Friday, June 02, 2006

விவாதத்திற்கு தயாரா?


ஏகனின் திருப்பெயரால்..
ஃபித்னா பரப்புவோரும் தமுமுகவும் விவாதத்திற்கு தயாரா?
அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்று சகோ.பிஜெ மற்றும் மற்ற தாயிக்களின் தவ்ஹித் பிரச்சாரத்தை கண்டு மிரண்டு தவ்ஹித் கொள்கையை ஒழிப்பதற்காக தர்காவாதிகள், மத்ஹபுவாதிகள், தரிக்காவாதிகள் போன்றோர் பல வழிமுறைகளை அதவாது கூட்டத்தை தடுப்பது, தவ்ஹிதை பேசுபவனை அடிப்பது, ஊர் நீக்கம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். அவர்களின் இத்தகைய செயல்கள் எல்லாம் தவ்ஹிதின் வளர்சியை அதிகபடுத்தியதே தவிர குறைக்க முடியவில்லை. கடைசியில் அவர்கள் சகோ.பிஜெவும் அவர்களை சார்ந்தவர்களும் இவர்கள் நபி(ஸல்) அவர்களை திட்டுகிறார்கள், சஹாபாக்களை திட்டுகிறார்கள், குர்ஆன், ஹதிசுக்கு தவறான விளக்கம் கொடுக்கிறார்கள் என்று மக்கள் மத்தியில் பொய்யை பரப்ப ஆரம்பித்தனர். அது எந்த அளவுக்கு மக்களை சென்றடைந்ததோ அந்த அளவுக்கு தவ்ஹித் வளர்சி தமிழகத்தில் ஏற்பட்டது. ஓவ்வொருவரும் இந்த இரு கூட்டத்தினரும் என்னதான் சொல்கிறார்கள் என்று ஆராய ஆரம்பித்தனர். அதன் விளைவு இன்று எந்த முஸ்லிம் அமைப்பையும், பிரிவினரையும் விட தவ்ஹித் கொள்கைக்கு ஆதரவாளர்கள் பல மடங்கு கூடியிருக்கின்றார்கள்.


அன்று எந்த பிரச்சாரத்தை சொல்லி தவ்ஹித் வளர்சியை குலைக்க மத்ஹப்வாதிகள் சதி செய்தார்களோ அதே பிரச்சாரத்தை இன்று தமுமுகவினர் செய்து வருகிறார்கள். தங்களை விட்டு வெளியேறி மாபெரும் இஸ்லாமிய மக்கள் இயக்கத்தை (ததஜவை) தங்களை விட வலுவாக உறுவாக்கி விட்டார். மற்றும் இன்று பித்ரா, சுனாமி என்று தாங்கள் செய்கிற திருட்டு வேளைகளை அம்பலபடுத்தி விடுகிறார் என்பதற்காக அன்று மத்ஹப்வாதிகள் செய்த அவதூறுபரப்பும் வேளையை இன்று தமுமுக என்ற போர்வையில் செய்கிறார்கள்.

ஒருபுறம் தொழுகையில் தொப்பி போடாமல் இருப்பது தவறு, தொழுகையில் விரலசைப்பது தவறு, தர்கா வழிபாடு சரியானது என்று கடையநல்லூர் போன்ற ஊர்களில் தமுமுகவின் பெயரை போட்டு நோட்டிஸ் அடித்து வெளியிடுகிறார்கள்(இதன் காப்பி வேண்டுவோர் மெயிலில் தொடர்பு கொள்ளவும);. மறுபக்கம் தவ்ஹித் கொள்கை, ஜகாத், சரியாக மொழிபெயர்ப்பு என்று கத்துகிறார்கள். தர்கா வழிபாடு கூடும் என்று வெளிப்படையாக கூறி இஸ்லாமிய அடிப்படையை தகர்கின்ற இந்த தமுமுகவினர் மற்றதை பற்றி வாய்கிழிய பேசுவது வேடிக்கையாக உள்ளது.

