Saturday, June 03, 2006

சிறைவாசி அன்சாரி பேட்டி (கடைசி பாகம்)

சகோ. முஹம்மது அன்சாரி

கோஷ்டி பூசல் ஏன்?
*********************************************************************************
குறிப்பு : சுதந்திரமான வலைப்பதிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் சகோ. அன்சாரி அவர்களின் பேட்டி, அப்படியே எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளியிடப்படுகின்றது. இயக்கங்கள் மீதோ தனிப்பட்ட நபர்கள் மீதோ கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆசிரியர் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார்.
- முகவைத்தமிழன்
*********************************************************************************


முகவைத்தமிழன் : இவ்வளவு தூரம் ஒற்றுமையை பற்றி பேசுகின்றீர்களே, வெளியில் நமது சகோதர முஸ்லிம் இயக்கத்தினர் தங்களுக்குள் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுமையின்றி அடித்துக்கொண்டு நாறுவதை பார்த்து மாற்று மதத்தினர் கூட காரித்துப்பும் அளவிற்கு கேவலமாக உள்ளது. இவர்களின் ஒற்றுமையின்மையால் நமது சமுதாயம் வெளியே பழகீனப்பட்டு நிற்கிறதென்றால் சிறையிலும் கூட நீங்கள் உங்களுக்குள் அடித்துக்கொள்வதும் ஒருவர் மற்றவரை தாக்கி அறிக்கை வெளியிடுவதுமாக உள்ளீர்கள் உங்களுக்குள் ஏன் இந்த கோஷ்டி பூசல்? இது உங்களுக்கு ஆதரவளிக்க நினைக்கும் நம் சமுதாயச் சகோதரர்களின் மனதில் கூட சிறைவாசிகளை பற்றிய வெறுப்பை ஏற்படுத்துமே?

சகோ. முஹம்மது அன்சாரி : எங்களுக்குள் எவ்வித கோஷ்டிப்பூசலும் கிடையாது. இயக்கத்தைச் சார்ந்த அனைவரும் ஒரு பகுதியாக ஒற்றுமையாக இருக்கிறோம்..

எவ்வியக்கத்தையும் சாராத இஸ்லாத்திற்கு புறம்பான செயல்களை செய்து வந்த ஒரு சிலரை இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்ந்துள்ளார்கள். இவர்களிடம் இதாஅத் என்பது துளியளவும் கிடையாது. தான்தோன்றித்தனமாக தங்கள் மனோ இச்சைப்படி வாழ்ந்திட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். சிறை வந்தும் கூட இஸ்லாமிய பயிற்சிகளுக்கு தங்களை உட்படுத்தி, திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இல்லாதவர்கள் வெளியே உள்ளதைவிட மிக மோசமாக சிறைவாழ்வை கழித்து வருகிறார்கள்.


இங்ஙனம் ஐந்தாறு நபர்களை உளவுத்துறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவருகிறது. இவர்களை பயன்படுத்தி வழக்கில் இரு கோஷ்டியாக உருவகப்படுத்தி பல பிரச்சனைகள் நடந்து வருவதாக பத்திரிக்கைகளுக்கு தவறான தகவல்களை தருகிறார்கள். சிறைப்பட்டோரைப்பற்றி உம்மத்தில் ஏற்பட்ட அனுதாபத்தை அகற்றிட உளவுத்துறையின் ஆலோசனையின்படி இவர்கள் செயல்படுகிறார்கள். ஒரு சாரார் வழக்கை நிறுத்துகிறார்கள். வழக்கின் விசாரணை தாமதப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை இவர்கள் மூலம் உளவுத்துறையினர் பத்திரிக்கைக்கு செய்தியாக்குகிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் ஒரு முறை கொசுவர்த்திகளை சாப்பிட்டு கோர்ட்டில் வழக்கின் விசாரணை முடித்திட வேண்டி தற்கொலை நாடகமாடினார்கள். இச்செய்தி பத்திரிக்கைளில் பெரிய அளவில் பிரசுரமாயின. இதை படிப்போர் நிச்சயம் சிறையில் கோஷ்டிப்பூசல் என நம்புவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. உளவுத்துறையில் சூழ்ச்சி(கைங்கர்யம்) தான் இது.

திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் இவ்வழக்கை திறம்பட நடத்தி வருகிறோம். வழக்கின் போக்கு எங்களுக்கு சாதகமாக உள்ளது. இதையறிந்த உளவுத்துறையினர் இவ்வழக்கை அவசர கதியில் முடித்திட இப்படிப்பட்ட கருங்காலிகள் மூலம் எங்களுக்கு பல நிர்பந்தங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆகவே, கோஷ்டிப்பூசல் என்பது இங்கு கிடையாது. பத்திரிக்கையில் வரும் செய்திகள் உண்மையல்ல. துளியளவும் நம்பிட வேண்டாம்.
சிறுபான்மை உதவி அறக்கட்டளை (சி.டி.எம்.) பற்றி


முகவைத்தமிழன் : நல்லது, தங்கள் வழக்குகளை நடத்துவதாகவும் தங்களுக்கு உதவி வருவதாகவும் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். தங்கள் மனைவி நிர்வாகியாக உள்ள சி.டி.எம் என்ற அமைப்பினர் கூட அவர்கள் தான் சிறைவாசிகள் அனைவரின் வழக்குகளையும் நடத்துவதாக கூறுகின்றார்கள் இது குறித்து சற்று விளக்குங்களேன்?

சகோ. முஹம்மது அன்சாரி : இப்போது எங்கள் அனைவரது வழக்குகளையும் நடத்தி வருவது சி.டி.எம் என்ற சிறுபான்மை உதவி அறக்கட்டளைதான்.

1998 பிப்ரவரி 14-ந்தேதி குண்டுவெடிப்பு வழக்கில் சிக்குண்ட முஸ்லிம் சிறைவாசிகளில் கே.கே. நகரைச் சார்ந்த 40 நபர்களை மட்டும் கவனிப்பதற்கு த.மு.மு.க. சார்பாக உருவாக்கப்பட்டதுதான் பெண்கள் நலவாழ்வு அறக்கட்டளையாகும்.

கேரளாவைச் சார்ந்த அப்துல் நாசர் மஃதனி உள்பட 9 பேருக்கு மட்டும் உருவானதுதான் மஃதனி சகாய சமிதியாகும்.
மீதமுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நபர்களைத் தவிர மற்ற அனைவரையும் கவனிக்க உருவானதுதான் Charitable Trust of Minorities (CTM). மீதமுள்ளவர்களை கவனித்திட யாரும் முன்வராததால் சிறைபட்டோரின் குடும்பங்களே ஒன்றிணைந்து இவ்வறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. சிறைபட்ட மூன்று வருடங்களுக்கு பிறகுதான் இவ்வறக்கட்டளை இயங்க ஆரம்பித்தது. தமிழக முஸ்லிம்களிடத்தில் சிறைபட்டோரைப் பற்றிய விழிப்புணர்வு அடைய செய்ய இவ்வறக்கட்டளை தமிழகம் முழுவதும் பல சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது. இச்சொற்பொழிவில் பல சமூக பிரமுகர்கள் கலந்து சிறப்பித்துள்ளோம். உம்மத்தினரிடையே சிறைபட்டோரின் விடுதலையில் ஆர்வம் கொள்ள காரணம் CTM-ன் சொற்பொழிவுகள்தான் என்றால் அது மிகையல்ல.

கா. மார்க்ஸ், கான் பாகவி, ஹாமித் பக்ரி, உமர்செரீப் காஸிமி, தேசிய லீக் பஷீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்ந்த தலைவர்கள், ம.தி.மு.க. நாஞ்சில்சம்பத், ஜமாத்துல் உலமாத்தலைவர் சலாவுத்தீன் ரியாஜி.. என பல பிரமுகர்கள் இவ்வறக்கட்டளையின் சொற்பொழிவில் பங்காற்றி உள்ளார்கள்.

சமுதாயத்தில் தஃவாபணி, கல்விப்பணி, சீர்திருத்தப்பணி என பல பணிகள் செய்ய ஆட்களுண்டு. சுமத்தப்பட்ட வழக்குகளை எதிர்கொள்ள சட்டரீதியாக போராடத்தான் யாரும் முன்வருவதில்லை. காரணம் உளவுத்துறையின் அச்சுறுத்தல்கள், இடையூறுகள் என இப்பணி செய்வோருக்கு தொடர்ந்து நிகழும் என்ற ஐயப்பாடுதான். சமுதாயத்தில் இப்பணியை செய்திட யாரும் முன்வரவில்லை. துணிந்து செய்திட வேண்டிய முக்கிய பணியாகும் இது.

