொண்டர் படையை விஞ்ஞானிகளாகவும், மூளை கழுவி விடப்பட்டவர்களாக சித்தரிப்பதற்கு காரணத்தை இவாகள் கட்டாயம் விளங்க வேன்டும், பாக்கரின் வருகையை சிறிதளவு மாறுதலுடன் வந்தவர்களை கவுரவிப்பதற்காக மரியாதை நிமித்தம் பொய் கலந்து எழுதிய ததஜ வின் தீன் முஹம்மதின் ரிப்போர்ட்டை பிரசுரித்த உணர்வும் அவருக்கு வக்காலத்து வாங்கும் (ததஜ) உமர் மற்றும் கூட்டத்தாரும் ஏன் அவர் பொய்யன் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றீர்? அவரது பொய்யை வெளியிட்ட உணர்வு அதற்கு ஏன் சரியான முறையில் உணர்வு சார்பாக மறுப்பு தெறிவிக்கவில்லை?

பொய்யன் தீன் முஹம்மதும் ததஜவினரும் எவ்வளவு பெரிய பூகோள விஞ்ஞானிகள் என்பதற்கு உணர்வில் அவர்கள் வெளியிட்ட ஸ்பெசல் ரிப்போர்ட்டில் இருந்தே உதாரணம் தருகின்றேன், தீன் முஹம்மது எழுதியுள்ளார்:

சவூதி அரேபிய கிழக்கு பகுதியான 'யான்பு' வில் இருந்து நிகழ்ச்சிக்காகவே வந்திருந்த இஸ்லாமிய அழைப்பாளர் குளச்சல் மவ்லவி'அஹ்மத் பாக்கவி' அவர்களின் சிறப்பான சொற்பொழிவு அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.


யான்பு என்பது சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது என்று ஒரு அண்டப்புழுகு ஆகாசப்புழுகு புழுகியுள்ளார். இதை ஆமோதிக்கும் வகையில் இவர்களின் அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆய்வு உண்மை இதழான "உணர்வு" கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது. இதுவே போதும் இந்த மெய்ஞானியை பின்பற்றும் இந்த கூட்டும் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்று நிருபிப்பதற்கு. உண்மையில் யான்பு என்பது சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மதினா மாகாணத்திற்கு உட்பட்ட ஒரு மாபெரும் துறைமுக நகரமாகும் இது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு கால வரலாற்றை உடைய நகரமாகும். அரபுகள் மேற்கத்திய உலகத்துடன் வணிகம் புறிந்ததும் உதுமானிய பேரரசை பிரித்தானிய படைகள் முதல் உலகப்போரில் எதிர்கொண்டதும் இவ்விடத்திலேயாகும். அதுவல்லாது சவுதி அரேபியாவின் மாபெரும் தொழில் நகரமும் இதுவாகும். இது சின்ன குழந்தைக்கு கூட தெரியும் இது உணர்வுக்கும், பொய்யன் தீன் முஹம்மதுக்கும் தெரியாதா? எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் ஐயா இந்த ரசிகர் மன்றத்தினர்?

ஒரு வேளை இப்படியும் கூட இருக்கலாம், ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக யாரும் கைவைக்க துணியாத இஸ்லாத்தின் தூண்களின் ஒன்றான ஜக்காத்தில் கைவைத்த இவர்களின் தலைவர் பிஜே ஒருவேளை அடுத்தபடியாக இஸ்லாமிய வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை பற்றிய பொய்யான தகவல்களை ததஜ விஞ்ஞானிகள் மூலமாக கசியவிட்டு நாளை அப்படி சரித்திரத்தை புரட்டி எழுதும்போது பொய்யன் தீன் முஹம்மதுவின் கட்டுரையையே ஆதாரமாக வைத்து விஞ்ஞானி தீன் முஹம்மது ஏற்கனவே யான்புவை கிழக்கு மாகணமாக சுட்டிக்காட்டியுளளார் என்று எழுத திட்டமிட்டுள்ளாரோ என்னவோ?