பிஜெ சொன்னாலும் யார் சொன்னாலும் குர்ஆன், ஹதீசுக்கு ஒத்துப்போனால் மட்டுமே ஏற்றுக்கொள்வதை நான் வழக்கமாக கொண்டுள்ளேன். சில காலம் முன்புவரை பிஜெயின் ஜகாத்
விசயத்தில் கூட எனக்கு உடன்பாடில்லாமல் இருந்தது. வருடாவருடம் ஜக்காத் கொடுப்பதற்க்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதரமாக உள்ளது என்பது போன்று தமுமுகவினர் பேசி
வந்தனர். தற்போது அவர்கள் ஒட்டிகொண்டுள்ள தமுமுக ஹராம் பத்வா புகழ் ஜாக் தங்கள் மாத இதழில் 1 ஹதீஸை தவிர மற்ற அனைத்தும் லயிபானது என்பதை ஒத்துக்கொண்டது. அந்த ஒரு ஹதீசும் லயிபானதுதான் என்று ததஜ ஏகத்துவத்தில் விளக்கிய பிறகு ஜாக் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணவில்லை. ஆக வருடா வருடம் ஜக்காத் என்பதற்க்கு எந்த ஒரு ஆதரமும் இல்லை என்பது தெளிவாகிறது.(விபரம் வேண்டுவோர் ஆன்லைன் பிஜெவில்
பார்கவும்).இவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி வருடாவருடம் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்களோ தெரியவில்லை.

இன்றும் எனக்கு தெரிந்து ஜக்காத் விசயத்தில் மாற்று கருத்துடைய பல பேர் ததஜவில் இருக்கத்தான் செய்கிறார்கள். மார்க்கத்தை விளங்கி கொள்வதில் ஏற்படும் முரணால் ததஜவில் இருக்க கூடாது என்று எந்த தடையும் இல்லை. சில மஸாயில் விசயங்களில் அன்றிலிருந்து இன்றுவரை சஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் மற்றும் மார்க்க மேதைகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அது போன்ற ஒன்றைதான் சகோ.பிஜெயிடம் பார்க்கிறேன். தமுமுகவுக்கு உள்ள இயக்க போதையின் காரணமாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து வைத்த சகோ.பிஜெ அவரது 25 வருடகால உழைப்பை கேவலப்படுத்துவது தவறானது.

இன்று தவ்ஹிதை விளங்கியுள்ள நாம் ஒவ்வொருவருக்கும் சகோ.பிஜெயின் பேச்சோ, எழுத்தோ ஏதோ ஒரு விதத்தில் அதற்க்கு காரணமாக இருந்ததை மறுக்க முடியுமா? சகோ.பிஜெ அவர்கள் சதாரண வட்டார மொழிவாக்கில் சஹாபாக்களை பற்றி குறிப்பிட்டதை அவர் வேண்டுமென்றே சஹாபாக்களை இழிவு செய்வதற்காக அவர் அவ்வாறு சொன்னதாக தமுமுக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நமது பேச்சின் நடுவே சிலரை அவர் சரியான கிரிமினல் என்று கூறுவதுண்டு அது அவர் அதிக மூளை திரன் உள்ளவர், நல்ல புத்திசாலி என்பதுதான் நமது வட்டார மொழியில் அர்த்தம். கிரிமினல் என்று சொன்னதுக்கு கொளை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவர் என்று தமுமுகவினர் தவறாக அர்தம் செய்வது அபத்தமானது.