சுமத்தப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி PLEA என்ற ஓர் அமைப்பு குண்டுவெடிப்பிற்கு பின் ஏற்படுத்தப்பட்டது. விடியல்வெள்ளி ஆசிரியர் குலாம் முஹம்மது மற்றும் சமூக பிரமுகர்களும் இவ்வமைப்பின் பொறுப்பில் இருந்தனர். என்ன காரணத்தினாலேயோ உருவான இவ்வமைப்பு ஒன்றிரண்டு கூட்டங்களோட முடங்கிப்போயின.

கலவர நேரங்களில் சிக்குண்டவர்களுக்கும், வழக்கு சுமத்தப்பட்டவர்களுக்கும் தொடர்ந்து சட்ட உதவிகள் கிடைத்திடத்தக்கவகையில் நிச்சயம் ஓர் அமைப்பு தேவை. மக்கள் கூட்டம் திரளாக நிறைந்த பெரிய அமைப்புகள்கூட சட்டரீதியான விழிப்புணர்வு இல்லாமல் கலவர நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டிட சட்டரீதியான, உரிய வழிமுறைகள் அறியாமல் தடுமாறுவதைக் காணலாம். உலக விஷயங்கள் அறிந்த அமைப்புகளே இப்படி என்றால் சிறைப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலைகளை சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. சிறைப்பட்ட தங்கள் குடும்பத்தினரை எப்படியாவது மீட்டிடவேண்டும் என்ற பதைபதைப்பில் செய்வதறியாமல் உருப்படியற்ற வழக்கறிஞர்களுக்கு ஒன்றுக்கு பத்து மடங்கு பணம் கொடுத்து அவதிப்படுவதை காணலாம். கொள்ளைப்பணம் பெற்ற இவர்கள் உடனடியாக மீட்டிட வழிதான் செய்திடுவார்களா? இப்படி ஏமாறுபவர்கள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கமோ எப்படியாவது உறவினர்களை மீட்டிட வேண்டும் என்ற அவசரகதியில் வட்டிக்கு பணம் வாங்கி திண்ணை வக்கீலுக்கு வாரி வழங்குவார்கள். நாட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான ஆசைகள் உண்டு. ஒரு சிலருக்கு மழைபெய்து கொண்டே இருக்கவேண்டும் என்கின்ற ஆசை. மற்றவர்களுக்கு மழைபெய்தால் வியாபாரம் கெட்டுவிடும், ஆகவே, மழையே பெய்திடக்கூடாது என்ற ஆசையுண்டு. அதுபோலத்தான் நம்ம ஊர் திண்ணை வக்கீல்களுக்கு ஒரு விபரீத ஆசையுண்டு. நாட்டில் கலவரம் ஏதேனும் நடந்திட வேண்டும் என்பதே அந்த ஆசை. யாரும் அப்போதுதானே இத்திண்ணை வக்கீல்களுக்கு வீடு தேடி பணம் வரும். 1000, 2000-த்தால் முடித்திட வேண்டிய வழக்குகளை அறியாமையின் காரணமாக குடும்பத்தார்கள் 10000, 20000 என வக்கீல்களுக்கு கப்பம் கட்டுவார்கள்.

இத்தகைய கழுத்தறுப்புகளிலிருந்தெல்லாம் நம் சமூக மக்களை காப்பாற்றிpட வேண்டி ஓர் அமைப்பு தேவையாக உள்ளது என்பதை உணந்துதான் CTM உருவாக்கப்பட்டுள்ளது. பல அச்சுறுத்தல்களையெல்லாம் சிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வரும் இவ்வறக்கட்டளை ஆறாம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது இவ்வறக்கட்டளையானது கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட தமிழகத்தில் இதுவரை நடந்திட்ட மதமோதல்கள் வழக்குகளை அனைத்தும் சட்டரீதியாக எதிர்கொள்ள இவ்வறக்கட்டளை பொறுப்பெடுத்துள்ளது. இவ்வறக்கட்டளை கவனித்துவரும் வழக்குகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. CTM பொறுப்பெடுத்த வழக்குகளில் இதுவரை (1) கான்ஸ்டபிள் செல்வராஜ் கொலை வழக்கு – கோவை (2) கோட்டை அமீர் கொலை வழக்கு (3) அப்பாஸ் கொலை வழக்கு (4) ஆனந்தகுமார் கொலை வழக்கு (5) சத்தியசீலன் கொலை வழக்கு – மேலப்பாளையம் என ஆகிய வழக்குகளில் வெற்றி கிட்டியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

பொருளாதார உதவிகள்தான் மிக, மிக அதிகமான தேவையாக இருக்கின்றன. சட்ட நுணுக்கங்கள் தெரிந்த திறமையான வழக்கறிஞர்களைத்தான் இக்கொலை லழக்குகளுக்கு நியமித்திட வேண்டியுள்ளது.