இவர்களின் விஞ்ஞானத்தன்மையை நிரூபிக்க அடுத்த எடுத்துக்காட்டு, இவர்கள் அபுமுஹம்மத் என்பவரிடம், தீன் முஹம்மதுவை ததஜவின் தலைமையோடு தொடர்பு படுத்தி கட்டுரை எழுதியதற்கும், இளையவனை தமுமுக தலைமையோடு தொடர்பு படுத்தாதமைக்கும் தாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் தங்களை தமுமுகவின் அடிவருடி என்றோ, ஜவாஹிருல்லாஹ்வின் அடிவருடி, நடுநிலை வேஷமனிந்த ஈனப்பிறவி என்றோ யாரேனும் சொன்னால் தாங்கள் கோபப்படக்கூடாது, என்று எழுதியுள்ளார்கள். மக்களை திசைதிருப்பி மூடர்களாக்குவதற்கு தங்கள் தலைவருக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்றார்கள். இளையவன் என்பவர் தனக்கும் தமுமுக விற்கும் எந்த தொடர்பும் இலலையென்று தனது இனையத்தளத்தின் முதல் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார் அது போல் தமுமுக வும் தமக்கும் இந்த இனையத்திற்கும் தொடர்பில்லை என்று ஏற்கனவே அறிவித்த ஞாபகம், பக்தி முத்திப்போன இந்த சாமியாடிகளின் கண்ணில் படவில்லையோ என்னவோ? இது போல் தனக்கும் தீன் முஹம்மது மற்றும் பொய்களை உரத்துக்கூறும் உமர் போன்றோருக்கும் சம்பந்தம் இல்லை என்று உணர்வோ அல்லது ததஜவோ அறிவித்துள்ளதா? அல்லது இவர்கள் தான் தங்களுக்கும் ததஜவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்து விட்டு எழுதுகின்றார்களா? எதை வைத்து இப்படியெல்லாம் இந்த மெய்ஞானியின் பக்தர்கள் விஞ்ஞானப்பூர்வமாக எழுதுகின்றார்கள் என்று தெரியவில்லை.

தீன் முஹம்மது என்ற நிருபிக்கப்பட்ட பொய்யனுக்கு ஏன் இவ்வளவு வக்காலத்தோ? ஒட்டு மொத்த ததஜவின் அவிள்த்து விடப்பட்ட பொய்யர் பட்டாளங்களும் இப்போது களத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு என்ன எழுதுவது எதை எழுதுவது என்ற ஞானம் கூட இல்லை தாங்கள் எழுதும் காரியத்தை பற்றிய முழுமையான அறிவும் இல்லை உதாரணத்திற்கு மீண்டும் அபுமுஹம்மதிடம் இளையவன் பதில் தருவாரா? என்று தாங்கள் எழுதிய கட்டுரைக்கு இதுவரை எந்த பதிலேனும் வந்ததா? ஏன்று கேட்கிறார்கள். இளையவன் எப்போதே அதற்கு பதில் எழுதிவிட்டார் என்று கூட அறியாமல் எழுதுகின்றார்கள்.

தவ்ஹிதை பரப்பியவர், உனக்கும் எனக்கும் தவ்ஹித் சிந்தனை வர காரணமாயிருந்தவர், தர்ஹா வழிபாடு கூடாதென்ரவர், காதியானிகiளுயும் மிர்சா குலாமையும்; எதிர்ப்பவர் இவரை எப்படி நீங்கள் மிர்சா குலாமோடு ஒப்பிடலாம் என்று விஞ்ஞான ரீதியாக சஜருதீன் என்பவரோடு சன்டையிட்டு அவரை காஃபிர் என்று பத்வா கொடுக்காத குறைதான்...ஐயா பக்தி முத்திப்போன பிஜேயானிகளே, நீங்கள் கூறிவரும் அனைத்தையும் செய்தவன்தான் மிர்சா குலாமும் அவனும் பிஜேயை போன்ற ஒரு தாயிதான் தவ்ஹிதை பரப்பியவன்தான் அவன் பின்னாலும் உங்களைப்போல் ஒரு பக்தி முத்திப்போன கூட்டம் கிளம்பியவுடன் தலையில் சைத்தான் ஏறி தானும் நபி என்றான். ததஜவினரும் இப்படியே பிஜேவை, ஆட்டுமந்தையாக பின்பற்றி பிஜே வழிகெடுவதற்கு காரணமாக அமைந்துவிட வேண்டாம். (அல்லாஹ் நம் அனைவரையும் காக்க வேண்டும்)