உண்மையிலேயே சஹாபாக்கள் பற்றிய தன்னுடைய நிலையை சகோ.பிஜெ மாற்றி கொண்டார் என்றால் அவரது தற்போதைய உரைகளிலும் சஹாபாக்களுக்கு கண்ணியமளிப்பது ஏன்?. அவர்களின் சிறப்பை பற்றி மணிக்கனக்கில் பேசுவது ஏன்?.சஹாபாக்களின் சிறப்பு குறித்து பல கட்டுரைகளை வெளியிடுவது ஏன்?. ஆனாலும் அது போன்ற வட்டார மொழிகளை பயன்படுத்துவதை, பயண்படுத்தியதற்காக கண்டிக்காமல் இருக்க முடியாது. சகோ.பிஜெவும் அதற்க்கு விளக்கமளித்து தான் எந்த தவறான அர்தத்திலும் அவ்வாறு குறிப்பிடவில்லை என்று கூறி இருக்கிறார்.

சகோ.பிஜெ அவர்கள் பேசிய அந்த 72 கூட்டத்தினர யார்? என்ற 29 சிடியை வேறு வேலை இல்லாமல் எதில் குறைகண்டுபிடிக்கலாம், எதில் நொட்டு சொல்லலாம் என்பதற்காக முழுவதுமாக தேடி எடிட்டிங் செய்து 1 சிடியாக்கி பித்னா செய்யும் இந்த இயக்க வெறி
தமுமுகவினரை என்ன வென்று சொல்வது?. சகோ.பிஜெ சஹாபாக்களை திட்டமாட்டார் என்று தெளிவாக தெரிந்தும் அவர் மீது பழி போடுவது எதற்கு? தமுமுகவை விட்டு வெளியாகி இன்று ததஜ என்ற இயக்கத்தை தமுமுகவை விட பல மடங்கு வளர்சியடைய செய்துவிட்டார் என்ற பொறாமையே அதற்க்கு மூல காரணமாக இருக்க முடியும்.

அன்று அந்த 72 கூட்டத்தினர் சிடியை விட அனைவரும் ஒன்றாக இருந்த காலத்தில் இதே போன்று வட்டார மொழி வார்த்தைகளை பல முறை பல இடங்களில் உபயோகப்படுத்தி இருக்கிறார். இன்று சகோ.பிஜெ சஹாபாக்களை திட்டுகிறார் என்று பிரச்சாரம் செய்யும் தமுமுகவினர் அன்று சகோ.பிஜெயின் வட்டார மொழி பேச்சை கண்டிக்காதது ஏன்? இன்று அவரை எதிர்பது போல் அன்று எதிர்காதது ஏன்?. ஏனென்றால் சகோ.பிஜெ வேண்டுமென்றே திட்டமிட்டு சஹாபாக்களின் கண்ணியத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு அன்றும் சொல்லவில்லை, இன்றும் சொல்லவில்லை என்பது இந்த தமுமுகக்கு தெளிவாக தெரியும்.

அடுத்து சில குர்ஆன் வசனங்களுக்கு சகோ.பிஜெ தவறான அர்த்தம் கொடுத்து விட்டார் என்று தமுமுகவினர் கூறகிறார்கள். சரி தவறானது என்று மட்டுமே பிரச்சாரம் செய்யும் இவர்கள் அது எப்படி தவறானது, அதன் சரியான மொழிபெயர்ப்பு எது என்பதை வெளிக்காட்டாமல் இருப்பது ஏன்?. அடுத்து சகோ.பிஜெ ஒரு மொழிப்பெயர்பை சொல்கிறார், மற்றவர்கள் சில மொழிபெயர்ப்பை சொல்கிறார்கள். இதில் மண்டையை போட்டு உடைத்து கொள்வது பொதுமக்கள் நாம்தான். இந்த இரு கருத்துடைய மார்க்க அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து. சில பார்வையாளர்களை வைத்து அவர்கள் சர்சையாக உள்ள விஷயத்தை பற்றி கலந்துரையாடி அதை விடியோவாக வெளியிட்டால். இவர்கள் சொல்வதில் எது உண்மை, எது சரியானது என்பது வெளிவரும். சகோ.பிஜெயை பொருத்தவரை அனைத்து கலந்துரையாடலுக்கும் எப்பொழுதும் தயாராக உள்ளதாக பல முறை அறிவித்துள்ளார். எனவே தமுமுகவினர் நோட்டிஸ், மெயில் என்று குற்றச்சாட்டுகளை அடுக்காமல் கலந்துரையாமல், விவாதம் என்று வருவதே சரியானது.