தொலைதூர நோக்குள்ளவர்கள் இவ்வறக்கட்டளையின் பணியை உணர்ந்திட தலைப்படுவார்கள். பல சிரமங்கள் நிறைந்த இப்பணியை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்வதற்கு பொருளாதாரத்தின் உதவி மிக மிக அவசியமாகும்.

இவ்வறக்கட்டளைமீது யாரேனும் குற்றச்சாட்டுகள் கூறினால் அது அவதூறாகும். அவர் எதையும் விசாரிக்காமல் இட்டுக்கட்டுவதற்காக கூறுகிறார் என்பதே உண்மையாகும். இவ்வறக்கட்டளை இதுவரை வசூலித்திட்ட அனைத்துப் பணத்திற்கும், முறையான கணக்கை வைத்திருக்கின்றது. இதன் பொருளாளர் தங்கப்பா இதன் வரவு–செலவு கணக்குகளை சரியான முறையில் பராமரிக்கிறார். வசதி வாய்ப்புகள் நிறைந்த தங்கப்பா அவர்கள், ஐந்தாணடுகளாக இவ்வறக்கட்டளையில் பொருளாளராக இருந்து வருகிறார். உலகியல் நோக்கம் எதுவுமின்றி திருக்குரானில்(76:8) வசனத்தின் கட்டளைப்படி நன்மை நாடி பணியாற்றுகிறார். முதல் முறையாக அமீரகத்தில் வசூலிக்கப்பட்ட பணத்திற்கு முறையான கணக்கு சமர்ப்பித்ததில் மீண்டும் அமீரகத்தில் வசூலிக்க வாய்ப்பு கிட்டியது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இவ்வறக்கட்டளைப்பற்றி விவரங்களுக்கு தங்கப்பா அவர்களை எந்நேரத்திலும் அணுகலாம்.

முகவைத்தமிழன் : தங்களின் ஆதங்கங்களை எம்முடன் விருப்பு வெறுப்பின்றி பகிர்ந்து கொன்டமைக்கு நன்றி. இறைவன் நாடினால் நீங்கள் அனைவரும் விரைவில் விடுதலையாகி தங்களைப் பிறிந்து வாடும் குடும்பத்துடன் சங்கமமாவீர்கள் என்று நம்பிக்கையில் என்றும் உமக்காக பிறார்த்திப்போம். மிக்க நன்றி.

சகோ. முஹம்மது அன்சாரி : நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். தங்கள் மூலம் இந்தச்செய்தி எந்தவித மாறுதலும் இன்றி எம் சமுதாயத்தை சென்றடையும் என்று நம்புகின்றோம். இதன் மூலம் இதுவரை எங்களைப்பற்றி இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்திகளையே நம்பி வந்த எம் சமுதாய சகோதர, சகோதரிகள் எம் நிலையையும் எம் குடும்பத்தினரது யதார்த்த நிலைமையையும் உணர்வார்கள் என்று நம்புகின்றோம். எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே.


தமிழ்நாடு சிறுபான்மை உதவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமாகிய சகோ. கோவை தங்கப்பா அவர்களிடம் சில கேள்விகள் :

சகோ.கோட்டை தங்கப்பா


முகவைத்தமிழன் : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோ. தங்கப்பா அவர்களே, தமிழ்நாடு சிறுபான்மை உதவி அறக்கட்டளையை பற்றியும் மேலும் தங்களுடைய பணிகளைப்பற்றியும் சற்று கூறுங்களேன்?