உடனே என்னையும் விவாதத்திற்கு எல்லாம் அழைக்காதீர்கள் ஏற்கனவே உங்கள் விவாதத்திறமைக்கு பலபேர் சக்கையடி அடிச்சுக்கிட்டுருக்கிறார்கள். அதற்கு முதலில் பதில் கொடுங்கள். அந்த பக்கம் சகோ. ஹாமித் பக்ரி உங்கள் முகமூடியை கிழித்துள்ளார். அவருக்கு பதில் கொடுங்கள். மற்றொரு பக்கம் காசிமி போட்டு தாக்கியுள்ளார். இவர்களுக்கெல்லாம் பதில் கொடுக்க வக்கில்லாமல் நிருபிக்கப்பட்ட பொய்யன் தீன் முஹம்மதுக்கு வக்காலத்து வாங்கி மக்களை இந்த விஷயங்களிள் இருந்து திசை திருப்பாதீர்கள்.

சகோதர சகோதரிகளே, இந்த பிஜேயானி கூட்டம் எப்படிப்பட்டதென்றால் இவர்களின் எதிரி தமுமுக வை விமர்சித்து இவர்களை விமர்சிக்காதிருக்கும் வரை அனைவரும் நடுநிலையாளர்கள் இவர்களும் ஆதாரங்களை கொடுத்து தமுமுக வை விமர்சிக்க சொல்வார்கள் ஆனால் இவர்களின் ஒரு தவறை சுட்டிக்காட்டிவிட்டாலோ நாம் நடுநிலை தவறி விட்டதாகவும் தமுமுக ஆதரவு ஜவாஹிருல்லாவின் அடிவருடி என்றும் எழுதுவார்கள்.

நாம் ஒன்றை முக்கியமாக கவனிக்க வேன்டும் இந்த பிஜேயும் பிஜேயானிகளும் எவ்வளவு இழிவானவர்கள் என்று இவாக்ளை எதிர்க்கும் ஒவ்வொருவர் மேலும் இவர்கள் வைக்கக்கூடிய குற்றச்சாட்டு ஒன்று ஊழல் அப்படியில்லையென்றால் பொம்பிளை பிரச்சினை உதாரணத்திற்கு நீங்களே சில அண்மைய நிகழ்சிசிகளை சிந்தித்து பாருங்கள் .. ஹாமித் பக்ரி மீது பொம்பிளை குற்றச்சாட்டு மற்றும் முனாபிக் பத்வா, ஷம்சுத்தீன் காசிமி மீது பொம்பிளை குற்றச்சாட்டு தமுமுக வினர் மீது பொம்பிளை குற்ச்சாட்டு பஸ்லுல் இலாஹி மீது ஊழல் குற்றச்சாட்டு என்று இவர்களை எதிர்ப்பவர் மீதெல்லாம் இவர்கள் வைக்கக்கூடிய குற்றசாட்டுக்கள் பெண் சார்ந்ததாகவே உள்ளது ஏன்?

இப்படியாக தங்களை எதிர்ப்பவர்களை காமவெறியர்களாக சித்தரிப்பது திருடனாக ஆக்குவது இத்தனையையும் மீறி வாதத்திற்கு வந்து இவர்களின் பொய்களை நிரூபிக்க முயன்றால் பொது மேடையில் வைத்து அவாகளின் வீட்டு பெண்களை வார்த்தைகளால் மானபங்கபடுத்துவது. பின்னர் அதை இவர்களின் கையில் உள்ள மீடியாக்கள் மூலம் பகிரங்கப்படுத்தி அடுத்தவர்களை கேவலப்படுத்துவது, இவர்களின் எதிரி பலசாலியாக இருந்தால் அந்த விவாதம் நடக்காமல் செய்துவிட்டு பிறகு பயந்து ஓடிவிட்டார் என்று பிரச்சாரம் செய்வது. இதை நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும்.