தன்னை நபி என்று வாதிட்ட மிர்ஷா குலாமோடு, நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு நபியே கிடையாது என்று உலகிற்க்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கிய சகோ.பிஜெவையும் ஒப்பிட்டு பேசுவது மிகப்பெரிய தவறாகும். இது குறித்து தமுமுகவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளட்டும். அவதூறுலேயே மிகப்பெரியது இதுவாகத்தான் இருக்கும். இதை தமுமுகவினர் நிறுத்தமறுத்தால் அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் மாபெரும் கேடுதான்.


வஸ்ஸலாம்,
சைதை அஹமது அலி.
ahamedali2006@gmail.com


9 comments:

அபூ முஹம்மத் said...

//தமுமுக ஹராம் பத்வா புகழ் ஜாக் தங்கள் மாத இதழில் 1 ஹதீஸை தவிர மற்ற அனைத்தும் லயிபானது என்பதை ஒத்துக்கொண்டது. அந்த ஒரு ஹதீசும் லயிபானதுதான் என்று ததஜ ஏகத்துவத்தில் விளக்கிய பிறகு ஜாக் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணவில்லை.//

ஜாக் சார்பாக வெளிவந்தால்தான் ஏற்றுக்கொள்வீர்களா? மேற்கண்ட ஏகத்துவ இதழுக்கு பதில் வெளியாகி சுமார் 3 மாதங்கள் உருண்டோடி விட்டன. மக்களெல்லாம் மறந்து இருப்பார்கள் என சைதை அஹ்மது அலியும் ததஜவினரும் வழக்கமான பொய்களை பரப்ப ஆரம்பித்துள்ளார்கள்.

இதே தமிழ்முஸ்லிம் அரசியல் மேடை வலைப்பதிவில் இதற்கான சுட்டியை "தவ்ஹீத் பெயரால் தக்லீத் செய்யாதீர்கள்" என்ற இதற்கு முந்தைய பதிவில் சகோதரர்கள் இட்டிருந்தார்கள். ஆனால் கோயபல்ஸ் பாணியில் பொய் சொல்லும் ததஜவினர் ஏகத்துவ இதழுக்கு பதில் அளிக்கவில்லையென்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

டான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதே பொய்யை (மறுப்பு தரப்படவில்லை என) பி.ஜே. சொல்லியுள்ளார்.

இந்த பொய்கூட, ததஜவினரை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பமாகும்.

உங்களுக்காக அந்த லிங்க்

ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்

புதுப் பார்வை said...

பிஜே சிறந்த ஆய்வாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஜக்காத் உட்பட இன்னும் சில சட்டங்களில் அவர் தவறிழைத்துள்ளார் என்பது நிசர்தனமான உண்மை. வருடந்தோரும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்திலிருந்து நீங்கள் மாறி விட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள். காரணம் வருடந்தோரும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற செய்திகள் எல்லாம் பலவீனமாக வருவதால் அதை நடைமுறைப்படுத்த முடியாது என்பது உங்கள் வாதம் (அதாவது பிஜேயின் வாதம்)

அவை அனைத்தும் பலவீனமான செய்தி என்றே (ஒரு வாதத்திற்கு) வைத்துக் கொள்வோம். ஒரு முறைகொடுத்தால் போதும் என்பதற்கு ஒரு பலவீனமான செய்தியையாவது அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்களா.. என்றால் இல்லை என்பதே பதில். வெறும் தர்க்க ரீதியான காரணங்களை எடுத்துக் கூறி (அதிலும் பல காரணங்களை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள்) தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆதாரம் - தர்க்க வாதங்கள் என்ற நிலையை கடந்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