சகோ. கோவை தங்கப்பா : வ அலைக்குமுஸ்ஸலாம் (லரஹ்) அன்பின் முகவைத்தமிழன் அவாகளே, கடந்த 2001 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அல்லாஹ்வின் பேருதவியால் நல்ல மனம் படைத்த நம் சமுதாயச்சகோதரர்கள் சிலரின் உதவியோடு பாதிக்கப்படும் ஒரு முஸ்லிம் கூட நிராயுதபாணியாக விட்டுவிடக்கூடாது என்ற கொள்கையின் இலட்சியமாக கொண்டுதான் இந்த சிறுபான்மை உதவி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இங்ஙனம் உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளை தற்போது இதன் முக்கியப் பணியான தமிழகத்தில் இஸ்லாமிய சமூகத்திற்காக தன் மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தாரை விட்டு சிறையில் அடைபட்டு உள்ளவர்களை மீட்டிட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அதற்குரிய முனைப்புகளில் இந்த அறக்கட்டளையும், நானும் முழுமையாக இறங்கி செயல்பட்டு வருகிறோம். அதுபோல் வழக்குகளுக்காகவும், பாதிக்கபட்ட சிறைவாசிகளின் குடும்பங்களின் நிவாரணத்திற்காகவும் (என) நொடிப்பொழுது கூட ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறேன். என்னுடைய நோக்கம் தமிழகத்தில் இஸ்லாத்திற்கு புறம்பான வழக்குகளைத் தவிர, சமுதாயத்திற்காக சிறையில் உள்ளவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதே ஆகும். எங்களிடம் உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம் போன்ற வழக்கறிஞர் குழு உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்திற்காக எந்த ஒரு நபரும் சிறை செல்லும் பட்சத்தில் இந்த அறக்கட்டளையும், இந்த அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான நானும் ஓடோடிச்சென்று சட்டரீதியாக உதவி செய்ய தயாராக உள்ளேன்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் விடுதலையாகி வெளிவந்த பின்பும், இந்த அறக்கட்டளையானது தொடர்ந்து சமுதாய நலன்களாகிய மனித உரிமை மீறப்படும் கொடுமைக்கு எதிராகவும், சமுதாய மக்களின் நல்வாழ்வு மற்றும் கல்வி வளர்ச்சிக்காகவும், தொடர்ந்து பணியாற்றும். இந்த மாபெரும் அரும்பணிக்காக நமது சமுதாய இயக்கங்களும், ஆலோசகர்களும் எமக்கு ஊக்கமளிக்கவும், ஆதரவு தரவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