ஷம்சுதீன் காசிமி என்ன இவர்களோடு ஜெயலலிதாவை சந்தித்த பின்பா இழிவான செயலை செய்தார்? அதற்கு முன்னர்தானே ? ஏன் அவரின் சப்போர்ட் இவர்களுக்கு தேவைப்பட்டதால் அழைத்துகொன்டு போனார்கள் பின்னர் அவர் இவர்களுக்கு எதிராக திரும்பவும் இழிவான குற்றச்சாட்டை வைக்கின்றார்கள். பிஜேயும் பிஜேயானிகளும் உண்மையாளர்களாக இருக்கும் பட்சத்தில் இவரை அழைத்துக்கொன்டே சென்றிருக்க கூடாது.

உதாரணத்திற்கு கோவை சிறைவாசி பாஷா பாயைப்பற்றிய இவர்களின் அவதூறாகும், பாசா பாய் இவர்களோடு இருந்தவரை அவர் நல்லவர் வல்லவர் அவரை பயன்படுத்தினார்கள் அவர் இவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டியவுடன் இதே பிஜே ரகசிய சுற்றில் விட்ட விடியோ கேசட்டில் நாக்கூசாமல் பாஷாவுக்கு சின்னப்பையன்கள் வேனும் என்று பாஷாவை ஓரினசேர்க்கைவாதியாக (நவூதுபில்லாஹ்) சித்தரித்துள்ளார். ஏன் பாசாபாய் பிஜேயின் வீட்டில் தானே தங்கியிருந்தார் அப்படியானால் எத்தனை சின்னப்பையன்களை பிஜே சப்ளை செய்தார்? ஆதாரத்தோடு நிருபிக்க முடியுமா ? இறைவனுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் பிஜே அவர்களே... ததஜ வினரே சற்று சிந்திக்க பழகிக்கொள்ளுங்கள் நாளை உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்.

இப்போது இவர்கள் தமுமுக வினர் மீதும் இவர்களை எதிர்ப்பவர்கள் மீதும் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் போது நடந்தது பொம்பிளை பிரச்சினையில் இருந்து அத்தனையும், ஏன் அப்போது உனக்கு கண்ணு தெரியலையா? இப்ப வந்து அவன் அந்த பொம்பிளையிட்ட போனான் இவன் இந்த பொம்பிளையிட்ட போனான் என்று ஏன் கூறுகின்றீர்களே?

இப்படியே நீங்கள் உங்களை எதிர்ப்பவர்கள் மீதெல்லாம் இந்த ஒரே குற்றச்சாட்டை வைப்பீர்களானால் (பொம்பிளை பிரச்சினை) நீங்கள் நடத்தும் பெண்கள் மதரசாக்களை அரசு சோதனையிட்டு உங்களையும் ஒரு நாள் பிரேமானந்தா போன்று கைது செய்ய நேரிடும் அன்று உங்களால் இந்த மொத்த சமுதாயமே அவமானப்பட வேண்டிவரும். எதிரிகளை அவமானப்படுத்துகின்றேன் என்று உங்களின் மதரசாக்களிள் மார்க்க கல்வி பயின்று கொண்டிருக்கும் நமது இனப்பெண்களையும் நீங்கள் அவமானப்படுத்துகின்றீர்கள்.

உங்களை எதிர்த்து உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதினால் அவர்கள் எல்லாம் முனாபிக்கா? எத்தனை பேருக்கு ஐயா முனாபிக் பட்டமும் காமுகன் பட்டமும் அளிப்பீர்கள். தமிழ் நாட்டில் உங்களை எதிர்த்த அத்தனை மார்க்க அறிஞர்களுக்கும் காமுகன் பட்டமும் திருட்டு பட்டமும் வழங்கி விட்டீர்கள் அடுத்தபடியாக ஜாகிர் நாயக்கையும் காபிர், முனாபிக் என்று பத்வா வழங்கி விட்டீர்கள். சஹாபாக்களையும் திட்டி தீர்த்து விட்டீர்கள் அப்போ யார் தான் ஐயா உலகில் நல்லவர்? நீங்கள் மட்டும்தான்? நீங்களும் உங்களுக்கு காவடியெடுத்து தீமிதிக்கும் பக்தகோடிகளும்தான் நேர்வழி பெற்றவர்களா?

உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் அல்லது சுட்டிக்காட்டும் கட்டுரைகளுக்கு அனுமதியளித்தால் நான் தீயவனா? உண்மையை உரத்துக்கூறும் உமர் முனாபிக்குகளுக்கான ஹதீசை எடுத்துகாட்டி என்னை அதோடு ஒப்பிட்டு பயமுறுத்துகின்றார். குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தங்களின் இஷ்டத்திற்கு வலைப்பதிலும் திரிப்பதிலும் நீங்களும் சளைத்தவரல்ல என்று நீருபித்திருக்கின்றீர் (ததஜ) உமர் அவர்களே.

இது பத்தாது என்று சைதை அலி என்பவர் வேறு இந்த நிருபிக்கப்பட்ட பொய்யன் தீன் முஹம்மதையும், பொய்களை உரத்து கூறும் (ததஜ) உமரையும் தட்டிக்கொடுத்து இன்னும் வேகமாக பொய்களை பிரச்சாரம் செய்யுங்கள் என்று பாராட்டுகின்றார். எங்கே செல்கின்றது இந்த கூட்டம். ஜனவரி மாத (2006) ஏகத்துவ இதழுக்கு பதில் கொடுத்து, அதனை இவர்களின் தலைமைக்கும் எழுதியவரால் முறையாக தெரிவிக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து இதுவரை பதிலே கொடுக்கவில்லை என்று பொய் பரப்பும் சைதை அலியிடம் இதனைவிட வேறு எதனை எதிர்பார்க்க முடியும். இவர்தான் இப்படியென்றால் இவரின் தலைவரும் இதே பொய்யை சொல்லிக்கொண்டு அலைகிறார். கேட்கிறவன் கேனையனாக இருந்தால்.. என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இவர்களின் தொண்டவர்கள் அதற்கு மாற்றமானவர்களாக இருந்தால், பி.ஜே.யின் சட்டையை பிடித்து கேட்பார்கள்.

எந்த அளவிற்கு இவர்கள் பிஜே-யை தகிலீது செய்கின்றார்கள் என்பதற்கு இதே எடுத்தக்காட்டாகும். தனக்காக தீக்குளிக்கும் ஒரு கூட்டத்தை பிஜே வளர்த்து வருகின்றார் என்பதற்கு இவர்களே சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

பிஜே பத்வாப்படியும் ததஜ வினரின் கூற்றுப்படியும் தமுமுக வினர் சீரழிந்தவர்கள் வழிகேட்டில் உள்ளவர்கள் பின்னர் ஏன் பொய்களை உரத்துக்கூறும் உமர், தீன் முஹம்மது, சைதை அலி போன்றோர் மீண்டும் மீண்டும் தமுமுக வோடு தங்களை ஒப்பிட்டுகொள்கின்றார்களோ தெரியவில்லை.

ஐயா தமுமுக வினர் அரசியலுக்காக வேண்டி வழிகேட்டில் சென்று தங்களை கழட்டி விட்டு விட்டதாக பத்வா கொடுத்து சிடி சிடி யா புலம்பியுள்ளீர்கள் மற்றும் நீங்கள் உண்மை எடுத்துக்கூறும் தவ்ஹித் இயக்கத்தை ஆரம்பித்து உங்கள் பணியை சீராக செய்வதாக கூறுகின்றீர்கள்.

தமுமுக மிஞ்சிப்போனால் முஸ்லிம் லீக்காக மாறுவார்கள் அவ்வளவுதான் நடக்கும் ஆனால் உங்களது தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது ஒவவொரு முஸ்லிம் மீதும் கட்டாய கடமை ஏனென்றால் நீங்கள் தவஹித்வாதிகள் நீங்கள் கெட்டுப்போய் புதிய மதம் உருவாவதற்கு அதற்குண்டான முன்னேற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டதாகவே தோன்றுகின்றது. இஸ்லாத்தின் ஐந்து தூண்களிள் ஒன்றான ஜக்காத்தில் மாற்றம் செய்த உங்கள் தலைவர் பிஜே இதுபோல் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக மாற்றம் செய்யாமல் இருக்கும் மற்றொரு தூணான கலிமாவிலும் கைவைத்து மாற்றம் செய்யக்கூடிய காலம் வெகுதொலைவில் இல்லை. ஆனால் அவரின் தொண்டர்கள் ஈமானிலும் கைவைத்து விட்டார்கள். இவர்களின் அநியாயங்களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுபவர்களுக்கு ஈனப்பிறவி என்று பட்டம்வேறு கொடுக்கிறார்கள். அப்படியென்றால் பொய்களை பரப்பும் இவர்கள் ஈனப்பிறவியைவிட கேவலமான பிறவிகளா?