ஜக்காத் என்பது ஐம்பெரும் கடமைகளில் ஒன்று. இந்தக் கடமையை கடந்த 1425 ஆண்டுகளாகவே (ஸஹாபாக்கள் முதல் இன்று வரை) அனைவரும் தவறாக விளங்கித்தான் வந்துள்ளார்களா.. இத்துனை ஆண்டுகளாக இதன் விளக்கத்தை இந்த உம்மத்தில் யாருக்கும் இறைவன் வழங்கவில்லையா...?

ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இன்று வரை ஜக்காத் விஷயத்தில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியது என்பதற்கு வரலாற்று சான்று எதையாவது கொடுக்க முடியுமா...? எவருமே மாற்றுக் கருத்துக் கொள்ளாத ஒரு விஷயத்தில் - இந்த சட்டத்தின் நிலை இதுதான் என்று விளங்கி வைத்துள்ள ஒன்றில் இன்றைக்கு ஆய்வு நடத்துவது முறைதானா...?

ஆய்வைக் கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் தனது ஆய்வில் தனது முடிவுக்கு (ஒருமுறை கொடுத்தால் போதும் என்பதற்கு)தெளிவான ஆதாரம் இல்லாத பட்சத்திலும் தனது ஆய்வே சிறந்தது என்று மக்கள் மன்றத்தில் வைக்கும் துணிவை என்னவென்பது?

கடந்த காலங்களில் பிஜேயின் அனேக ஆய்வுகளை நாம் அங்கீகரித்தோம். காரணம் நடைமுறையா - ஆதாரமா என்பது அங்கு தலையான பிரச்சனையாக பார்க்கப்பட்டது. நடைமுறையை விட ஆதாரமே முக்கியம் என்பதால் நடைமுறைகளை தூக்கி எரிந்து ஆதாரங்களை ஏற்றோம். ஜக்காத் விஷயத்தில் 'நடைமுறையா.. ஆதாரமா.. என்பது பிரச்சனையாக இல்லை. 'நடைமுறையா.. எனது ஆய்வா.. என்பதுதான் பிரச்சனையாக உள்ளது. ஏனெனில் ஒருமுறை கொடுத்தால் போதும் என்பதற்கு தர்க்க வாதங்களை தவித்து ஒரேயொரு ஆதாரத்தைக் கூட பிஜேயால் எடுத்துக் காட்டவே முடியாது.

உண்மை இத்துனை தெளிவாக இருக்கும் போது ஜக்காத் விஷயத்தில் உங்கள் நிலையை பிஜேயின் நிலையாக மாற்றிக் கொண்டீர்கள் என்றால் இதற்கு என்ன பெயர் கொடுப்பது?

ஜக்காத் பற்றி எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நாம் இணையத்தில் பதிந்தால் உங்களால் பதிலளிக்க முடியுமா..? ஏகத்துவத்தைப் பாருங்க்ள் சீடியை பாருங்கள் என்றெல்லாம் பதில் எழுதாமல் நீங்களோ அல்லது பிஜேயிடமிருந்து பதிலைப் பெற்றோ பதிக்க நீங்கள் அல்லது உங்கள் சிந்தனையுள்ளவர்கள் தயாரா...?

'நேரடியாக பிஜேயு்டன் விவாதிக்கத் தயாரா" என்று நடைமுறைக்கு சாத்தியாமில்லாத வாதங்களை எடுத்து வைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஏனெனில் பிஜேயுடன் மாற்றுகருத்து உள்ளவர்கள் அனைவரும் நேரடியாக அவருடன் விவாதிக்க வேண்டும் என்றால் இது நடைமுறை சாத்தியமா....