கோவை குண்டுவெடிப்பு வழக்கின் விபரம்

சிறுபான்மை உதவி அறக்கட்டளை வழக்கை கவனித்து வரும் நபர்களின் பட்டியல்
குறிப்பு : இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் மட்டுமே இவையல்லாது தமிழகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்ககளையும் CTM தான் கவனித்து வருகின்றது. See the attached file for further details.
1. எஸ்.ஏ. பாஷா, த/பெ. அப்துல் ரஹ்மான்
2. முஹம்மது அன்சாரி, த/பெ. மொய்தீன் ஷேக்
3. எஸ்.ஏ. நவாப் கான், த/பெ. அப்துல் ரஹ்மான்
4. முஹம்மது பாசித் த/பெ. எஸ்.பி.எஸ். ஷேக் பரீத்
5. அப்துல் ஒஜீர், த/பெ. ஏ.ஆர்.எம். யூசுப்
6. எஸ்.ஏ. முஹம்மது அலிகான் என்கிற குட்டி த/பெ.அன்வர்கான்
7. சித்திக் அலி என்கிற இம்ரான், த/பெ.எஸ்.ஏ. பாஷா
8. ஊமை பாபு என்கிற அப்துல் மஜீத், த/பெ. யூசுப்
9. ஜாகீர் உசேன், த/பெ. சலாவுதீன்
10. அப்துல் சலாம் த/பெ.மஜீத்
11. அஸ்லம் என்கிற தடா அஸ்லம், த/பெ.ஜைலாபுத்தீன்
12. எஸ்.சிராஜ் என்கிற ஆட்டோ சிராஜ், த/பெ. சையது மொய்தீன்ஷேக் கான்
13. எம்.ஹெச்.சபூர் ரஹ்மான், த/பெ.ஹுசைன்
14. அப்பாஸ் என்கிற ஷாஜஹான், த/பெ. கௌபத்துல்லா
15. ஜப்ரு என்கிற சையது ஜப்பார் அஹம்மது, த/பெ. சையது ஹபீப்
16. ஏ.இஸ்மாயில் த/பெ.ஏ.கே. அப்துல் ரஹ்மான்
17. ஜாபர் என்கிற மக்கான் ஜாபர், த/பெ.மக்பூல்
18. முஹம்மது அம்ஜத் அலி, த/பெ. அஹம்மது மீரான்
19. அமான் என்கிற அமானுல்லா, த/பெ. காஜா உசேன்
20. முஹம்மது ஜமேஷா, த/பெ.ஹமீத் அன்சாரி
21. ஷாஜஹான் என்கிற அப்துல் ரஹ்மான், த/பெ. அப்துல் லத்தீப்
22. நாசர் என்கிற பல்நாசர், த/பெ. அப்துல் ஜாபர்
23. அமானுல்லா என்கிற ஹைடெக் அமான், அப்துல் சலாம்
24. ஜஹாங்கீர் என்கிற ஜாஹிர், த/பெ. சுலைமான்
25. முஹம்மது முத்து என்கிற முத்தப்பா, த/பெ. சித்திக்
26. சர்ஃபு என்கிற சர்ஃபுத்தீன், த/பெ. அப்துல் சலாம்
27. சம்சு என்கிற சம்சுத்தீன், த/பெ. அபூபக்கர்
28. அபூ என்கிற அபூதாஹீர், த/பெ. இப்ராஹிம்
29. ஜாபர் அலி த/பெ. யாகூப்
30. எல்.எம். ஹக்கீம், த/பெ.எல்.கே.மஜீத்
31. அபூ என்கிற அபூதாஹீர், த/பெ. முஹம்மது யாகூப்
32. முஹம்மது ரஃபீக், த/பெ. முஹம்மது சாலி
33. நூர் முஹம்மது, த/பெ. ஜமேஷா
34. பாஷா என்கிற ஒஜீர் பாஷா, த/பெ. அமீர் ஜான்
35. இப்ராஹிம் என்கிற அடிபட்ட பாபு, த/பெ.அமீர் ஜான்
36. எம். ஹக்கீம், த/பெ. முஹம்மது ஹனீபா
37. என்.எஸ்.ஹக்கீம், த/பெ. சையது முஹம்மது
38. ஈ.எம். மோனப்பா என்கிற முஹம்மது ஹசன், த/பெ. ஈ.கே. மொய்தீன்
39. அஷ்ரப், த/பெ. ஷேக் குட்டி
40. அப்துல் ரஜாக், த/பெ.பஷீர் அஹம்மது
41. முஹம்மது ஆஜம், த/பெ. ஜான் பாஷா
42. சேட் என்கிற சாந்து முஹம்மது, த/பெ.ஏ.எம்.ஷெரீப்
43. ரியாஸ் அஹம்மது, த/பெ. சி.எஸ். ரஷீத்
44. அப்பாஸ் என்கிற சின்ன அப்பாஸ், த/பெ. காசிம்
45. யாகூப், த/பெ.ரஹீம்
46. அபுதாஹீர், த/பெ. முஹம்மது அலி என்கிற ஹைதர் அலி
47. அபூ என்கிற அபுதாஹீர், த/பெ. எம். மொய்தீன்
48. முஹம்மது ரஃபீக், த/பெ. உம்மர்
49. அப்பாஸ், த/பெ. அப்துல் ஜாபர்
50. அப்துல் ரஃபூக், த/பெ. ஜைனுலாப்தீன்
51. முஹம்மது இப்ராஹிம், த/பெ.கே.எம்.கோமு
52. அப்துல் ரஹ்மான், த/பெ.அமீர்ஜான்
53. அப்பாஸ், த/பெ.அப்துல் காதர்
54. அமானுல்லா, த/பெ.அப்துல் அஜீஸ்