ஆகவே தமுமுக வின் தவறுகள் இவற்றின் முன் ஒன்றும் இல்லை அதனால்தான் இதை அனைவரும் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஆகவே தயவுசெய்து தெளிவான உள்ளத்துடன் சிந்திக்கவும். ஜகாத் ஒரு தடவை கொடுத்தால் போதுமென்று தலைவர் பிஜே மட்டும்தானே இதை கூறுகின்றார் உலகில் உள்ள மற்ற அனைத்து மார்க்க அறிஞர்களும் இவருக்கு எதிராக உள்ளார்களே!, இவரை எதிர்ப்பவர்களையெல்லாம் முனாபிக் காமவெறியன் இழிவானவன் என்று பத்வா கொடுக்கின்றாரே! அப்படியென்றால் பிஜேயும் நீங்களும் மட்டும்தான் நேர் வழியில்? உலகம் மொத்தமும் பைத்தியக்காரர்களாகி வழிகேட்டில் உள்ளதா?

தவ்ஹித் என்று சொல்லி வழிகேட்டில் நீங்கள் செல்வதால் அல்லது நீங்கள் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கும் தலைவர்கள் உங்களை தவறான வழியில் நடத்தி செல்வதால் உங்கள் தவறுகளையும் உங்கள் தலைவர்களது தவறுகளையும் சுட்டிக்காட்டுவது எம்மீது கடமையாகும் (ஒவ்வொரு முஸ்லிம் மீதும்) ஆகவே தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் கோபப்படாது உங்கள் தலைவர்களது பேச்சுக்களை நம்பாது தெளிவாக சிந்தியுங்கள். இல்லையென்றால் தவஹித் ஜமாத் அல்லாது வேறு ஏதாவது பேர் வைத்துக்கொன்டு மடங்களை ஆரம்பித்துக்கொண்டு முற்றிலுமாக விலகி விட்டீர்களானால் யாரும் உங்களை குற்றம் சொல்ல மாட்டார்கள். பிஜே மார்க்கத்தின் பெயரால் பொய்யுரைத்து தவறுகளுக்கு பதில் அளிக்காமல் தட்டிக்கழித்து செல்லும் வரை உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பிஜேயானிகளால் எமது சமுதாயமும் இளைஞர்களும் தவறான வழியின் பால் இட்டுச்செல்லாமல் காப்பதற்காக வேண்டி எழுதும் பலரின் பணி தொடரவே செய்யும். இன்சா அல்லாஹ், அல்லாஹ் உங்களையும் என்னையும் நேர்வழிப்படுத்துவானாக. ஆமின்.

இதன் மூலம் நீங்கள் என்னை எந்த முத்திரை வேண்டுமானாலும் குத்திக்கொள்ளுங்கள் அதைப்பற்றி நான் கவலை கொள்ளவில்லை ஏனெனில் எனது காரியங்களை தீர்மானிப்பதும் தீர்ப்பளிப்பதும் என் இறைவன் மட்டுமே. வாசகர்கள் உண்மை எதுவென்று புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!
முகவைத்தமிழன்

1 comment:

Anonymous said...

சகோதரர் அப்துல்லாவுக்கு நீங்க ஏனப்பிறவியே தான் ஏன்னா சொல்றதை நேரடியா சொல்லுங்கலேன்பா அதை விட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிரேன் என்று சொல்லி கேவலமா சில விசயங்களை பதிவு பண்ணிருக்க.

உனக்கு இந்த முகவை அப்பஸை பற்றி என்ன தெறியும்.இவன் ஒரு விபச்சாரன்.தன்னை நியாயப்படுத்த்வே ஒரு வெப் ப்ளாக் ஒபென் பண்ணிக்கிட்டு பரப்பிக்கிட்டு இருக்கான் அவனுக்கும் சேர்த்தே தான் சொல்கிறேன் சொல்வதை நேரடியாக சொல்ல தைரியம் இல்லாத கோளைகல் அதை பற்றி பரப்ப கூடாது.