இன்றைக்கு வெளிநாடுகளிலிருந்து தான் இத்தகைய பதிவுகள் நடக்கின்றன. இவர்கள் அனைவரும் தாயகம் செல்லும்போது பிஜேயு்டன் விவாதிக்க வேண்டுமா... இதுதான் வழி என்றால் விவாதத்தைத் தவிர மற்ற எதற்கும் பிஜேக்கு நேரமில்லாமல் போகும் பரிதாப நிலைதான் ஏற்படும். மட்டுமின்றி தாயகம் செல்லும் மாற்றுக் கருத்துள்ள அனைவரும் தன்னோடு விவாதிக்க வேண்டும் என்று பிஜே கூறினால் அது அறிவுப் பூர்வமான முடிவாக இருக்குமாஈ?

இன்றைக்கு உங்கள் இயக்கத்தை மிகப்பெரிய வலுவான இயக்கமாக வளரத்து விட்டதாக சந்தோஷப்பட்டுக் கொள்கிறீர்கள். இருந்து விட்டு போகட்டும் இந்த இயக்கத்தில் இஸ்லாமிய சட்டங்களை ஆன்லைனில் விவாதிக்க்க் கூடிய அளவிற்கு திறமையுள்ளவர்கள் இல்லையா...?

எதிர்கருத்துக்களை விவாதிக்கத் தயார் என்று ததஜ ஒரு பகிரங்க விவாத அரங்கை ஆன்லைனில் துவங்கட்டும். அது அறிவுடமையாகும். மார்க்க விஷயத்தில் பிஜேயின் முரண்பாடுகளை நாங்கள் சுட்டிக் காட்டுவதற்கும் அவரது விளக்கத்தில் தெளிவு இருந்தால் எங்கள் தரப்பு வாதங்களை திரும்ப பெறுவதற்கும் அதுதான் சரியான வழியாக இருக்கும். இதற்கு முயற்சி செய்யுங்களேன்.

ஜுடுவா said...

புதுப்பார்வை அறிவுப்பூர்வமான பல கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார்கள்.

சிந்திக்க வேண்டிய நடுநிலையான கருத்துக்கள் இவை.

ஆனால் அந்த கடைசி பாரா ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

//எதிர்கருத்துக்களை விவாதிக்கத் தயார் என்று ததஜ ஒரு பகிரங்க விவாத அரங்கை ஆன்லைனில் துவங்கட்டும். அது அறிவுடமையாகும். மார்க்க விஷயத்தில் பிஜேயின் முரண்பாடுகளை நாங்கள் சுட்டிக் காட்டுவதற்கும் அவரது விளக்கத்தில் தெளிவு இருந்தால் எங்கள் தரப்பு வாதங்களை திரும்ப பெறுவதற்கும் அதுதான் சரியான வழியாக இருக்கும். இதற்கு முயற்சி செய்யுங்களேன்.//

பகிரங்க திறந்த ஓர் விவாத மன்றம் தேவையே. ஆனால் அதனை ததஜ அமைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களுடன் வரும் கேள்வியை அவர்கள் அனுமதிப்பார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

சகோ. முஜிபுர் ரஹ்மான் உமரியுடன் விவாதத்திற்கு சம்மதித்து விட்டு அவர் பின்வாங்கி ஓடி விட்டார் என்று அப்பட்டமாக பொய்யை வளைகுடாவில் இணையம் வழி பரப்பிய இவர்களை இவ்விஷயத்தில் எவ்வாறு நம்பிக்கை கொள்வது.

எனவே ஓர் திறந்த விவாத மன்றம் தேவை தான். ஆனால் அதனை ததஜ வோ அல்லது அவர்களுக்கு எதிரானவர்களோ அமைப்பதை விட நடுநிலை பேணக்கூடிய சமுதாயத்தில் ஒற்றுமையை விரும்பும் இவ்விரு கூட்டத்தைச் சேராதவர்கள் அமைப்பது தான் சரியானது.

திருவை தென்றல் அஹ்மது

Anonymous said...