55. யாகூப் என்கிற காதர், த/பெ. கே.எஸ். கபீர் ராவுத்தர்
56. சலீம் என்கிற சலீம் பாஷா, த/பெ. கே.ஆர்.நவாப் ஜான்
57. யாகூப் கான் என்கிற பர்கத், த/பெ. சர்தார் கான்
58. அப்துல் கரீம் என்கிற பழனி பாபு, த/பெ. அப்துல் அஜீஸ்
59. அப்துல் ஃபாரூக், த/பெ. என். முத்தலிப்
60. ஹக்கீம், த/பெ.சஹாபுத்தீன்
61. சர்தாஜ்,த/பெ. அமீர்கான்
62. சலாவுத்தீன், த/பெ. சையது இக்பால்
63. ஷெரீப், த/பெ. ஜாபர்
64. முஹம்மது ஷபீக், த/பெ.கே.எம்.அஹம்மது
65. ரபீக் என்கிற முஹம்மது ரபீக், த/பெ.யூசுப்
66. சம்ஜித் அஹம்மது, த/பெ. பஷீர் அஹம்மது
67. முஹம்மது தஸ்தகீர், த/பெ. முஹம்மது ரியாப் - இறந்தவர்
68. ஆஸிபுல்லா, த/பெ. எஸ்.கே.அன்வர்
69. அப்துல் நயீம், த/பெ. அப்துல் ஹக்கீம்
70. பாவா, த/பெ. பாஷா
71. சர்புதீன் என்கிற சர்பு, த/பெ. அப்துல் காதர்
72. சிக்கந்தர் பாஷா, த/பெ. ஹனீபா
73. காஜா ஹுசைன், த/பெ. அப்துல் அஜீஸ்
74. எம்.எஸ். சையது ஹாரூண், த/பெ. சையது ஹுசைன்
75. ஜபருல்லா என்கிற சேட் த/பெ. முஹம்மது யூசுப்
76. முஹம்மது ரசூல், த/பெ. முஹம்மது யூசுப்
77. டி.ஏ.முஹம்மது ரபீக், த/பெ. ஹசன் ராவுத்தர்
78. அமானுல்லா என்கிற பாபு, த/பெ. அப்துல் ரஜாக்
79. ஹுசைன் என்கிற யூசுப் ஹுசைன், த/பெ. எம்.ஏ. ஹுசைன்
80. புஷ் என்கிற புஷ்பராஜ், த/பெ.பாரதி
81. நௌஷாத், த/பெ. மூசா
82. சர்தார் என்கிற சைத்தான், நவாப்ஜான்
83. அப்துல் ரஹீம் என்கிற ரஹீம், த/பெ. மஜீத்
84. அப்துல் ரஹ்மான், த/பெ. ஷேக் தாவூத்
85. அப்பாஸ் என்கிற முஹம்மது அப்பாஸ், த/பெ. உம்மர்
86. அன்வர்பாஷா என்கிற காலியா, த/பெ. அப்துல் ஹக்கீம் வஹாப்
87. அப்துல் காதர் என்கிற காதர், த/பெ. முஹம்மது இஸ்மாயில்
88. சிக்கந்தர் பாஷா, த/பெ. அப்துல் காதர்
89. கிச்சான் புகாரி என்கிற உம்மர், த/பெ. ஷேக் மொய்தீன்
90. பாபு என்கிற ஆரோக்கியசாமி, த/பெ. சிலுவை முத்து
91. மீர் ஜாபர் அஹம்மது, த/பெ. சையது பஷீர் அஹம்மது
92. அம்மான் என்கிற அமானுல்லா, த/பெ. அப்துல் அஜீஸ்
93. சம்சுதீன் என்கிற சம்சு, த/பெ. ஹம்சா
94. உபைதுல் ரஹ்மான் த/பெ.அப்துல் ஹக்
95. காஜா ஹுசைன், த/பெ.அசனார்
96. சிவக்குமார் என்கிற அப்துல் ஹக்கீம், த/பெ. ராஜகோபால்
97. பஷீர் அஹம்மது என்கிற பஷீர், த/பெ. முஹம்மது கவுஸ்
98. அப்துல் ரஹ்மான், த/பெ. முஹம்மது கவுஸ்
99. அப்துல் அஜீஸ், த/பெ.மஸ்தான்
100. மூசா என்கிற மூசா மொய்தீன், த/பெ. முஹம்மது ஹனீபா
101. யூசுப் என்கிற ஷாஜஹான், த/பெ. அப்துல் வஹாப்
102. ஹக்கீம், த/பெ. முஹம்மது மலங்கு
103. எஸ். முஹம்மது சுபைர், த/பெ.ஷேக் மொய்தீன்
104. சையது முஹம்மது புகாரி, த/பெ. எஸ்.கே. மதார்
105. இதாயத் அலிகான், த/பெ. அன்வர்கான்
106. முஹம்மது ரபீக், த/பெ.ஹெச். ஜமேஷா
107. பக்ருதீன் அலி அஹம்மது, த/பெ.ஹனீப்
108. முஜிபுர் ரஹ்மான், த/பெ. எம். எம். முஹம்மது ஹுசைன்
109. என். ஷாகுல் அமீது என்கிற இமாம் அலி, த/பெ. நூர் முஹம்மது
110. எஸ். கே. முஹம்மது அலி, த/பெ.எஸ்.ஏ. காஜா மொய்தீன்
111. முஜிபுர் ரஹ்மான், த/பெ. மஜீத்
112. சிவக்குமார் என்கிற அக்கோஜி, த/பெ.தாமோதரன்
113. அஹம்மது பஷீர் என்கிற நண்டு பஷீர், த/பெ.ஜமால்
114. சித்திக் அலி என்கிற சுல்தான், த/பெ. தீன்

