இந்திய மக்கள் பேரவை
வெற்றி பெற இளைஞனே உன் இதயத்தில்
நிறுத்த வேண்டிய இலட்சிய வரிகள்
வெற்றி பெற நீங்கள் பின்பற்றப்பட வேண்டியவை
1) அசைக்க முடியாத ஆழமான இறை நம்பிக்கை.
2) ஒருமைப்பாட்டுடன் கூடிய தேசியப் பற்று, சுய கட்டுப்பாடு, கடினமான உழைப்பு.
3) நம்மைச் சுற்றி உள்ள சமூக அரசியல் சூழ்நிலைப் பற்றிய நுண்ணறிவு.
4) எதிர்காலம் குறித்து முன்னோக்கும் பார்வை, முடிவு எடுப்பதில் உறுதி.
5) நேரம், காலம் கருதாத தன்னலமற்ற உழைப்பு (தியாகம்).
6) இனிய சுபாவம் (நற்பண்பு), தகுதியானவர்களை தலைப்பதவிக்கு அமர்த்துவது.
7) கடந்த கால தவறுகள், நெருக்கடிகளில் படிப்பினை பெறுதல்.
8) மற்றவரிடம் பரிவும், மற்றவரைப் புரிந்து கொள்ளுதலும் வேண்டும்.
9) மனித நேயம், சமூக நல்லிணக்கம் மிளிர பாடுபடுதல்.
10) ஒட்டு மொத்த நம் சமுதாய உணர்வுகளை மதித்து அரசியல் ரீதியாக தீர்வு காண்பது, அரசியல் ஆதிக்கம் பெறுவது.
11) அமைப்பாளர், சக பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து ஒருங்கினைந்து இறை அருள் வேண்டி செயல்படுவது.
12) தவற்றை ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்வது.
தோல்விக்கு அழைத்துச் செல்லும் காரணங்கள்
1) வாய்மையற்ற இறை நம்பிக்கை.
2) தன்னம்பிக்கையும், நாம் சார்ந்து இருக்கின்ற கொள்கை, சமூக அரசியல் நெருக்கடிகள் பற்றிய தெளிவின்மை.
3) மற்றவர்களை செய்யச் சொல்லும் வேலையை தான் செய்ய தயங்குவது.
4) தான் என்ற அகந்தைப் போக்கு.
5) சதா பிறர் பாராட்டுக்கும் புகழுக்கும் அலைவது.
6) தகுதி, திறன் இன்றி தலைமைக்கு ஆசைப்படுவது, தகுதி இல்லாதவர்களை நியமிப்பது.
7) கடந்த கால தோல்விகள், ஏமாற்றங்களில் படிப்பினை பெறாமல் செயல்படுதல்.
8) தெளிவற்ற நோக்கம், திட்டம், செயல்பாடு.
9) நெருக்கடிகள், சூழ்ச்சிகள், நிர்பந்தங்களை சமாளிக்க ஆற்றல் இல்லாத தலைமை.
10) சுயநலம், பதவி ஆசை, நம்பிக்கை துரோகம், அதிகார துஷ்பிரயோகம், இடம் பொருள் ஏவல், சூழ்நிலை அறிந்து செயல்படாமை, சோம்பேறித்தனம், உழைப்பின்மை, வீண் பெருமை.
11) தவற்றை திருத்திக் கொள்ள தயங்குவது.
அல்லவை அகற்றி நல்லவை நடக்கவாரீர்
இந்திய மக்கள் பேரவையில் இணைவீர்!!
இவண்
அன்புடன்
இந்திய மக்கள் பேரவை,
வளைகுடா நாடுகள்
No comments:
Post a Comment