Dear Abu Muhammed,

Collect all that which is wrong with PJ.
Get ready for (direct) debate.
Don't try to make the people fool with Online debate. It will make Many Unknowns like 200 Fazlul Ilahi.
Do You??????/
Abdallah

புதுப் பார்வை said...

அன்பின் சகோதரர் திருவை தென்றல் அஹ்மத் அவர்களின் கமாண்ட் பார்த்தேன்.

நடுநிலையாளர்கள் விவாத மன்றம் துவங்கட்டும் என்ற உங்கள் கருத்து ததஜவின் நன்மைத் தீமைகளை அடையாளங்காட்ட சரியான களமாக அமையாது.

அப்படித் துவங்கினால் ததஜவினர் தங்கள் நிலைப்பாட்டை புகழ்ந்தும் தமுமுகவை இகழ்ந்தும் எழுதுவார்கள். தமுமுகவினர் தங்கள் மேலாண்மையை ககாட்டியும் ததஜவை இழக்ந்தும் எழுதுவார்கள். இன்றைக்கு பரவலாக (தமிழ் முஸ்லிம் மன்றம் உட்பட) பரவலாக அதுதான் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி பொதுவான மன்றத்தில் வைக்கப்படும் கருத்துக்களை கேள்விகளை ததஜ நேரடியாக அவ்வளகாக கண்டுக் கொள்ளாது.

எனவே மார்க்க விஷயத்தில் ததஜவின் நேரடி வார்த்தைகளை பெற வேண்டுமானால், அவர்களின் கருத்துக்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமானால் அவர்களின் தளமாகத்தான் இருக்க வேண்டும்.

'அவர்களுக்கு எதிராக வரும் கேள்விகளை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்' என்ற உங்கள் வாதம் சரியாக இருக்கலாம். அதற்காக அவர்களின் மன்றத்தில் பதிக்கும் அதே கேள்வியை பொது மன்றத்திலும் பதித்து விடலாம். அப்போது அவர்கள் மறைப்பது அம்பளமாகி விடும். இதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இதை விடுத்து நீங்கள் நினைப்பது போல ஆரம்பித்தால் இன்றைய நிலையே தொடரும்.

ததஜ பகிரங்க விவாத அரங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று நாம் சொல்வது மார்க்க பிரச்சனைகளை விவாதிப்பதற்காகத்தான். அரசியல் பிரச்சனைகளையல்ல என்பதை அழுத்தமாக நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு வருட அரசியல் போராட்டத்தால் மார்க்கம் பற்றிய சிந்தனை குறைந்துள்ளதை மறுக்க முடியாது. எனவே சட்டங்களை விவாதிக்கக் கூடிய ஒரு மன்றம் அவர்கள் தரப்பிலிருந்து வேண்டும்.

சகோதரர் முஜிபுர்ரஹ்மானின் அனேக கருத்துக்களில் எனக்கு மாற்று கருத்து உண்டு.

ஸலபிக் கொள்கை, குர்ஆனுக்கு முரணாக தென்படும் ஹதீஸ்களை என்ன செய்வது போன்றவற்றில் முஜிபுர்ரஹ்மான் போன்றவர்களின் நிலைப்பாடு சரியில்ல என்பது என் கருத்து. இதுபற்றி பேசுவதாகக இருந்தால் அவர்கள் தரப்பிலிருந்து ஒரு விவாத மன்றம் துவங்கட்டும். அங்கு கேள்விகள் பிறக்கும்.

சுல்தான் said...