த.மு.மு.க. கவனித்து வரும் வழக்கின் நபர்கள் - 40

1. இலியாஸ், த/பெ. அமீர் சாஹிப்
2. அப்துல்லா, த/பெ.இப்ராஹிம்
3. ஜே. அப்பாஸ், த/பெ. ஜமாலுத்தீன்
4. எஸ். நவாப்ஜான், த/பெ. சையது அப்துல் சலீம்
5. ஹெச். இஸ்மாயில், த/பெ. ஹசன் பாவா
6. எம். சாதிக் பாஷா, த/பெ. முஹம்மது ஹனீபா
7. பாபு என்கிற முஹம்மது ரபி, த/பெ. பாஷா
8. அன்சர் பாஷா, த/பெ. அபூபக்கர்
9. இப்ராஹிம், த/பெ. இஸ்மாயில்
10. ஹெச். அப்துல் சலீம், த/பெ. ஹசன் பாவா
11. அப்துல் சுக்கூர், த/பெ. அப்துல் காசிம்
12. காதர், த/பெ.இஸ்மாயில்
13. ஜமேஷா, த/பெ.முஸ்தபா
14. அப்பாஸ், த/பெ. இமாம் சாஹிப்
15. ஹெச். ஹுசைன், த/பெ.ஹனீபா
16. பி. பர்கத், த/பெ. பாபா சாஹிப்
17. ஜாபர், த/பெ. முஹம்மது
18. எம். பஷீர், த/பெ. முஸ்தபா
19. அப்துல் சத்தார், த/பெ. முஹம்மது ஹுசைன்
20. எம். பாஷா, த/பெ. முஹம்மது அலி பாஷா
21. சாதிக் பாஷா, த/பெ. அப்துல் முஜீத்
22. பி. அபுதாஹீர், த/பெ.பஷீர்
23. ஜப்பார், த/பெ. இப்ராஹிம்
24. அக்பர் பாஷா, த/பெ. இலியாஸ்
25. அஷ்ரப் அலி, த/பெ. சி.ஹெச் அலி
26. கலந்தர் பாஷா, த/பெ. எஸ்.எம். பாஷா
27. ஜே. சையது அபுதாஹீர், த/பெ.என்.எம். ஜமாலுத்தீன்
28. முஸ்தபா, த/பெ. மீரான் சாஹிப்
29. முஹம்மது அலி, த/பெ. மொய்தீன்
30. அப்பாஸ் அலி, த/பெ. கே. முஹம்மது
31. ஏ. அக்பர், த/பெ. அலி சாஹிப்
32. முஹம்மது பிலால், த/பெ. அப்துல் ஜாபர்
33. சிராஜுதீன், த/பெ. அன்சர்தீன்
34. லியாகத்அலி என்கிற யாகத், த/பெ. எஸ்.ஏ.ரஹீம்
35. அபூபக்கர் சித்திக் என்கிற சித்திக், த/பெ. எஸ்.கே. உம்மர்
36. நசீர், அப்துல் கபூர்
37. ஈ.எம். முத்தலிப், த/பெ. ஈ.கே.முஹம்மது
38. சிக்கந்தர், த/பெ. ஹெச். ஆர். ஜமேஷா
39. அபுசாலி, த/பெ. அப்துல் கலாம்
40. குலாம், த/பெ. அப்துல் காதர்

கேரளா சகாய சமிதி

1. அப்துல் நாசர்; மஃதனி, த/பெ. அப்துல் சமது
2. எம்.வி. சுபைர், த/பெ. உம்மர்
3. கே. ஐயப்பன், த/பெ.கிட்டு
4. கே.எம். அப்துல் சலீம், த/பெ. முஹம்மது அலி
5. கே. எம். உம்மர், த/பெ.முஹம்மது
6. கே. ராஜூ,த/பெ. கே. குட்டப்பன்
7. அப்துல் பஷீர், த/பெ. அபு
8. சதீஷ், த/பெ. சிவராமன்
9. அஷ்ரப் அலி, த/பெ. குஞ்சுமோன்


தனிநபர் கவனித்துவரும் வழக்கு

1. தாஜுத்தீன் என்கிற அபு முஜாஹித், த/பெ. அப்துல் கனி
2. முஹம்மது ரபீக் என்கிற வீடியோ ரபீக், த/பெ. அப்துல் ரஜாக்
3. பக்ருதீன், த/பெ. மஸ்தான் பாபு


You can download and view the following documents for your immediate reference.

1 comment:

Umar said...

Assalamualaikum,

Excellent work, people reading this please please please consider these brothers family and please come forward to help them. I request the readers to remember these people in your prayers.

Umar Shaheed
Europe