குர்ஆன் அரபியில் இறங்கியது. ஹதீஸ் மூலங்களும் அரபியிலேயே உள்ளது. எனவே அதைப் பற்றி தமிழில் விவாதிப்பதற்கு மேலாக அதை அரபியிலேயே தெளிவு பெற வேண்டியது அவசியம்.
எனவே சகோதரர் ( இலங்கை மௌலவி) யு.கே. முஹம்மது ஜமீல் மதனீ சவூதியிலிருந்து கேட்டுக் கொண்டது போல் குர்ஆன் மற்றும் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்ற அரபியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரை நடுவராகக் கொண்டு அவர் (முதன் முதலில் பீ.ஜே. பிரச்னையைக் கிளப்பிய) ஸலபிக் கொள்கை முதல் ஒவ்வொன்றாக பீ.ஜேயிடமோ (அல்லது அவர் ஒப்புக் கொள்ளும்) நபரிடமோ அரபி யிலேயே விவாதிக்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
http://worldmuslimmedia.com/islamkalvi/sahabi/
பீ.ஜே.வை அழைத்து வர பொறுப்பெடுத்துக் கொள்ளும் நபர் யாரேனும் உண்டா?

அபூ முஹம்மத் said...

மேற்கண்ட பதிவில் எழுதப்பட்ட விஷயம்:

//தமுமுக ஹராம் பத்வா புகழ் ஜாக் தங்கள் மாத இதழில் 1 ஹதீஸை தவிர மற்ற அனைத்தும் லயிபானது என்பதை ஒத்துக்கொண்டது. அந்த ஒரு ஹதீசும் லயிபானதுதான் என்று ததஜ ஏகத்துவத்தில் விளக்கிய பிறகு ஜாக் தரப்பில் இருந்து எந்த பதிலையும் காணவில்லை.//

என்னுடைய பதில்:
ஜாக் சார்பாக வெளிவந்தால்தான் ஏற்றுக்கொள்வீர்களா? மேற்கண்ட ஏகத்துவ இதழுக்கு பதில் வெளியாகி சுமார் 3 மாதங்கள் உருண்டோடி விட்டன. மக்களெல்லாம் மறந்து இருப்பார்கள் என சைதை அஹ்மது அலியும் ததஜவினரும் வழக்கமான பொய்களை பரப்ப ஆரம்பித்துள்ளார்கள்.

உங்களுக்காக அந்த லிங்க்

ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) 'ஏகத்துவம்' மாத இதழில் மீண்டும் குழப்பங்கள்


//Dear Abu Muhammed,
Collect all that which is wrong with PJ.
Get ready for (direct) debate.//

பி.ஜே. பதில் தரப்படவில்லை என்கிறார். அதுதான் இப்பொழுது மைய பிரச்னையே. லிங்க்-ல் மவ்ஸ் வைத்து சொடுக்கினால் பதில் அளிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்று தெரிந்துவிடும். சொடுக்குவதற்குகூட உங்கள் பி.ஜேயிடம் போய் விவாதம் செய்யனுமா?

எனவே உங்கள் பி.ஜே.யிடம், 3 மாதத்திற்கு முன்பே ஏகத்துவ இதழுக்கு அதே மவ்லவியால் பதிலளிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி, மக்களுக்கு வேறு பொய்களை தயார் செய்து சொல்லச் சொல்லுங்கள்.

Anonymous said...

Dear,
What I say that, Dont try to make Online Debate. Try to do it Face to Face. Otherwise meny fake people will appear Online (from Fazlul Ilahi's Side also)

wassalam

ஜுடுவா said...

//Otherwise meny fake people will appear Online//

so what?

மடியில் கனமிருப்பவர்கள் தான் வழியில் பயப்படுவார்கள். அவர் என்ன அப்படியா? இல்லையென நிரூபியுங்களேன். பிரச்சனை தீரும். அவர் மேல் மக்களுக்கு உள்ள சந்தேகமும் தீருமல்லவா?

தீரமாக எடுத்ததற்கெல்லாம் விவாதம், முஹாபலா என அறைகூவல் விடும் சகோ.பிஜே அவர்கள் இதற்கும் தயாராக வேண்டும். இதுவே அவர் மீதுள்ள களங்கம் தீர ஒரே வழி.